முன்பு அடுத்து Page:

மும்பை மாரத்தான் போட்டிகள்

 மும்பை மாரத்தான் போட்டிகள்

மும்பை, ஜன. 22- மும்பையில் நடைபெற்ற மாரத்தான் போட் டியில் எத்தியோபியாவைச் சேர்ந்த சாலமன் டெக்சிசா ஆட வர் பிரிவிலும், சகநாட்டவரான அமானே கொபேனா மகளிர் பிரிவிலும் வாகையர் ஆகினர். ஆடவர் பிரிவில் சாலமன் டெக்சிசா பந்தய இலக்கான 42 கிலோ மீட்டரை 2 மணி 9 நிமிடம் 34 நொடிகளில் எட்டி முதலிடம் பிடித்தார். சகநாட்டவரான சூமெட் அகல்னா 2 மணி 8 நிமிடம் 35 நொடிகளில் வந்து 2-ஆம்....... மேலும்

22 ஜனவரி 2018 16:41:04

ஒரு சதவீத இந்தியர்களிடம் நாட்டின் 73 சதவீத சொத்துகளாம்

ஒரு சதவீத இந்தியர்களிடம்  நாட்டின் 73 சதவீத சொத்துகளாம்

டேவோஸ், ஜன.22 நாட்டின் 73 சதவீத சொத்துக்கள் -/வளங்கள், ஒரு சதவீத மக்க ளிடம் மட்டுமே உள்ளது. இது மக்களிடையே வருவாய் சம நிலை இல்லாத நிலையை காட்டுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. சர்வதேச அமைப்பான ஆக்ஸ்போம் ஹவர்ஸ், இந்திய மக்களி டையே வருவாய் சமநிலை, சொத்துக்களின் சதவீதம் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாக கொண்டு நடப்பாண்டில் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வறிக்கை தற்போது வெளியிடப்பட் டுள்ளது. அதன்படி, இந்தியாவின் 73 சதவீத....... மேலும்

22 ஜனவரி 2018 16:26:04

மத்தியப் பிரதேசத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜக படுதோல்வி

மத்தியப் பிரதேசத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பாஜக படுதோல்வி

போபால், ஜன.22 மத்தியப் பிரதேசம் மாநிலம், குனா மாவட்டத்தில் உள்ள ரகோகர் தொகுதியின் 24 வார்டுகளுக்கு கடந்த புதன்கிழமை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பா.ஜ.க., காங்கிரசு உள்ளிட்ட பல கட்சிகள் போட்டியிட் டன. 66 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதி காரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், ரகோகர் தொகுதியில் பதிவான வாக்கு களை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.   முதலில் இருந்தே காங்கிரசு முன்னிலை பெற்று வந்தது. இறுதியில், மொத்தம்....... மேலும்

22 ஜனவரி 2018 16:21:04

எல்லையில் கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்

எல்லையில் கிராமங்களை குறிவைத்து  பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்

புதுடில்லி, ஜன.21 எல்லையில் இந்திய கிராமங்களை குறி வைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதை அடுத்து அந்நாட்டு தூதருக்கு இந்தியா சம்மன் விடுத்தது. காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ் தான் ராணுவம் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறது. எல்லை நிலைகளை குறிவைத்த போது இந்திய ராணுவம் அதிர டியை காட்டியது. இதனால் பாகிஸ்தானுக்கு பெரும் இழப்பு நேரிட்டது. இப்போது எல்லைக் கிராம மக்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம்....... மேலும்

21 ஜனவரி 2018 16:14:04

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா எழுதிய '2ஜி சாகா அன்ஃபோல்ட்ஸ்' புத்தகம் வெளியீடு

முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா எழுதிய  '2ஜி சாகா அன்ஃபோல்ட்ஸ்' புத்தகம்  வெளியீடு

புதுடில்லி,  ஜன.21 நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை  வழக்கில் குற்றம் சாட் டப்பட்ட ஆ.இராசா, கனிமொழி உள் ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து டில்லி சி.பி.அய். சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி உத்தர விட்டார். இந்த தீர்ப்பை தி.மு.க.வினர் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித் தும் கொண்டாடி வருகின்றனர். இதற் கிடையே, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா 2ஜி விவகாரம் தொடர்பான விவரங்கள் அடங்கிய புத்தகம் ஒன்றை....... மேலும்

21 ஜனவரி 2018 16:07:04

பிரிவினையால் ஏற்பட்ட பாதிப்பு - கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் மத்திய அரசு மீது வழக்கு ஆந்திர முதல்வர் …

 பிரிவினையால் ஏற்பட்ட பாதிப்பு - கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் மத்திய அரசு மீது வழக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு

அமராவதி, ஜன20 மாநில பிரிவினையால் ஏற்பட்ட பாதிப் பில் இருந்து மீள உதவிகள் அளிக்காவிட்டால், மத்திய அரசுமீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு அறிவித்துள்ளார். நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் ராஜீவ் குமார் நேற்று முன்தினம் ஆந்திராவில் பய ணம் மேற்கொண்டார். அங்கு அவர் அளித்த பேட்டியில், ஆந்திராவின் பொருளாதார வளர்ச்சியை வைத்து பார்க்கும் போது, மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு ஏற்பட்ட பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இம்மாநிலத்துக்கு மத்திய....... மேலும்

20 ஜனவரி 2018 15:47:03

பிரகாஷ் ராஜ் பேசிய மேடையை பசு கோமியத்தால் சுத்தமாக்கியதாம் பா.ஜ.க.

பிரகாஷ் ராஜ் பேசிய மேடையை பசு கோமியத்தால் சுத்தமாக்கியதாம் பா.ஜ.க.

நான் செல்லும் இடமெல்லாம் சுத்தம் செய்வீர்களா? பிரகாஷ்ராஜ்   பெங்களூரு, ஜன.18 கருநாடக மாநிலம், சிர்சி நகரில் உள்ள ராகவேந்திரா மடத்தில், நடிகர் பிரகாஷ் ராஜ் பங்கேற்று பேசிய மேடை, நிகழ்ச்சி முடிந்த பின், பசுவின் கோமியத்தால் கழுவி சுத்தம் செய்யப்பட்டதாம். தமிழ், கன்னட திரைப்படங் களில் நடித்து வரும், நடிகர் பிரகாஷ் ராஜ், பா.ஜ.,விற்கு எதிராக கருத்துகளை கூறி வரு கிறார். காங்கிரசைச் சேர்ந்த, சித்தராமையா முதல்வராக உள்ள கருநாடகாவில், சிர்சி நகரில்....... மேலும்

18 ஜனவரி 2018 14:00:02

பாஸ்போர்ட்டிலும் காவி!

 பாஸ்போர்ட்டிலும் காவி!

திருவனந்தபுரம், ஜன. 18- மத்திய அரசு விநியோகிக்க திட்டமிட் டுள்ள ஆரஞ்சு நிறத்திலான பாஸ்போர்ட்டுகள், குடிமக்களி டையே பாரபட்சத்தை உரு வாக்கும் என்று கேரள முன் னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி தெரிவித்தார். மேலும், இந்த நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என் றும் அவர் வலியுறுத்தியுள்ளார். குடிமக்களுக்கு வழங்கப் படும் பாஸ்போர்ட் முறையில் சில மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான அறிவிப்பை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம்....... மேலும்

18 ஜனவரி 2018 13:49:01

கார்ட்டோசாட்-2 எடுத்த முதல் படத்தை இஸ்ரோ வெளியிட்டது

கார்ட்டோசாட்-2 எடுத்த  முதல் படத்தை இஸ்ரோ வெளியிட்டது

கார்ட்டோசாட்-2 எடுத்த முதல் படத்தை இஸ்ரோ வெளியிட்டது புதுடில்லி, ஜன.18- இந்தியாவின் 100- ஆவது செயற்கைக்கோளான கார்ட்டோசாட்-2எடுத்தமுதல் படத்தை இஸ்ரோ வெளியிட் டுள்ளது. கார்ட்டோசாட்-2 செயற் கைக்கோள், கடந்த ஜனவரி 12-ஆம் தேதி பி.எஸ்.எல்.வி.சி-40 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டு, பூமியிலிருந்து சுமார் 510 கி.மீ. உயரத்தில் புவியின்சுற்றுவட்டப்பாதை யில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.இஸ்ரோ வர லாற்றில் இது புதிய சாதனை யாகவும், புதிய மைல் கல் லாகவும் பார்க்கப்படுகிறது.இயற்கை....... மேலும்

18 ஜனவரி 2018 13:49:01

தெலங்கானாவில் பிரஜா நாத்திக சமாஜத்தின் சார்பில் தந்தை பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம்

தெலங்கானாவில் பிரஜா நாத்திக சமாஜத்தின் சார்பில் தந்தை பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம்

கரீம்நகர், ஜன.18 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 44ஆவது ஆண்டு நினைவு நாள் தெலுங்கானா மாநிலம் கரீம்நகரில் பிரஜா நாத்திக சமாஜத்தின் சார்பில் ஜி.டி.சாரய்யா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சந்திரன் உரை இக்கூட்டத்தில் நெல்லூர் ஆந்திர பிரதேசம் முற்போக்கு மக்கள் இயக்கத்தின் சார்பில் பெரியாரின் கருத்து பரப்பு ரையாளர் சந்திரன் கலந்து கொண்டு உரையாற்றுகையில், பெரியாரின் கருத்துக்கள் காலம், மொழி, பிராந்தியங்களை கடந்து உலகம் முழுவதும் பொதுவானவை என்றும், பெரியார் காலத்தின் கட்டாயம் என்றும்....... மேலும்

18 ஜனவரி 2018 13:47:01

காந்தியார் படத்தை தவறாக சித்தரிப்பதா? மத்தியப்பிரதேச மாநில காங்கிரசு கட்சி சைபர் குற்றப்பிரிவில் புகார்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


போபால், டிச.7 காந்தியாரின் படத்தை தவறாக சித்தரித்ததுகுறித்து காவல் துறையின் சைபர் குற்றப்பிரிவில்  மத்தியப்பிரதேச மாநில காங்கிரசு கட்சி சார்பில் புகார் கொடுக்கப் பட்டுள்ளது.

பங்கஜ் சதுர்வேதி

மத்தியப்பிரதேச மாநில காங்கிரசு கட்சி தொடர்பாளர் பங்கஜ் சதுர்வேதி கூறியதாவது:

ராகுல் காந்தி காங்கிரசு கட்சியின் தலைவர் பதவிக்கு மனுதாக்கல் செய் யும் படத்தை வெளியிடும்போது அப் படத்தின் பின்னணியில் சித்தரிக்கப் பட்ட படத்தை இணைத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.

சிலர் காந்தி படத்தை முகலாயப் பேரரசர்போல் சித்தரித்துள்ளனர்.

இதுபோன்று காந்தியார் படத்தை சித்தரித்து வெளியிடுவது காந்தியாரை இழிவுபடுத்துவதாகும். காங்கிரசு கட்சியின் மூத்த தலை வர்களை குறைத்து மதிப்பிடும் நோக்கில் இது போன்று சித்தரிக்கிறார்கள். காந்தியார் படத்தை தவறாக சித்தரித்து வெளியிடப்பட்டது குறித்து காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவில் புகார் கொடுத் துள்ளோம் என்றார்.

இதேபோல், சமூக ஊடகங்களில், நேருவுடன் காந்தி பேசும் காட்சி உள்ள படத்தில் காந்திக்கு மிக அருகில் நேரு படம் இருந்த இடத்தில் ஒரு பெண்ணின் படத்தை வெளியிட்டு, அப்பெண் முத்தமிட நெருங் குவது போன்று காந்தியை இழிவு படுத்தும் நோக்கில் சித்தரிக் கப்பட்ட படங்கள் சமூக ஊடகங்களில் வெளி யாகியுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

மத்தியப்பிரதேச மாநில  சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கண் காணிப்பாளர் சைலேந்தர சிங் சவுகான் புகாரைப்பெற்றுக்கொண்டு உரிய நட வடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner