முன்பு அடுத்து Page:

2002ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது, அரசமைப்புச்சட்டம் 355 பிரிவு ஏன் பயன்படுத்தப்படவில்லை?

2002ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது, அரசமைப்புச்சட்டம் 355 பிரிவு ஏன் பயன்படுத்தப்படவில்லை?

முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி கேள்வி புதுடில்லி, ஆக.16 2002ஆ-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரம் கட்டுக் கடங்காமல் சென்றபோது,அங்கு அப் போதைய மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் இருந்தபோதிலும்கூட ஏன் அரசமைப்புச் சட்டம் 355 பிரிவு அமல் படுத்தப்படவில்லை என்று முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி கேள்வி எழுப்பியுள்ளார். அரசமைப்புச் சட்டம் 355 பிரிவு என்பது வெளிநாட்டு ஆக்கிரமிப்பு, உள்நாட்டுக் கலவரம், பிரச்சினை, குழப்பம்....... மேலும்

16 அக்டோபர் 2018 16:48:04

அய்யப்பன் கோயிலில் 25 ஆண்டுக்கு முன் இளம் பெண்கள் தரிசனம் செய்த ஆதாரம் உள்ளது

அய்யப்பன் கோயிலில் 25 ஆண்டுக்கு முன் இளம் பெண்கள் தரிசனம் செய்த ஆதாரம் உள்ளது

கேரள முதல்வர் பினராய் விஜயன் திருவனந்தபுரம், அக்.16 அய்யப்பன் கோவில் விவகாரம் தொடர்பாக கேரள முதல்வர் பினராய் விஜயன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: சபரிமலை  அய்யப்பன் கோயில் விவகாரம் தொடர்பாக தற்போதைய உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு  கேரள அரசு எந்த விதத்திலும் காரணமல்ல. சுமார் 25 வருடங்களுக்கு முன்  சபரிமலையில்  இளம்பெண்கள் சென்றனர் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. கடந்த  1990ஆம் ஆண்டு மகேந்திரன் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்திற்கு ஒரு கடிதம்  அனுப்பினார். அதில், சபரி....... மேலும்

16 அக்டோபர் 2018 16:48:04

பாஜக ஆட்சியைபோல எந்த ஆட்சியும் மக்களுக்கு இவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்தியதில்லை லோக்தந்திரிக் ஜனத…

  பாஜக ஆட்சியைபோல எந்த ஆட்சியும் மக்களுக்கு இவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்தியதில்லை  லோக்தந்திரிக் ஜனதா தளக் கட்சியின் தலைவர் சரத்யாதவ்

முசாஃபர், அக்.16 நாடு விடுதலை அடைந்த காலத்தில் இருந்து, பாஜக அரசைப் போல எந்தவொரு ஆட்சியிலும் மக்களுக்கு மிக அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தியது இல்லை என்று லோக்தந்திரிக் ஜனதா தளம் கட்சியின் தலைவர் சரத் யாதவ் தெரிவித்தார். இதுதொடர்பாக, பீகார் மாநிலம், முசாஃபர்பூரில் செய்தியாளர்களிடம் அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: 2014-இல் மக்களவைத் தேர் தலின்போது அளித்த எந்த வொரு வாக்குறுதியையும் பிரதமர் நரேந்திர மோடியால் நிறைவேற்ற முடியவில்லை. ஒன்றன் பின் ஒன்றாக அவர்....... மேலும்

16 அக்டோபர் 2018 16:35:04

மதச் சார்பற்ற அரசின் மத்திய அமைச்சர் மதவிழாவில் பங்கேற்பதா?

சிப்பாய்களுடன் ஆயுத பூஜை கொண்டாடுகிறாராம் புதுடில்லி, அக்.16 பாகிஸ்தான் எல்லையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சாஸ்திர பூஜை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய, பாகிஸ்தான் எல்லை யோரப்பகுதியாகிய பைகானேர் பகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தசரா விழாவைக் கொண்டாடுகிறார். விழாவின்ஒருபகுதியாகசாஸ் திர பூஜையிலும் அவர் கலந்து கொள்கிறார். பாகிஸ்தான் எல்லையில் ஆயுதங்களைவைத்து சாஸ்திர பூஜையை ஒரு மூத்த அமைச்சர் செய்வதுஇதுவேமுதல்முறை என அலுவலர்கள் கூறியுள்ளனர். பைகானேரில் 18.10.2018 அன்று தசரா விழாவில் ....... மேலும்

16 அக்டோபர் 2018 16:04:04

ரஃபேல் விவகாரம்: ரிலையன்ஸ் குழுமத்தின் கணக்கில் ரூ. 30,000 கோடி: 2016-17 ஆண்டறிக்கையில் அம்பலம்

புதுடில்லி, அக்.15 ரஃபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் புதிய திருப்பமாக, டசால்ட்-ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் லிமி டெட்(டிஆர்ஏஎல்) நிறுவனத் தின் 2016- -17 ஆண்டறிக்கையில் ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டசால்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் இந்திய விமானப் படை யின் தேவைக்காக 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க அரசு முடிவெடுத்தது. இதற் காக பிரான்ஸைச் சேர்ந்த டசால்ட் நிறுவனத்துடன் ஒப் பந்தம் செய்து கொண்டது. இந்தஒப்பந்தத்தில்அனில் அம்பானியின்....... மேலும்

15 அக்டோபர் 2018 14:58:02

மதப் பண்டிகைகளா - உயிர்க் குடிக்கும் மரணக் கிடங்குகளா?

மதப் பண்டிகைகளா - உயிர்க் குடிக்கும் மரணக் கிடங்குகளா?

நவராத்திரிக்குச் சென்று திரும்பிய 10 பேர் பலி ராய்ப்பூர், அக்.15 சத்தீஸ்கர் மாநிலம் ராஜநந்த்கான் மாவட்டம், டோங் கர்கர் நகரில் உள்ள  பம்லேஸ்வரி கோவிலில் நவராத்திரி நடைபெற்று வருகிறது. துர்க் மாவட்டம் பிலாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் நேற்று காலை அந்த கோவிலில் வழிபாடு செய்துவிட்டு சொகுசு காரில் ஊருக்கு புறப்பட்டு சென்றனர். ராஜநந்த்கான்-துர்க் சாலையில் சோம்னி கிராமம் அருகே சென்ற போது முன்னால் சென்ற வாக னத்தை முந்திச் செல்ல ஓட்டுநர் முயன்றுள்ளார்........ மேலும்

15 அக்டோபர் 2018 14:57:02

'நானும்கூடத்தான்!' ''me too''

இந்திரனால் கல்லான அகலிகை சொல்கிறாள்... me too தருமனால் பணயம் வைக்கப்பட்டு, துச்சாதனனால் சேலை உருவப்பட்ட பாஞ்சாலி சொல்கிறாள்... me too பீஷ்மனால் வாழ்விழந்த அம்பை சொல்கிறாள்... me too வியாசகனால் விருப்பமின்றி வயிற்றுப்பிள்ளையை சுமந்த அம்பிகா- அம்பாலிகா சொல்கிறார்கள்... me too சூரியனால் கர்ப்பமாகி கர்ணனை பெற்ற குந்தி சொல்கிறாள்... me too ராமனால் நெருப்பில் தள்ளப்பட்ட சீதை சொல்கிறாள்... me too லட்சுமணனால் மூக்கறுப்பட்ட சூர்ப்பனகை சொல்கிறாள்... me too சிவனால் வன்புணர்வு செய்யப்பட்ட பார்வதி சொல்கிறாள்.......... மேலும்

15 அக்டோபர் 2018 14:57:02

ஆளுநர் மாளிகையில் ரூ.85 லட்சம் முறைகேடு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி புகார்

ஆளுநர் மாளிகையில் ரூ.85 லட்சம் முறைகேடு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி புகார்

புதுச்சேரி, அக்.14 புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- கார்ப்பரேட் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அரசின் வளர்ச்சி திட்டங்களில் பங்கேற்கும் வகையில் சமூக பங்களிப்பு நிதி கமிட்டி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியின் தலைவராக முதல்-அமைச்சரும், செயலராக மாவட்ட ஆட்சியரும் உள்ளனர். புதுவை முதல்-அமைச்சர் அலுவலகம், ஆட்சியர் அலு வலகத்தில் இதற்காக நிதி தருவார்கள். காசோலை வழி யாக பெறப்படும் இந்த நிதிக்கு உடனடியாக அத்தாட்சி ரசீது வழங்கப்படும். இந்த நிதியின் மூலம்....... மேலும்

14 அக்டோபர் 2018 16:10:04

ரஃபேல் : எச்ஏஎல் நிறுவனத்தின் உரிமையை பறித்துவிட்டார் மோடி : ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு

ரஃபேல் : எச்ஏஎல் நிறுவனத்தின் உரிமையை பறித்துவிட்டார் மோடி  : ராகுல் பகிரங்க குற்றச்சாட்டு

பெங்களூரு, அக்.14 ரஃபேல் போர் விமானத்தின் உதிரி பாகங்கள் தயாரிக்கும் பணிகளை மேற்கொள்வ தற்கான தார்மீக உரிமை இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துக்கு (எச்ஏஎல்) மட்டுமே உள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அந்த உரிமையை பிரதமர் மோடி பறித்துவிட்டதாகவும், மத்திய அரசின் ஊழல் நடவடிக்கைகளால் பாரம்பரிய மிக்க அந்நிறுவனம் படிப்படியாக அழிவை நோக்கி....... மேலும்

14 அக்டோபர் 2018 16:10:04

பள்ளி மாணவர்களுக்கான புரதச்சத்து நுகர் திட்டம்

சென்னை, அக்.14 சென்னை மாநகரில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கிடையே ஆரோக்கியமான மூளை வளர்ச்சிக்கு உதவ, புரதச்சத்து நிறைந்த முட்டையை உட்கொள்வதன் முக்கி யத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு முயற்சியாக உலக முட்டை தினம் கடைப்பிடிக்கப்பட்ட போது, ரோட்டரி இன்டர் நேஷனல் (சென்னை மாவட்டம் 3232) அமைப்புடன் எஸ்கேஎம் எக்ஸ் நிறுவனம் கைகோர்த்திருக்கிறது. சென்னையிலும் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் உள்ள பள்ளிக்கூடங்களில் பயிலும் சுமார் 17,000 வசதி குறைவான....... மேலும்

14 அக்டோபர் 2018 15:51:03

நாடாளுமன்றம்- சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு சாத்தியமே இல்லை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


புதுடில்லி, பிப். 2- நாடாளுமன் றம் மற்றும் அனைத்து மாநில சட்டசபை தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்தனியாக சட்டசபை தேர்தல் நடத்துவதால் மத்திய அரசுக்கு செலவு அதிகமாகி றது. இதை கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடை முறையை கொண்டு வரலாம் என திட்டமிட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் நாடா ளுமன்றத்தில் உரை நிகழ்த் திய குடியரசுத் தலைவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஆனால், நாடாளுமன்ற தேர்தலுடன் மாநில சட்ட சபை தேர்தலை நடத்துவதற்கு சாத்தியமே இல்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

ப.சிதம்பரம் எழுதிய ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர் என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா டில்லியில் நடைபெற் றது. முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இந்த புத்தகத்தை வெளியிட் டார்.

அந்த நிகழ்ச்சியின் போது, ப.சிதம்பரம் கூறியதாவது:-

தற்போதைய அரசியல் சாசன சட்டத்தை வைத்து கொண்டு ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்த முடியாது. அதற்கான அதிகாரத்தை அர சியல் சட்டம் வழங்கவில்லை.

நாட்டில் 30 மாநிலங்கள் உள்ளன. இவை அனைத்துக் கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு நாடாளுமன்ற ஜனநாயக ரீதியாக சாத்தியம் இல்லை.

ஒரே தேசம், ஒரே வரி (ஜி.எஸ்.டி.) என்பது வெற்று அறிவிப்பாக போனது. அதே போலத்தான் ஒரே தேசம், ஒரே தேர்தல் என்பது வெற்று கூச்சலாக இருக்க போகிறது.

2019 நாடாளுமன்ற தேர்த லில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக காங்கிரசு விரிவான, வலுவான கூட்டணியை உரு வாக்க முடியும். இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner