முன்பு அடுத்து Page:

மோடியை என்னிடம் பாடம் கேட்கச் சொல்லுங்கள்

மோடியை என்னிடம் பாடம் கேட்கச் சொல்லுங்கள்

பெண்கள், சிறுபான்மையினர், தலித் மக்கள் இவர்களைப் பிரித்து வைத்து மோடி அரசியல் நடத்துவது ஆபத்தானது! மோடியை என்னிடம் பாடம் கேட்கச் சொல்லுங்கள் ஆங்கில ஏட்டுக்கு மேனாள் பிரதமர் மன்மோகன்சிங் பேட்டி புதுடில்லி, ஏப்.20 பெண்கள், சிறுபான்மையினர், தலித்துகளைப் பிரித்து வைத்து மோடி அரசியல் நடத்துவது ஆபத்தானது என்றும், இதுகுறித்துப் பிரதமர் என்னிடம் பாடம் கேட்கலாம் என்றும் மேனாள் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் ஆங்கில ஏட்டுக்கு அளித்த பேட்டியில் கூறினார். இந்தியாவையே உலுக்கிய மூன்று....... மேலும்

20 ஏப்ரல் 2018 15:34:03

இந்திய வரலாற்றில் மோசமான நாள் : காங்கிரசு கட்சி கருத்து

இந்திய வரலாற்றில் மோசமான நாள் : காங்கிரசு கட்சி கருத்து

நீதிபதி லோயா மரணம் பற்றிய வழக்கு   சுதந்திரமான விசாரணையை கேட்பது நீதித்துறையின் மீது தாக்குதலாம்   சிறப்பு விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு     டில்லி, ஏப். 20- நீதிபதி லோயா மரணம் குறித்து சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட  மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தவிட்டுள்ளது. குஜராத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு, சொராபுதீன், அவருடைய மனைவி கவுசர் உள்ளிட்டோர் காவல்துறையின ரின் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப் பட்டனர்........ மேலும்

20 ஏப்ரல் 2018 15:21:03

இதுதான் இவர்களின் இந்துத்துவா! பாலியல் வழக்குகளில் பா.ஜ.க.வுக்கு முதலிடம்

 இதுதான் இவர்களின் இந்துத்துவா! பாலியல் வழக்குகளில் பா.ஜ.க.வுக்கு முதலிடம்

டில்லி, ஏப்.20 ஜனநாயக சீர்திருத்த சங்கம் மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப் பகம் அறிக்கையின்படி, பார தீய ஜனதாவிலே அதிகமான எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பெண்களுக்கு எதி ரான குற்றங்களில் வழக்குகளை எதிர்க்கொண்டு வருகின்றனர் என தெரியவந்துள்ளது. இப்போது எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் களின் 4,896 வேட்பு மனுக்களில் 4,845 வேட்பு மனுக்களை இரு தேர்தல் கண்காணிப்பு அமைப் புகளும் ஆய்வு செய்து உள்ளன. 768 எம்.பி.க்கள் மற்றும் 4,077 எம்.எல்.ஏ.க்களின்....... மேலும்

20 ஏப்ரல் 2018 15:19:03

சிலைகளை வீழ்த்தலாம், விதைத்த சிந்தனைகளை வீழ்த்த முடியாது : கவிதைக் கருத்தரங்கம்

சிலைகளை வீழ்த்தலாம், விதைத்த சிந்தனைகளை வீழ்த்த முடியாது  : கவிதைக் கருத்தரங்கம்

திரிபுரா தேர்தல் முடிவுகள் வந்த அடுத்த நாளே பாஜகவினரும், இந்துத்துவ அமைப்பினரும் இணைந்து திரிபுராவில் ஒரு கல்லூரிக்கு வெளியே தனியார் இடத்தில் வைக்கப்பட்டிருந்த ரஷ்யப் புரட்சியாளர் லெனின் சிலையைத் தகர்த்தனர். இந்த சிலை தகர்ப்பு நிகழ்வு பரபரப்பாகிக் கொண்டு இருக்கும் போது தமிழ கத்தைச்சேர்ந்த பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா அடுத்து பெரியார் சிலை உடைக்கப்படும் என்றார். அவர் கூறிய மறுநாளே வேலூருக்கு அருகில் உள்ள திருப்பத்தூரில் பெரியார் சிலை....... மேலும்

20 ஏப்ரல் 2018 15:19:03

உ.பி.யில் 8 வயது சிறுமி பாலியல் வன்முறை கொலை

உ.பி.யில் 8 வயது சிறுமி பாலியல் வன்முறை கொலை

டில்லி, ஏப். 18- காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் எட்டு வயது சிறுமி பாலியல் வன் முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டாள். அந்நிகழ் வைப்போன்று, பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தின் ஈடா மாவட்டத்தில் நேற்று (16.4.2018) மாலை எட்டு வயது சிறுமி பாலியல் வன்முறைக்கு உள் ளாக்கப்பட்டு, கொல்லப்பட்டார். திருமணம் உள்ளிட்ட நிகழ்ச் சிகளுக்கு அரங்குகள் அமைக் கும் பணியை செய்து வரும் சோனு என்பவன் சிறு மியிடம் பாலியல் வன்முறை செய்து, தாக்கிக்....... மேலும்

18 ஏப்ரல் 2018 16:44:04

உபியில் நடப்பது பாஜக காட்டுத் தர்பார்! இளம் சகோதரிகள் இருவர் சுட்டுக்கொலை

உபியில் நடப்பது பாஜக காட்டுத் தர்பார்!  இளம் சகோதரிகள் இருவர் சுட்டுக்கொலை

ஈட்டாவா, ஏப். 18- சாமியார் ஆதித்யநாத் ஆளும் உத்தரப் பிரதேச மாநில பாஜக அரசில் இளம் சகோதரிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் கெலமாவா கிராமத்தில் இரு சகோதரிகள் 17 வயதில் ஒருவ ரும், 13 வயதில் மற்றொருவ ருமாக இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். சகோதரிகள் இருவரும் வீட்டை விட்டு வெளியே மாலை யில் சென்றவர்கள் நீண்ட நேர மாகியும் வீடு திரும்பவில்லை. இருப்பினும், கிராமத்தில் நடந்துகொண்டிருக்கின்ற திருமண விழாவுக்கு சென்றிருக் கலாம்....... மேலும்

18 ஏப்ரல் 2018 16:42:04

ஏடிஎம்-களில் பணம் வரவில்லை! நாடு முழுவதும் மக்கள் அவதி

  ஏடிஎம்-களில் பணம் வரவில்லை! நாடு முழுவதும் மக்கள் அவதி

புதுடில்லி, ஏப். 18 டில்லி, உத்தரப்பிர தேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், கருநா டகா, தெலுங்கானா, தமிழ்நாடு எனநாடு முழுவதும் திடீரென ஏடிஎம்-களில் பணம் வராததால், கடுமையான பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப் பட்ட 2000 ரூபாய் மற்றும்500 ரூபாய் நோட்டுக்களையும் முடக் குவதற்கு மோடி அரசு திட்டமிடு வதாக தகவல்கள் பரவுவதால் மக்கள் அச்சமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். நாடு முழுவதும் பணத் தட்டுப்பாடு இருப்பதாக கூறப் பட்டாலும், டில்லி,....... மேலும்

18 ஏப்ரல் 2018 15:54:03

தமிழகத்தில் சோலார் மின் உற்பத்தி முதலிடத்திலிருந்து அய்ந்தாம் இடத்திற்கு இறங்கியுள்ளது 'சண்டே டைம்ஸ…

தமிழகத்தில் சோலார் மின் உற்பத்தி முதலிடத்திலிருந்து அய்ந்தாம் இடத்திற்கு இறங்கியுள்ளது  'சண்டே டைம்ஸ்' நாளேடு படப்பிடிப்பு

சென்னை, ஏப் 17 -சோலார் (சூரிய மின்சக்தி)மின் உற்பத்தியில் முன் னணியில் இருந்த தமிழகம் இன்றைக்கு நாட்டிலேயே அய்ந்தாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.  இது தொடர்பான திட்டங்களை நிறைவேற்றுவதில் அக் கறையற்ற  அரசின் செயல்பாடுகள்தான் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. சோலார் மின் உற்பத்தியில் தமிழகம், உயர்நிலையில் இருந்து 5 வது இடத்திற்குப்பின் தங்கியுள்ளது குறித்து 'சண்டே டைம்ஸ்'  நாளேடு வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரை வருமாறு: -சோலார் மின் உற்பத்தித்திறனில் தற்போது,....... மேலும்

17 ஏப்ரல் 2018 16:54:04

மோடி ஆட்சியில் தாழ்த்தப்பட்டவர்கள் ஒதுக்கப்பட்டவர்களாகவே உள்ளனர்: மாயாவதி

மோடி ஆட்சியில் தாழ்த்தப்பட்டவர்கள் ஒதுக்கப்பட்டவர்களாகவே உள்ளனர்: மாயாவதி

லக்னோ, ஏப்.17 அம்பேத்கர் பெயரில் பிரதமர் மோடி திட்டங்கள் கொண்டுவருவதில் பயனில்லை என்றும், அவரது ஆட்சியில் தாழ்த்தப் பட்டவர்கள் ஒதுக்கப்பட்டவர்களாகவே உள்ளனர் என்றும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி விமர்சித் துள்ளார். சட்ட மேதை அம்பேத்கரின் 127ஆவது பிறந்த தினம் நாடு முழுவதும் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநி லம் லக்னோவில் இதுதொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பகுஜன் சமாஜ் தலை வர் மாயாவதி கூறியதாவது: மோடி தலைமையிலான பாஜக....... மேலும்

17 ஏப்ரல் 2018 16:48:04

மாற்றுப்பாலினத்தவர்களுக்கான பள்ளியில் வகுப்புகள் தொடங்கின

 மாற்றுப்பாலினத்தவர்களுக்கான பள்ளியில் வகுப்புகள் தொடங்கின

இசுலாமாபாத், ஏப். 17- பாகிஸ் தான் நாட்டின் லாகூர் நகரில் சுமார் 30 ஆயிரம் மாற்றுப் பாலினத்தவர்கள் வசித்து வரு கின்றனர். இவர்கள் சமூகத்தில் மிகவும் மோசமாக நடத்தப்படு கின்றனர். இந்த நிலையை மாற்றி அவர்களும் வாழ்வில் முன்னேற பாகிஸ்தானில் முதல் மாற்றுப் பாலினத்தவர்களுக் கான பிரத்யேக பள்ளி தொடங் கப்பட்டுள்ளது. லாகூர் நகரில் ராணுவ குடி யிருப்பு பகுதியில் அமைக்கப் பட்ட பள்ளியில் நேற்று வகுப் புகள் தொடங்கியது. இப்பள்ளி....... மேலும்

17 ஏப்ரல் 2018 16:07:04

மதத்தை முன்னிறுத்தி எந்தக் கட்சியும் ஆட்சி நடத்த முடியாது : பாஜகமீது மம்தா தாக்கு!

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கொல்கத்தா, டிச. 7 வளர்ச்சியை முன்னிறுத்துவ தற்கு பதிலாக மதத்தை முன் னிறுத்தி எந்தக் கட்சியும் ஆட்சி நடத்த முடியாது என்று பாஜகவை மேற்கு வங்க முதல்வர் மம்தா  சாடியுள்ளார். மக்கள் எந்த வகையான உணவை உண்ண வேண்டும்? என ஆணையிடும் அதிகாரம் எவருக்கும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆன நிலையில், அந்தச் சம்பவத்தை நினைவு கூரும் வகையிலான நிகழ்ச்சி மேற்கு வங்கத் தலைநகர், கொல்கத்தாவில் புதன்கிழமை நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மம்தா  மத்திய அரசு மீதும், பாஜக மீதும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத் தார். இதுதொடர்பாக நிகழ்ச்சி யில் அவர் மேலும் பேசிய தாவது:

மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள் குறித்தோ அல்லது பாஜகவின் பிரிவினைவாதக் கொள்கைகள் குறித்தோ கருத்து தெரிவிப்ப வர்களுக்கு மிரட்டல் விடுக்கப் படுகிறது. அப்படித்தான் திரிண மூல் காங்கிரஸ் தலைவர்களை மத்திய ஆட்சியாளர்கள் மிரட் டினர். அவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கையும் மேற்கொண் டனர்.

எத்தகைய அச்சுறுத்தல் களை விடுத்தாலும் மத்திய அரசின் மக்கள் விரோத நட வடிக்கைகளுக்கு எதிராக எழுப் பப்படும் கண்டனக் குரல்களை தடுத்து நிறுத்த முடியாது. சரியான தலைவர் என்பவர் அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவானவராக இருக்க வேண்டும். அந்த அடிப்படையில்தான் நான் செயல்படு கிறேன். ஆனால், பாஜகவோ மக்களிடையே பிரிவினை யையும், மோதலையும் ஏற் படுத்தும் நடவடிக்கையில் ஈடு படுகிறது. சமூக நல்லிணக் கத்தை குலைக்க விழைகிறது. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் பாக இத்தகைய பிரித்தாளும் அரசியல் (பாபர் மசூதி இடிப்பு) ஆரம்பித்தது. இன்றள வும் அந்த அவலம் தொடர் கிறது. இத்தகைய சக்திகளின் சதி வலையில் சிக்காமல் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். வளர்ச்சியை முன் னிறுத்தி அரசியல் நடவடிக்கை களை மேற்கொள்ளலாம். அல்லது மக்களின் அடிப் படைத் தேவைகளை முன்னி றுத்தி அரசியல் செய்யலாம். அவற்றை எல்லாம் விடுத்து மதத்தையும், ஜாதியையும் அடிப்படையாகக் கொண்டு தேர்தலை சந்திக்க முடியாது. ஆட்சியும் நடத்த முடியாது.

மக்கள் எந்த உணவை உண்ண வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு அவர்கள் யார்? அந்த உரிமை எவருக்கும் இல்லை. எனது உயிர் இருக்கும் வரை இந்தக் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்துக் கொண்டே இருப்பேன். அதை எவராலும் தடுக்க முடியாது என்றார் மம்தா.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner