முன்பு அடுத்து Page:

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு எதிர்ப்பு இலங்கையில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு எதிர்ப்பு  இலங்கையில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

கொழும்பு, மே 26- ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணியாக சென்றவர்கள் மீது தூத்துக்குடி காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியானதை தொடர்ந்து இந்தியாவில் உள்ள முக்கிய அரசியல் கட்சி தலைவர்களும், பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், 13 உயிர் களை பறித்த தூத்துக்குடி துப் பாக்கிச் சூட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கையின் யாழ்ப் பாணம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழர்கள் நேற்று ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்........ மேலும்

26 மே 2018 16:17:04

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: - தேசிய மனித உரிமை கூட்டமைப்பு கண்டனம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: - தேசிய மனித உரிமை கூட்டமைப்பு கண்டனம்

  புதுடில்லி, மே 26- தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மனித உரிமை அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி முற்றுகைப் போராட்டத்திற்கு வந்த மக்களைத் தமிழகக் காவல்துறை மிகவும் மனிதாபி மானமற்ற முறையில் எதிர்கொண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. இதனை தேசிய மனித உரிமைக் கூட்டமைப்பு (என்.சி.ஹெச்.ஆர்.ஓ) வன்மையாகக் கண்டிக்கின்றது. இம்மாதிரித் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்படும்போது கடைப்பிடிக்க வேண்டிய எச்சரிக்கை விதிகள்....... மேலும்

26 மே 2018 15:58:03

மோடி பிரதமராகப் பதவியேற்று 4 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் நாடு முழுவதும் எதிர்ப்பு அலை!

மோடி பிரதமராகப் பதவியேற்று  4 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில்  நாடு முழுவதும் எதிர்ப்பு அலை!

  அதிகபட்ச எதிர்ப்பு தமிழகத்தில்தான்... றீகருத்துக் கணிப்பில் தகவல் புதுடில்லி, மே 26 -நரேந்திர மோடி, பிரதமராக பதவியேற்று, சனிக்கிழமையுடன் 4 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், நாடுமுழுவதும் அவரது ஆட்சிக்கு எதிராக, கடும் அதிருப்தி அலை வீசுவதாக லோக்நிதி- சிஎஸ்டிஎஸ் கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.குறிப்பாக, நாட்டின் பெரிய மாநிலங்கள் அனைத்திலுமே மோடி அரசுக்கு எதிரான அலை வீசுவதை இந்தகருத்து கணிப்பின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மோடி அரசின் நான்காண்டு செயல்பாடுகள் குறித்து, ஆந்திரா, பீகார்,....... மேலும்

26 மே 2018 15:20:03

இந்துத்துவா வெறிக் கும்பலிடமிருந்து இஸ்லாமியரைக் காத்த சீக்கிய அதிகாரி

இந்துத்துவா வெறிக் கும்பலிடமிருந்து இஸ்லாமியரைக் காத்த சீக்கிய அதிகாரி

நைனிடால், மே 26 இந் துத்துவா வெறிக் கூட்டத்திட மிருந்து, இஸ்லாமிய இளைஞர் ஒருவரை, சீக்கிய மதத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி காப்பாற்றியிருப்பது, உணர்ச்சி கரமான நிகழ்வாக மாறியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் நைனி டால் நகரில் உள்ள கோயிலுக்கு இஸ்லாமிய இளைஞர் ஒருவர் வந்துள்ளார். இந்து மதத்தைச் சேர்ந்த தனது காதலி விடுத்த அழைப்பின்பேரில், அந்த இஸ் லாமிய இளைஞர் கோயிலுக்கு வந்து, காதலிக்காக காத்திருந் துள்ளார். பின்னர் தனது காதலி....... மேலும்

26 மே 2018 15:04:03

யுபிஎஸ்சி பணி நியமனத்தில் மாற்றத்தை புகுத்துவது அரசமைப்புக்கு எதிரானது: ப.சிதம்பரம் சாடல்

யுபிஎஸ்சி பணி நியமனத்தில் மாற்றத்தை புகுத்துவது அரசமைப்புக்கு எதிரானது: ப.சிதம்பரம் சாடல்

சென்னை, மே 25 யுபிஎஸ்சி தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பின்னர் பணிநியமனம் செய்வ தற்கு தேர்வு செய்யும் முறையை மாற்றுவது என்பது அரசமைப்புக்கு எதிரானது என்று மேனாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எஃப்.எஸ். மற்றும் மத்திய பணிகளுக்கான நியமனங்களில், யுபிஎஸ்சி நடத்துகின்ற சிவில் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களின் தரவரிசை (ரேங்க்) அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுகிறார்கள். பணி நியமனம் செய்யப்பட்டவர்கள் மத்திய பணியாளர்கள் பயிற்சி அகாடமிக்கு பயிற்சிக்கு அனுப்பப்படுவார்கள்........ மேலும்

25 மே 2018 16:33:04

குஜராத் மனுதர்ம ஆட்சியில் மழைக்காக எங்கு பார்த்தாலும் யாகக் குண்டங்கள்!

குஜராத் மனுதர்ம ஆட்சியில் மழைக்காக  எங்கு பார்த்தாலும் யாகக் குண்டங்கள்!

காந்திநகர், மே25 குஜராத் மாநிலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது என்று கூறி, அம்மாநில பாஜக அரசே மழைவேண்டி ‘பர்ஜான்ய யக்ஞா’  எனும் பெயரில் யாகத்தை நடத்துகிறதாம். குஜராத் மாநிலத்தில் 33 மாவட் டங்களில் 41 இடங்களில் 31.5.2018 அன்று ஒரே நாளில் மழைவேண்டி யாகம் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மழைக்கான கடவுள்கள் இந்திரன், வருணனை மகிழ்வித்து மழை வேண்டி குஜராத் மாநில அரசின் சார்பில் மாநிலம் முழுவதும் 41 இடங்களில் யாகங்கள்....... மேலும்

25 மே 2018 15:29:03

மோடியின் டிஜிட்டல் இந்தியாவும் தோல்வி அடைந்தது

ரொக்கப் பணத்திற்கான தேவை 7 சதவிகிதம் உயர்ந்துள்ளது ரிசர்வ் வங்கி தகவல் புதுடில்லி, மே 24- கடந்த 2016-ஆம் ஆண்டு, நவம்பர் 8-ஆம் தேதி இரவு திடீரென பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். கறுப்புப் பணம், கள்ள நோட்டு ஒழிப்பு, தீவிரவாத நடவடிக்கையை தடுத்தல்; ரொக்கப் பரிவர்த்தனையை குறைத்து, டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்தல் ஆகியவற்றுக்காகவே உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்களை செல்லாது....... மேலும்

24 மே 2018 15:44:03

தரமான மருத்துவ வசதி கிடைக்கும் நாடுகளின் பட்டியல்:

இந்தியாவுக்கு 145ஆவது இடம் புதுடில்லி, மே 24 சர்வதேச அளவில் தரமான மருத்துவ வசதி கிடைக்கும் நாடுகளில் இந்தியாவுக்கு 145ஆவது இடம் கிடைத்தது. இந்தியாவை விட சீனா, இலங்கை, வங்கதேசம், பூடான் ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன. இதுகுறித்து 195 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டதாவது: மக்களுக்கு தரமான மருத்துவ சேவை அளிக்கும் நாடுகள் பட்டியலில், அய்ஸ்லாந்து, நார்வே, நெதர் லாந்து, லக்ஸர்ம்பர்க், பின்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் முன்னிலையில்....... மேலும்

24 மே 2018 15:44:03

பாஜக ஆட்சி நீடிப்பது ஜனநாயகத்திற்கு ஆபத்து!

பாஜக ஆட்சி நீடிப்பது ஜனநாயகத்திற்கு ஆபத்து!

பிரகாஷ் அம்பேத்கர் பேட்டி மும்பை, மே 23-- பாஜக ஆட்சி மத்தியில் நீடிப்பது, ஜனநாய கத்திற்கு நல்லதல்ல என்று டாக்டர் அம்பேத்கரின் பேர னும், பரிபா பகுஜன் மகாசங் அமைப்பின் தலைவருமான பிரகாஷ் அம்பேத்கர் கூறி யுள்ளார். மகாராஷ்ட்டிர மாநிலம் பந்தர்பூரில் செய்தியாளர்களுக்கு பிரகாஷ் அம்பேத்கர் செய்தியா ளர்களுக்குப் பேட்டி அளித்து உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேற்றத்தை பாரதிய ஜனதா, காங்கிரசு, தேசியவாத காங்கிரசு என பல கட்சிகளும் தடுத்து....... மேலும்

23 மே 2018 17:16:05

புதுவை முதல்வர் நாராயணசாமி எதிர்ப்பு

புதுவை முதல்வர் நாராயணசாமி எதிர்ப்பு

புதுச்சேரி, மே 23- அய்ஏஎஸ், அய்பிஎஸ் தேர்வில் புதிய நடைமுறையை ஏற்க முடியாது என்று புதுவை முதல்வர் வே. நாராயணசாமி எதிர்ப்புத் தெரிவித்தார். புதுச்சேரியில் செய்தியாளர் களுக்கு செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி: குடி மைப் பணி தேர்வில் வெற்றி பெறுபவர்களின் மதிப்பெண் கள், தர நிலை, நேர்காணல் அடிப்படையில் அவர்களுக்கு அய்ஏஸ், அய்பிஎஸ், அய்எப் எஸ் பணியிடங்களை ஒதுக்கும் வழக்கம் தற்போது நடைமுறை யில் உள்ளது. இதற்குப் பதி லாக....... மேலும்

23 மே 2018 17:01:05

மத்திய நிதி நிலை அறிக்கை குறித்து தலைவர்கள் பெரும் அதிருப்தி

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


புதுடில்லி, பிப்.2 மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. விவரம் வருமாறு:

மேனாள் பிரதமர் மன்மோகன்

2022-ஆம் ஆண்டில் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் என்ற அறிவிப்பு நடக்காத ஒன்று. வெற்று வாக்குறுதி என முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கூறினார்.

2018---2019ஆ-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டினை மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி நாடாளு மன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில், 2022-ஆம் ஆண்டில் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதற்கும், கிராமப்புற மேம் பாட்டிற்கும், ஏழை குடும்பங்களின் சுகாதார வசதிக்கும், முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட் டுள்ளது. இதற்கு முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் கூறியதாவது: வேளாண் வளர்ச்சி விகிதம் 12 சதவீதம் தான் உள்ளது அப்படியிருக்கையில் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் எனக் கூறுவது நடக்காத ஒன்று. அதற்கான எந்த உத்தரவாதமும் குறிப்பிடப் படவில்லை. வெற்று வாக்குறுதி. மேலும் விவசாயிகள் பிரச்சினை, வேலைவாய்ப்பு, சுகாதாரம், கல்வித் துறைகளுக்கு நாடாளுமன்றத்தில் தனித்தனியாக விவாதம் நடத்த வேண்டும் என்றார்.

தி.மு.க. செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவ ருமான தளபதி மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை அண்ணா அறிவா லயத்தில்  செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்ஜெட் பற்றி ஒரே வரியில் ஒட்டு மொத்தமாக சொல்ல வேண்டுமென்றால், இதுவொரு அலங்கார அறிவிப்புகளின் தொகுப்பு. இதில், தமிழ்நாட்டின் நலனை முழுமையாக புறக்கணித்து இருக்கிறார்கள். விவசாயிகளின் முன்னேற்றத்திற்கான எந்தவொரு அறிவிப்பும் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை. குறிப்பாக, 2014 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அளித்த முக்கியமான வாக்குறுதி, ஒவ்வொரு வருக்கும் தலா ரூ.15 லட்சம் ரூபாய் வீதம் அவர்களது வங்கிக் கணக்கில் போடப்படும், என்று அறிவித்தது என்ன நிலையில் இருக்கிறது என்பது புரியவில்லை. அதுமட்டுமல்ல, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு களை உருவாக்குவோம் என்று அறிவித்ததையும் நிறை வேற்றவில்லை.

தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தபோது, கலைஞர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்ற அருமையான ஒரு திட்டத்தை நிறைவேற்றினார். அதேபோன்ற ஒரு திட்டத்தை இப்போது அறிவித்து இருக்கிறார்கள். இந்த நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒரே திட்டம் அதுமட்டும்தான்.

மேனாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்

மத்திய அரசு படுதோல்வி அடைந்துவிட்டது என்பதை பட்ஜெட் நிரூபித்துள்ளதாக முன்னாள் நிதிய மைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில், எந்த திட்டங்களும் அறிவிக்கப் படாமல், தென்னிந்தியா பெருமளவில் வஞ்சிக்கப்பட் டுள்ளதாக ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். நிதி ஒருங்கிணைப்பு சோதனையில், அருண் ஜெட்லிக்கு தோல்வி ஏற்பட் டுள்ளதாக ப.சிதம்பரம் கூறியுள்ளார். அருண் ஜெட்லியின் இந்த தோல்வி, நாட்டில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் ப.சிதம்பரம் எச்சரித்துள்ளார். இதனிடையே, தென்னிந்திய மாநிலங்களை பட் ஜெட் புறக்கணித்துள்ளதுபோல, மம்தா ஆட்சி நடைபெற்று வரும் மேற்கு வங்கத்தையும், நவீன் பட்நாயக் ஆட்சி செய்து வரும் ஒடிசாவையும் மத்திய பட்ஜெட் வஞ்சித்துள்ளதாக விமர்சனங்கள் வலுத்து வருகிறது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,  பா.ஜ.க.வுக்கு இன்னும் ஓராண்டு மட்டும் தான் உள்ளது என டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறு கையில், நான்கு ஆண்டுகள் ஆன பின்பும் விவசாயிகளுக்கு இப்போ தும் வாக்குறுதிகளை மட்டுமே அளித்து வருகிறீர்கள். இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவிக்கிறீர்கள். ஆனால் அவை செயல்படுவதில்லை. இன்னும் ஓராண்டு மட் டுமே உள்ளது. பா.ஜ.க.வுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி

மத்திய பட்ஜெட் கடந்த கால பட்ஜெட்களை போலவே ஏழை களுக்கு எதிராகவும், கார்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் அமைந்துள்ளது. கடந்த நாடாளு மன்றத் தேர்தலில் பிரதமர் மோடி விரைவில் நல்ல நாள் வரும் என உறுதியளித்திருந்தார். அந்த வாக் குறுதி என்னவானது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

மத்திய அரசு தொடர்ந்து மாற் றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய பட்ஜெட்டை தயார் செய் துள்ளது. இந்த பட்ஜெட்டில் தலை நகர் டில்லிக்கு தேவையான பொரு ளாதார நிதியுதவி மற்றும் முக்கிய மான உள்கட்டமைப்புகளை மேம் படுத்துவதற்கான நிதிகளை அதிகள வில் எதிர்பார்த்தோம். ஆனால் எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் டெரக் ஓ பிரையன்

மத்திய அரசு சமர்ப்பித்துள்ள பட்ஜெட் படுதோல்வி அடைந்துள்ளது. அரசு தனது கடைசி நாள்களை எண் ணிக் கொண்டிருப்பதையே இந்த பட்ஜெட் வெளிப் படுத்தியுள்ளது.

சிவசேனா   

சிவசேனா கட்சியினர் கூறுகையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்ட தேர்தல் பட்ஜெட். எனவே தான், மத்திய அரசு தொழில்துறையில் இருந்து விவசாயம், சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளின் மீது கவனம் செலுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார்.

தெலுங்குதேசம் கட்சி

மத்தியில் பா.ஜனதா கூட்டணி அரசில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி, ஆந்திராவிற்கு என்று மத்திய பட்ஜெட்டில் எந்த ஒரு அறிவிப்பும் வெளியாக வில்லை. ஆந்திராவில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட திட்டம் மற்றும் சலுகை எதுவும் பட்ஜெட் உரையில் இடம் பெறவில்லை என குற்றம் சாட்டியுள்ளது.

சி.பி.அய். மாநில செயலாளர் இரா.முத்தரசன்

 

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின்  மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டார். செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மத்திய அரசின் கடைசி பட்ஜெட் மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. கருப்புப் பணத்தை மீட்போம் அனைவரது வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்து வோம் என்ற வாக்குறுதி என்ன ஆனது.

அது போல் விவசாயத்தை வரும் 2022ஆ-ம் ஆண்டுக் குள் இரட்டிப்பாக்குவோம் என அறிவித்துள்ளனர். கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் விவசாய வருமானத்தை இரட்டிப்பு ஆக்கும் என்ற வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றாமல் மத்திய அரசு உள்ளது. கடந்த தேர்தலின் போது அளித்த வாக்குறுதியை அடுத்த தேர்தல் வந்து அதில் வெற்றி பெற்றால் நிறைவேற்றுவோம் என கூறியிருப்பது விவசாயிகளை ஏமாற்றுகின்ற வஞ்சிக்கின்ற அறிவிப்பாக உள்ளது.

இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏதேனும் சலுகைகள் வழங்கப்படும் என்று காத்திருந்த நிலையில் எதுவும் இல்லாதது ஏமாற்றமே. விவசாயிகளின் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க போராடி வரும் சூழலில் விலையை மத்திய அரசு விலை நிர்ணயம் செய்யும் என்ற அறிவிப்பால் எதுவும் நடந்துவிடாது.

வழக்கம் போல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 5 சதவீத வரி விலக்கு அளித்து அவர்களை ஊக்கப்படுத்தி யுள்ளனர். மொத்ததில் மத்திய அரசின் இன்றைய பட்ஜெட் அறிக்கை என்பது மிகுந்த ஏமாற்றத்தையே அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

சி.பி.எம். செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''மத்திய அரசின் 2018---2019 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக் களுக்கு எவ்வித பயனும் அளிக்காத பெரும் ஏமாற்றத்தை அளிக்கும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது. ஏற்கெனவே மத்திய அரசின் பண மதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பு நடவடிக்கைகளால் பாதிப்புக் குள்ளான மக்களுக்கு எவ்வித நிவாரணமும் அளிக்காத பட்ஜெட்டாக இது உள்ளது.

பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி 5 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது என்பது அரசின் கார்ப் பரேட் சார்புத் தன்மையை தெளிவாக புலப்படுத்துவதாக உள்ளது.

பல அறிவிப்புகள் அய்ந்தாண்டு திட்டம் போல மக்களை ஏமாற்றுவதாக உள்ளது. இந்த ஆண்டில் என்ன செய்யப்போகிறார்கள் என்பது தெளிவாக குறிப்பட வில்லை. மொத்தத்தில் இந்த பட்ஜெட் சாதாரண, ஏழை, எளிய நடுத்தர மக்களின் நலன்களை பற்றி கவலை கொள்ளாத பட்ஜெட்டாக உள்ளது'' என்று ஜி.ராம கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்

மோடி அரசு நேற்று தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை தமிழகத்தையும் இந்தியா முழுவதும் உள்ள தலித் மக்களையும் ஒரு சேர வஞ்சித்துள்ளது. இது வளர்ச்சிக்கு வழிகோலுவதற்கு மாறாக வீழ்ச்சிக்கு அடையாளமாக உள்ளது. இதுவரை இருந்த மரபை மீறி இந்தி மொழியில் பட்ஜெட் உரையாற்றியதை விடு தலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். கூட்டாட்சித் தத்துவத்தின் மீது மோடி அரசுக்கு நம்பிக்கை இல்லை என்பதையே இது காட் டுகிறது.  கர்நாடாகாவில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலைக் குறிவைத்து பெங்களூரு புறநகர் ரயில் திட்டத்துக்கு 17,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ள மோடி அரசு, தமிழ்நாட்டுகென எந்த ஒரு திட்டத்தையும் அறிவிக்கவில்லை. இது கண்டனத்துக்குரியது.

தலித் மக்களுக்கான வளர்ச்சித்  திட்டங்களுக்காக பட்டியல் இனத்தோர் துணைத் திட்ட விதிகளின் படி சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டி ருக்க வேண்டும். ஆனால், மோடி அரசோ 56,600 கோடி ரூபாய் மட்டும் ஒதுக்கீடு செய்திருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய சுமார் இரண்டரை இலட்சம் கோடி ரூபாயை ஒதுக்காமல் மோடி அரசு துரோகம் இழைத்துள்ளது.

மொத்தத்தில் இந்த பட்ஜெட் தலித் விரோத, தமிழர் விரோத பட்ஜெட் ஆகும்.

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கருத்து

5 லட்சம் ரூபாய் மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டம் மூலம் மிகப் பெரிய அளவிற்கு கார்ப்பரேட் மருத்துவமனைகளும், மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களுமே பயன டையும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.

இது குறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர். ஜி.ஆர்.ரவீந்திரநாத்  வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மத்திய பட்ஜெட்டில் 10 கோடி குடும்பங்களுக்கு ஆண்டொன்றிற்கு 5 லட்சம் ரூபாய் மருத்துவக் காப்பீடு வழங்கும் திட்டத்தை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார். இதனால் மிகப் பெரிய அளவிற்கு கார்ப்பரேட் மருத் துவமனைகளும், மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களுமே பயனடையும். பொது சுகா தாரத்துறையை வலுவிழக்கச் செய்து, தனியார் மருத்துவ மனைகளை வலுப்படுத்தும் திட்டமாகவே இது அமையும். இத்திட்டத்திற்காக ஒதுக்கப்படும் ரூ.15,000 கோடிக்கும் மேற்பட்ட நிதியைக் கொண்டு, ஆயிரக்கணக்கான மருத்துவமனைகளை அரசே உருவாக்க முடியும். அதன் மூலம் ஏழை எளிய மக்களுக்கு இலவச சிகிச்சையை வழங்க முடியும். ஆனால், அதை விடுத்து அமெரிக்க பாணியில் மருத்துவக் காப்பீட்டை அடிப்படையாகக் கொண்ட மருத்துவத் துறையை உருவாக்குவது ஏழை எளிய மக்களின் நலன்களுக்கு எதிரானது. தேசிய நலக்கொள்கை 2017இ-ல் அறிவிக்கப்பட்டுள்ளது போல், இரண்டாம்நிலை, மூன்றாம்நிலை மருத்துவ சிகிச்சைகளை தனியார் மயமாக்கும் திட்டம் இதில் அடங்கியுள்ளது.  கார்ப்பரேட் அரசால், கார்ப்பரேட் மருத்துவமனைக்களுக்காகவும், கார்ப்பரேட் நிறுவனங் களுக்காகவும் அறிவிக்கப்பட்டுள்ள பட்ஜெட் தான், மத்திய அரசின் 2018--2019 ஆம் ஆண்டுக் கான பட்ஜெட்.'' இவ்வாறு டாக்டர். ஜி.ஆர்.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner