முன்பு அடுத்து Page:

தேர்தல் பிரச்சாரத் துண்டறிக்கைகள் தயார்!

மதவாத பிஜேபி ஆட்சியை ஏன் வீழ்த்தவேண்டும்? சட்டமன்ற தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளைத் தோற்கடித்து - திமுக அணியை ஏன் ஆதரிக்க வேண்டும் என்பதற்கான காரணங்களை விளக்கும் துண்டறிக்கை தலைமைக் கழகத்தில் தயார். 1000 துண்டறிக்கைகள் நன்கொடை ரூ.200/- பயன்படுத்திக் கொள்வீர். - தலைமை நிலையம், திராவிடர் கழகம் மேலும்

24 மார்ச் 2019 16:20:04

17ஆவது விடுதலை வாசகர் வட்ட கூட்ட நிகழ்ச்சி அறிக்கை

17ஆவது விடுதலை வாசகர் வட்ட கூட்ட நிகழ்ச்சி அறிக்கை

பெரம்பலூர், மார்ச் 24 பெரம் பலூர் மாவட்டத்தில் 17ஆவது விடுதலை வாசகர் வட்டம் கூட்ட நிகழ்ச்சி அறிக்கை 16.3.2019 அன்று மாலை  5 மணியளவில் குணகோமதி மருத்துவமனையில் நடைபெற்றது. பகுத்தறிவாளர் கழக தலைவர் பெ.நடராசன் வரவேற்புரையாற்ற டாக்டர் கு.குணகோமதி தலை மையிலும் முனைவர் த.ஜெயக் குமார் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் கள்ளக்குறிச்சி, மாவட்டத் தலைவர் ம.சுப்பராயன் கவுதமன் நீல்ராஜ், ரா.சின்னசாமி, அ.சீத் ....... மேலும்

24 மார்ச் 2019 15:47:03

கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்க கூட்டம்

கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்க கூட்டம்

மறைமலைநகர், மார்ச் 24  17.2. 2-019 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி அளவில் கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்க துணைச் செயலாளர் கோ. கணேஷ் அவர்கள் 41 ஆண்டுகள் பணியாற்றி 23.2.2019இல் பணி ஓய்வு பெறுவதையொட்டி  கோத் ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் சங்கத் தலைவர் த.ரமேஷ் தலைமையிலும் செய லாளர் செ.ர. பார்த்தசாரதி முன் னிலையிலும் மறைமலை....... மேலும்

24 மார்ச் 2019 15:47:03

அர்த்த சாஸ்திரத்தில் வர்ணாசிரம தர்மம் வாசகர் வட்டத்தில் உரை வீச்சு

அர்த்த சாஸ்திரத்தில் வர்ணாசிரம தர்மம் வாசகர் வட்டத்தில் உரை வீச்சு

மதுரை, மார்ச் 24 09.03.2019  அன்றுமாலை 6.30 மணிக்கு மதுரை  விடுதலை வாசகர் வட்டத்தின் 75ஆவது நிகழ்ச்சி செய்தியாளர் அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு விடுதலை வாசகர் வட்டத்தலைவர் பொ. நடராசன்  நீதிபதி (பணி நிறைவு)தலைமை தாங்கினார். விடுதலை வாசகர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் மா. பவுன் ராசா (மதுரை மண்டல  தலை வர்) வரவேற்புரை ஆற்றினார். முதல் நாள் மகளிர்....... மேலும்

24 மார்ச் 2019 15:47:03

பெரியார் சிலைக்கு வேட்பாளர் மாலை

பெரியார் சிலைக்கு வேட்பாளர் மாலை

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செ.ராம லிங்கம்  22.3.2019 அன்று காலை மயிலாடுதுறையில் தந்தை பெரியார் அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து திமுக தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன், மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் பி.கல்யாணம் திமுக மற்றும் கூட்டணி கட்சி....... மேலும்

24 மார்ச் 2019 15:47:03

'பொள்ளாச்சி அவலமும் பார்ப்பனர்களின் விஷமத்தனமும்' சிறப்புக்கூட்டம்

'பொள்ளாச்சி அவலமும் பார்ப்பனர்களின் விஷமத்தனமும்' சிறப்புக்கூட்டம்

தமிழர் தலைவர் உரைகேட்க பெருந்திரளானவர்கள் பங்கேற்பு சென்னை, மார்ச் 24  சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் 22.3.2019 அன்று மாலை  திராவிடர் கழகத்தின் சார்பில் அவசர சிறப்புக்கூட்டமாக அறிவிக்கப்பட்டு, பொள்ளாச்சி அவலமும், பொறுப் பற்ற பார்ப்பனர்களின் விஷமும் எனும் தலைப்பில் சிறப்புக்கூட்டம் நடைபெற்றது. திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கினார். கழகப் பொருளாளர் வீ.குமரேசன் வரவேற்புரை ஆற்றினார். கழகப் பிரச்சாரச் செயலாளர்....... மேலும்

24 மார்ச் 2019 15:17:03

திராவிடர் கழகத்தின் சார்பில் மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டம்

தமிழர் தலைவர் பங்கேற்கும் தேர்தல் பிரச்சார கூட்டம் நாகை நாடாளுமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளர் எம்.செல்வராஜ் அவர்களை ஆதரித்து * நாள்: 26.3.2019 செவ்வாய்கிழமை மாலை 4 மணி * இடம்: அவுரித்திடல், நாகப்பட்டினம் * வரவேற்புரை: ஜெ.புபேஸ் குப்தா (நாகை மாவட்ட செயலாளர்) * தலைமை: வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் (நாகை மாவட்ட தலைவர்) * முன்னிலையாளர்கள்: இல.மேகநாதன் (மாநில துணைத் தலைவர், ப.க, த.செ.குழு.உ (திமுக) கி.முருகையன் (மாவட்ட தலைவர் திருத்துறைப்பூண்டி) இராச.முருகையன் (மாவட்ட அமைப்பாளர் திராவிடர் கழகம்) * வெ.இராஜேந்திரன்....... மேலும்

24 மார்ச் 2019 14:41:02

பெரம்பலூரில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு தொடக்க விழா

பெரம்பலூரில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு தொடக்க விழா

பெரம்பலூர், மார்ச் 24  10.03.2019 அன்று மாலை 5 மணியளவில் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் மாவட்ட திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக சார்பில் அன்னை மணியம் மையார் நூற்றாண்டு தொடக்க விழா நடைபெற்றது. ஓவியச் செம்மல் திமுக பொதுக்குழு உறுப்பினர் கி.முகுந்தன் அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்றார். ம.தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன் அவர்கள் அன்னை மணியம்மையார் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து சிறப்புரை ஆற்றினார். ம.தி.மு.க. அரசியல்....... மேலும்

24 மார்ச் 2019 14:41:02

தஞ்சையில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டிற்கு உழைத்த தோழர்களோடு

தஞ்சையில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டிற்கு உழைத்த  தோழர்களோடு

  தஞ்சையில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டிற்கு உழைத்த திருச்சி மாவட்ட கழக தோழர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார். மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ், ஆசிரியர் நற்குணம், மாவட்ட செயலாளர் மோகன்தாஸ், கிரேசி ஜோசப், அ. அம்பிகா கணேசன், ரெஜினா பால்ராஜ், சங்கீதா தமிழ்மணி, சாந்தி சுரேஷ், வசந்தி சேவியர், ரூபி மற்றும் தோழர்கள் உள்ளனர். (திருச்சி, 21.3.2019) திருச்சிராப்பள்ளி மாவட்ட பெரியார் பாரம் சுமக்கும் தொழிலாளர் மற்றும் அமைப்புச்....... மேலும்

23 மார்ச் 2019 16:41:04

இலட்சியத்தை மட்டுமே கட்டிக்கொண்ட இரு துறவிகள் பெரியாரும் - மணியம்மையாரும்!

இலட்சியத்தை மட்டுமே கட்டிக்கொண்ட இரு துறவிகள் பெரியாரும் - மணியம்மையாரும்!

ஆசிரியர் விரும்பும் காலம் வரை வாழவேண்டும் தஞ்சை மாநாட்டில் கவிப்பேரரசு வைரமுத்துவின் கணீர் உரை! தஞ்சாவூர், மார்ச் 23 தந்தை பெரியாரும், அன்னை மணியம்மை யாரும் இலட்சியத்தை மட்டுமே கட்டிக்கொண்ட இருபெரும் துறவிகள் என்றார்  கவிப்பேரரசு வைரமுத்து  அவர்கள். 23.2.2019 அன்று தஞ்சை திலகர் திடலில் நடைபெற்ற திராவிடர் கழக மாநில மாநாட்டு நிறைவு அரங்கில் கவிப்பேரரசு வைரமுத்து  அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு: நிர்வாணமாகக் கிடந்த தமிழ் இனத்திற்கே பயனாடை அணிவித்தவர்....... மேலும்

23 மார்ச் 2019 16:02:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சேலம், ஜன.11 சேலம் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 6.1.2019 அன்று காலை 10.30 மணிக்கு அம்மாபேட்டை தமிழாசிரியர் மன்றத்தில் நடைபெற்றது.

மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கே.ஜவகர் தலைமை வகித்தார். மண்டல கழகத் தலைவர் கவிஞர் சிந்தாமணியூர் சுப்ரமணியம் முன்னிலை வகித்தார்.

போராட்டத்தை விளக்கியும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் எதிர்பார்ப்பை விளக்கியும் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தொடக்கவுரையாற்றினார். அறிவாசான் தந்தை பெரியார் மறைந்து 45 ஆண்டுகளுக்குப் பிறகு மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் தந்தை பெரியார் தத்துவங்கள் தேவை என்பதையும், கழகத் தலைவருக்கு எதிராக களமிறங்கியவர்கள் கூட, தமிழர் தலைவர் அவர்களால் தான் இந்த மாற்றங்கள் என்று தெரிவித்திருப்பதை சுட்டிக் காட்டி பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன அறக்கட்டளை உறுப்பினர் பழநி.புள் ளையண்ணன் சிறப்புரையாற்றினார்.

மாவட்ட கழக செயலாளர் அ.ச.இளவழ கன், மாவட்ட துணைத் தலைவர் பண்ருட்டி பரமசிவம், மாநகர தலைவர் பு.வடிவேலு, மாநகர செயலாளர் அரங்க.இளவரசன், மண் டல மாணவர் கழக செயலாளர் இ.தமிழர் தலைவர், ஈரோடு பா.வைரம், அம்மாபேட்டை தனபால், வங்கி & இராசு, பெரியார் பெருந் தொண்டர் வ.வேணுகோபால், ஆர்.கோவிந்த ராசு, ப.பூபாலன், கோ.சங்கரபாண்டியன், ஆர்.குமார், பி.இரஞ்சித், ஆர்.செகதீசு, பி.இரவிக்குமார், மு.கவுதமன், எஸ்.தங்கவேல், கே.ஆர்.இராசேசு, திருப்பூர் நகர கழக தலைவர் பாலகிருட்டிணன், மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் கவிஞர் பா.திவ்வியபாரதி, சட்டக்கல்லூரி மாணவர் கழக தலைவர் கோ.விக்னேசுவரி ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்கள்.

மாவட்ட அமைப்பாளர் இராவணபூபதி நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.

புதிய பொறுப்பாளர்கள்

சேலம் மாவட்ட மாணவர் கழக தலைவர்: கோ.சங்க பாண்டியன், செயலாளர்: கவிஞர் பா.திவ்விய பாரதி

தீர்மானங்கள்

1) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவிப்பின்படி பிப்ரவரி 7ஆம் தேதி நடை பெறவுள்ள மனுதர்ம எரிப்புப் போராட்டத்தை விளக்கி சேலம் மாவட்ட 60 வட்டங்களிலும் 18.1.2019 அன்று தொடங்கி தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

2) சேலம் சட்டக்கல்லூரி திராவிட மாண வர் கழகம் சார்பில் கவிஞர் நந்தலாலா அவர்களைக் கொண்டு தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்? என்ற நூலினை வெளி யிட்டு விழா நடத்துவது என தீர்மானிக்கப் படுகிறது.

3) மனுதர்ம எரிப்புப் போராட்ட விளக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள், நூல் அறிமுக விழாவை சிறப்பாக நடத்துவதற்கு கீழ்க்கண்ட பிரச்சாரக்குழு நியமிக்கப்படுகிறது.

ஒருங்கிணைப்பாளர்கள்:

கே.ஜவகர் (மாவட்ட தலைவர்), அ.இள வரசன் (மாவட்ட செயலாளர்), இராவணபூபதி (மாவட்ட அமைப்பாளர்), பு.வடிவேல் (மாநகர தலைவர்), இள.இளவரசன் (மாநகர செயலாளர்), பரமசிவன் (மாவட்ட துணைத் தலைவர்)

பிரச்சாரக்குழு

தலைவர்: பா.வெற்றி, துணைத் தலைவர்: பா.திவ்வியபாரதி, செயலாளர்: இ.தமிழர் தலைவர், துணை செயலாளர்: பா.பூபாலன், பொருளாளர்: மு.கவுதமன், அமைப்பாளர்: வங்கி இராசு

வார்டு வாரியாக பொறுப்பேற்று கொண்டவர்கள்

1ஆவது வார்டு: பொறியாளர் செல்வராசு, பரமசிவம், 9 ஆவது வார்டு: பாண்டியன், பா.வைரம், 11 ஆவது வார்டு: சுஜாதா தமிழ்ச் செல்வம், 16 ஆவது வார்டு: இரமேசு, 23 ஆவது வார்டு: வங்கி இராசு, 37ஆவது வார்டு: மு.மொட்டையன், 39 ஆவது வார்டு: தனபால், பா.பூபாலன், 40 ஆவது வார்டு: தங்கவேல், இராசு, 54 ஆவது வார்டு: பு.வடி வேல், 56 ஆவது வார்டு: இராவண பூபதி, 57 ஆவது வார்டு: கே.ஜவகர், 59 ஆவது வார்டு: வ.வேணுகோபால், 60 ஆவது வார்டு: இள வரசன், கமலம்

அயோத்தியாப்பட்டினம்: ஜி.சங்கபாண்டி யன், மாதேஸ்வரன், கண்ணங்குறிச்சி: திருப் பூர் பாலு, திவ்வியபாரதி, கோ.விக்னேசுவரி, கல்பாரப்பட்டி: கோவிந்தராசு.

3) 18.1.2019 அன்று மாலை நடைபெறவுள்ள பிரச்சாரக் கூட்ட தொடக்க விழாவினை கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களைக் கொண்டு சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner