முன்பு அடுத்து Page:

பாஜக ஆளும் குஜராத்தில் தாழ்த்தப்பட்ட தொழிலாளி அடித்துக்கொலை!

உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் அகமதாபாத், மே 22 குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் உள்ள தொழிற் சாலையில், தாழ்த் தப்பட்ட தொழிலாளி ஒருவரை, தூணில் கட்டி வைத்து மிகக் கொடூரமான முறையில் அடித்தே கொன்ற சம்பவம் நடந்துள்ளது. குஜராத் மாநிலம் ராஜ் கோட்டைச் சேர்ந்த தொழிலாளி முகேஷ் சாவ்ஜி வானியா (40). இவர் அங்குள்ள ஷாபார்- வேராவல் பகுதியில் உள்ள தொழிற் சாலையில் பணி யாற்றி வந்தார்.ஞாயிற்றுக்கிழமை தொழிற்....... மேலும்

22 மே 2018 17:31:05

சிவில் சர்வீஸ் பதவிக்கான மத்திய அரசின் உத்தரவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு

புதுடில்லி, மே 22 சிவில் சர்வீஸ் பதவிக்கான மத்திய அரசின் புதிய உத்தரவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசு பணியாளர்  தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் அய்ஏஎஸ், அய்பிஎஸ் பதவிக்கான சிவில் சர்வீஸ் தேர்வில் மத்திய அரசு புதிய உத்தரவை பரிந்துரைத்துள்ளது.  பிரதான தேர்வில் பெறும் மதிப்பெண்ணுடன், அடிப்படை பயிற்சி தேர்வில் பெறும் மதிப் பெண்ணை சேர்த்து அதன் அடிப்படையில் அய்ஏஎஸ், அய்பிஎஸ்  பதவிக்கான நியமனம் செய்யப்பட ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த....... மேலும்

22 மே 2018 15:50:03

பெரும்பான்மை இல்லாத பாஜகவை ஆட்சியமைக்க அழைத்த ஆளுநர் பதவி விலக வேண்டும் : சரத்பவார்

புதுடில்லி, மே 21 அறுதிப் பெரும்பான்மை இல்லாத பாரதிய ஜனதாவை, ஆட்சியமைக்க அழைப்பு விடுத்த கருநாடக ஆளுநர் வஜுபாய் வாலா உடனடியாக பதவி விலக வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். கருநாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி 2 நாளில் முடிவுக்கு வந்ததால், காங்கிரசு ஆதரவுடன் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சித் தலைவர் குமாரசாமி, வரும் புதன்கிழமை(மே 23) ஆட்சியமைக்கிறார். இந்நிலையில், அறுதிப் பெரும்பான்மை....... மேலும்

21 மே 2018 15:40:03

உச்சம் தொட்டது பெட்ரோல்-டீசல் விலை

உச்சம் தொட்டது பெட்ரோல்-டீசல் விலை

புதுடில்லி, மே 21- வரலாறு காணாத விதத்தில் முதல் முறையாக ரூ.84 தாண்டி உச்சத்தை எட்டியது பெட் ரோல் - டீசல் விலை. இந் தியாவின் வெவ்வேறு நகரங் களில் விலை சற்று மாறு பட்டாலும், மொத்தத்தில் இதுவரை இல்லாதஅளவிற்கு பெரும் விலையை பெட்ரோல் மற்றும் டீசலுக்கு இந்திய மக்கள் நேற்று (20.5.2018) அதிகாலை முதல் கொடுக்கத் துவங்கியிருக்கிறார்கள்.பெட்ரோல் விலை லிட்டருக்கு 33 பைசா - ஞாயிறன்று உயர்த்தப் பட்டதைத்....... மேலும்

21 மே 2018 15:39:03

அதிகாரத்திற்காக ஜனதாதளம் (எஸ்) கட்சியுடன் கூட்டணி அமைக்கவில்லை

மல்லிகார்ஜுன கார்கே பெங்களூரு, மே 21 அதிகாரத் திற்காக மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அமைக்க வில்லை என்று காங்கிரசு கட்சியின் மூத்த தலைவர் மல் லிகார்ஜுன கார்கே செய்தியா ளர்களிடம் கூறினார். பெங்களூருவில் நேற்று (20.5.2018) காங்கிரசு கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதா வது: சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி 104 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. காங்கிரசு, ஜனதாதளம் (எஸ்) கூட்டணிக்கு 116....... மேலும்

21 மே 2018 15:05:03

ம.பி.யில் பசுவதை செய்ததாகக் கூறி ஒருவர் கொலை

சட்னா, மே 21  மத்தியப்பிரதேச மாநிலத்தின் சாட்னா மாவட்டத்தில் பசுவதை செய்ததாகக் கூறி 2 பேர்மீது நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியானார்.மத்திய பிரதேச சாட்னா மாவட்ட, சாட்னா - கட்னி சாலையில் சிறுகுன்று அருகில் ரியாஸ், கார் ஓட்டுநர் ஷாகீல், ஸாகி மற்றும் இஸ்மாயில் ஆகிய 4 பேரை கிராமமக்கள் சிலர் பசுவுடன் பார்த்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கிராம மக்கள் சிலர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அப்போது ஸாகி....... மேலும்

21 மே 2018 15:05:03

லஞ்ச பேரத்தில் ஈடுபட்ட பாஜகவினர் மீது பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: காங்கிரசு வலியுறுத்தல்

பெங்களூரு, மே 21 கருநாடகத்தில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்எல்ஏக்களிடம் பேரத்தில் ஈடுபட்ட பாஜக தலைவர்கள் மீது பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. டில்லியில் செய்தியாளர்களை ஞாயிற்றுக் கிழமை சந்தித்த காங்கிரசு செய்தித் தொடர் பாளர் ஜெய்வீர் செர்கில் கூறியதாவது: தான்ஊழலுக்குஎதிராகப் போராடி வரு வதாகபிரதமர்மோடி மேடைதோறும் முழங்கி வருகிறார். கருநாடகத்தில் அவரது கட்சியைச் சேர்ந்த தலைவர்கள், காங்கிரசு மற்றும் மஜத....... மேலும்

21 மே 2018 14:55:02

கோவா, மணிப்பூரில் ஆளுநரிடம் காங்கிரசு மனு: ஆட்சி அமைக்க உரிமை கோரியது

கோவா, மணிப்பூரில் ஆளுநரிடம் காங்கிரசு மனு: ஆட்சி அமைக்க உரிமை கோரியது

பனாஜி, மே 20 கோவா மற்றும் மணிப்பூர் மாநில சட்டப் பேரவைகளில் தனிப்பெரும் கட்சியாக இருப்பதால் தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று அந்தந்த மாநில ஆளுநரிடம் காங்கிரசு கட்சி கடிதம் அளித்துள்ளது. அண்மையில் நடைபெற்ற கருநாடக சட்டப்பேரவைத் தேர்த லில், தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற பாஜக-வை ஆட்சி அமைக்குமாறு அந்த மாநில ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதையே, முன்மாதிரியாகக் கொண்டு மணிப்பூரிலும், கோவா விலும் காங்கிரசு கட்சி....... மேலும்

20 மே 2018 16:49:04

எடியூரப்பா பதவி விலகல் பாரதீய ஜனதாவுக்கு விழுந்த முதல் சம்மட்டி அடி

எடியூரப்பா பதவி விலகல்  பாரதீய ஜனதாவுக்கு விழுந்த முதல் சம்மட்டி அடி

பெங்களூரு, மே20 கருநாடக சட்டமன்றத்தில் நேற்று (19.5.2018) மாலை 4 மணிக்கு  நம்பிக்கை வாக் கெடுப்பு நடைபெற இருந்த நிலையில், சரியாக 4 மணிக்கு தனது பதவியை விட்டு விலகி சபையில் இருந்து வெளியேறினார் எடியூரப்பா. இது பாரதீய ஜனதா கட்சிக்கு விழுந்த முதல் சம்மட்டி அடி என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை 11 மணி வரை 100 சதவிகிதம் வெற்றி பெறுவேன் என்று மீண்டும் மீண்டும்  கூறிவந்த  எடியூரப்பா பதவி....... மேலும்

20 மே 2018 16:14:04

கருநாடகா காவிமயமாகாது

கருநாடகா காவிமயமாகாது

- பிரகாஷ் ராஜ் பெங்களூரு, மே 20 கருநாடக மாநிலத்தில் பாஜக ஆட்சியைப் பறிகொடுத்ததை கிண்டல் செய்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், மேட்ச் தொடங் கும் முன்பே முடிந்துவிட்டது என்று தெரிவித் துள்ளார். கருநாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராகத் தீவிரமாக சுற்றுப் பயணம் செய்து நடிகர் பிரகாஷ் ராஜ் பிரச்சாரம் செய்தார். பாஜக ஆட்சியைப் பறிகொடுத்தது குறித்தும், எடியூரப்பா முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தது குறித்தும் அவர் ட்விட்டரில்  கருத்து....... மேலும்

20 மே 2018 16:14:04

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ 2,548 கோடி நிதி ஒதுக்கீடு

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

புதுடில்லி, பிப்.9  மத்திய நிதிநிலை அறிக்கையில், 2018-- 2019 ஆம் ஆண்டுக்கு தமிழகத் துக்கான ரயில்வே திட்டங் களை நிறைவேற்ற ரூ.2,548 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.

ரூ. 1 லட்சத்து

48 ஆயிரத்து

548 கோடி

2018 ---2019-ஆம் ஆண்டுக்கான மத்திய நிதி நிலை அறிக் கையை பிப்.1-ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். ஒட்டுமொத் தமாக இந்திய ரயில்வே துறைக்கு ரூ. 1 லட்சத்து 48 ஆயிரத்து 548 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு

ரூ.2,548 கோடி

இந்நிலையில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு விவரம் செவ் வாய்க்கிழமை வெளியிடப் பட்டது. அதில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.2,548 கோடி ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளது.

27 ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கீடு: இந்நிதியில், மிக முக்கியமாக ரூ 376 கோடி செலவில், பெங்களூருவில் உள்ள பையப்பனஹள்ளியில் இருந்து ஓசூருக்கு இரட்டை ரயில் பாதை அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ரூ.20 ஆயி ரத்து 64 கோடி மதிப்பிலான 27 ரயில்வே திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருவதாகவும் அதில் 3 ஆயிரத்து 198 கிலோ மீட்டர் தூர ரயில் பாதையும் அடங்கும் என்றும் ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது.

2017 - 2018 ஆம் ஆண்டுக் கான நிதிநிலை அறிக்கையில் தமிழக ரயில்வே திட்டங் களுக்கு ரூ.2,287 கோடி ஒதுக் கீடு செய்யப்பட்டது.

கூடுதலாக

ரூ.261 கோடி ஒதுக்கீடு

இந்நிலையில், இவ் வாண்டு தமிழக ரயில்வே திட்டங்களுக்கு கூடுதலாக ரூ.261 கோடி ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

இதில் சேலம் - ஓமலூர் இடையிலான புதிய ரயில்வே பாதைக்கு ரூ.76.43 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் மின்மயமாக்கல் பாதைகளுக்கு ரூ.404 கோடியும், போக்கு வரத்து மேம்படுத்தும் பணிக ளுக்கு ரூ.19.17 கோடியும், மாநகர ரயில் திட்ட மேலாண் மைக்கு ரூ.14 கோடியும், ரயில்வே சுரங்கப் பாதை மற் றும் மேம்பால கட்டுமானப் பணிகளுக்கு ரூ.382 கோடியும் ஒதுக்கி பணிகள் நடைபெறு கின்றன.

மிக முக்கியமாக ரயில் நிலையங்களில் பயணிகளின் அடிப்படை வசதியை மேம் படுத்த ரூ.38 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தென்மாநிலங்களான கேரளத்திற்கு பட்ஜெட்டில் ரூ. 923 கோடி, கர்நாடகத்திற்கு ரூ.3, 353 கோடி, தெலங் கானாவுக்கு ரூ.1,813 கோடி, ஆந்திர மாநிலத்துக்கு ரூ.3,670 கோடி என ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner