முன்பு அடுத்து Page:

பொதுக் கூட்டம்

பொதுக் கூட்டம்

மேலும்

21 செப்டம்பர் 2018 17:01:05

விஜயவாடா - நாத்திகர் மய்யத்தின் சென்னபடி வித்யா மறைவுற்றார்

விஜயவாடா - நாத்திகர் மய்யத்தின் சென்னபடி வித்யா மறைவுற்றார்

கழகத் தலைவர் இரங்கல் ஆந்திர மாநிலம், விஜயவாடா-நாத்திகர் மய்யத்தின் சென்னபடி வித்யா (வயது 84) சென்ற மாதம்  ஆகஸ்டு 18ஆம் நாளன்று மறைவுற்றார்.  ஆந்திர நாத்திக அறிஞர் கோராவின் மூன்றாவது புதல்வியான சென்னபடி வித்யா, நாத்திகர் மய்யத்தின் செயல்பாடுகளோடு தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அதன் காப்பாளர்களுள் ஒருவராக விளங்கி வந்தார். நாத்திகர் மய்யத்தின் மகளிர் நல அறப் பணிகளில், தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டுப் பணிகளில் மிகுந்த அக்கறை காட்டி வந்தார். தொடக்க காலத்தில்....... மேலும்

21 செப்டம்பர் 2018 16:54:04

தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா

 தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா

பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலை பல்கலைக்கழகம்)  தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா   வல்லம், செப்.21 பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவன நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் இயங்கிவரும் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தின் சார்பில் தந்தை பெரியார் அவர்களின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவும். பேராசிரியர் கு.வெ.கி.ஆசான் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவும், 18.09.2018 செவ்வாய் காலை 10.30 மணி முதல் 12.45 வரை பல்வேறு....... மேலும்

21 செப்டம்பர் 2018 16:34:04

'தந்தி' தொலைக்காட்சியில் தமிழர் தலைவரின் உரை ஒளிபரப்பு

'தந்தி' தொலைக்காட்சியில் தமிழர் தலைவரின் உரை ஒளிபரப்பு

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தி.மு.க. 70'' என்ற தலைப்பில் தந்தி'' தொலைக்காட்சியில் உரையாற் றிய நிகழ்வு, செப்டம்பர் 24, 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. மேலும்

21 செப்டம்பர் 2018 14:57:02

ஒளிப்படங்கள்

ஒளிப்படங்கள்

மேலும்

20 செப்டம்பர் 2018 16:30:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தாம்பரம், பிப்.25, சென்னை குரோம்பேட்டையில் உள்ள பெரியார் மன்றத்தில் நடைபெற்ற பெரியாரியல் கருத்தரங்கில் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் உள் ளிட்டோர் கலந்துகொண்டு கருத்துரை யாற்றினர்.

சென்னை குரோம்பேட்டையில் உள்ள இலட்சுமிபுரத்தில் குளக்கரைத் தெருவில் 2006 ஆம் ஆண்டு பெரியார் படிப்பகம் திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு அதே இடத்தில் பல்முனைப் பயன்பாட் டுக்கென பெரியார் மன்றம் கட்டப் பட்டது. அதைத் தொடங்கி வைத்து பேசிய தமிழர் தலைவர் இந்த இடத்தை பெரியாரியல் பயிற்சிக்கென்று பயன் படுத்திக் கொள்ளவேண்டும் என்று அறிவித்திருந்தார். அதையொட்டி முதல் முதலில் பிப்ரவரி 24,25 ஆகிய நாள் களில் பெரியார் மணியம்மை பல் கலைக்கழகத்தின் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தின் ஒருங்கிணைப்பில் பெரியாரியல் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டு, முதல் நாளில் (24-.-02.-2018) நான்கு அமர்வுகள் நடைபெற்றது. முதல் அமர்வில் வரலாற்றுப் பேரா சிரியர் கருணானந்தம் காலந்தோறும் பார்ப்பனியம், வரலாற்றுப் பேராசிரியர் ந.க. மங்களமுருகேசன் திராவிடர் இயக்க வரலாறு, துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் பெரியார் ஓர் அறிமுகம், எழுத்தாளர் மஞ்சை வசந்தன் கடவுள், மதம், மூடநம்பிக்கை ஆகிய தலைப்புகளில் உரையாற்றினர்.

டிசம்பர் 3 இயக்கத் தலைவர் த.மீ.நா.தீபக் அவர்கள் உடல் சவால் கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பெரியாரிய கருத்துகளை அறிமுகப் படுத்தவேண்டும் என்று பெருமுயற்சி எடுத்துக்கொண்டதின் பேரில், இக் கருத்தரங்கம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியில் அய்ந் தாவது அமர்வாக பெரியார் சுயமரி யாதை ஊடகத்துறையின் சார்பில் பெரியார் திரைப்படம் திரையிடப் பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் முடியும் வரையில் இருந்து திரைப்படத்தைக் கண்டுகளித் தனர். இந்நிகழ்வை பெரியார் வலைக் காட்சியின் தோழர்கள் உடுமலை வடி வேல், அருள், சுதன், சிறீராம் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

கலந்து கொண்டவர்களில் பெரும் பாலும் இந்தக்கருத்துகளுக்கு புதியவர் களாகையால் உணவு, தேநீர் இடை வேளைகளின் போது அந்த அமைப்பின் தலைவர் தீபக் அவர்கள் மிகுந்த பொறுப்புணர்வுடன், அவ்வப்போது நடைபெற்று முடிந்த வகுப்புகளைப் பற்றி கலந்து கொண்ட தோழர்களுடன் கலந்துரையாடி அவர்களை பெரியாரி  யல் கருத்தியலுக்கும், அதையொட்டிய அரசியல்மயப்படுத்துவதற்கும் தயார் செய்தார்.

தாம்பரம் மாவட்டத்தின் தலைவர் ப. முத்தையன், மாநில மாணவரணிச் செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், சென்னை மண்டல தலைவர் தி.இரா. இரத்தினசாமி, மண்டல இளை ஞரணி செயலாளர் ஆ.இரா.சிவசாமி, மாநில இளைஞரணித் துணைச் செய லாளர் கண்ணன், ஏ.ச. சாகுல், கோ.நாத்திகன், கமலக்கண்ணன், விஜய குமார், மோகன்ராஜ், பகுத்தறிவாளர் கழக இராசேந்திரன், பெரியார் களம் தலைவர் இறைவி ஆகியோர் நிகழ்ச்சி யின் ஒருங் கிணைப்புப் பணிகளில் பங்கேற்று சிறப்பித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner