முன்பு அடுத்து Page:

பாஜக ஆளும் குஜராத்தில் தாழ்த்தப்பட்ட தொழிலாளி அடித்துக்கொலை!

உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் அகமதாபாத், மே 22 குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் உள்ள தொழிற் சாலையில், தாழ்த் தப்பட்ட தொழிலாளி ஒருவரை, தூணில் கட்டி வைத்து மிகக் கொடூரமான முறையில் அடித்தே கொன்ற சம்பவம் நடந்துள்ளது. குஜராத் மாநிலம் ராஜ் கோட்டைச் சேர்ந்த தொழிலாளி முகேஷ் சாவ்ஜி வானியா (40). இவர் அங்குள்ள ஷாபார்- வேராவல் பகுதியில் உள்ள தொழிற் சாலையில் பணி யாற்றி வந்தார்.ஞாயிற்றுக்கிழமை தொழிற்....... மேலும்

22 மே 2018 17:31:05

சிவில் சர்வீஸ் பதவிக்கான மத்திய அரசின் உத்தரவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு

புதுடில்லி, மே 22 சிவில் சர்வீஸ் பதவிக்கான மத்திய அரசின் புதிய உத்தரவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசு பணியாளர்  தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் அய்ஏஎஸ், அய்பிஎஸ் பதவிக்கான சிவில் சர்வீஸ் தேர்வில் மத்திய அரசு புதிய உத்தரவை பரிந்துரைத்துள்ளது.  பிரதான தேர்வில் பெறும் மதிப்பெண்ணுடன், அடிப்படை பயிற்சி தேர்வில் பெறும் மதிப் பெண்ணை சேர்த்து அதன் அடிப்படையில் அய்ஏஎஸ், அய்பிஎஸ்  பதவிக்கான நியமனம் செய்யப்பட ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த....... மேலும்

22 மே 2018 15:50:03

பெரும்பான்மை இல்லாத பாஜகவை ஆட்சியமைக்க அழைத்த ஆளுநர் பதவி விலக வேண்டும் : சரத்பவார்

புதுடில்லி, மே 21 அறுதிப் பெரும்பான்மை இல்லாத பாரதிய ஜனதாவை, ஆட்சியமைக்க அழைப்பு விடுத்த கருநாடக ஆளுநர் வஜுபாய் வாலா உடனடியாக பதவி விலக வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். கருநாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி 2 நாளில் முடிவுக்கு வந்ததால், காங்கிரசு ஆதரவுடன் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சித் தலைவர் குமாரசாமி, வரும் புதன்கிழமை(மே 23) ஆட்சியமைக்கிறார். இந்நிலையில், அறுதிப் பெரும்பான்மை....... மேலும்

21 மே 2018 15:40:03

உச்சம் தொட்டது பெட்ரோல்-டீசல் விலை

உச்சம் தொட்டது பெட்ரோல்-டீசல் விலை

புதுடில்லி, மே 21- வரலாறு காணாத விதத்தில் முதல் முறையாக ரூ.84 தாண்டி உச்சத்தை எட்டியது பெட் ரோல் - டீசல் விலை. இந் தியாவின் வெவ்வேறு நகரங் களில் விலை சற்று மாறு பட்டாலும், மொத்தத்தில் இதுவரை இல்லாதஅளவிற்கு பெரும் விலையை பெட்ரோல் மற்றும் டீசலுக்கு இந்திய மக்கள் நேற்று (20.5.2018) அதிகாலை முதல் கொடுக்கத் துவங்கியிருக்கிறார்கள்.பெட்ரோல் விலை லிட்டருக்கு 33 பைசா - ஞாயிறன்று உயர்த்தப் பட்டதைத்....... மேலும்

21 மே 2018 15:39:03

அதிகாரத்திற்காக ஜனதாதளம் (எஸ்) கட்சியுடன் கூட்டணி அமைக்கவில்லை

மல்லிகார்ஜுன கார்கே பெங்களூரு, மே 21 அதிகாரத் திற்காக மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அமைக்க வில்லை என்று காங்கிரசு கட்சியின் மூத்த தலைவர் மல் லிகார்ஜுன கார்கே செய்தியா ளர்களிடம் கூறினார். பெங்களூருவில் நேற்று (20.5.2018) காங்கிரசு கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதா வது: சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி 104 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. காங்கிரசு, ஜனதாதளம் (எஸ்) கூட்டணிக்கு 116....... மேலும்

21 மே 2018 15:05:03

ம.பி.யில் பசுவதை செய்ததாகக் கூறி ஒருவர் கொலை

சட்னா, மே 21  மத்தியப்பிரதேச மாநிலத்தின் சாட்னா மாவட்டத்தில் பசுவதை செய்ததாகக் கூறி 2 பேர்மீது நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியானார்.மத்திய பிரதேச சாட்னா மாவட்ட, சாட்னா - கட்னி சாலையில் சிறுகுன்று அருகில் ரியாஸ், கார் ஓட்டுநர் ஷாகீல், ஸாகி மற்றும் இஸ்மாயில் ஆகிய 4 பேரை கிராமமக்கள் சிலர் பசுவுடன் பார்த்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கிராம மக்கள் சிலர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அப்போது ஸாகி....... மேலும்

21 மே 2018 15:05:03

லஞ்ச பேரத்தில் ஈடுபட்ட பாஜகவினர் மீது பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: காங்கிரசு வலியுறுத்தல்

பெங்களூரு, மே 21 கருநாடகத்தில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்எல்ஏக்களிடம் பேரத்தில் ஈடுபட்ட பாஜக தலைவர்கள் மீது பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. டில்லியில் செய்தியாளர்களை ஞாயிற்றுக் கிழமை சந்தித்த காங்கிரசு செய்தித் தொடர் பாளர் ஜெய்வீர் செர்கில் கூறியதாவது: தான்ஊழலுக்குஎதிராகப் போராடி வரு வதாகபிரதமர்மோடி மேடைதோறும் முழங்கி வருகிறார். கருநாடகத்தில் அவரது கட்சியைச் சேர்ந்த தலைவர்கள், காங்கிரசு மற்றும் மஜத....... மேலும்

21 மே 2018 14:55:02

கோவா, மணிப்பூரில் ஆளுநரிடம் காங்கிரசு மனு: ஆட்சி அமைக்க உரிமை கோரியது

கோவா, மணிப்பூரில் ஆளுநரிடம் காங்கிரசு மனு: ஆட்சி அமைக்க உரிமை கோரியது

பனாஜி, மே 20 கோவா மற்றும் மணிப்பூர் மாநில சட்டப் பேரவைகளில் தனிப்பெரும் கட்சியாக இருப்பதால் தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று அந்தந்த மாநில ஆளுநரிடம் காங்கிரசு கட்சி கடிதம் அளித்துள்ளது. அண்மையில் நடைபெற்ற கருநாடக சட்டப்பேரவைத் தேர்த லில், தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற பாஜக-வை ஆட்சி அமைக்குமாறு அந்த மாநில ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதையே, முன்மாதிரியாகக் கொண்டு மணிப்பூரிலும், கோவா விலும் காங்கிரசு கட்சி....... மேலும்

20 மே 2018 16:49:04

எடியூரப்பா பதவி விலகல் பாரதீய ஜனதாவுக்கு விழுந்த முதல் சம்மட்டி அடி

எடியூரப்பா பதவி விலகல்  பாரதீய ஜனதாவுக்கு விழுந்த முதல் சம்மட்டி அடி

பெங்களூரு, மே20 கருநாடக சட்டமன்றத்தில் நேற்று (19.5.2018) மாலை 4 மணிக்கு  நம்பிக்கை வாக் கெடுப்பு நடைபெற இருந்த நிலையில், சரியாக 4 மணிக்கு தனது பதவியை விட்டு விலகி சபையில் இருந்து வெளியேறினார் எடியூரப்பா. இது பாரதீய ஜனதா கட்சிக்கு விழுந்த முதல் சம்மட்டி அடி என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை 11 மணி வரை 100 சதவிகிதம் வெற்றி பெறுவேன் என்று மீண்டும் மீண்டும்  கூறிவந்த  எடியூரப்பா பதவி....... மேலும்

20 மே 2018 16:14:04

கருநாடகா காவிமயமாகாது

கருநாடகா காவிமயமாகாது

- பிரகாஷ் ராஜ் பெங்களூரு, மே 20 கருநாடக மாநிலத்தில் பாஜக ஆட்சியைப் பறிகொடுத்ததை கிண்டல் செய்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், மேட்ச் தொடங் கும் முன்பே முடிந்துவிட்டது என்று தெரிவித் துள்ளார். கருநாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராகத் தீவிரமாக சுற்றுப் பயணம் செய்து நடிகர் பிரகாஷ் ராஜ் பிரச்சாரம் செய்தார். பாஜக ஆட்சியைப் பறிகொடுத்தது குறித்தும், எடியூரப்பா முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தது குறித்தும் அவர் ட்விட்டரில்  கருத்து....... மேலும்

20 மே 2018 16:14:04

பசுப் பாதுகாப்பு என்ற பெயரால் நடைபெற்ற வன்முறைகளைத் தடுக்கத் தவறிய பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு நீதிமன்ற அவமதிப்பு அறிவிக்கை!

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பசுப் பாதுகாப்பு என்ற  பெயரால் நடைபெற்ற வன்முறைகளைத் தடுக்கத் தவறிய பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு நீதிமன்ற அவமதிப்பு அறிவிக்கை!

உச்சநீதிமன்றம் உத்தரவு!

புதுடில்லி, பிப். 7- பசுப்பாதுகாப்பு என்ற பெயரால் நடைபெற்ற வன்முறை களைத் தடுப்பதற்குக் கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி உச்சநீதி மன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்த தவறியதற்காக பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு நீதிமன்ற அவ மதிப்புக்கான தாக்கீது அனுப்பும்படி, காந்தியாரின்கொள்ளுப்பேரன்துஷார் காந்தி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன் றம் கடந்த திங்கள்கிழமை உத்தரவிட்டது.

இது குறித்து ‘‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’’ ஆங்கில நாளேட்டின் இதழில் வெளியிடப்பட்டுள்ள சிறப்புச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

கடந்த திங்கள்கிழமை அன்று உச்ச நீதிமன்றம் ராஜஸ்தான், அரியானா மற்றும்உத்தரப்பிரதேசம்ஆகியமாநி லங்களுக்கு பசுப் பாதுகாப்பு என்ற பெயரால் நடைபெற்ற வன்முறை களைத் தடுத்து நிறுத்த கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி உச்சநீதி மன்றம் பிறப்பித்த உத்தரவுகளை செயல்படுத்த தவறியதற்காக நீதிமன்ற அவமதிப்புக்கான தாக்கீதுகளை அனுப் பும்படி உத்தரவிட்டது.

ஏப்ரல் 3 ஆம்

தேதிக்குள்

இந்தியாவின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் ஏ.எம். கான்வில்க்கர் மற்றும் டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் வரும் ஏப்ரல் 3 ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி அந்த நோட்டீஸ்களை அனுப்ப உத்தரவிட்டனர்.

இது தொடர்பாக காந்தியாரின் கொள்ளுப் பேரனான துஷார் காந்தி உச்சநீதிமன்றத்தில்மேற்கண்டமாநில அரசுகள் கவ்ரக்சாக்ஸ் (பசுப் பாதுகாவலர் கள்) நடத்திய வன்முறைகளைத் தடுக்க, உச்சநீதி மன்றத்தின் உத்தரவுகளை மீறி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குறிப்பிட்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த பொது நல மனுவில் பசுப் பாதுகாவலர்கள் கூட்டமாக வந்து தாக்கிக் கொலை செய்த 66 சம்பவங்கள் நடைபெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டம்- ஒழுங்கைப் பராமரிக்க வேண்டும்

இந்த வழக்கில் மனுதாரர் சார்பில் மூத்த வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங் ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர் உச்சநீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி வன்முறைச் சம்பவங்கள் இன்னமும் நடைபெற்று வருகின்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் அதைப் பார்த்து வருகின்றனர் என்று வாதிட்டார்.

கடந்த ஆண்டு, 26 மாநிலங்களுக்கும் பசுப் பாதுகாவலர்கள் பெயரால் நடை பெறும் வன்முறைகளைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்றும், அதன் மூலம் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்காக மாநிலங்கள் கண்காணிப்பு (நோடல்) அதிகாரிகளை நியமிக்க வேண்டும், நெடுஞ்சாலைகளில் ரோந்துப் பணிகளுக்கு ஏற்பாடு செய்து அதில் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து உச்சநீதிமன்றத்துக்கு தகவல் அளிக்கவேண்டும் என்று அது அறி வுறுத்தியிருந்தது.

யாரும் சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளக்கூடாது

யாரும் சட்டத் தைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும், தாங்களே சட்டத்தின் காவலர்கள் என்ற முறையில் நடந்து கொள்ளக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு சிறப்புச் செய்தியில் அந்த ஏடு தெரிவித்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner