முன்பு அடுத்து Page:

கோரக்பூர் குழந்தைகள் உயிரிழப்புக்கு ஆக்சிஜன் பற்றாக்குறையே காரணம்! மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல்

கோரக்பூர் குழந்தைகள் உயிரிழப்புக்கு  ஆக்சிஜன் பற்றாக்குறையே காரணம்!  மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல்

கோரக்பூர், ஆக. 20 -எழுபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியான பிஆர்டி மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்ததாகவும், ஆகஸ்ட் 10, 11 ஆகிய தேதிகளில்30 குழந்தைகள் பலியான தற்கு ஆக்ஸிஜன் அளிக்கப் படாததே காரணம் என்றும் கோரக்பூர் மாவட்ட ஆட்சியர்ராஜீவ் ரவ்தேலா அறிக்கை அளித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் நகரில் பாபா ராகவ் தாஸ் (பிஆர்டி) அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில், கடந்த ஒரே வாரத்தில் 72-க் கும் மேற்பட்டகுழந்தைகள் உயிரி ழந்தது,....... மேலும்

20 ஆகஸ்ட் 2017 14:42:02

பீகாரில் பசுப்பாதுகாப்பு கும்பல் இரண்டாவது வன்முறை தாக்கப்பட்டவர்களே கைது செய்யப்பட்ட அவலம்

    பீகாரில் பசுப்பாதுகாப்பு கும்பல் இரண்டாவது வன்முறை தாக்கப்பட்டவர்களே கைது செய்யப்பட்ட அவலம்

பாட்னா, ஆக. 20- பீகார் மாநிலத்தில் தும்ரா கிராமத்தில் மாட்டிறைச்சியை சாப்பிட்டதாகக் கூறி சிறுபான்மை முசு லீம்கள் ஏழுபேர் மீது பசுப்பாதுகாவ லர்கள் என்று கூறிக்கொள்வோர் தாக் கியுள்ளனர். பசுப்பாதுகாவலர்கள்மீது நடவ டிக்கை எடுக்காத பீகார் மாநில காவல் துறையினர் வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்டு பாதிப்புக்குள்ளானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். பீகார் மாநிலத்தில் மேற்கு சம்பரன் மாவட்டத்தில் தும்ரா கிராமத்தில் கடந்த 17.8.2017 அன்று முசுலீம்கள்மீதான தாக்குதல் நடைபெற்றது. மொகம்மத் சகாபுதீன் என்பவர் மாட்டிறைச்சி....... மேலும்

20 ஆகஸ்ட் 2017 14:28:02

'புளூ வேல்' விளையாட்டு: சிறுவர்களை கண்காணிக்க பெற்றோர்களுக்கு அறிவுரை

'புளூ வேல்' விளையாட்டு: சிறுவர்களை கண்காணிக்க பெற்றோர்களுக்கு அறிவுரை

டில்லி, ஆக.18 இணையத் தில் 'புளூ வேல்' விளை யாடுவதால் சில மாற்றங் களுக்கு சிறார்கள் ஆளாகலாம், அவர்களை பெற்றோர்களும், ஆசிரியர்களும் கவனமாகக் கண்காணிக்க வேண்டும் என்று தேசிய சிறார் உரிமைகள் பாது காப்பு ஆணையம் (என்சிபிசிஆர்) அறிவுறுத்தியுள்ளது.இணையத்தில் 50 நாள்கள் விளையாடப்படும் விளை யாட்டு 'புளூ வேல்'. இந்த விளையாட்டின் ஒவ்வொரு நிலைகளைக் கடப்பதற்கு சில கொடூரமான சவால்கள் அளிக் கப்படுகின்றன. அதாவது, தங்களை காயப்படுத்திக் கொள்ளுதல் என்பது....... மேலும்

18 ஆகஸ்ட் 2017 15:39:03

திறந்தவெளி கழிப்பிடம் இல்லா மாநகரமாகிறது அய்தராபாத்

திறந்தவெளி கழிப்பிடம் இல்லா மாநகரமாகிறது அய்தராபாத்

அய்தராபாத், ஆக.18  அய்தரா பாத்தை விரைவில் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநகர மாக்க முயற்சி மேற்கெள்ளப் பட்டு இருப்பதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. தெலங்கானா நகராட்சி நிர் வாகம் மற்றும் நகர்ப்புற மேம் பாட்டுத்துறை அமைச்சர் கே.டி. ராமராவ்  அய்தராபாத் பெருநகர மாநகராட்சியை திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநக ராட்சியாக மாற்ற முயற்சி மேற் கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியிருந்தார். இதன்பேரில் இந்த மாநகராட் சியை திறந்த....... மேலும்

18 ஆகஸ்ட் 2017 15:35:03

வடமாநிலங்களில் தொடரும் கனமழை: 33 பேர் பலி

 வடமாநிலங்களில் தொடரும் கனமழை: 33 பேர் பலி

லக்னோ, ஆக. 17- வடமாநிலங்க ளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் மட்டும் 33 பேர் பலியாகியுள்ளதாக அம் மாநில அரசு தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய வடமாநிலங் களில் கனமழை பெய்து வரு கின்றது. இதனால், இம்மாநி லங்களின் பல பகுதிகள் வெள் ளத்தில் மிதக்கின்றன. இந் நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மட்டும் மழை வெள்ளத்திற்கு இது வரை....... மேலும்

17 ஆகஸ்ட் 2017 15:40:03

உள்ளாட்சித் தேர்தல் நடக்காதது தமிழகத்தில் ஆட்சி இல்லாததையே காட்டுகிறது: உச்சநீதிமன்றம் கண்டனம்

உள்ளாட்சித் தேர்தல் நடக்காதது தமிழகத்தில் ஆட்சி இல்லாததையே காட்டுகிறது: உச்சநீதிமன்றம் கண்டனம்

புதுடில்லி, ஆக. 17 -உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போடப்பட்டுக் கொண்டே போவ தைப் பார்க்கையில், தமிழகத்தில் ஆட்சி என்ற ஒன்று நடக்கவில்லை என்பதையும், அங்கு குழப்பம் நிலவுவதையுமே காட்டுவதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.தமிழகத்தில் 2011- ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கவேண்டும்; தொகுதி வரையறை மேற்கொள்ள வேண்டும்; மேலும் தேர் தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத் தைப் பயன்படுத்த வேண்டும் என்று மாநிலத் தேர்தல்....... மேலும்

17 ஆகஸ்ட் 2017 14:57:02

பிற மதத்தின் மீதும், மொழியின் மீதும் வெறுப்பை வளர்ப்பது தேசியவாதம் அல்ல கேரள முதல்வர் பினராயி விஜயன…

 பிற மதத்தின் மீதும், மொழியின் மீதும் வெறுப்பை வளர்ப்பது தேசியவாதம் அல்ல கேரள முதல்வர் பினராயி விஜயன்

திருவனந்தபுரம், ஆக. 16-  மற்ற வர்களின் மதம், மொழி, நாட்டின் மீது வெறுப்பை வளர்ப்பது தேசியவாதம் ஆகாது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன்,  திருவனந்தபுரத்தில் செவ்வாய்க்கிழமை தேசியக் கொடியேற்றி வைத்து அவர் பேசியதாவது: நமது தேசிய வாதம் என்பது வேற்றுமையில் ஒற்றுமை என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது. மதச்சார்பின்மையும், ஜனநாயக மாண்புகளும்தான் நமது தேசியத்தை காத்து நிற்கின்றன. பிற மதத்தின் மீதும், மற்ற வர்களின் மொழியின் மீதும், பிற நாடுகள்....... மேலும்

16 ஆகஸ்ட் 2017 16:46:04

தமிழக விவசாயிகள் நாட்டின் அடிமைகளா? டில்லியில் அய்யாக்கண்ணு ஆவேசம் இங்கிலாந்து தூதரகத்தில் இன்று மு…

 தமிழக விவசாயிகள் நாட்டின் அடிமைகளா? டில்லியில் அய்யாக்கண்ணு ஆவேசம் இங்கிலாந்து தூதரகத்தில் இன்று முற்றுகைப் போராட்டம்

புதுடில்லி, ஆக.16 விவசாயிகள் அனைவரும் நாட்டின் அடிமைகளா? என்று தமிழக விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழகத்தில் நிலவும் வறட்சியால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள் ளாகியுள்ளனர். எனவே விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர் களின் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், நதிகள் இணைப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் 2 ஆம் கட்டமாக டில்லி ஜந்தர் மந்தரில் கடந்த....... மேலும்

16 ஆகஸ்ட் 2017 15:03:03

மாநிலத்தில் பாயும் நதிகளில் குறைந்தபட்ச நீரோட்டம் இருக்க வேண்டும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

மாநிலத்தில் பாயும் நதிகளில் குறைந்தபட்ச நீரோட்டம் இருக்க வேண்டும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

புதுடில்லி, ஆக.15 அனைத்து மாநில அரசுகளும் தங்களது மாநிலத்தில் பாயும் நதிகளில் குறைந்தபட்சம் 15 முதல் 20 சதவீதம் வரை நீரோட் டம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட் டுள்ளது.ஒரு நதியில் பாயும் தண் ணீரின் அளவு, கால அளவு, அதன் தரம் ஆகியவற்றை வைத்து, அந்த நதியின் நிரோட் டம் நிர்ணயிக்கப்படுகிறது.இந்நிலையில், நாடு முழு வதும் உள்ள நதிகளில் தடையின்றி தண்ணீர்....... மேலும்

15 ஆகஸ்ட் 2017 15:16:03

வேலை நிறுத்தத்தின்போது பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதம் மாநில அரசுகள் பதில் அளிக்க உச்சநீதி…

வேலை நிறுத்தத்தின்போது பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதம்  மாநில அரசுகள் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் 4 வாரம் கெடு

புதுடில்லி, ஆக.15 வேலை நிறுத்தத்தின்போது பொது மற்றும் தனியார் சொத்துகளை சேதப்படுத்துவது தொடர்பாக பிறப்பித்த உத்தரவை அமல் படுத்தாத மாநிலங்கள் 4 வாரங் களுக்குள் பதில் அளிக்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கேரளாவை சேர்ந்த வழக் குரைஞர் கோசி ஜாக்கப் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், வேலை நிறுத்தம், முழு அடைப்பு போராட்டங் களின் போது பொது மற்றும் தனியார் சொத்துகளை அரசி யல் கட்சிகளும், பிறரும் சேதப் படுத்துவதை....... மேலும்

15 ஆகஸ்ட் 2017 14:57:02

Banner
Banner