முன்பு அடுத்து Page:

புத்தகத் திருவிழா, திரைப்படத் திருவிழா, குழந்தைகள் திருவிழா மூன்றும் ஒன்றாகச் சங்கமித்த சென்னை புத்த…

புத்தகத் திருவிழா, திரைப்படத் திருவிழா, குழந்தைகள் திருவிழா மூன்றும் ஒன்றாகச் சங்கமித்த சென்னை புத்தகச் சங்கமம்!

சென்னை, ஏப்.21  உலக புத்தக நாளை ஒரு பண்பாட்டுத் திருவிழாவாக மாற்றி, அதன் மூலம் வாசிப்புப் பழக்கத்தை நேசிக்க வைப்ப தற்காக தொடங்கப்பட்டது சென்னை புத்தகச் சங்கமம். நேற்று (20.4..2019) சென்னை உயர்நீதி மன்றத்தின் மேனாள் நீதியரசர் அரிபரந்தாமன் அவர்கள் 7 ஆவது சென்னை புத்தகச் சங்க மத்தைத் தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் கலந்து கொண்ட நீதியரசர், அபிராமி ராமநாதன், வரியியல் அறிஞர் இராசரத்தினம் ஆகியோருக்கு தமிழர் தலைவர்....... மேலும்

21 ஏப்ரல் 2019 16:39:04

எஸ்கேஅய் என்எஸ்எல்வி 9 மணியம்மையார் சாட் எனும் செயற்கைக்கோள்

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன நிகர்நிலைப்பல்கலைக்கழகத்திலிருந்து விண்ணில் செலுத்தப்படவுள்ளது விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்பு வல்லம், ஏப்.20 ஆசியாவிலேயே முதல் முறையாக முற்றிலும் மாணவி யர்களே தயாரித்த எஸ்கேஅய்  என்எஸ் எல்வி 9 மணியம்மையார் சாட் எனும் செயற்கைக்கோள் 21.04.2019 ஞாயிறு காலை 10 மணி அளவில் பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன நிகர்நிலைப்பல்கலைக்கழக திறந்தவெளி மைதானத்திலிருந்து விண் ணில் செலுத்தப்படவுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக இஸ்ரோ....... மேலும்

20 ஏப்ரல் 2019 16:36:04

பெரியார் திடலில் சென்னை புத்தகச் சங்கமம் - உலகப் புத்தக நாள் பெருவிழா!

பெரியார் திடலில் சென்னை புத்தகச் சங்கமம் - உலகப் புத்தக நாள் பெருவிழா!

நீதியரசர் து. அரிபரந்தாமன் புத்தகக் காட்சியை தொடங்கி வைத்தார் திரைப்பட விழாவை அபிராமி இராமநாதன் துவக்கி வைத்தார் தமிழர் தலைவர் ஆசிரியர், வரியியல் வல்லுநர் ச. இராசரத்தினம் பங்கேற்றனர் சென்னை புத்தக சங்கமம் உலக புத்தக திருநாள் விழாவில் திரைப்பட விழாவை தமிழ்நாடு திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் கலைமாமணி அபிராமி இராமநாதன் அவர்கள் தொடங்கி வைத்தார். (20.4.2019) சென்னை புத்தக சங்கமம் உலக புத்தக திருநாள் விழாவில் புத்தக அரங்குகளை சிறப்பு....... மேலும்

20 ஏப்ரல் 2019 15:23:03

சென்னையில் 27.4.2019 சனியன்று திராவிடர் கழக முக்கிய தோழர்கள் சந்திப்பு கலந்துரையாடல் அவசர -அவசியக் …

சென்னையில் 27.4.2019  சனியன்று திராவிடர் கழக முக்கிய தோழர்கள் சந்திப்பு கலந்துரையாடல் அவசர -அவசியக் கூட்டம்

நாள் : 27.4.2019 சனியன்று காலை சரியாக 10 மணி இடம் :  பெரியார் திடல், சென்னை-7 தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பொருள்: கழகத்தின் எதிர்காலப் பணி திட்டமிடுதல் மாநிலப் பொறுப்பாளர்கள், மண்டல, மாவட்ட கழக தலைவர் செயலாளர்கள் மட்டும் அவசியம் பங்கேற்கக் கேட்டுக் கொள்கிறோம். - கலி. பூங்குன்றன் துணைத் தலைவர், திராவிடர் கழகம் மேலும்

18 ஏப்ரல் 2019 16:41:04

சொன்ன வாக்குறுதிகளை காப்பாற்றாத பிஜேபி தலைமையிலான ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவீர் 18ஆம் தேதியோடு முடி…

சொன்ன வாக்குறுதிகளை காப்பாற்றாத பிஜேபி தலைமையிலான ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவீர் 18ஆம் தேதியோடு முடிவுக்கு வரட்டும் பாசிச ஆட்சி

* ஆளும் தரப்பில் இருப்பவர்கள் கலவரங்களில் ஈடுபடுகிறார்கள் * எதிர்க்கட்சியினர் வீட்டில் ரெய்டு செய்கிறார்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் இறுதிக்கட்ட கூட்டத்தில் எழுச்சியுரை தஞ்சை, ஏப்.17 ஆளும் தரப்பில் உள்ளவர்கள் கல வரங்களில் ஈடுபடுவதும், எதிர்க்கட்சிக்காரர்களின் வீடுகளில் ரெய்டு செய்வதெல்லாம் பாஜக கூட்டணியில் தோல்வி பயம்தான். 18ஆம் தேதியோடு இந்த ஆட்சி களுக்கு முடிவுக்கட்ட உங்கள் வாக்குகளை தவறாமல் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கே வாக்களிப்பீர் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்....... மேலும்

17 ஏப்ரல் 2019 16:56:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காங்கயம் வி.சி.க கூட்டத்தில் தீர்மானம்

காங்கயம், செப். 11-- தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாட முடிவு செய்து காங்கயத்தில் நடை பெற்ற வி.சி.க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருப்பூர் கிழக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் காங்கயம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காங்கயம்,வெள்ளகோவில்,முத்தூர் பகுதிப் பொறுப்பாளர் களின் அறிமுகக் கூட்டம் காங்கயத்தில் தாராபுரம் சாலையிலுள்ள வி.சி.க சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு காங்கயம் சட்டமன்றத் தொகுதி வி.சி.க செயலாளர் ரா.பி.ஜான்நாக்ஸ் தலைமை தாங்கினார்.காங் கயம் ஒன்றிய வி.சி.க மகளிரணியைச் சார்ந்த நித்யா அனை வரையும் வரவேற்றார். வி.சி.க மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆற்றலரசு, உதயகுமார், ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்வில் திருப்பூர் கிழக்கு மாவட்ட விடுதலைச் சிறுத் தைகள் கட்சியின் செயலாளர் நா.தமிழ்முத்து அவர்கள் பங் கேற்று சிறப்புரையாற்றினார்.

தீர்மானங்கள்:

1) எதிர்வரும் 17.09.2018 அன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் காங்கயம், வெள்ளகோவில், முத்தூர், நத்தக் காடையூர் ஆகிய பகுதிகளில் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை எழுச்சியோடு கொண்டாடுவது என தீர்மானிக் கப்பட்டது.

2)காங்கயம் அரசுமருத்துவமனையில் நிலவிவரும் மருத் துவர்கள் பற்றாக்குறை மற்றும் கழிப்பிட,குடிநீர் வசதி யின்மை ஆகிய குறைபாடுகளை சரிசெய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

3) காங்கயம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தை ஆக்கி ரமித்துள்ள கோவிலை அரசாணையின்படி அகற்ற வேண்டு மெனவும், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நூலகம் மற்றும் கழிப்பிட வசதி ஏற்படுத்தி  தரவேண்டுமெனவும் வலியுறுத் தப்பட்டது. 4) சிறுபான்மையர்களான முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள் ஆகியோருக்கு எதிராக காங்கயம் வட்டப் பகுதிகளில் தொடரும் வன்முறைச் சம்பவங்களுக்கு கூட்டத்தில் கடுங் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. வன்முறையாளர்களை இரும் புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டுமென மாவட்ட காவல் துறையை வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

நிகழ்வில் தாராபுரம், காங்கயம், வெள்ளகோவில், முத்தூர், நத்தக்காடையூர் ஆகிய பகுதிகளிலிருந்து 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner