முன்பு அடுத்து Page:

21 லட்சம் பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு அறிக்கை

21 லட்சம் பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு அறிக்கை

புதுடில்லி, செப்.21 கடந்த ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் மொத்தம் 21.40 லட்சம் பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருந் ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் ஏறத்தாழ 8 லட்சம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (என்ஏசிஓ) சார்பில் வெளியிடப் பட்ட அறிக்கையில் இந்த விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் மேலும் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது:நாடு முழுவதும் எய்ட்ஸ் நோய் தாக்கத்தைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன........ மேலும்

21 செப்டம்பர் 2018 16:34:04

பாலியல் வன்முறை: ஆர்எஸ்எஸ் தலைவர் கைது!

கொல்கத்தா, செப். 21 -மேற்கு வங்க மாநிலத்தில், பெண் ஒருவரை ஏமாற்றி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியதாக ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த அமலேந்து சட்டோபாத்யாய என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸின் மூத்த தலைவர் மேற்குவங்கமாநில பாஜக பொதுச் செயலாளராக இருந்தவர்,அமலேந்துசட்டோ பாத்யாய. ஆர்எஸ்எஸ் அமைப் பின் மூத்தத் தலைவர். தற்போது ஆர்எஸ்எஸ்நுகர்வோர்அமைப் பின்பொறுப்பாளராக இருக் கிறார். இந்நிலையில், அம லேந்து தன்னைத் திரு மணம் செய்துகொள்வதாகக்கூறி, பாலியல் வல்லுறவுக்குஉள் ளாக்கியதாகவும், அவரது பேச்சைக் கேட்டு....... மேலும்

21 செப்டம்பர் 2018 14:57:02

அரசு கட்டித்தரும் வீடுகளில் மோடி படம் இருக்கக் கூடாது!

மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் உத்தரவு போபால், செப்.21- பிரதமர் வீட்டு வசதித் திட்ட வீடுகளில் பதிக் கப்பட்ட, பிரதமர் மோடி, முதல்வர் சிவராஜ் சிங் சவு கான்படங்களைஅகற்றவேண் டும் என்று அம்மாநில உயர் நீதிமன்றம்அதிரடிஉத்தரவைப் பிறப்பித்துள்ளது. நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்கள், அரசு உதவியுடன் வீடுகள் கட்டிக்கொள்வதற்கு மத்திய அரசால் ஏற்கெனவே பல் வேறு திட்டங்கள் செயல்படுத் தப்பட்டு வந்தன. ஆனால்,பிரதமர் மோடிஆட் சிக்கு வந்ததும், திட்டத்தின் பெயரை மட்டும் பிரதம....... மேலும்

21 செப்டம்பர் 2018 14:57:02

மனித வள மேம்பாட்டு குறியீடு தரவரிசை: 130ஆவது இடத்தில் இந்தியா

மனித வள மேம்பாட்டு குறியீடு தரவரிசை:  130ஆவது இடத்தில் இந்தியா

புதுடில்லி, செப்.20  அய்.நா. மனித வள மேம்பாட்டு குறி யீடு தரவரி சையில் இந்தியா ஓரிடம் முன்னேறி 130-ஆவது இடத்துக்கு வந்துள்ளது. அய்.நா. அமைப்பின் பிரி வான அய்.நா. மேம்பாட்டுத் திட்ட அமைப்பு ஆண்டு தோறும் பல்வேறு நாடுகளில் ஆய்வு செய்து மனித வள மேம்பாட்டு குறியீடு தரவரி சையை வெளியிட்டு வருகிறது. நீண்ட நாள் மற்றும் ஆரோக்கிய மான வாழ்வு, எளிதில் தகவல்கள் கிடைப் பது,  வாழ்வதற்கான வசதி கள் ஆகியவற்றை அடிப்படை....... மேலும்

20 செப்டம்பர் 2018 16:36:04

தேர்தல்களில் நடத்தை விதிகள் மீறப்படுவதை கண்காணிக்க செயலி அறிமுகம்

புதுடில்லி,  செப்.20 மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 4 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் நடத்தை விதிகள் மீறப்படு வதைக் கண்காணிக்க சிறப்புச் செயலி அறிமுகப்படுத்தப்பட் டுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஓ.பி.ராவத் செய்தியாளர்களிடம் டில்லி யில் கூறியதாவது: "சி - விஜில்' எனப்படும் செல்லிடப்பேசி செயலியை தேர்தல் ஆணையம் உருவாக்கி யுள்ளது. கருநாடக சட்டப் பேரவைத் தேர்தல் நடை பெற்றபோது சோதனை முயற் சியாக பெங்களூரு....... மேலும்

20 செப்டம்பர் 2018 15:25:03

பெண்கள் தற்கொலை இந்தியாவில் அதிகரிப்பு மத்திய அரசின் சுகாதாரத்துறை ஆய்வில் தகவல்

புதுடில்லி, செப். 16- -இந்தியாவில் பெண் தற்கொலைகள் அதிகரித் துக் கொண்டே வருவதாக புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் நடக்கும் தற் கொலைகள் குறித்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், பப்ளிக் ஹெல்த் பவுண்டேசன் மற்றும் மத்திய அரசின் சுகா தாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளன. இந்த ஆய்வில்தான், இந்தியா வில்....... மேலும்

16 செப்டம்பர் 2018 16:38:04

கவிஞர் காசி முத்துமாணிக்கம் இல்ல மண விழா

கவிஞர் காசி முத்துமாணிக்கம் இல்ல மண விழா

14.9.2018 அன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அண்ணா அறிவாலயம் - கலைஞர் அரங்கில் திமுக வர்த்தகர் அணிச் செயலாளர் கவிஞர் காசி முத்துமாணிக்கம் மகள் சசிகலா - ஆர்.முத்துவீரப்பன் ஆகியோரது மணவிழாவினை தலைமையேற்று நடத்தி வைத்தார். தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மணமக்களை வாழ்த்தினார். உடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன், கவிப்பேரசு வைரமுத்து, திமு கழக மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி., முன்ள் அமைச்சர்....... மேலும்

16 செப்டம்பர் 2018 16:38:04

ராஜீவ் கொலை வழக்கு 7 பேரை விடுவிக்கும் விவகாரம் ஆளுநர் மாளிகை அறிவிப்பு

சென்னை, செப்.16 முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரை விடுதலை செய்ய  தமிழக அமைச்சரவை  தீர்மானம் நிறைவேற்றி, அதை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பி வைத்தது. மேலும் 7 பேர் தொடர்பான கோப்புகளையும் ஆளுநருக்கு அனுப்பியது. தமிழக அரசின் இந்த பரிந்துரை குறித்து கருத்து கேட்டு, மத்திய....... மேலும்

16 செப்டம்பர் 2018 16:15:04

தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் நியமனம்

புதுடில்லி, செப். 15-- உச்சநீதிமன் றத்தின் 46-ஆவது தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோ கோய்யை குடியரசுத் தலை வர் ராம்நாத்கோவிந்த் வியா ழக்கிழமை யன்று நியமித் தார். உச்சநீதிமன்றத்தின் தற் போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் பதவிக் காலம் அக்டோபர் 2-ஆம்தேதி யுடன் முடிவடைகிறது. உச்சநீதி மன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் பெயரைதலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார்.இதற்கு ஒப்புதல் அளித்த மத்திய....... மேலும்

15 செப்டம்பர் 2018 16:12:04

துவங்கப்படாத அம்பானியின் ஜியோ பல்கலை.க்கு இலவச நிலம், வரிச்சலுகை!

பாஜக மகாராட்டிர அரசு சலுகை அறிவிப்பு மும்பை, செப். 15-- முகேஷ் அம்பானியின்  இன்னும் துவங்கப்படாத பல்கலைக்கழ கத் திற்கு நிலம் மற்றும் வரிச்சலுகை வழங்கப்படும் என்று மகாராட்டிர மாநில பாஜக அரசு அறிவித்துள்ளது. நாட்டின் முதலாவது பணக்காரரான முகேஷ் அம்பானி, அவரது ரிலையன்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஜியோபல் கலைக்கழகம் என்ற புதிய பல்கலைக் கழகம் ஒன்றைத் துவங்க முடிவு செய்துள்ளார். ஆனால், பல்கலைக்கழகம் துவங்குவதற்கு முன்பாகவே, அவரது பல்கலைக்கழகம் உலகத்தரம் வாய்ந்த....... மேலும்

15 செப்டம்பர் 2018 16:12:04

உலக ஆக்கி லீக் இறுதிப்போட்டி: ஸ்பெயின், பெல்ஜியம் அணிகள் காலிறுதிக்கு முன்னேற்றம்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font



புவனேசுவர், டிச. 6- ஆக்கியில் சர்வதேச தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் பங்கேற்கும் உலக ஆக்கி லீக் பைனல்ஸ் தொடர் போட்டிகள் ஒடிசாவில் நடந்து வருகிறது. நேற்று ஏ பிரிவில் கடைசி லீக் போட்டிகள் நடைபெற்றன. மாலை 5:30 மணிக்கு நடை பெற்ற லீக் போட்டியில் அர் ஜெண்டினா - ஸ்பெயின் அணி கள் மோதின.

இப்போட்டியின் 21ஆ-வது நிமிடத்தில் அர்ஜெண்டினாவின் பரேடெஸ் மேட்டியாஸ் முதல் கோல் அடித்தார். இதனால் 1--0 என்ற கோல் கணக்கில் அர் ஜெண்டினா முன்னிலை பெற் றது. அதன்பின்னர் மூன்றாம் கால்பகுதி ஆட்டநேர முடிவு வரை இரு அணியினரும் வேறு எந்த கோலும் அடிக்கவில்லை.

தொடர்ந்து நடைபெற்ற கடைசி கால்பகுதி ஆட்டநேரத் தின் 50ஆ-வது நிமிடத்தில் ஸ்பெ யினின் கியூமடா பவு கோல் அடித்தார். அதைத்தொடர்ந்து ஆட்டம் முடிய ஒரு நிமிடமே இருந்த நிலையில் ஸ்பெயி னின் ரோமியூ ஜோசப் கோல் அடித்தார். இதன் காரணமாக 2--1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் வெற்றி பெற்றது.

இரவு 7:30 மணிக்கு தொடங்கிய மற்றொரு ஏ பிரிவு லீக் போட்டியில் பெல்ஜியம், நெதர்லாந்தை எதிர்கொண்டது. இப்போட்டியின் 19ஆ-வது மற்றும் 30ஆ-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் லைபேர்ட் லாயிக் தொடர்ந்து இரண்டு கோல்கள் அடித்தார். அதைத்தொடர்ந்து 32-ஆவது நிமிடத்தில் பெல்ஜியம் அணி யின் பூன் டாம் மேற்கொண்டு ஒரு கோல் அடித்தார். நெதர் லாந்து அணியினர் இறுதிவரை எந்த கோலும் அடிக்கவில்லை. இதனால் பெல்ஜியம் அணியி னர் 3--0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.

இன்று நடைபெறும் காலி றுதி போட்டிகளில் ஸ்பெயின் - ஆஸ்திரேலியா, பெல்ஜியம் - இந்தியா அணிகள் பலப் பரீட்சை செய்ய உள்ளன.

கராத்தே போட்டியில் சாதனை

மதுரை, டிச. 6- மலேசியாவில் நடந்த சர்வதேச கோஜூ காய் சிலாங்கோர் வாகையர் பட்டப் போட்டியில்

மதுரை வீரர்கள் சாதனை படைத்தனர்.

இந்திய அமைப்பின் தலைமை பயிற்சியாளர் நாகசந்திரன் தலைமையில் மாணவர்கள் பங்கேற்றனர். இதில் மகா மெட்ரிக் பள்ளி மாணவி குகப்பிரியா கட்டா பிரிவில் முதலிடம், பிரிட்டோ மெட்ரிக் பள்ளி மாணவன் விஷ்ணுபிரியன் முதலி டம், சண்டைப்பிரிவில் 3ஆம் இடம், ராயல் மெட்ரிக் பள்ளி மாணவன் ரஞ்சித்குமார் கட்டா பிரிவில் 2ஆம் இடம், சண்டை பிரிவில் 3ஆம் இடம் பெற்று பதக்கங்களை வென்றனர். இவர்களை தாளாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner