முன்பு அடுத்து Page:

ஜாதியே உனக்கொரு சாவு வந்து சேராதா?

மகளின் உடைமைகளை பாடையில் வைத்து இறுதிச் சடங்கு செய்த பெற்றோரின் ஜாதி வெறி போபால், நவ.20 மத்திய பிரதேச மாநி லத்தில், ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட மகள் உயிருடன் இருக்கும்போதே, அவளின் உடை மைகளை பாடையில் கட்டி, சுடு காடுவரை சென்று புதைத்து, இறுதிச் சடங்கு செய்துள்ளனர் அவரது பெற் றோர். மத்திய பிரதேச மாநிலம், போரி கிரா மத்தைச் சேர்ந்தவர் குசும் (20). இவர் நானுடங்கி என்பவரைக் காதலித்து....... மேலும்

20 நவம்பர் 2018 14:44:02

ம.பி.யில் 62 தொகுதிகளில் பாஜகவுக்கு எதிராக அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் போட்டி…

போபால், நவ.19 -மத்தியப்பிரதேச மாநிலத்தில், பாஜக 3 முறை தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்து வருகிறது. ஆனால், இந்தமுறை மக்களிடம் கடும் எதிர்ப்பைச் சந்தித்து வருகிறது. சாமியார்கள் கூடபாஜக-வை ஆதரிக்காத நிலை ஏற்பட்டுள்ளது. மாறாக, அவர்கள் பாஜக மற்றும் முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை எதிர்த்து பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், பாஜக-வுக்கு போட்டியாக, அந்த கட்சியின் முன்னாள்அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ-க் களே தற்போது களத்தில் இறங்கியுள்ளனர். 230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப்பிரதேசத்தில், சுமார்....... மேலும்

19 நவம்பர் 2018 15:46:03

ரிசர்வ் வங்கியிடம் உள்ள ரூ.9 லட்சம் கோடியை கைப்பற்ற அரசு முயற்சி: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

ரிசர்வ் வங்கியிடம் உள்ள ரூ.9 லட்சம் கோடியை கைப்பற்ற அரசு முயற்சி: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

புதுடில்லி, நவ.19  ரிசர்வ் வங்கியின் ரூ.9 லட்சம் கோடி இருப்பு நிதியை தனது கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு முயற்சிக்கிறது என ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். ரிசர்வ் வங்கியின் நிர்வாகக்குழு கூட் டம் இன்று நடக்கிறது. இதில், ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல், 4 துணை ஆளுநர்கள், 18 நிர்வாகக்குழு உறுப்பி னர்கள், நிதியமைச்சகத்தின் பிரதிநிதிகள் மற்றும் சில தன்னிச்சையான ....... மேலும்

19 நவம்பர் 2018 14:57:02

போலிச் சான்றிதழ் கொடுத்த ஏபிவிபி மாணவர் தலைவர் சேர்க்கையை டில்லி பல்கலை. ரத்து செய்தது!

புதுடில்லி, நவ.19 - போலிச் சான்றிதழ் அளித்து, மேற் படிப்பில் சேர்ந்தவரும், ஆர்எஸ்எஸ்-சின் மாணவர் பிரிவு (ஏபிவிபி) தலைவருமான அன் கிவ் பாய் சோவின் சேர்க்கையை டில்லி பல்கலைக் கழகம் ரத்து செய்துள்ளது. டில்லி பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தலில், ஆர்எஸ்எஸ்-ஸின் மாணவர் பிரிவான ஏபிவிபி பல்வேறு மோசடிகளைச் செய்து வெற்றி பெற்றது. அந்த அமைப்பைச் சேர்ந்த அன்கிவ் பாய்சோயா பேரவைத் தலைவராக தேர்ந் தெடுக்கப்பட்டார். இந்நிலையில், தேர் தலில் வெற்றி பெற்றதில்....... மேலும்

19 நவம்பர் 2018 14:57:02

மராட்டியர்களுக்கு 16 சதவீத இடஒதுக்கீடு: மகாராஷ்டிரா மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரை

மும்பை, நவ.18 மகாராஷ்டிர மாநில மக்கள் தொகையில், 30 சதவீதம் உள்ள மராட்டியர்களுக்கு, 16 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என, மகாராஷ்டிர மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரை செய்துள் ளது. மகாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ.க., - சிவசேனா கூட்டணி அரசு அமைந்துள்ளது. மாநில மக்கள் தொகையில், 30 சதவீதம் உள்ள, மராட்டியர்கள், கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு அளிக்கும்படி, நீண்ட காலமாக கோரி வருகின்....... மேலும்

18 நவம்பர் 2018 16:43:04

மேற்கு வங்காளத்திலும் சி.பி.அய். நுழைய தடை

கொல்கத்தா, நவ.18 ஆந்திர மாநிலத்தை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் சி.பி.அய். நுழைவதற்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக சி.பி.அய்.க்கு வழங்கிய பொது அனுமதியை திரும்ப பெற்றது.  மத்திய புலனாய்வு அமைப் பான சி.பி.அய்., டில்லி சிறப்பு காவல்துறை நிறுவன சட்டத்தின் கீழ் இயங்கி வரு கிறது. நாட்டின் மிக உயர்ந்த விசாரணை அமைப்பான சி.பி. அய்.க்கு, பல்வேறு குற்றங்கள், குற்றசதிகளை விசாரிப்பதற்கு இந்திய தண்டனை சட்டத்தின் சுமார்....... மேலும்

18 நவம்பர் 2018 16:28:04

டில்லி பல்கலைக்கழக மாணவர் தலைவரான ஏபிவிபி மாணவர் மோசடி

போலிச் சான்றிதழ் அளித்தது நிரூபணம் டில்லி, நவ.18 டில்லி பல்கலைக் கழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பாஜகவின் மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர் போலியான சான்றிதழை அளித்து மோசடி செய்தது நிரூபணமாகியுள்ளது. டில்லி பல்கலைக்கழக மாணவர் தேர்தலில்  மாணவர் தலைவராக அகில பாரத வித்ய பரிசத் (ஏபிவிபி) அமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டவர் அங்கிவ் பல்சோயா எனும் மாணவர் ஆவார். இவர் தமிழகத் தின் வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத் தின் போலிச்....... மேலும்

18 நவம்பர் 2018 16:21:04

சிறு விவசாயிகளுக்கு உதவாத திட்டம்

சிறு விவசாயிகளுக்கு உதவாத திட்டம்

மோடி அரசின் பயிர்க் காப்பீடு  திட்டத்தில் இணைந்த விவசாயிகள் 84 லட்சம்  பேர் திட்டத்திலிருந்து  வெளியேறினர்! தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வெளியான தகவல் புதுடில்லி, நவ.18 பிரதமர் மோடி அறிவித்த பிரதான் மந்திரி ஃபசல்பீமா யோஜனா என்ற பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தால்விவசாயிகள் எந்த பயனும் அடையவில்லை; மாறாக மோடியின் கார்ப்பரேட் நண்பர்கள் ரூ. 15 ஆயிரம் கோடியை அள்ளிக் குவித்துள் ளனர் என்பது தெரியவந்துள்ளது.மத்திய பாஜக அரசின் பிரதான்....... மேலும்

18 நவம்பர் 2018 15:00:03

தபோல்கர் படுகொலை திட்டமிட்ட பயங்கரவாத செயல்!

நீதிமன்றத்தில் சிபிஅய் தகவல் புதுடில்லி, நவ.18 -பகுத்தறிவாளர் நரேந்திரதபோல்கரின்படு கொலையானது, நன்கு திட்ட மிடப்பட்ட பயங்கரவாதச் செயல் என்று மத்தியப் புல னாய்வுக் கழகம்  கூறியுள்ளது. தபோல்கர் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட் டுள்ள 6 பேர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட் டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்வதற்கு அனுமதி கோரி, புனே செசன்ஸ் நீதிமன்றத்தில் சிபிஅய் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவிலேயே இந்த தகவலைத் தெரிவித்துள்ளது........ மேலும்

18 நவம்பர் 2018 15:00:03

ஆபரேசன் கருடா சதித்திட்டம் தகவல் வெளியிட்ட தெலுங்கு நடிகருக்கு

ஆபரேசன் கருடா சதித்திட்டம் தகவல் வெளியிட்ட தெலுங்கு நடிகருக்கு

பாஜக கொலை மிரட்டல்! விஜயவாடா, நவ. 18 -பிரபல தெலுங்குநடிகர்சிவாஜி. இவர், கடந்தாண்டு பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டார். அதில், தென்மாநிலங்களில் அரசியல் குழப்பத்தை ஏற் படுத்த, ஆபரேசன் கருடா என்ற சதித்திட்டத்தை மத்திய பாஜக அரசு தீட்டியுள்ளதாக தெரிவித்தார்.குறிப்பாக,ஆந் திர மாநில அரசுக்குச் சிக்கலை ஏற்படுத்தும் வகையில், எதிர்க் கட்சித் தலைவர் உயிருக்கு ஆபத்து இல்லாத வகையில் தாக்குதல் நடத்துவதும், ஆந் திர மாநில ஆட்சியாளர்கள், அவர்களைச் சார்ந்தவர்கள்மீது, சிபிஅய்....... மேலும்

18 நவம்பர் 2018 15:00:03

மத்திய பட்ஜெட்: ஏழைகளுக்கு ஏமாற்றம்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


புதுதில்லி, பிப். 2- 2018-2019ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை, நிதியமைச்சர் அருண்ஜெட்லி, நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப் படும், புதிய தொழிற் சாலைகள், விவசாய மேம்பாடு, வேலை வாய்ப்புக்கான திட்டங்கள் அறிவிக்கப்படும், வரி விகிதங்கள் குறைக்கப்படும் என்று மக்கள் ஏராளமான எதிர்பார்ப்புக் களை வைத்திருந்த நிலையில், வழக்கம் போல அவர்களை ஏமாற்றுவதாகவும், கார்ப்பரேட் முதலாளிகளையும் மகிழ்விப்பதாகவும் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.மற்றொரு புறம், வருமான வரி துவங்கி,உற்பத்தி, ஏற்றுமதி- இறக்குமதி வரி, விற்பனை வரி, செஸ் வரி அனைத்து வரிகளும்பல மடங்கு பட்ஜெட்டில் உயர்த்தப்பட்டி ருப்பது, சாதாரண- நடுத்தர மக்களை வஞ்சிப்பதாக அமைந்துள்ளது. வரிகள் உயர்வால் விலைவாசி கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏமாற்றம் அளித்த வருமான உச்சவரம்பு

வருமான வரிக்கான உச்சவரம்பு ரூ. 5 லட்சம் ஆக்கப்படும் என்று எதிர்பார்க்கப் பட்ட நிலையில், அதில் எந்த மாற்றமும்இல்லை என்று பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டுள்ளது. இது நடுத்தர மக்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது. 60 வயதுக்கு கீழே இருப்பவர்களுக்கு ரூ. 2.50 லட்சம் வரையிலான ஆண்டு வருவாய்க்கு வரி கிடையாது; ரூ. 2.50 லட்சம் முதல், ரூ. 5 லட்சம் வரையிலான வருவாய் பிரிவினருக்கு 5 சதவிகிதம் வரி, ரூ. 5 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான பிரிவினருக்கு 20 சதவிகிதம் வரி, ரூ. 10 லட்சத்திற்கு மேற்பட்ட வருவாய் பிரிவினருக்கு 30 சதவிகித வரி என்பதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

செஸ் வரி 4 சதவிகிதமாக உயர்வு

ஆனால், ரூ. 2.50 லட்சத்திற்கு மேல் வருவாய் ஈட்டுவோர் இதுவரை செலுத்தி வந்த செஸ் வரி 3 சதவிகிதத்திலிருந்து 4 சதவிகிதமாக உயர்த்தப்பட்டு இருப்பது, அனைத்துத் தரப்பினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.1 சதவிகிதம் உயர்த்தப்பட்ட செஸ் வரியின் மூலம் 11 ஆயிரம் கோடியை, நடுத்தர மற்றும் உயர் நடுத்தர மக்களிடமிருந்து பறிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
முதலீட்டு நிதி மீது 10 சதவிகிதம் வரி

முதலீட்டாளர்கள் மீதும் கூடுதல் வரி ஒன்று விதிக்கப்பட்டுள்ளது. தற்போது 12 மாதங்களுக்கும் மேற்பட்ட பங்கு பரஸ்பர நிதிகளுக்கு வரி கிடையாது. இனிமேல் அதற்கும் வரி விதிக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டு உள்ளது. இதன்படி 2018 ஜனவரி 31-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளுக்கு வரி கிடையாது. ஆனால், இனி ரூ. 1 லட்சத்திற்கு மேலான வருவாய் பெறும் நீண்டகால முதலீட்டு ஆதாயத்திற்கு 10 சதவிகித வரி விதிக்கப்படுகிறது. இது பங்குச் சந்தை சார்ந்த தொழிலில் இருப்போருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

கலால், சுங்க வரியும் அதிகரிப்பு

நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில், கலால் மற்றும் சுங்க வரிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கல்விக்கான செஸ் வரியும் 3 சதவிகிதத்திலிருந்து 4 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.இதனால், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலெக்ட்ரிக்கல்ஸ் பொருட்களின் விலை கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.குறிப்பாக, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எல்இடி, எல்சிடி டிவி பேனல்கள், உதிரிபாகங்களின் சுங்கவரி இரு மடங்காக பட்ஜெட்டில் உயர்த்தப் பட்டுள்ளது. முன்பு 7.5 சதவிகிதமாக இருந்த சுங்கவரி தற்போது 15 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல இறக்குமதி செய்யப்படும் மொபைல் போனுக் கான சுங்க வரியும் 20 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இத னால், பல்வேறு இறக்குமதி பொருட்களின் விலைகள் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

கார்ப்பரேட்டுகளை மகிழ்வித்த மத்திய அரசு

கார்ப்பரேட் நிறுவனங் களுக்கான வரி 30 சதவிகிதத்தில் இருந்து 25 சதவிகிதமாக குறைக்கப்படும் என்று முன்பே எதிர்பார்க்கப்பட்டது. அது நடந்திருக்கிறது. ரூ.50 கோடி வருவாய் ஈட்டும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த 25 சதவீத வரிச் சலுகை ரூபாய் 250 கோடி வருவாய் ஈட்டும் நிறுவனங்களுக்கும் அள்ளி கொடுக்கப்பட்டுள்ளது.

சிறு- குறு தொழில்முனைவோர் அதிருப்தி

சிறு, குறு தொழில்கள் எதிர்பார்த்த சலுகை களும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. ஜிஎஸ்டி-க்கு பிறகு நலிவடைந்திருக்கும் சிறு, குறுந்தொழில்களின் வளர்ச்சிக்கு சாதகமான அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முத்ராதிட்டத்தின் கீழ் ரூ. 4.6 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு மற்றும் கடன் இலக்கு ரூ. 3 லட்சம் கோடி என்பதைத் தாண்டியமற்ற அறிவிப்புகள் இல்லாதது தொழில்முனை வோருக்கு ஏமாற்றத் தை அளித்துள்ளது.

ரூ. 80 ஆயிரம் கோடி மதிப்பிலான பொதுத்துறை பங்குகளை விற்க முடிவு

ஆரவாரமாக நிதி சார்ந்த சலுகை அறிவிப்புக்கள் பட்ஜெட்டில் வெளியாகியுள்ள நிலையில், இதற்கான நிதி திரட்டுவது தொடர்பான ஆக்கப்பூர்வ செயல் திட்டங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.ஆனால், பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்று ரூ. 80 ஆயிரம் கோடியை நிதியாக திரட்டப்போவதாகவும், 3 பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்களை ஒன்றாக இணைக்கப் போவதாகவும் அரசு அறிவித்துள்ளது.நாட்டின் தங்க பரிமாற்றத்தில் வெளிப் படைத் தன்மையைக் கடைப்பிடிக்கபுதிய திட்டம் கொண்டு வரப்படும், பிட்காயின் பண முறைஉள்ளிட்ட வற்றை ஒழிக்க திட்டம்வகுக்கப்படும், பொதுமக்கள் தங்கத்தை எளி தாக மாற்றிக் கொள்ள வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner