முன்பு அடுத்து Page:

வெள்ள நீரில் மிதக்கும் கேரளா பலி எண்ணிக்கை 324 ஆக அதிகரிப்பு, 1567 முகாம்களில் 2.3லட்சம் பேர் த…

   வெள்ள நீரில் மிதக்கும் கேரளா  பலி எண்ணிக்கை 324 ஆக அதிகரிப்பு,  1567 முகாம்களில் 2.3லட்சம் பேர் தங்கவைப்பு

      திருவனந்தபுரம், ஆக.18- கேரளத்தில் கடந்த நூறாண்டு களில் இல்லாத அளவிற்கு மிகக் கடுமையான மழை - வெள்ளம் ஏற் பட்டுள்ளது என்றும், இதுவரை 324 பேர் பலியாகிவிட்டதாகவும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வருத்தத்துடன் கூறியுள் ளார். மழைக்கும், நிலச்சரிவுக்கும் வெள்ளிக் கிழமை வரை 324 பேர்பலியாகிவிட்டனர். லட்சக்கணக்கா னோர் மீட்கப்பட்டுள்ளனர். 1567 முகாம்களில் 52856 குடும்பங்களைச்சேர்ந்த 2.3லட்சம் பேர் தஞ்ச மடைந்துள்ளனர். பத்தனம்திட்டா, ஆலப்புழா, எர்ணா குளம், திருச்சூர் ஆகிய 4....... மேலும்

18 ஆகஸ்ட் 2018 16:12:04

யூரியா உற்பத்தி 1.6 விழுக்காடு உயர்வு

   யூரியா உற்பத்தி 1.6 விழுக்காடு உயர்வு

புதுடில்லி, ஆக. 18-உள்நாட்டில் யூரியா உற்பத்தி 1.6 சதவீதம் அதிகரிக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய உரத் துறை அமைச்சகத்தின் உயரதி காரி வியாழக்கிழமை கூறியதா வது: உள்நாட்டில் யூரியா உற் பத்தி கடந்த 2017-20-18 நிதி ஆண்டில் 2.40 கோடி டன்னாக இருந்தது. இந்த நிலையில் உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள சில ஆலைகளின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், நடப்பாண்டில் அனைத்து ஆலைகளின் செயல்....... மேலும்

18 ஆகஸ்ட் 2018 15:43:03

மத ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பிரித்த சங் பரிவாரங்களுக்குப் பதிலடி கொடுத்த கேரள மக்கள்

திருவனந்தபுரம்,ஆக.18பேரழிவின்விளிம் பில் நிற்கும்போதுகூட, கேரளமக்கள் மீது விஷத்தைப் பொழிந்து, மனிதநேய மற்றவர்களாக சங்-பரிவார்கள் தங்களை அடையாளப்படுத்தியுள்ளனர். கேரள மாநிலம், தற்போது எதிர்கொள் ளும், பெருமழையும், பேரழிவும், கேரள மக்களுக்கு, தேவை தான்... இந்தப் பேரழி வுக்கு, ஒருரூபாய் கூட, இந்துக்கள் தரக் கூடாது... கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு, எந்தவித நன்கொடையும் வழங்கக் கூடாது... என்று வடஇந்தியாவிலிருந்து, தென் மாநிலங்களுக்கு, ட்விட்டர், முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊட கங்கள் மூலம்....... மேலும்

18 ஆகஸ்ட் 2018 14:36:02

தூய்மை பாரதம் பல்லிளிக்கிறது : சுதந்திர தினநாள் கொண்டாட்டம் முடிந்த பிறகு குப்பைக்காடான செங்கோட்டை

தூய்மை பாரதம் பல்லிளிக்கிறது : சுதந்திர தினநாள் கொண்டாட்டம் முடிந்த பிறகு குப்பைக்காடான செங்கோட்டை

டில்லி ஆகஸ்ட் 17 மோடி தேசியக்கொடி ஏற்றி முடிந்து அவர் சென்ற பிறகு மக்கள் கூட்டம் கலைந்தது, அப்போது செங்கோட்டை முழுவதுமோ குப்பை மேடாக காட்சியளித்தது, மோடி அரசு 2014-ஆம் ஆண்டு சுதந்திர தினநாளன்று இதே மேடையில் தூய்மை இந்தியா திட்டம் என்ற ஒன்றை அறிவித்தார். அதாவது குப்பை இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று கூறினார். ஆனால் மோடி கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியே குப்பைக்கூழமாக மாறியது தூய்மை இந்தியா திட்டம்....... மேலும்

17 ஆகஸ்ட் 2018 16:55:04

கேரளா கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 100அய் நெருங்குகிறது

   கேரளா கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 100அய் நெருங்குகிறது

திருவனந்தபுரம், ஆக.17 கேரளா மாநிலத் தில் கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளும், ஏரிகளும் நிரம்பி வழிகின்றன. மொத்தம் உள்ள 39 அணைகளில் 33 அணைகள் திறக்கப்பட்டுள்ளது. அணை களில் இருந்து வெளியேறும் தண்ணீர், தொடர் மழையால் கேரளாவின் அனைத்து மாவட்டங்களும் வெள்ளத்தில் தத்தளிக் கிறது. இதற்கிடையே, கேரளாவில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 72 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில், கேரளாவில்....... மேலும்

17 ஆகஸ்ட் 2018 16:27:04

எஸ்.சி., எஸ்.டி., வகுப்பினரில் வசதி படைத்தவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் பலனை மறுக்க முடியாது: அ…

      எஸ்.சி., எஸ்.டி., வகுப்பினரில்  வசதி படைத்தவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் பலனை மறுக்க முடியாது: அரசு சார்பில் கருத்து

புதுடில்லி, ஆக. 17 அரசு பணி களில்எஸ்.சி., எஸ்.டி.வகுப் பினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டின் பலனை வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் 12 ஆண்டுகளுக்கு முன்பு எம்.நாகராஜ் வழக்கில் ஒரு தீர்ப்பை வழங்கியது. 2006 ஆ-ம் ஆண்டு வழங்கிய இந்தத் தீர்ப்பில், எஸ்.சி., எஸ்.டி.,வகுப்பினரில்வசதி படைத்தவர்களுக்கு (கிரீமிலே யர்) அரசு பணி பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டின் பலனை வழங்க தேவை இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பை 7 நீதிபதிகள்....... மேலும்

17 ஆகஸ்ட் 2018 15:42:03

‘மோடி மோடி' என்று குரல் கொடுக்காத குழந்தைகள்

  ‘மோடி மோடி' என்று குரல் கொடுக்காத குழந்தைகள்

  டில்லி செங்கோட்டையில் கொடியேற்றிய பிறகு பள்ளி மாணவர்களிடையே மோடி கை குலுக்க வரும்போது அனைவரும் 'மோடி, மோடி' என்று கூற வேண்டுமென மாணவர்களை வழி நடத்துபவர்கள் கட்டளை இட்டிருந்தனர். ஆனால், மாணவர்கள், நீண்ட நேரம் நின்ற களைப்பு காரணமாக 'மோடி மோடி' என்று முழக்கமிட மறந்து விட்டனர். இதனால் மாணவர்களை வழி நடத்திய ஆசிரியர்கள், மாணவர்களைக் கடிந்து கொண்டனராம்.     மேலும்

17 ஆகஸ்ட் 2018 15:42:03

இந்துத்துவாவின் கோரத் தாண்டவம் இஸ்லாமிய ஊர்களின் பெயரை மாற்றும் ராஜஸ்தான் அரசு

ஜெய்ப்பூர் ஆக. 16 ராஜஸ் தான் மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கிறது, இந்த நிலையில் மாநிலங்களில் உள்ள இஸ்லாமிய பெயர் கொண்ட ஊர்களின் பெயரை அம்மாநில அரசு மாற்றி வருகிறது பாஜக ஆளும் மாநிலங் களில் அமைந்துள்ள இஸ்லா மிய பெயர் கொண்ட ஊர்களின் பெயர்கள் மாற்றப்பட்டு வரு கின்றன.  சமீபத்தில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் முகல் சராய் ரயில் நிலையத்தின் பெயரை தீன் தயாள் உபாத்யாய் ரயில்....... மேலும்

16 ஆகஸ்ட் 2018 15:34:03

ரயில்வே காவல்துறையில் பெண்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு

ரயில்வே காவல்துறையில் பெண்களுக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு

பாட்னா, ஆக. 16- ரயில்வே பாதுகாப்புப் படைப்பிரிவு 1957ஆம் ஆண்டில் உரு வாக்கப்பட்டது. நாடுமுழுவதும் உள்ள சீருடைப்பணிப்பிரிவினரில் ரயில்வே பாதுகாப்புப் படைப்பிரிவினரே அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இன்றும் 70,000 பேருக்கும்மேல் பணியாற்றி வருகிறார்கள். ரயில்வே பாதுகாப்பு படைப்பிரி வில் 9500 முதல் 10000 வரை காவலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்க ளில் 50 விழுக்காடு அளவு பெண்களுக்கு வழங்கப்படுகிறது என்று மத்திய ரயில் வேத் துறை அமைச்சர் பியூஷ்....... மேலும்

16 ஆகஸ்ட் 2018 15:34:03

கறுப்பு பணத்தை பதுக்கி வைக்க போலி நிறுவனங்கள்

ராம்தேவ் மோசடி அம்பலம் புதுடில்லி, ஆக.16- யோகா, ஆயுர்வேதம் உள் ளிட்ட விஷயங்களை காசாக்கி, நாட்டின் பெருமுதலாளிகளில் ஒருவராக மாறியிருப்பவர் ராம்தேவ். இவரது பதஞ்சலி நிறுவனம் பல ஆயிரம் கோடி மதிப்பு சொத்து கொண்ட நிறு வனமாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், ராம்தேவ், கட் டுக்கடங்காத தனது வரு வாய்க்கு கணக்கு காட்டுவ தற்காகவே பல் வேறு போலி நிறுவனங்களை நடத்தி வந்தி ருப்பதும் தெரியவந் துள்ளது.பதஞ்சலி நிறுவனத்தின் கீழ் 21 தனியார்....... மேலும்

16 ஆகஸ்ட் 2018 15:34:03

மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து ஆந்திராவில் முழு அடைப்பு போராட்டம்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சித்தூர், பிப்.9 பட்ஜெட்டில் சிறப்பு நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து ஆந்திராவில் நேற்று முழு அடைப்பு நடந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக் கப்பட்டது. மத்திய அரசு கடந்த 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பொது பட்ஜெட்டில் ஆந்திரா வுக்கு சிறப்பு நிதி ஒதுக்கப்படவில்லை. இதை கண்டித்து ஓய்எஸ்ஆர் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உட்பட பல்வேறு எதிர்க்கட்சியினர் நேற்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தனர்.

இதையெட்டி மாநிலம் முழுவதும் நேற்று முன்தினம் 144 தடை உத்தரவை மாநில அரசு பிறப்பித்தது. இருப்பினும் தடையை மீறி நேற்று அதிகாலை 6 மணி முதல் மாநிலம் முழுவதும் முழு அடைப்பு நடைபெற்றது. அனைத்து பேருந்துகளும் டெப்போக்களில் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் பொது மக்கள் கூட்டமின்றி பேருந்து நிலையம் வெறிச்சோடியது. பெட்ரோல் பங்க் குகள், திரையரங்குகள், வணிக நிறு வனங்கள், பள்ளி, கல்லூரிகள் மூடப் பட்டிருந்தது. இதற்கிடையில் சித்தூர் காந்தி சிலை அருகே அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணாவில் ஈடுபட்டனர். தொடர்ந்து சாலை மறிய லிலும் ஈடுபட்டனர்.

திருப்பதி

திருப்பதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நகரி தொகுதி எம்எல்ஏ. ரோஜா தலைமையில் அக்கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். இந்த முழு அடைப்பு போராட்டம் காரணமாக பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். போக்குவரத்து முற்றிலும் தடைபட்ட தால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
தெலுங்கு தேசம் கட்சியும் ஆதரவு

சித்தூரில் என்டிஆர் சிலை அருகே ஆந்திராவுக்கு சிறப்பு தகுதி கேட்டு மாநகராட்சி மேயர் கட்டாரி ஹேமலதா தலைமையில், துணை மேயர் சுப்பிர மணியம், தெலுங்கு தேசம் மாவட்ட மகளிர் அணி தலைவி வைகை ராஜேஸ்வரி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல், திருப்பதி என்டிஆர் சிலை அருகே எம்எல்ஏ சுகுணா தலைமையில் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner