முன்பு அடுத்து Page:

கவுரி லங்கேஷ் கொலை வழக்கு கைதான 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

கவுரி லங்கேஷ் கொலை வழக்கு  கைதான 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

பெங்களூரு, ஆக. 19- கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கைதான 4 பேருக்கு, எம்.எம்.கல்புர்கி கொலை வழக்கிலும் தொடர்பு இருப்பதால், அவர்கள் 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். பெங்களூரு ராஜராஜேஸ் வரி நகரை சேர்ந்த பத்திரிகை யாளர் கவுரி லங்கேஷ் கடந்த ஆண்டு(2017) செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி துப்பாக்கி யால் சுட்டு படுகொலை செய் யப்பட்டார். இதுதொடர்பாக சுஜித்குமார், பரசுராம் வாக் மோர், பரத் கூர்னி,....... மேலும்

19 ஆகஸ்ட் 2018 16:58:04

கம்ப்யூட்டர் விற்பனை 28 சதவீதம் அதிகரிப்பு

கம்ப்யூட்டர் விற்பனை 28 சதவீதம் அதிகரிப்பு

புதுடில்லி, ஆக. 19- நடப்பு நிதி யாண்டின் ஏப்ரல்--ஜூன் மூன்று மாத காலத்தில் கம்ப்யூட்டர் விற்பனை 28.1 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து அய்டிசி நிறு வனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நோட்புக் கம்ப்யூட்டர்க ளுக்கான தேவையில் காணப் பட்ட விறுவிறுப்பையடுத்து, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்.,-ஜூன்) 22.50 லட்சம் கம்ப்யூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. கடந்தாண்டு விற்பனையுடன் ஒப்பிடுகையில் இது 28.1 சதவீதம் அதிகமாகும். ஒட்டுமொத்த விற்பனை யில் எச்பி நிறுவனம் வழக்கம் போல் தனது முதலிடத்தை....... மேலும்

19 ஆகஸ்ட் 2018 16:31:04

சிறு, குறு நிறுவனங்களை காலி செய்த ஜிஎஸ்டி!

சிறு, குறு நிறுவனங்களை காலி செய்த ஜிஎஸ்டி!

புதுடில்லி, ஆக. 19 ஜிஎஸ்டி வரி விதிப்பானது, சிறு, குறுமற்றும் நடுத்தர நிறு வனங்களை கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கி இருப் பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பணமதிப்பு நீக்க நடவடிக் கையை விட,சரக்கு மற்றும் சேவை வரியால்தான் (ஜிஎஸ்டி) சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அது கூறி யுள்ளது.கடந்த 2 ஆண்டுகளாக, மத்திய அரசின் பண மதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி அம லாக்க நடவடிக்கைகள், பல்....... மேலும்

19 ஆகஸ்ட் 2018 15:31:03

கேரள வெள்ளம்: 3.5 லட்சம் பேர் பாதிப்பு 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

கேரள வெள்ளம்: 3.5 லட்சம் பேர் பாதிப்பு 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

திருவனந்தபுரம், ஆக.19 கேரளத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் 3.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் மீண்டும் பலத்த மழை பெய்ய வாய்ப் புள்ளதால், 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அனைத்து ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான ஆறுகளின் குறுக்கே கட்டப் பட்டுள்ள அணைகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. வெள்ளத்தால் ஆலுவா, சாலக்குடி, செங்கானூர், ஆலப் புழா,....... மேலும்

19 ஆகஸ்ட் 2018 15:23:03

ஆதார் எண் மூலம் சிம் வாங்கினால் இனி முகப்பதிவு கட்டாயம்

புதுடில்லி, ஆக.19  ஆதார் அடையாள அட்டையை பயன்படுத்தி, தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் சிம் கார்டு வாங்கும்போது, முகத்தை படம் பிடித்து அடை யாளம் காணும் திட்டம் அடுத்த மாதம் 15-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. தற்சமயம், ஆதார் விவரங் களை சரி பார்க்க விரல் ரேகை பதிவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ரேகை பதிவை குளோனிங் முறையில் எடுத்து ஏமாற்று வேலை நடைபெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந் துள்ளது. இதையடுத்து, ஆதார் அட்டை....... மேலும்

19 ஆகஸ்ட் 2018 15:23:03

முல்லைப் பெரியாறு: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

முல்லைப் பெரியாறு: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, ஆக.19 முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாகக் குறைப்பது தொடர்பாக தேசிய நெருக்கடி மேலாண்மைக் குழுவும், பேரிடர் மேலாண்மை துணைக் குழுவும் பரிசீலிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. மேலும், இந்த விவ காரத்தில் தேசிய நெருக்கடி மேலாண்மைக் குழு எடுக்கும் முடிவுக்கு தமிழகம் கட் டுப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக பேரிடர் மேலாண்மை திட்டத்தை அறிவிக்கக்....... மேலும்

19 ஆகஸ்ட் 2018 14:56:02

வெள்ள நீரில் மிதக்கும் கேரளா பலி எண்ணிக்கை 324 ஆக அதிகரிப்பு, 1567 முகாம்களில் 2.3லட்சம் பேர் த…

   வெள்ள நீரில் மிதக்கும் கேரளா  பலி எண்ணிக்கை 324 ஆக அதிகரிப்பு,  1567 முகாம்களில் 2.3லட்சம் பேர் தங்கவைப்பு

      திருவனந்தபுரம், ஆக.18- கேரளத்தில் கடந்த நூறாண்டு களில் இல்லாத அளவிற்கு மிகக் கடுமையான மழை - வெள்ளம் ஏற் பட்டுள்ளது என்றும், இதுவரை 324 பேர் பலியாகிவிட்டதாகவும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வருத்தத்துடன் கூறியுள் ளார். மழைக்கும், நிலச்சரிவுக்கும் வெள்ளிக் கிழமை வரை 324 பேர்பலியாகிவிட்டனர். லட்சக்கணக்கா னோர் மீட்கப்பட்டுள்ளனர். 1567 முகாம்களில் 52856 குடும்பங்களைச்சேர்ந்த 2.3லட்சம் பேர் தஞ்ச மடைந்துள்ளனர். பத்தனம்திட்டா, ஆலப்புழா, எர்ணா குளம், திருச்சூர் ஆகிய 4....... மேலும்

18 ஆகஸ்ட் 2018 16:12:04

யூரியா உற்பத்தி 1.6 விழுக்காடு உயர்வு

   யூரியா உற்பத்தி 1.6 விழுக்காடு உயர்வு

புதுடில்லி, ஆக. 18-உள்நாட்டில் யூரியா உற்பத்தி 1.6 சதவீதம் அதிகரிக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய உரத் துறை அமைச்சகத்தின் உயரதி காரி வியாழக்கிழமை கூறியதா வது: உள்நாட்டில் யூரியா உற் பத்தி கடந்த 2017-20-18 நிதி ஆண்டில் 2.40 கோடி டன்னாக இருந்தது. இந்த நிலையில் உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள சில ஆலைகளின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், நடப்பாண்டில் அனைத்து ஆலைகளின் செயல்....... மேலும்

18 ஆகஸ்ட் 2018 15:43:03

மத ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பிரித்த சங் பரிவாரங்களுக்குப் பதிலடி கொடுத்த கேரள மக்கள்

திருவனந்தபுரம்,ஆக.18பேரழிவின்விளிம் பில் நிற்கும்போதுகூட, கேரளமக்கள் மீது விஷத்தைப் பொழிந்து, மனிதநேய மற்றவர்களாக சங்-பரிவார்கள் தங்களை அடையாளப்படுத்தியுள்ளனர். கேரள மாநிலம், தற்போது எதிர்கொள் ளும், பெருமழையும், பேரழிவும், கேரள மக்களுக்கு, தேவை தான்... இந்தப் பேரழி வுக்கு, ஒருரூபாய் கூட, இந்துக்கள் தரக் கூடாது... கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு, எந்தவித நன்கொடையும் வழங்கக் கூடாது... என்று வடஇந்தியாவிலிருந்து, தென் மாநிலங்களுக்கு, ட்விட்டர், முகநூல், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊட கங்கள் மூலம்....... மேலும்

18 ஆகஸ்ட் 2018 14:36:02

தூய்மை பாரதம் பல்லிளிக்கிறது : சுதந்திர தினநாள் கொண்டாட்டம் முடிந்த பிறகு குப்பைக்காடான செங்கோட்டை

தூய்மை பாரதம் பல்லிளிக்கிறது : சுதந்திர தினநாள் கொண்டாட்டம் முடிந்த பிறகு குப்பைக்காடான செங்கோட்டை

டில்லி ஆகஸ்ட் 17 மோடி தேசியக்கொடி ஏற்றி முடிந்து அவர் சென்ற பிறகு மக்கள் கூட்டம் கலைந்தது, அப்போது செங்கோட்டை முழுவதுமோ குப்பை மேடாக காட்சியளித்தது, மோடி அரசு 2014-ஆம் ஆண்டு சுதந்திர தினநாளன்று இதே மேடையில் தூய்மை இந்தியா திட்டம் என்ற ஒன்றை அறிவித்தார். அதாவது குப்பை இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று கூறினார். ஆனால் மோடி கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியே குப்பைக்கூழமாக மாறியது தூய்மை இந்தியா திட்டம்....... மேலும்

17 ஆகஸ்ட் 2018 16:55:04

மத்திய பா.ஜ.க. அமைச்சர்மீது நில அபகரிப்பு வழக்கு பதிவு

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


பாட்னா, பிப்.9 நில மோசடி புகாரில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பீகார் மாநிலம், பாட்னா அருகே அசோப்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராம் நாராயண் என்பவர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் தமது 2 ஏக்கர் நிலத்தை, மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் உள்ளிட்ட 33 பேர் அபகரிக்க முயல்வதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

பாட்னாவில் உள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், கிரிராஜ் சிங் உள்பட 33 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து,  கிரிராஜ் சிங் மீது தனாப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இது குறித்து தானாபூர் காவல்துறை அதிகாரி சந்தீப் சிங் குமார் கூறுகையில், நீதிமன்ற உத்தரவுப்படி பிப்ரவரி 2இல் மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் உள்பட 33 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டணை சட்டம் 156(3)இன் படியும், எஸ்சி, எஸ்டி சட்டப்பிரிவின்கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.

மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் தற்போது பீகார் மாநிலம் நவாடா தொகுதி எம்பியாக உள்ளார். பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான அய்க்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்தநிலையில் மத்திய அமைச்சர்மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner