முன்பு அடுத்து Page:

ஜெயலலிதா இருந்திருந்தால் பாரதீய ஜனதா அரசுக்கு எதிராக அ.தி.மு.க. வாக்களித்து இருக்கும் மம்தா பா…

   ஜெயலலிதா இருந்திருந்தால்  பாரதீய ஜனதா அரசுக்கு எதிராக  அ.தி.மு.க. வாக்களித்து இருக்கும்  மம்தா பானர்ஜி சாடல்

கொல்கத்தா, ஜூலை 22 மத்தி யில் உள்ள பாரதீய ஜனதா அர சுக்கு எதிராக, மக்களவையில் நேற்று முன்தினம் தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. தீர்மானத் துக்கு ஆதரவாக 126 ஓட்டுக ளும், எதிராக 325 ஓட்டுகளும் கிடைத்தன. அ.தி.மு.க. எம். பி.க்கள் தீர்மானத்துக்கு எதி ராக, அதாவது அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்த நிலையில், கொல்கத் தாவில் நேற்று (21.7.2018) நடை....... மேலும்

22 ஜூலை 2018 16:05:04

ஆசிய இளையோர் பாட்மிண்டன்

   ஆசிய இளையோர் பாட்மிண்டன்

    ஜாகர்த்தா, ஜூலை 22- ஆசிய இளையோர் பாட்மிண்டன் வாகையர் போட்டி இறுதிச் சுற்றுக்கு இந்திய நட்சத்திர வீரர் லக்சயா சென் தகுதி பெற்றுள்ளார். ஜாகர்த்தாவில் ஆசிய இளையோர் பாட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர்கள் பலர் தோல்வியுற்று வெளியேறிய நிலையில் நட்சத்திர வீரர் லக்ஷயா சென் அரையிறுதிச் சுற்றில் 4-ஆம் நிலை வீரர் இந்தோனேஷியாவின் இக்சான் லியோர்னர்டா ரம்பேவை 21--7, 21--14 என நேர் செட்களில் வென்றார். ஏற்கெனவே....... மேலும்

22 ஜூலை 2018 15:55:03

கேரள பள்ளிகளில் தமிழாசிரியர்களை நியமிக்க பினராயி விஜயன் உத்தரவு!

கேரள பள்ளிகளில் தமிழாசிரியர்களை  நியமிக்க பினராயி விஜயன் உத்தரவு!

      திருவனந்தபுரம், ஜூலை 22- கேரள மாநிலத்தில் ஒன்றாம் வகுப்புமுதல் 10-ஆம் வகுப்பு வரை, தமிழில்தகவல் தொழில் நுட்பப் பாடநூல்களை வெளியிடவும், தமிழ் படிக்கும் மாணவர்களுக்கான சிறப்பாசி ரியர்களை நியமிக்கவும், முதல் வர் பினராயி விஜயன் உத்தர விட்டுள்ளார். கேரள மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் முதல்பாட மொழி யாக மலையாளமே உள்ளது. ஆகவே, அனைத்துப்பள்ளிகளி லும் மலையாளம் கட்டாயம். அதேநேரம் பிற கற்பித்தல் மொழிகள் என்ற அடிப்படை யில், இந்தி, சமஸ்கிருதம், தமிழ், ஆங்கிலம்....... மேலும்

22 ஜூலை 2018 15:55:03

மோடி ஆட்சியை வீழ்த்தும் தருணம் இதுவே: சீத்தாராம் யெச்சூரி

   மோடி ஆட்சியை வீழ்த்தும் தருணம் இதுவே: சீத்தாராம் யெச்சூரி

    புதுடில்லி, ஜூலை 22- நாடாளு மன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தின் போது, எதிர்க் கட்சி உறுப்பினர் கள் எழுப்பிய ஒரு கேள்விக்கு கூட பிரதமர் நரேந்திரமோடி பதில் அளிக்கவில்லை; மாறாக அவரது பதிலுரை முழுவதும் மீண்டும் வெற்று வாய்ச்சவ டால் பேச்சுக்களாகவே அமைந் திருந்தது என்று சீத்தாராம் யெச்சூரி விமர்சித்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்பொதுச் செயலாளர் சீத்தாராம்யெச்சூரி கூறியிருப் பதாவது: நாடாளுமன்றத்தில் நம்பிக் கையில்லா தீர்மானங்கள் என் பவை, பொதுவாக அதிகாரத்....... மேலும்

22 ஜூலை 2018 15:54:03

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ரூ.77 ஆயிரம் கோடி நிதி முறையாகப் பயன்படுத்தாமல் இருப்பது ஏன்? உச்ச ந…

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ரூ.77 ஆயிரம்  கோடி நிதி  முறையாகப் பயன்படுத்தாமல் இருப்பது ஏன்?  உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடில்லி, ஜூலை 22 சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக திரட்டப்பட்ட ரூ.77,000 கோடி நிதியை முறையாகப் பயன் படுத்தாமல் இருப்பது ஏன்? என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள் ளது. மேலும், இந்த நிதியை சரிவரக் கையாண்டு திட்டங் களைச் செயல்படுத்தியிருந்தால் பல்வேறு சூழலியல் மாற்றங் களை எதிர்கொள்ளாமல் இருந் திருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளது. நாட்டின் சுற்றுச்சூழல், வனச் சூழல் ஆகியவற்றைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் பல்வேறு நிதித் தொகுப்புகளை உருவாக்குமாறு....... மேலும்

22 ஜூலை 2018 15:09:03

உலகப் பொருளாதாரத்தில் 6-ஆவது இடம் வளர்ச்சியல்ல; பின்னடைவு! பாஜகவுக்கு காங்கிரஸ் பதிலடி

   உலகப் பொருளாதாரத்தில் 6-ஆவது இடம்  வளர்ச்சியல்ல; பின்னடைவு!  பாஜகவுக்கு காங்கிரஸ் பதிலடி

புதுடில்லி, ஜூலை 22 -அண்மையில் உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில், இந்தியப் பொருளாதாரம், பிரான்ஸைப் பின்னுக்குத் தள்ளி,6-ஆவது இடத்துக்கு முன்னேறி இருப்பதாக கூறப் பட்டிருந்தது. உடனே இது மோடியின் சாதனை என்று வழக்கம் போல பாஜக-வினர் பெருமை பேசத் துவங்கினர். இந்நிலையில், பாஜக பெருமைப்பட ஒன்றுமில்லை; சொல்லப்போனால் வெட்கப் பட வேண்டும் என்று காங் கிரஸ் கட்சியினர் பாஜக-வுக்கு பதிலடி கொடுத்துள்ளனர். 2011-ஆம் ஆண்டு இந்தியப் பொருளாதாரம் மூன்றாவது இடத்தில் இருந்தநிலையில்,....... மேலும்

22 ஜூலை 2018 15:09:03

கேரளத்தின் எந்தக் கோரிக்கைக்கும் பதிலளிக்கவில்லை மோடி உடனான சந்திப்பு பயனற்றது! : பினராயி விஜயன் பே…

கேரளத்தின் எந்தக் கோரிக்கைக்கும் பதிலளிக்கவில்லை  மோடி உடனான சந்திப்பு பயனற்றது! : பினராயி விஜயன் பேட்டி

    புதுடில்லி, ஜூலை 22 -பிரதமர் நரேந்திரமோடி உட னான சந்திப்பு எந்த பயனையும் அளிப்பதாக இல்லை என்று கேரள முதல்வர் பினராயி விஜயனும், எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னி தலாவும் கூறியுள்ளனர். கேரள முதல்வர் தலைமையில், அம்மாநிலத்தின் அனைத்துக் கட்சி குழுவி னரைச் சந்திக்க பிரதமர் மோடி தொடர்ந்து மறுத்துவந்தார். 3 முறை நேரம் ஒதுக்கித்தர கோரியும் மோடி நேரம்ஒதுக்கவில்லை. இதுதொடர்பாக கேரளமுதல்வர் பினராயிவிஜயன் பகிரங்க குற்றச்சாட்டை வைத்த பிறகு, வேண்டாவெறுப்பாக....... மேலும்

22 ஜூலை 2018 15:09:03

அற்பத்தனம்

அற்பத்தனம்

டில்லியில் அப்துல்கலாம் பெயர் சூட்டப்பட்ட பகுதியில் வசிப்பதில் பெரு மைப்படுகிறேன் என மத்திய அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான வெங்கையா நாயுடு கூறினார். டில்லியில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு முன்பு அவுரங்கசீப் சாலை என்ற முகவரியில் வசித்து வந்த போது என் முகவரியை யாருக்காவது தெரிவிக்கும் போது தயக்கமும், கூச்சமும் ஏற்படும். இப்போது அந்த சாலை அப்துல்கலாம் என பெயர்....... மேலும்

21 ஜூலை 2018 17:40:05

எந்த இடத்தில் இந்தியா?

எந்த இடத்தில் இந்தியா?

வளர்ந்து வரும் நாடுகளின் வறுமை அளவில் இந்தியா 26ஆவது இடத்தி லுள்ளது. கல்வி, சுகாதாரம், வாழும் நிலை ஆகியவற்றின் அடிப்படையில் வறுமை அளவைக் கணக்கிட்டு INDIA MULTI DIMENTIONAL POVERTY (MDP) எனும் வறுமைக் கணக்கீடு தயாரிக்கப்படுகிறது. கேரள (1%), தமிழ்நாடு (6%), கருநாடகா (11%), தெலங்கானா (14%), ஆந்திரா (13%), ஆகிய மாநிலங்களில் வறுமை விகிதம் குறைந்துள்ளது. இந்தியாவின் தேசிய சராசரி 21% என்றால் அதில் தென்னிந்தியாவின் பங்கு 9%....... மேலும்

21 ஜூலை 2018 17:40:05

மாநிலங்களவையில் இனி 22 மொழிகளிலும் பேச வசதி?

புதுடில்லி, ஜூலை 21- நாடாளுமன்ற மாநிலங்களவையில், அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளிலும் உறுப்பினர்கள் பேசுவ தற்கான ஏற்பாடு நடைமுறைக்கு வந்துள் ளது. இந்த நடைமுறையை மாநிலங்க ளவைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு, துவங்கி வைத்துள்ளார். இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் 22 மொழிகள் அங்கீகரிக் கப்பட்டு இருந்தாலும், அவற்றை நாட்டின் மிக உயர்ந்த அமைப்பான நாடாளுமன் றத்தில் பேச முடியாத நிலை இருந்தது. ஆங்கிலம், இந்தி தெரியாதவர்கள் முன் கூட்டியே....... மேலும்

21 ஜூலை 2018 16:16:04

2018 மார்ச்சில் விண்ணில் ஏவப்படுகிறது சந்திராயன் 2 விண்கலம்! முதல் முறையாக லேண்ட் ரோவர் கருவியை அனுப்புகிறது இஸ்ரோ

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


பெங்களூரு, டிச.6 வரும் மார்ச் மாதம் ஜிஎஸ்எல்வி மார்க் 2 ராக்கெட் மூலம் சந்திராயன் 2 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கான திட்டப் பணிகள் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ ஆய்வு மய்யத்தில் நடைபெற்று வருவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

நிலவு குறித்த ஆராய்ச்சியில் இந்தியா இதுவரை நிகழ்த்திய பெரிய சாதனை எனில் அது சந்திராயன் -1 திட்டம் என்று கூற லாம். நிலவின் வட்டப் பாதை யில் சந்திராயன் -1 விண்கலத்தை சரியாக நிலை நிறுத்திய போது உலகமே இந்தியாவைத் திரும் பிப் பார்த்தது. மிகவும் குறைந்த செலவில், நிறைய அறிவியல் கணிப்புகளை வைத்து சந்தி ராயன்1 செயல் திட்டம் வெற்றி கரமாக முடிக்கப்பட்டது.

இந்நிலையில் சந்திராயன், நிலவில் நீர்வழித் தடங்கள் தெரி வதாக கூறியது. இந்தக் கண்டு பிடிப்பு இதுவரை எந்த விண் வெளி ஆராய்ச்சி நிறுவனங்களும் செய்யாதது ஆகும். அதன்பின் சில நாள்களில் இந்தியாவின் கண்டுபிடிப்பு உண்மைதான் என்று அமெரிக்காவின் விண் வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அறிவித்தது.

சந்திராயன் -2: இப்போது ஜிஎஸ்எல்வி மார்க் 2 ராக்கெட் மூலம் சந்திராயன் -2 விண்கலத்தை அனுப்பத் திட்டமிடப்பட்டுள் ளது. இதில் விண்கலம் மட்டு மின்றி சிறிய அளவிலான ரோபோ போன்ற ரோவர் ஒன்று அனுப்பப்பட உள்ளது. இந்த சந்திராயன் -2 ரோவர் நிலவின் மேற்பரப்பில் இறக்கப்பட்டு அங்கு ஆராய்ச்சிகளை மேற்கொள் ளும். இதற்கு முன் 2013- இல் கடைசியாக நிலவுக்கு சீனா இது போன்ற ரோவர் ஒன்றை அனுப்பியுள்ளது.

அதன்படி நிலவுக்கு மனிதர் களை அனுப்பும் திட்டத்துக்கு முன்னோட்டமாகவே இந்த ரோவர் அனுப்பும் திட்டத்தில் இஸ்ரோ களம் இறங்கி உள்ளது. இப்போது இந்த ரோவர் திட்டம் 2018 மார்ச் மாதத்தில் முடி வடைந்து, அதே மாத இறுதியில் நிலவுக்கு அனுப்பப்படும் என இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்தன.

எவ்வளவு எடை ?: ஜிஎஸ்எல்வி மார்க் 2 ராக்கெட் மூலம் கொண்டு செல்லப்படவுள்ள சந்திராயன் -2 விண்கலம் 3,290 கிலோ எடை கொண்டதாக இருக்கும். இதில் ரஷ்யாவின் இஸாடோப் நிறுவனம் ஆல்ஃபா எமிட்டர் பாகங்களை வழங்கி யுள்ளது. மேலும், நவீன ரக முப்பரிமாண கேமராக்கள் பொருத்தப்பட்டுள் ளன. எல்லாம், திட்டமிட்டப்படி நடக்கும் பட்சத்தில் பூமியில் இருந்து புறப்பட்ட 14-ஆவது நாளில், நில வில் தனது பணியை சந்திராயன்- 2 தொடங்கும்.

லேண்ட் ரோவர்: சந்திராயன் -1 கருவிகள் மூலமாகக் கிடைத்த விவரங்களை ஆய்வு செய்வ தற்காக, நிலவில் இறங்கி ஆய்வு செய்வதற்காக லேண்ட் ரோவர் என்ற தானாக இயங்கும் கருவி அனுப்பப்பட உள்ளது.

சுமார் 20 கிலோ எடை கொண்ட இந்தக் கருவியில் 6 சக்கரங்கள் பொருத்தப்பட்டிருக் கும். இந்தக் கருவி சூரியசக்தி மூலம் இயங்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

லேண்ட் ரோவர் கருவியை நிலவில் எந்த இடத்தில் இறங்கச் செய்வது என்று இப்போது விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வரு கிறார்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner