Banner
கூடங்குளம் அணுஉலை மிரட்டல்: 3 பேர் கைது +++ 44 குழந்தைகள் பலி: மருத்துவ அதிகாரி இடமாற்றம் +++ தூக்குத்தண்ட‌னையை நிறுத்தி வைத்த சர்தாரி +++ உலக செஸ் போட்டிகள்: 5 ஆவது சுற்று டிரா

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உரத்தநாட்டில் துணைப்பொதுச் செயலாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் திறந்து வைத்தார்கள்

உரத்தநாடு, பிப்.22-உரத்தநாடு நகர திராவி டர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் சிந் தனை பலகை திறப்பு விழா 15.2.2012 அன்று மாலை 6மணியளவில் நடைபெற்றது.

தந்தை பெரியார் சிந்தனைப் பலகையை திராவிடர் கழகத்தின் துணைப்பொதுச் செயலாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் திறந்து வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து ஒன்றிய கழக கலந்துரை யாடல்கூட்டம், மாவட்ட செயலாளர் த.செகநாதன் தலைமை யிலும் மாநில இளை ஞரணி செயலாளர் இரா. செயக்குமார், மாவட்ட இணைச் செயலாளர் தி.வ. ஞானசிகாமணி, மாவட்ட அமைப்பாளர் தெற்கு நத்தம் ச.சித்தார்த்தன் ஆகியோர் முன்னிலையில் நடை பெற்றது.

கூட்டத்தின் நோக் கத்தைப் பற்றி துணைப் பொதுச்செயலாளர் இரா. குணசேகரன் உரையாற் றினார். மாநில ப.க. செய லாளர் வடசேரி இளங் கோவன் மண்டல இளை ஞரணி செயலாளர் நா. இராமகிருஷ்ணன் மாவட்ட இளைஞரணித் தலைவர் மாநல்.மெய்க் கப்பன், மாவட்ட இளை ஞரணிச் செயலாளர் இரா. இளவரசன், மாவட்ட மாணவரணி செயலாளர் த.பரிதின், ஒன்றியத் தலைவர் அ.லெட்சுமணன், ஒன்றியச் செயலாளர் அ.அருணகிரி, ஒன்றிய அமைப்பாளர் மாநல்.பரமசிவம், நகர தலை வர் பேபி.ரவிச்சந்திரன், நகர செயலாளர் ரெ.ரஞ்சித் குமார், நகர இளைஞரணி தலைவர் பு.செந்தில்குமார், நகர இளைஞரணி செயலா ளர் பேபி.ரமேஷ், நகர துணைச் செயலாளர் மு. சக்திவேல், மாவட்ட விவ சாய அணி அமைப்பாளர் மா.மதியழகன், ஒன்றிய துணைத் தலைவர் அ.உத்தி ராபதி, ஒன்றிய இளை ஞரணி அமைப்பாளர் அ.இராசப்பா, ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் ந.சிவசீலன், ஒன்றிய மாண வரணி அமைப்பாளர் இரா. இராஜ்கிரன், மருங்குளம் பாஸ்கர், ஆம்பலாப்பட்டு க.சிதம்பரம், பொன்னாப்பூர் தருமசீலன், தி.பன்னீர் செல்வம், மேற்கு பகுதிச் செயலாளர் வீர.இளங் கோவன், சமயன்குடிக்காடு க.அறிவரசு, தெற்குந்ததம் லெ.லெட்சுமணன், கோவிந் தராஜ், சமையன்குடிக்காடு எஸ்.கலியபெருமாள், திருமங்கலக்கோட்டை பெரியார் பெருந்தொண்டர் சி.தியாகராஜன், எலந்த வெட்டி மாணவரணி செய லாளர் க.மணிகண்டன், வீ.ஆசைத்தம்பி ஆகியோர் கலந்துகொண்டனர். கூட் டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மாவட்ட அமைப்பாளர் தெற்குநத்தம் ச.சித்தார்த்தன் வாசித்தார்.

தீர்மானங்கள்

1. திராவிடர் கழக துணைப்பொதுச்செயலாளர் உரத்தநாடு இரா.குணசே கரன் - மணிமொழி ஆகி யோரின் மகன் கு.குட்டி மணி - சத்தியா ஆகியோரின் வாழ்க்கை இணைநல ஒப் பந்த விழாவினை தலைமை யேற்று நடத்திதர 10.3.2012 அன்று பெரியார் நாடாம் உரத்தநாட்டிற்கு வருகை தரும் தமிழர் தலைவர், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு, ஒன்றிய திராவிடர் கழகத் தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பது என வும், மணவிழாவில் பங் கேற்க வருகை தரும் கழக பொறுப்பாளர்கள், தோழர் கள், அனைத்துக்கட்சி சான்றோர்கள் அனைவரை யும் வரவேற்று சிறப்புச் செய்வது என முடிவு செய்யப்படுகிறது.
2. மார்ச் 10,11 இரு நாள்களுக்கு தஞ்சையில் நடைபெறவுள்ள அன்னை மணியம்மையார் 92ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா, வஞ்சிக்கப்பட்ட தமிழ் நாட்டின் உரிமை காப்பு மாநாடு, விடுதலை சந்தா வழங்கும் விழா உள் ளிட்ட, முப்பெரும் விழா வில் கழகத் தோழர்கள் அனைவரும் குடும்பம், குடும்பமாக பங்கேற்பது என தீர்மானிக்கப்படு கிறது.
3. மாவட்ட திராவிடர் கழகக் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங் களை ஏற்று, தஞ்சையில் நடைபெறும் முப்பெரும் விழாவிற்கு நன்கொடை திரட்டித்தருவது, சுவரெ ழுத்து பிரச்சாரம், தட்டி விளம்பரம் செய்வது உள் ளிட்ட பணியினை முழு மையாக நிறைவேற்றித் தருவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
பெரியார் பெருந் தொண்டர் குலமங்கலம் கோவிந்தராஜ் மறைவிற்கு இக்கூட்டத்தில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப் பட்டது.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

அண்மைச் செயல்பாடுகள்

என்ன சொல்றீங்க?

திருவிழாக்களில் ஒரு வாரத்தில் 16 பேர் இறந்தனர்