முன்பு அடுத்து Page:

தந்தை பெரியார் பணி முடிக்க தமிழர் தலைவர் அழைக்கிறார்!

தஞ்சைக்கு வாருங்கள் தோழர்களே தன்மான உணர்வுக்குத் தீனி கிட்டும்! பேரணியில் பங்கேற்பீர் தீரர்களே! பெரியாரின் பீரங்கி முழங்கிடுமே! தலைவர்கள் வருகிறார்கள், வருகிறார்கள் தரணிக்குச் சேதிகள் சொல்கிறார்கள்! கருத்தரங்கம் கேட்கவே வாருங்களேன்! கருஞ்சட்டைச் சேனையில் சேருங்களேன்! கலை நிகழ்ச்சி விருந்துக்குப் பஞ்சமில்லை காதுக்கும் கண்ணுக்கும் கற்கண்டுதான் பகுத்தறிவுதான் மனிதனுக் கழகுயென்றால் பாடம் கேட்கலாம் பகுத்தறிவாளர்களால் சிந்தனையைத் தீட்டிக் கொள்ள வேண்டும் - சீழ் மதத்தை நெட்டித் தள்ளவேண்டும் பஞ்சமில்லை தோழர்களே, மிக்கவுண்டு பண்பட்ட பேச்சாம் மழையுமுண்டு தொண்டுக்கு முன்னுரிமை கழகத்தில் - இதன் கொள்கைக்கு நிகரில்லை உலகத்தில்! தன்னல மறுப்பென்னும் தியாகமே கழகத் தோழரின் ரத்த ஓட்டமே! மதவாத யானையை....... மேலும்

22 பிப்ரவரி 2019 17:03:05

திராவிடர் கழக மாநில மாநாட்டிற்கு கழக அமைப்பாளர் இரா. குணசேகரன் நிதி வழங்கல்!

திராவிடர் கழக மாநில மாநாட்டிற்கு கழக அமைப்பாளர் இரா. குணசேகரன் நிதி வழங்கல்!

மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன் மாநாட்டு நிதியாக திரட்டிய ரூ.2,50,000/-&த்தினை தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினார். உடன்: நெல்லுப்பட்டு இராமலிங்கம் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளனர் (தஞ்சை 22.2.2019) சோழிங்கநல்லூர் மாவட்ட சார்பாக மாவட்ட கழகத் தலைவர் ஆர்.டி.வீரபத்ரன் மாநாட்டு நிதி முதல் தவணையாக ரூ.50,000/-த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன் மாவட்ட இளைஞர் அணி தலைவர் நித்யானந்தம்,  மாவட்ட பொருளாளர் தமிழ் இனியன் உள்ளனர். (சென்னை பெரியார் திடல், 21.2.2019) தஞ்சை மாநில....... மேலும்

22 பிப்ரவரி 2019 16:55:04

மதுரை: அறிவியல் மனப்பான்மை கருத்தரங்கம்

மதுரை: அறிவியல் மனப்பான்மை கருத்தரங்கம்

மதுரை, பிப். 22 மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், திராவிட மாணவர் கழக சார்பாக அறிவியல் மனப்பான்மை கருத்தரங்கம்  3.2.2019 அன்று மாலை 5 மணி  முதல் 8 மணி வரை மதுரை யானைக்கல்லில் உள்ள எஸ்.ஏ.எஸ்.அரங்கத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. வந்திருந்த அனைவரையும் வரவேற்று கல்லூரி மாணவி சொ.நே.அறிவுமதி உரை யாற்றினார். நிகழ்விற்கு பகுத்தறிவாளர் கழகத்தினைச்சார்ந்த....... மேலும்

22 பிப்ரவரி 2019 16:52:04

இராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்ட அறிமுக விழா

இராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்ட அறிமுக விழா

வழக்குரைஞர் அ.அருள்மொழி சிறப்புரை இராணிப்பேட்டை, பிப். 22 16.2.2019 அன்று மாலை இராணிப்பேட்டை தனியார் விடுதியில் பெல் நிறுவன ஊழியர்களின் அம்பேத்கார் பெரியார் படிப்பு வட்டத்தின் அறிமுக விழா நடைபெற்றது. வட்டத்தின்தலைவர் வே.இந்தி ரன் தலைமை வகித்தார். பெ.ஜெயக்கொடி வரவேற்புரையாற்றி னார். ஆலோசகர்கள் கோ.இளங் கீரன், தி.க.சின்னதுரை, கு.விஜய குமார் ஆகியோர் முன்னிலை வகித் தனர். கவுரவத்....... மேலும்

22 பிப்ரவரி 2019 16:52:04

உடன் பிறப்புகளின் தலைவன் உணர்ச்சிகளால் ஒரு விழா

நாள்: 25.2.2019 திங்கட்கிழமை, மாலை 5.30 மணி இடம்: கலைஞர் அரங்கம், அண்ணா அறிவாலயம், சென்னை தலைமை ஆசிரியர் கி.வீரமணி (தலைவர் - திராவிடர் கழகம்) உணர்வு உரைகள் திராவிட இயக்கத்தின் கையிருப்பு - திரு. வைகோ. முத்தமிழறிஞரின் மகன் - திரு. வைரமுத்து நிகரற்ற நிர்வாகி - திரு. பீட்டர் அல்போன்ஸ் இந்தியாவின் எதிர்பார்ப்பு - திரு. ஆ.ராசா ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரல் - திரு. சுப.வீரபாண்டியன் உடன்பிறப்புகளின் தலைவன் -  திருமதி. தமிழச்சி தங்கப்பாண்டியன் உங்களில் ஒருவன் - திரு. அன்பில் மகேஷ்....... மேலும்

22 பிப்ரவரி 2019 16:06:04

திராவிடர் கழக மாநில மாநாடு மற்றும் சமுகநீதி மாநாடு

திராவிடர் கழக மாநில மாநாடு மற்றும் சமுகநீதி மாநாடு

பிப்ரவரி 23: திராவிடர் கழக மாநில மாநாடு பேரணி 1. விளம்பர வண்டி 2. தப்பாட்டக் குழு 3.காவடியாட்டக் குழு 4. தீச்சட்டி குழு 5. பெரியார் பிஞ்சுகள் 6. சடையார்கோயில் கோலாட்டக் குழு 7.  மகளிரணி 8. பெரியார் சமூக காப்பணி 9. இளைஞரணி அணிவகுப்பு 10.  திராவிடர் தொழிலாளரணி 11. வழக்குரைஞரணி 12. திராவிடர் இயக்க சாதனை விளக்க ஊர்திகள் 13. மாவட்ட வாரியாக கழக தோழர்கள் ஊர்வலத்தில் ஒலிமுழக்கம் எழுப்புவோர் 1. சு. சிங்காரவேல் (தலைமை கழக பேச்சாளர்) 2.  பா. மணியம்மை (மாநில மாணவரணி இணைச் செயலாளர்) 3. கோவை. சிற்றரசு (கோவை....... மேலும்

21 பிப்ரவரி 2019 15:27:03

தஞ்சை மாநாட்டில் அரியலூர் மாவட்ட 100 இளைஞர்கள் சீருடை அணிவகுப்பு!

தஞ்சை மாநாட்டில் அரியலூர் மாவட்ட 100 இளைஞர்கள் சீருடை அணிவகுப்பு!

கலந்துரையாடலில் தீர்மானம் அரியலூர், பிப்.21 அரியலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 3.2.2019 அன்று மாலை 6 மணிக்கு தொடங்கி சிறப்பாக நடைபெற்றது. அரியலூர் சி.சிவக்கொழுந்து இல்லத்தில் நடைபெற்ற கலந்து ரையாடல் கூட்டத்திற்கு கழகப்பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையேற்க,மாநில இளைஞரணி செய லாளர் த.சீ.இளந்திரையன்,மண்டல தலைவர் சி.காமராஜ், மண்டல செயலாளர் சு.மணிவண்ணன், மாவட்ட செயலாளர் க.சிந்தனைச் செல்வன் ஆகியோர் முன்னிலை ....... மேலும்

21 பிப்ரவரி 2019 15:27:03

தந்தை பெரியார் கூறுகிறார்

தந்தை பெரியார் கூறுகிறார்

தஞ்சை ஜில்லா சுயமரியாதை ஜில்லா என்னும் - மாடல் ஜில்லா! கழகப் பெரு மக்களே, சுயமரியாதை வீரர்களே, பகுத்தறிவாளர்களே, முற்போக்கு வாணர்களே, நீங்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும், எந்த அமைப்பில் இருந்தாலும், தமிழ்நாட்டின் எந்த மூலையில் குடியிருந்தாலும் நீங்கள் வரும் சனி, ஞாயிறுகளில் (பிப்ரவரி 23, 24) குடும்பம் குடும்பமாக வந்து கூட வேண்டிய - சங்கமிக்க வேண்டிய இடம் தஞ்சைத் திலகர் திடல்தான். கடல் இல்லாத தஞ்சையின் திலகர் திடல் மக்கள்....... மேலும்

21 பிப்ரவரி 2019 15:14:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கலந்துரையாடலில் முடிவு

கிருட்டினகிரி, செப். 10 கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழக கலந் துரையாடல் கூட்டம் 3.9.2018 அன்று கிருட்டினகிரி காந்தி சாலை சாய்ராம் ஏஜென்சி அரங்கத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு மாவட்ட திரா விடர் கழக தலைவர் பெ.மதி மணியன் தலைமை வகித்தார். மாவட்டக் கழக செயலாளர் கா. மாணிக்கம் வரவேற்றுப் பேசினார்.

மாவட்ட துணைத் தலைவர் த.அறிவரசன், மாவட்ட இணைச் செயலாளர் அ.செ.செல்வம், மாவட் டத் துணை செயலாளர் சு.வன வேந்தன், மாவட்ட அமைப்பாளர் தி.கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திராவிடர் கழக மாநில அமைப் பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் துவக்க உரையாற்றினார். மாநில மகளிரணி மற்றும் மகளிர் பாசறை அமைப்பாளர் தகடூர் தமிழ்செல்வி, தருமபுரி மண்டல திராவிடர் கழகத் தலைவர் வீ.சிவாஜி, மண்டல கழகச் செயலாளர் கோ.திராவிட மணி, மாநில  மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர்பாண் டியன், பொதுக்குழு உறுப்பினர் மு.துக்காராம், மண்டல இளை ஞரணி செயலாளர் வ.ஆறுமுகம், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இ.லூயிஸ்ராஜ், அமைப் பாளர் மு.வேடியப்பன், மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி அமைப் பாளர் சா.ஜோதிமணி, ஓசூர் நகர கழகத் தலைவர் சி.மணி, மத்தூர் ஒன்றிய கழக தலைவர் கி.முரு கேசன், காவேரி பட்டணம் ஒன்றியச் செயலாளர் சிவ.மனோகர், காவேரிப்பட்டணம் ஒன்றிய ப.க. செயலாளர் நாத்திகம் சதீஷ்குமார், மத்தூர் ஒன்றிய துணைச் செயலாளர் சா.தனஞ்செயன், காரிமங்கலம் முன்னாள் ஒன்றிய மேனாள் தலைவர் எம்.எம்.வரதராஜன், கைத்தடி' இதழ் ஆசிரியர் சி. அறிவழகன், காமலாபுரம் இரா.அருணாசலம், எருமாம்பட்டி சின்னசாமி ஆகியோர் கருத்துரை யாற்றினர்.

இறுதியில் கழக மாநில அமைப்புச் செயலாளர் தருமபுரி ஊமை.ஜெயராமன் சிறப்புரை யாற்றினார். முடிவில் நகர அமைப் பாளர் கோ.தங்கராசன் நன்றி உரையாற்றினார்.

கிருட்டினகிரி நகர கழகத்திற் கான கீழ்கண்ட புதிய பொறுப் பாளர்களை கழக அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் அறிவித்தார்.

கிருட்டினகிரி நகரத் தலைவர்: மே.மாரப்பன், கிருட்டினகிரி நகரச் செயலாளர்: கோ.தங்கராசன், கிருட் டினகிரி நகர அமைப்பாளர்: சி.வடி வேல்

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தீர்மானம் 1: அறிவுலக பேரா சான் உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் பேரன்பைப் பெற்று, வாழ்நாள் முழுவதும் பகுத்தறிவாளராக வாழ்ந்து மறைந்த முத்தமிழ்  அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கும், சேலம் மாவட்ட கழகச்செயலாளர் கடவுள் இல்லை' சிவக்குமார் அவர்களின் மறைவுக்கும், திருப் பத்தூர் மாவட்ட கழக அமைப்பாளர் கலை.ரவியின் தாயார் இலட்சு மியம்மாள் அவர்களின் மறை விற்கும் இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும் வீரவணக்கத்தையும் தெரிவித்து ஒரு நிமிடம் அமைதி காத்து மரியாதை செலுத்துகிறது.

தீர்மானம் 2: திராவிட முன் னேற்ற கழகத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ள மதிப்பிற்குரிய மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், பொருளாளராக பொறுப்பேற்றுள்ள துரைமுருகன் அவர்களுக்கும் இக் கூட்டம் பாராட்டுதலையும், வாழ்த் தையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 3: தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் நகராட்சி கள், ஒன்றியங்கள் நகரம் மற்றும் கிளைக் கழகங்கள் சார்பில் தந்தை பெரியார் சிலைகளுக்கு ஊர்வல மாக சென்று மாலை அணிவித்தல், அலங்கரிக்கப்பட்ட தந்தை பெரி யார் படங்களுக்கு மாலை அணி வித்து மரியாதை செய்தல். இனிப்பு வழங்குதல், கழகத் தோழர்கள் வீடு தோறும் விழா எடுத்து கொண்டாடி மகிழ்வது என ஏகமனதாக தீர் மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 4: தமிழர் தலைவர் அவர்களின் கட்டளையை ஏற்று உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழ் விடுதலைக்கு 100 சந்தாக்களை திரட்டி தருவது என தீர்மானிக்கப் படுகிறது.

தீர்மானம் 5: தமிழர் தலைவர் நமது கழகத் தலைவர் அவர்களின் ஆணையை ஏற்று மிகச்சிறப்பாக பணியாற்றிய மண்டல கழக பொறுப்பாளர்களுக்கும், மாவட்ட கழகப் பொறுப்பாளர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்வதுடன் புதிய பொறுப்பேற்றுள்ள கிருட்டி னகிரி மாவட்ட கழகப் பொறுப் பாளர்கள் மற்றும் மண்டல கழகப் பொறுப்பாளர்களுக்கு பாராட்டை யும், வாழ்த்தினையும் இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner