முன்பு அடுத்து Page:

ஜாதியே உனக்கொரு சாவு வந்து சேராதா?

மகளின் உடைமைகளை பாடையில் வைத்து இறுதிச் சடங்கு செய்த பெற்றோரின் ஜாதி வெறி போபால், நவ.20 மத்திய பிரதேச மாநி லத்தில், ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட மகள் உயிருடன் இருக்கும்போதே, அவளின் உடை மைகளை பாடையில் கட்டி, சுடு காடுவரை சென்று புதைத்து, இறுதிச் சடங்கு செய்துள்ளனர் அவரது பெற் றோர். மத்திய பிரதேச மாநிலம், போரி கிரா மத்தைச் சேர்ந்தவர் குசும் (20). இவர் நானுடங்கி என்பவரைக் காதலித்து....... மேலும்

20 நவம்பர் 2018 14:44:02

ம.பி.யில் 62 தொகுதிகளில் பாஜகவுக்கு எதிராக அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் போட்டி…

போபால், நவ.19 -மத்தியப்பிரதேச மாநிலத்தில், பாஜக 3 முறை தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்து வருகிறது. ஆனால், இந்தமுறை மக்களிடம் கடும் எதிர்ப்பைச் சந்தித்து வருகிறது. சாமியார்கள் கூடபாஜக-வை ஆதரிக்காத நிலை ஏற்பட்டுள்ளது. மாறாக, அவர்கள் பாஜக மற்றும் முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை எதிர்த்து பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், பாஜக-வுக்கு போட்டியாக, அந்த கட்சியின் முன்னாள்அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ-க் களே தற்போது களத்தில் இறங்கியுள்ளனர். 230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப்பிரதேசத்தில், சுமார்....... மேலும்

19 நவம்பர் 2018 15:46:03

ரிசர்வ் வங்கியிடம் உள்ள ரூ.9 லட்சம் கோடியை கைப்பற்ற அரசு முயற்சி: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

ரிசர்வ் வங்கியிடம் உள்ள ரூ.9 லட்சம் கோடியை கைப்பற்ற அரசு முயற்சி: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

புதுடில்லி, நவ.19  ரிசர்வ் வங்கியின் ரூ.9 லட்சம் கோடி இருப்பு நிதியை தனது கட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு முயற்சிக்கிறது என ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். ரிசர்வ் வங்கியின் நிர்வாகக்குழு கூட் டம் இன்று நடக்கிறது. இதில், ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல், 4 துணை ஆளுநர்கள், 18 நிர்வாகக்குழு உறுப்பி னர்கள், நிதியமைச்சகத்தின் பிரதிநிதிகள் மற்றும் சில தன்னிச்சையான ....... மேலும்

19 நவம்பர் 2018 14:57:02

போலிச் சான்றிதழ் கொடுத்த ஏபிவிபி மாணவர் தலைவர் சேர்க்கையை டில்லி பல்கலை. ரத்து செய்தது!

புதுடில்லி, நவ.19 - போலிச் சான்றிதழ் அளித்து, மேற் படிப்பில் சேர்ந்தவரும், ஆர்எஸ்எஸ்-சின் மாணவர் பிரிவு (ஏபிவிபி) தலைவருமான அன் கிவ் பாய் சோவின் சேர்க்கையை டில்லி பல்கலைக் கழகம் ரத்து செய்துள்ளது. டில்லி பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தலில், ஆர்எஸ்எஸ்-ஸின் மாணவர் பிரிவான ஏபிவிபி பல்வேறு மோசடிகளைச் செய்து வெற்றி பெற்றது. அந்த அமைப்பைச் சேர்ந்த அன்கிவ் பாய்சோயா பேரவைத் தலைவராக தேர்ந் தெடுக்கப்பட்டார். இந்நிலையில், தேர் தலில் வெற்றி பெற்றதில்....... மேலும்

19 நவம்பர் 2018 14:57:02

மராட்டியர்களுக்கு 16 சதவீத இடஒதுக்கீடு: மகாராஷ்டிரா மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரை

மும்பை, நவ.18 மகாராஷ்டிர மாநில மக்கள் தொகையில், 30 சதவீதம் உள்ள மராட்டியர்களுக்கு, 16 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என, மகாராஷ்டிர மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரை செய்துள் ளது. மகாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ.க., - சிவசேனா கூட்டணி அரசு அமைந்துள்ளது. மாநில மக்கள் தொகையில், 30 சதவீதம் உள்ள, மராட்டியர்கள், கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு அளிக்கும்படி, நீண்ட காலமாக கோரி வருகின்....... மேலும்

18 நவம்பர் 2018 16:43:04

மேற்கு வங்காளத்திலும் சி.பி.அய். நுழைய தடை

கொல்கத்தா, நவ.18 ஆந்திர மாநிலத்தை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் சி.பி.அய். நுழைவதற்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக சி.பி.அய்.க்கு வழங்கிய பொது அனுமதியை திரும்ப பெற்றது.  மத்திய புலனாய்வு அமைப் பான சி.பி.அய்., டில்லி சிறப்பு காவல்துறை நிறுவன சட்டத்தின் கீழ் இயங்கி வரு கிறது. நாட்டின் மிக உயர்ந்த விசாரணை அமைப்பான சி.பி. அய்.க்கு, பல்வேறு குற்றங்கள், குற்றசதிகளை விசாரிப்பதற்கு இந்திய தண்டனை சட்டத்தின் சுமார்....... மேலும்

18 நவம்பர் 2018 16:28:04

டில்லி பல்கலைக்கழக மாணவர் தலைவரான ஏபிவிபி மாணவர் மோசடி

போலிச் சான்றிதழ் அளித்தது நிரூபணம் டில்லி, நவ.18 டில்லி பல்கலைக் கழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பாஜகவின் மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர் போலியான சான்றிதழை அளித்து மோசடி செய்தது நிரூபணமாகியுள்ளது. டில்லி பல்கலைக்கழக மாணவர் தேர்தலில்  மாணவர் தலைவராக அகில பாரத வித்ய பரிசத் (ஏபிவிபி) அமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டவர் அங்கிவ் பல்சோயா எனும் மாணவர் ஆவார். இவர் தமிழகத் தின் வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத் தின் போலிச்....... மேலும்

18 நவம்பர் 2018 16:21:04

சிறு விவசாயிகளுக்கு உதவாத திட்டம்

சிறு விவசாயிகளுக்கு உதவாத திட்டம்

மோடி அரசின் பயிர்க் காப்பீடு  திட்டத்தில் இணைந்த விவசாயிகள் 84 லட்சம்  பேர் திட்டத்திலிருந்து  வெளியேறினர்! தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வெளியான தகவல் புதுடில்லி, நவ.18 பிரதமர் மோடி அறிவித்த பிரதான் மந்திரி ஃபசல்பீமா யோஜனா என்ற பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தால்விவசாயிகள் எந்த பயனும் அடையவில்லை; மாறாக மோடியின் கார்ப்பரேட் நண்பர்கள் ரூ. 15 ஆயிரம் கோடியை அள்ளிக் குவித்துள் ளனர் என்பது தெரியவந்துள்ளது.மத்திய பாஜக அரசின் பிரதான்....... மேலும்

18 நவம்பர் 2018 15:00:03

தபோல்கர் படுகொலை திட்டமிட்ட பயங்கரவாத செயல்!

நீதிமன்றத்தில் சிபிஅய் தகவல் புதுடில்லி, நவ.18 -பகுத்தறிவாளர் நரேந்திரதபோல்கரின்படு கொலையானது, நன்கு திட்ட மிடப்பட்ட பயங்கரவாதச் செயல் என்று மத்தியப் புல னாய்வுக் கழகம்  கூறியுள்ளது. தபோல்கர் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட் டுள்ள 6 பேர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட் டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்வதற்கு அனுமதி கோரி, புனே செசன்ஸ் நீதிமன்றத்தில் சிபிஅய் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவிலேயே இந்த தகவலைத் தெரிவித்துள்ளது........ மேலும்

18 நவம்பர் 2018 15:00:03

ஆபரேசன் கருடா சதித்திட்டம் தகவல் வெளியிட்ட தெலுங்கு நடிகருக்கு

ஆபரேசன் கருடா சதித்திட்டம் தகவல் வெளியிட்ட தெலுங்கு நடிகருக்கு

பாஜக கொலை மிரட்டல்! விஜயவாடா, நவ. 18 -பிரபல தெலுங்குநடிகர்சிவாஜி. இவர், கடந்தாண்டு பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டார். அதில், தென்மாநிலங்களில் அரசியல் குழப்பத்தை ஏற் படுத்த, ஆபரேசன் கருடா என்ற சதித்திட்டத்தை மத்திய பாஜக அரசு தீட்டியுள்ளதாக தெரிவித்தார்.குறிப்பாக,ஆந் திர மாநில அரசுக்குச் சிக்கலை ஏற்படுத்தும் வகையில், எதிர்க் கட்சித் தலைவர் உயிருக்கு ஆபத்து இல்லாத வகையில் தாக்குதல் நடத்துவதும், ஆந் திர மாநில ஆட்சியாளர்கள், அவர்களைச் சார்ந்தவர்கள்மீது, சிபிஅய்....... மேலும்

18 நவம்பர் 2018 15:00:03

நீட்: தமிழக சட்டமுன் வடிவை நிறுத்தி வைக்கும் அதிகாரம் குடியரசுத்தலைவருக்கோ, மத்திய அரசுக்கோ கிடையாது மாநிலங்களவையில் ஏ. நவநீதிகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


புதுடில்லி, பிப்.7- நீட் தேர்வு தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய சட்டமுன் வடிவை ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைக்கும் அதிகாரம் அரசமைப்புச் சட்டத்தின்கீழ் குடியரசுத் தலைவருக்கோ, மத்திய அரசுக்கோ கிடையாது என்றும், உடனடியாக ஒப்புதல் அளித்து தமிழகத்து மாணவர்களை, குறிப்பாக கிராமப்புற ஏழை மாணவர்களைக் காப்பாற்றிட, முன் வரவேண்டும் என்றும் குடியரசுத் தலைவரையும், மத்திய அரசையும் அஇஅதிமுக மாநிலங் களவைக் குழுத் தலைவர் ஏ.நவநீதிகிருஷ்ணன் வலியுறுத்தி யுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடை பெற்று வருகிறது. திங்கள்கிழமை மாலை மாநிலங்கள வையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றிதெரிவிக்கும் தீர்மானத்தில் கலந்துகொண்டு, ஏ. நவநீதிகிருஷ்ணன் பேசியதாவது:தமிழ் நாட்டில் மாணவர்கள் தற் போது பிளஸ் 2 தேர்வுக்குத்தங்களைத் தயார் செய்து கொண்டிருக்கிறார்கள். அதே சமயத்தில் அவர்கள் நீட் தேர்வு குறித்தும் மிகவும் சங்கடத்திற்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது, சட்டத்தின்படி, நீட் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. இது தொடர் பாக உறுப்பினர் டி.கே.ரெங்கராஜன் மிகவும் சிறப்பான முறையிலும், அறிவுக்கூர்மையுடனும் ஒரு காரியம் செய்திருக்கிறார். அதாவது நீட் தேர்விற்கு விலக்களிக்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவை நிறை வேற்றிய சட்டமுன் வடிவின் நிலை என்ன என்று தெரிந்து கொள்வதற்காக குடியரசுத் தலைவரின் அலுவலகத்திற்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.

குடியரசுத் தலைவருக்கு அனுப்பாதது ஏன்?

அந்தக் கடிதத்திற்குகுடியரசுத் தலைவரின் அலுவ லகத்திலிருந்து அவருக்குப் பதில் வந்திருக்கிறது. குடியரசுத் தலைவர் அலுவலகம் அந்தச் சட்டமுன் வடிவை இதுவரை பெறவில்லை என்று பதில் அனுப்பியிருக்கிறது.

இதுதொடர்பாக மத்திய அரசின் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். ஏனெனில் இது மத்திய அரசின் அதிகார வரம்பெல்லைக் குட்பட்ட விவகாரம் என்பதாலும், குடியரசுத் தலைவரின் அரங்கம் சம்பந் தப்பட்ட பிரச்சினை என்பதாலும் இதனை எழுப்பு கிறேன். அரசமைப்புச்சட்டத்தின் 52, 53,73,74 மற்றும் அதன் விலக்கக்கூறுகள் அனைத்தையும் படித்துப் பாருங்கள்.அவற்றில் மிகவும் தெளிவாக இருக்கிறது. தமிழ்நாட்டு மாணவர்களின் மன உளைச்சலை மத்திய அரசாங்கம் குறித்துக்கொள்ள வேண்டும் என்று நான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

குடியரசுத் தலைவர்அலுவலகத்திலிருந்து, டி.கே.ரங்கராஜனுக்குத் தங்கள் அலுவலகத்திற்கு அந்தச் சட்டமுன்வடிவு வரவில்லை என்று பதில் சென்றிருப்பதிலிருந்து ஒன்று தெளிவாகிறது. மக்களின் விருப்பத்திற் கேற்ப தமிழ்நாடு சட்டப்பேரவை ஒருமனதாக நிறை வேற்றிய சட்டமுன்வடிவு மத்திய அரசிடமிருந்து குடியரசுத்தலைவர் அலுவலகத்திற்கு இன்னமும் அனுப்பி வைக்கப் படவில்லை என்பது தெளிவாகிறது.

கல்வி தொடர்பான  சட்டத்தை நிறைவேற்றுவதற்கு  தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இருக்கக்கூடிய பொதுப் பட்டியலின் கீழான அதிகாரத்தின் கீழ்தான் இந்தச் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. கல்வி தற்போது பொதுப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதால், இது தமிழ்நாடு சட்டப்பேரவையால் நிறைவேற்றப் பட்டிருந்த போதிலும், அதற்கான அதிகாரவரம்பெல்லை அதற்கு உண்டு என்ற போதிலும், இது இந்திய நாடாளு மன்றத்தாலும், அதாவது இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டத்தின் 10(உ) ஆவது பிரிவின்கீழும் விவாதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இத்தகைய இசைவின்மையைச் சரிசெய்வதற்காக, அரசமைப்புச்சட்டத் தில் ஒரு சரத்து இருக்கிறது. இது மற்றவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் மத்திய அரசுக்குத் தெரியும்.மத்திய அரசாங்கம் அதனை ஆராயவேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள் கிறேன்.

தமிழ்நாட்டின் இளம் மாணவர்களைப் பாதுகாப்ப தற்காக மத்திய அரசு இதனைச் செய்திட வேண்டும் சென்ற ஆண்டு மிகவும் அறிவுக் கூர்மையுடைய ஒரு மாணவி இந்தப் பிரச்சினையின் காரணமாகத் தற்கொலை செய்து கொண்டார். அது உலகத்தின் கவனத்தைக் கவர்ந்தது. ஏனெனில் அவர் பள்ளிக் கல்வியில் மிக அதிகமதிப்பெண் பெற்றிருந்தார். ஆனால் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்திட வில்லை. இவ்வாறு இது ஒரு மிகவும் வருந்தத்தக்க பிரச்சினையாகும்.

மத்திய அரசின் செயலற்ற தன்மை

இளம் மாணவர்களின் எதிர்காலம் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் செயலற்ற தன்மையும்,அதன்காரணமாக குடியரசுத் தலைவரின் செயலற்ற தன்மையுமே இதற்குக் காரணம் எனத் தோன்றுகிறது. இதுஅரசமைப்புச்சட்டத்தை மீறும் செயலாகும். எப்படி? எப்படியென்றால், குடியரசுத் தலைவர் என்பவர் மத்திய அரசின் நிர்வாக அதிகாரங்களுக்குத் தலைவர். எனவே, அவர் மத்திய அரசின் நிர்வாக அதிகாரங்களைச் செயல்படுத்துகிறார்.

அரசமைப்புச்சட்டத்தின் 74ஆவது பிரிவின் படியும், மத்திய அமைச்சரவையின் அறிவுரை மற்றும் உதவி யுடன் மத்திய அரசாங்கத்தின் நிர்வாக அதிகாரங்கள் அவரிடம் வருகின்றன. ஆனால் இந்தப் பிரச்சினை தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய சட்டம் குறித்ததானதாகும்.

இது பொதுப்பட்டியலில் வரக்கூடிய பிரச்சினை யாகும். எனவே, சட்டமன்ற நடைமுறைவிதிகள் பிழை யாகிவிடக் கூடாது. இது நாட்டின் சட்ட வரம்புகளுக்கு உட்பட்டு மிகவும் சரியானமுறையில் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இப்போது, அரசமைப்புச்சட்டத்தின் 254 ஆவது பிரிவின் உட்கூறு (2)இன்படி, ஒரு மாநில சட்டமன்றத்தில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டு, அந்தப் பிரச்சினை யானது பொதுப் பட்டியலுக்கு வரக்கூடிய ஒன்று என்றால், அவ்வாறு நிறைவேற்றப்பட்ட சட்டமானது, குடியரசுத்தலைவரின் பரிசீலனைக்காக ஒதுக்கப்பட்டிருக்குமானால், மாநிலத் தில் உள்ள நிலைப்படி, அவருடைய ஒப்புதலைப் பெற்றிருக்கிறது, என்பதாகும்.

மேலும் இது தொடர்பாக, மத்திய அரசின் கவனத் திற்கு உட்கூறு  (2)இன் கீழ் உள்ள விலக்கக்கூறில் கூறப் பட்டுள்ள வாசகங்களையும் கொண்டுவர விரும்பு கிறேன். மாநில சட்டப்பேரவையால் நிறைவேற்றப் பட்ட சட்டத்தைச் சேர்த்துக் கொள்ளவோ, திருத்தவோ அல்லது மாற்றவோ, நாடாளுமன்றத்திற்குத் தடை எதுவும் இல்லை.

எனவே, அரசமைப்புச் சட்டத்தின் 254ஆவது

பிரிவின் கீழ் குடியரசுத் தலைவருக்குள்ள அதிகாரம், பிரதமரால் தலைமை தாங்கப்படும் மத்தியஅமைச்சர வையின் அறிவுரைக்குக் கீழ் வரவில்லை . குடியரசுத் தலைவருக்கு இருக்கும் சுயேச்சையான மற்றும் சுதந்திரமான அதிகாரமாகும். ஏனெனில், தமிழ்நாடு அரசாங்கம் நிறைவேற்றிய சட்டத்தை மத்திய அரசாங்கம் கையாண்டிட முடியாது. இது மிகவும் தெளிவாக இருக்கிறது. மத்திய அரசாங்கத்தின் அதிகாரம் நிர்வாகம் செய்வது மட்டும்தான்.

அதுஒன்றும் நீதிக்கு உட்பட்ட ஒன்றோஅல்லது நாடாளுமன்ற / சட்டமன்ற நடவடிக்கைகளுக்கு உட் பட்ட ஒன்றோ அல்ல. மேலும், தமிழ்நாடுசட்டமன்றத்தின் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் எடுத்துக் கொள்ளமுடியாது.

எனவே, அரசமைப்புச் சட்டத்தின் அம்சங்கள் அனைத்தையும் நான் புரிந்து கொண்டிருப்பதன் படி, குடியரசுத் தலைவர் இதில் கூறுவதற்கு ஒன்றுமில்லை.ஒரு சட்டமுன்வடிவு அவரிடம் ஒப்புதலுக்காக வரும்பட்சத்தில், அவர் அதற்கு ஒப்புதல் அளித்திட வேண்டும்.

ஆனால், அவ்வாறு செய்திடாமல், தமிழ்நாடு சட்டப்பேரவையின் அதிகாரம் இப்போது ஓரங்கட்டப் பட்டிருக்கிறது மற்றும் உதாசீனப்படுத்தப்பட்டிருக்கிறது. இவ்வாறு குடியரசுத் தலைவர் அதற்கு ஒப்புதல் அளிப்பதற்காக மத்திய அரசு அவருக்கு அனுப்பாததன் மூலம், மத்திய அரசு நாடாளுமன்றத்தையும் ஓரங்
கட்டியிருக்கிறது.

மாநில அதிகாரம் பறிப்பு

பொதுப்பட்டியல் என்பது ஏதோவெறும் ஒரு தாள் அல்ல. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதாவை, மத்திய அரசின் கீழ் செயலாற்றும் செயலாளர்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் நிறுத்தி வைத்துக்கொள்ள முடியாது. இவ்வாறு நிறுத்தி வைத்திருப்பதன் மூலம் பொதுப்பட்டியல் என்பதையே நீக்கி இருக்கிறீர்கள். இவ்வாறு நீக்கி இருப்பதன்மூலம், மாநில அரசாங்கத்தின் அதிகாரங்களையே பறித்துக் கொண்டிருக்கிறீர்கள். இது ஓர் ஆழமான விஷயமாகும். நீங்கள் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங் களையே மீறிக் கொண்டிருக்கிறீர்கள்.

ஒரு சட்டப்பேரவை  அல்லது மத்திய அரசாங்கம் நிறைவேற்றிய சட்டத்தை நீதிமன்றங்கள் கூட தீர்மானித்திட  முடியாது.  நீட் தேர்வுகளிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரி தமிழ்நாடு சட்டப் பேரவை ஒரு சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறது. இது மத்திய சட்டத்திற்கு ஒவ்வாத ஒன்று என்று மத்திய அரசு கருதுமானால், (அவ்வாறு ஒவ்வாதிருப்பதும் சட்டத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது) அதனை நிறுத்தி வைத் திடாது, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்திட வேண்டும். குடியரசுத் தலைவரும் ஒப்புதலை அளித்திட வேண்டும்.அதன்பின்னர்தான் மத்திய அரசு அதன்மீது ஏதேனும் திருத்தங்கள் கொண்டு வர விரும்பினால் செய்திட முடியும்.இதுதான் நாடு சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து பின்பற்றப்பட்டு வரும் நடை முறையாகும். இப்போதும் கூட மத்தியஅரசு அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிட முடியும், அனுப்பிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு ஏ. நவநீதகிருஷ்ணன் கோரியுள்ளார்.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner