முன்பு அடுத்து Page:

ஒளிப்படங்கள்

ஒளிப்படங்கள்

மேலும்

20 செப்டம்பர் 2018 16:30:04

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்தந…

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா

தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பெரியாரின் உருவச்சிலைக்கு பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) துணைவேந்தர் பேரா. செ.வேலுசாமி மற்றும் கல்விபுல முதன்மையர் பேரா. பி.கே.சிறீவித்யா, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும்

18 செப்டம்பர் 2018 15:46:03

பெரியார் பாலிடெக்னிக் சார்பில் தந்தை பெரியார் 140ஆவது பிறந்தநாள் விழா

பெரியார் பாலிடெக்னிக் சார்பில்  தந்தை பெரியார் 140ஆவது பிறந்தநாள் விழா

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்த நாளில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள தந்தை பெரியார் திருவுருவச் சிலைக்கு  வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் பாலிடெக்னிக் முதல்வர் டாக்டர் இரா.மல்லிகா, துணை முதல்வர் டாக்டர் உ.பர்வீன், முதன்மையர் டாக்டர் அ.ஹேமலதா  மற்றும் மாணவர்கள் மாலை அணிவித்தார்கள். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் 140ஆவது தந்தை பிறந்த நாள் விழாவை முன்னிட்டு....... மேலும்

18 செப்டம்பர் 2018 15:42:03

‘விடுதலை’க்கு விடுமுறை

17.9.2018 தந்தை பெரியாரின் பிறந்த  நாளை முன்னிட்டு, நாளை (19.9.2018) புதன்கிழமை ‘விடுதலை’க்கு விடுமுறை. வியாழக்கிழமை வழக்கம்போல் ‘விடுதலை’ வெளிவரும். - ஆசிரியர் மேலும்

18 செப்டம்பர் 2018 15:02:03

கழகத் தலைவருக்கு நன்றி விருது!

கழகத் தலைவருக்கு நன்றி விருது!

முதுபெரும் தொண்டறச் செம்மல்களுக்குச் சிறப்பான பெருமை மிகுந்த பாராட்டு - வாழ்த்து - விருதளிப்பு விழாவினை நடத்திய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், எடுப்பான நினைவுப் பரிசினை பாராட்டப்பட்டவர்கள் சார்பில் பொத்தனூர் க.சண்முகம், கோவை வசந்தம் கு.இராமச்சந்திரன் ஆகியோர், இனமான பேராசிரியர் க.அன்பழகன், தோழர் நல்லகண்ணு ஆகியோர்மூலமாக அளித்து மகிழ்ந்தனர். இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தனது நிறைவுரையில்....... மேலும்

18 செப்டம்பர் 2018 14:39:02

தந்தைபெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழாவில் எழுச்சி

தந்தைபெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழாவில் எழுச்சி

இனமானப் பேராசிரியர் க. அன்பழகன் பெரியார் பெருந்தொண்டர் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள். இவர் திருவாரூர் மாவட்டம் காட்டூர் கிராமத்தில் பிறந்த வர். இவரது பிறந்தநாள் 1922, டிசம்பர் 19. தற்போது இவரது வயது 96! தந்தை பெரியாரின் தன்மான இயக்கத்தால் ராமய்யா என்ற  தன் பெயரை க.அன்பழகன் என்று மாற்றிக் கொண்டார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரி யராக பணியாற்றியவர்! காலப்போக்கில் இவர் பேராசிரியர் என்றே அழைக்கப்பட்டு வந்தார்! இனமானம் காக்கும் போரில்....... மேலும்

17 செப்டம்பர் 2018 18:09:06

பெரியார் மருந்தியல் கல்லூரியில் அறிவு ஆசான் தந்தை பெரியாரின் 140ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா

பெரியார் மருந்தியல் கல்லூரியில் அறிவு ஆசான் தந்தை பெரியாரின் 140ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா

திருச்சி, செப்.17 திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 140ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவினை முன் னிட்டு மார்பகம் மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் இலவச பரிசோதனை முகாம் மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம் பெரியார் மன்றம், பெரியார் நலவாழ்வு சங்கம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக 15.09.2018 அன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு பெரியார் மன்ற செயலர் பேராசிரியர் க. உமாதேவி....... மேலும்

17 செப்டம்பர் 2018 18:09:06

தமிழர் தலைவர் அளிக்கும் தந்தை பெரியார் பிறந்தநாள் செய்தி

தமிழர் தலைவர் அளிக்கும் தந்தை பெரியார் பிறந்தநாள் செய்தி

தந்தை பெரியார் தந்த அறிவுச் சுடரை ஏந்துவோம்! சுயமரியாதையை உலகெங்கும் கொண்டு சேர்ப்போம்! மேலும்

17 செப்டம்பர் 2018 18:06:06

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கோவை -  புதுக்கோட்டை கலந்துரையாடலில் முடிவு

சென்னை, செப்.10 இன உரிமை மீட்பு ஏடான விடுதலை' ஏட்டிற்கு சந்தா சேர்ப்பது தொடர்பாக கோவை, மேட்டுப்பாளை யம்,புதுக்கோட்டை மாவட் டக் கழகங்களில் சார்பில் கலந்துரையாடல் ஆங் காங்கே நடைபெற்றது.

அதன் விவரம்வருமாறு:

கோவை

கோவையில் 31.8.2018 அன்று மாலை 5 மணிக்கு மாவட்ட செயலாளர் தி.க. செந்தில்நாதன், இல்லத்தில் நடைபெற்ற விடுதலை சந்தா சேர்ப்பு ஆலோசனை யில்  மாவட்ட செயலாளர் தி.க. செந்தில் நாதன் வர வேற்புரை ஆற்ற பொதுச் செயலாளர்- இரா.ஜெயக் குமார் தலைமையில் விடு தலை நாளிதழ் சிறப்புகளை யும் சந்தா சேகரிப்பு அவ சியம் குறித்தும் எடுத்துரைத் தார்.

மாநில அமைப்பு செய லாளர் ஈரோடு சண்முகம் மற்றும் கோவை மண்டல செயலாளர் ம.சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை ஏற்று விடுதலை நாளிதழ் அவசியம் பற்றியும் கழக தோழர்கள் ஒவ்வொருவரும் சந்தா சேகரித்து தரவேண்டும் என வலியுறுத்தினார்.

மாவட்ட தலைவர் ம. சிற்றரசு உரையாற்றும் போது  கோவை மாவட்டம் விடுதலை சந்தா இலக் கினை அடைய உழைப் போம் என்றார்.

மாவட்ட பொறுப்பாளர் பொள்ளாச்சி மாரிமுத்து, இளைஞரணி மாவட்ட பொறுப்பாளர் திராவிட மணி தோழர் கவி கிருஷ் ணன், கழக பேச்சாளர் புலியகுளம் வீரமணி, முன் னாள் ப.க.பொறுப்பாளர் முனியன், மதியரசு, இலைக்கடை செல்வம்,  கோபால், மற்றும் ஜி டி நாயுடு நினைவு பெரியார் படிப்பக பொறுப்பாளர் அ.மு.ராஜா ஆகியோர் பங் கேற்றனர்.

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் மாவட்ட கழகம் சார்பில் முதல் தவணையாக விடு தலை சந்தா 5,000 ரூபாயை மாவட்டத் தலைவர் சு.வேலுச்சாமி கழக பொதுச் செயலாளர் இரா.ஜெயக் குமாரிடம் வழங்கினார் உடன் கழக அமைப்பு செயலாளர் த.சண்முகம் மற்றும் கழகத் தோழர்கள்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் திராவிடர் கழகத்தின் சார் பில் கலந்துறவாடல் கூட் டம் நடைபெற்றது. மாவட் டத் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட இந்தக் கலந்துறவாடல் கூட்டத்திற்கு கழக பொதுச் செயலாளர் இரா.ஜெயக் குமார் தலைமை வகித்தார்.

மண்டலத் திராவிடர் கழகத் தலைவர் பெ.இராவணன், மாவட்டத் தலைவர் மு.அறிவொளி, மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன், மண்டல இளை ஞரணி துணைச் செயலாளர் வெ.ஆசைத்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ப.க.மாநிலத் தலைவர் மா.அழகிரிசாமி கருத்துரை யாற்றினார். இந்நிழ்வில் மாவட்ட அமைப்பாளர் ஆ.சுப்பையா, மாவட்ட துணைத் தலைவர் செ.இராசேந்திரன், ப.க. மாவட் டத் தலைவர் அ.சரவணன், நகர ப.க.தலைவர் பி.சேகர், நகர இளைஞரணிச் செய லாளர் பூ.சி.இளங்கோ, மாவட்ட திராவிட மாண வர் கழக தலைவர் பெ. அன்பரசன், பிச்சத்தான் பட்டி கிளைச் செயலாளர் ஆத்மநாபன், ப.க.உறுப்பி னர் கே.மாரியப்பன், திருச்சி முனியப்பன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண் டனர்.

இந்நிகழ்வில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் சுயமரியாதைக்காரர் என தன்னைப் பிரகடனப்படுத் திக் கொண்டு திராவிட முன்னேற்றக் கழக தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர் மறைவிற்கு புதுக்கோட்டை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

20.8.2018 அன்று சென் னையில் நடைபெற்ற கழகத் தலைமைச் செயற் குழுக் கூட்டத்தின் முடிவு களை ஏற்றுச் செயல்படுத் துவது.

அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் 140 ஆவது பிறந்தநாளை முன் னிட்டு கழக மாவட்டம் முழுவதும் மிக எழுச்சி யோடு கொண்டாடுவது

இன உரிமை மீட்பு ஏடான விடுதலை ஏட்டிற்கு புதுக்கோட்டை கழக மாவட்டத்தின் சார்பில் முதற்கட்டமாக 100- விடு தலைச் சந்தாக்களைத் திரட்டி வழங்குவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner