முன்பு அடுத்து Page:

இந்திய பொருளாதார வளர்ச்சி வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை

இந்திய பொருளாதார வளர்ச்சி வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை

ரகுராம் ராஜன் கருத்து புதுடில்லி, டிச.15 இந்திய பொருளாதார வளர்ச்சி போது மான அளவுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கவில்லை என ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்தார். இந்திய பொருளாதார வளர்ச்சி தொடர்பாக பல்வேறு கணிப்புகள் வெளிவருகின்றன. இதுதொடர்பாக அரசுக்கு எதிரான விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், இந்திய பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்கள், உத்திகளை வரை யறை செய்வதற்கான முயற்சியை பொருளாதார நிபுணர்களுடன் இணைந்து ரிசர்வ் வங்கி முன்னாள்....... மேலும்

15 டிசம்பர் 2018 15:10:03

ஏற்றுமதி அதிகரித்தால் மட்டுமே நாடு வளர்ச்சி அடையும்!

நிதி ஆயோக் செயல் அதிகாரி தகவல் புதுடில்லி, டிச. 15 -ஏற்றுமதியை அதிகப்படுத் தினால் மட்டுமே, இந்திய பொருளாதாரம் 5 லட்சம் கோடி டாலர் மதிப்பை அடைய முடியும் என்று நிதி ஆயோக் செயல் அதிகாரி அமிதாப் காந்த் கூறியுள்ளார். மும்பையில் டிசம்பர் 13 அன்று டைம்ஸ்நெட்வொர்க் சார்பில் இந்தியப் பொரு ளாதார மாநாடு ஒன்று நடை பெற்றது. இம்மாநாட்டில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அமிதாப்....... மேலும்

15 டிசம்பர் 2018 15:10:03

மேகதாதுவில் புதிய அணை கட்டும் விவகாரம்:

மேகதாதுவில் புதிய அணை கட்டும் விவகாரம்:

மத்திய அரசை கண்டித்து புதுச்சேரி சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் புதுச்சேரி, டிச.15 கர்நாடக மாநிலத் தின் மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கான பூர் வாங்க திட்ட அறிக்கை தயார் செய்ய மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதற்கு தமிழகம், புதுச் சேரியில் பலத்த எதிர்ப்பு கிளம்பி யுள்ளது. இந்த அனுமதியை ரத்துசெய்ய வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதேபோன்ற தீர்மானத்தை புதுவை யிலும் நிறைவேற்றி மத்திய அரசுக்கு....... மேலும்

15 டிசம்பர் 2018 14:42:02

மேகதாது, ரபேல் விவகாரம் தொடர்பாக எம்.பி.க்கள் முழக்கம் மக்களவை, மாநிலங்களவை 17-ஆம் தேதி வரை ஒத்திவைப…

புதுடில்லி, டிச.15 நாடாளு மன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மாநிலம் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் பாஜக ஆட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடு பட்டு வருகின்றன. எதிர்க்கட் சிகள் கொடுத்த ஒத்திவைப்பு தீர்மானங்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. இதனால் உறுப்பினர்கள் போராட்டம் நீடிக்கிறது. நேற்று பல்வேறு பிரச்சினை களை எழுப்ப எதிர்க்கட்சி எம்பிக்கள் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், ரிசர்வ் வங்கி விவகாரம், பணமதிப்பு....... மேலும்

15 டிசம்பர் 2018 14:42:02

பணிவு என்றால் என்ன என்பதை ராகுலிடம் மோடி கற்றுக்கொள்ள வேண்டும்! : சிவசேனா

மும்பை, டிச. 15 கூட்டணிக் கட்சியாக இருந்து கொண்டே, பாஜக-வை சிவசேனா விமர்சித்து வருகிறது. அய்ந்து மாநிலத் தேர்தலில், பாஜக அடைந்த தோல்விக்குப் பிறகு, இந்த விமர்சனத்தை கடுமையாக்கியுள்ள சிவசேனா, தற்போது சாம்னா பத்திரிகையில் தலையங்கம் ஒன்றை எழுதியுள்ளது. அதில், பணிவு என்றால் என்ன? என்பதை ராகுல் காந்தியிடமிருந்து பிரதமர் மோடி கற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளது. மோடியும் அமித்ஷாவும், ஒவ்வொரு கூட்டத்தில் பேசும் போதும், காங்கிரசுக்கு இரங்கல் செய்தி....... மேலும்

15 டிசம்பர் 2018 14:42:02

கடவுளை நம்புவோர் கடைதேறமாட்டார் சுலிவாடி மாரம்மா கோயிலில் பிரசாதம் சாப்பிட்ட 13 பக்தர்கள்; 300 காகங்…

கடவுளை நம்புவோர் கடைதேறமாட்டார் சுலிவாடி மாரம்மா கோயிலில் பிரசாதம் சாப்பிட்ட 13 பக்தர்கள்; 300 காகங்கள் பரிதாப பலி

சாம்ராஜ்நகர், டிச.15 சாம்ராஜ்நகர் மாவட்டம் கிச்சுகிச்சு மாரம்மா கோயிலில் பிரசாதம்சாப்பிட்டபக்தர்கள்13பேர்பரி தாபமாக பலியான சம்பவம் கருநாடக மாநிலத்தில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள்குடும் பத்துக்கு முதல்வர்  குமாரசாமி ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கி உத்தரவிட்டுள்ளார். சாம்ராஜ்நகர்  மாவட்டம், கொள்ளே கால் தாலுகா, சுலிவாடி கிராமத்தில் உள்ளது கிச்சுகிச்சு  மாரம்மா கோவில். இந்த கோயிலில் கடந்த சில நாட்களாக....... மேலும்

15 டிசம்பர் 2018 14:16:02

முற்போக்கு சிந்தனையாளர்களின் கொலையில் பொதுவான நூல் இணைப்பு உள்ளதா?

உச்சநீதிமன்றம் கேள்வி புதுடில்லி, டிச.15- நரேந்திர தபோல் கர், பன்சாரே, கல்புர்கி, கவுரி லங்கேஷ் உள்ளிட்ட முற்போக்கு சிந்தனையாளர்களின் கொலையில், பொதுவான நூல் இணைப்பு உள்ளதா? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி யுள்ளது. கல்புர்கி படுகொலை தொடர்பான வழக்கு உச்சநீதி மன்றத்தில் நீதிபதிகள் யு.யு. லலித் மற்றும் நவின் சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாயன்று விசார ணைக்கு வந்தது. அப்போது, கல்புர்கி மற்றும் கவுரி லங்கேஷ் கொலைகளில் தொடர்பு இருப்பதாக....... மேலும்

15 டிசம்பர் 2018 14:08:02

உச்சநீதிமன்ற தீர்ப்புகளை கடைப்பிடிக்காததே ஜாதி மதக் கலவரங்களுக்கு காரணம்

உச்சநீதிமன்ற தீர்ப்புகளை கடைப்பிடிக்காததே ஜாதி மதக் கலவரங்களுக்கு காரணம்

நீதிபதிகள் மதநம்பிக்கைகளைத் தூக்கிப் பிடிக்கக் கூடாது நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை உயர்த்தி பிடிக்க வேண்டும் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் அழுத்தமான கருத்து புதுடில்லி, டிச.14 நீதிபதிகள் தங்களின் மத நம்பிக்கைகளைத் தூக்கிப் பிடிக்கக் கூடாது என்றும், நீதிமன்ற தீர்ப்புகளை அரசுகள் செயல்படுத்தாததே - ஜாதி மதக் கலவரங்களுக்குக் காரணம் என்றும் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் அழுத்தத்துடன் குறிப் பிட்டு, இந்து நாளிதழுக்கு அவர்....... மேலும்

14 டிசம்பர் 2018 16:25:04

கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருதை வழங்கினார் வெங்கைய நாயுடு

கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருதை வழங்கினார் வெங்கைய நாயுடு

புதுடில்லி, டிச.14 லோக்மால்ட் செய்தி நிறுவனம் சார்பில், ‘நாடாளுமன்ற விருதுகள்’ 2ஆவது ஆண்டாக இந்த ஆண்டும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் மாநிலங்கள் அவையின் 2018-ஆம் ஆண்டின் சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பி னராக கனிமொழி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில்   டில்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருதை வழங்கினார். நாடாளுமன்றத்தில் கனிமொழி கடந்த 10 ஆண்டுகளாக மகத்தான வகையில் பங்காற்றிய தற்காகவும், ஜனநாயகத்தின் மதிப்பீடுகள்,....... மேலும்

14 டிசம்பர் 2018 16:07:04

ரிசர்வ் வங்கியை தங்கள் சொத்தாக மத்தியில் ஆளும் பா.ஜ.க. கருதுகிறது : ப.சிதம்பரம்

ரிசர்வ் வங்கியை தங்கள் சொத்தாக  மத்தியில் ஆளும் பா.ஜ.க. கருதுகிறது :  ப.சிதம்பரம்

புதுடில்லி, டிச.14 இந்திய ரிசர்வ் வங்கியை (ஆர்பிஅய்) தங்களுடைய சொத்தாக மத்தி யில் ஆளும் பாஜக அரசு கருது கிறது என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். டில்லியில் வியாழக்கிழமை ஊடக நிறுவனம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பேசியதாவது: ரூபாய் நோட்டு  திரும்பப் பெற்ற நடவடிக்கைக்கு ஆதர வாக கருத்துத் தெரிவித்த கார ணத்தால் ஆர்பிஅய் ஆளுநர் பதவிக்கு சக்திகாந்த தாசை மத்திய....... மேலும்

14 டிசம்பர் 2018 16:07:04

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைச் சந்திக்க நேரிடும்! புதுவை முதல்வர் நாராயணசாமி

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


புதுச்சேரி, மார்ச் 4- காவிரி மேலாண்மை வாரியம் அமைக் காவிடில், உச்ச நீதிமன்ற அவ மதிப்பு வழக்கை மத்திய அரசு சந்திக்க நேரிடும் என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி எச்சரித்தார்.

இதுகுறித்து புதுவை சட் டப்பேரவை வளாகத்தில் சனிக் கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி வரு மாறு: புதுச்சேரிக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை நானும், அமைச்சர்களும் சந்தித்து புதுவையின் நிதி நிலைமை குறித்து எடுத்துக் கூறினோம். மாநில நிதி நிலைமைகளைச் சரி செய்ய மத்திய அரசு உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தோம். அரசு நிறுவனங் களில் ரங்கசாமி தலைமையி லான முந்தைய அரசு அதிகப் படியான ஆள்களை நியமித்து உள்ளது.

இதனால், ஊதியம் வழங்க முடியாத சூழல் உள்ளது. இதைச் சரிசெய்ய ஓய்வு பெற்ற தலைமைச் செயலர் விஜயன் தலைமையில் குழு அமைத்து, நடவடிக்கை எடுத்து வருகி றோம். உச்ச நீதிமன்றத் தீர்ப் பின்படி, காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்கவும், ரோடியர் மில், சுதேசி, பாரதி மில்லை புனர மைக்க ரூ. 527 கோடி நிதி தர வும் பிரதமரிடம் வலியுறுத்தி னோம். புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய 202 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த நிதி கோரி னோம். இந்தக் கோரிக்கை களைக் கேட்ட பிரதமர் மோடி, ஆவன செய்வதாக உறுதியளித் தார்.

ஆனாலும், பாஜக பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மத்திய அரசு ஏற்கெ னவே அறிவித்த பொலிவுறு நகரத் திட்டம், குடிநீர் திட்டம், பிரதமரின் வீடு கட்டும் திட் டம் ஆகியற்றையே மீண்டும் பட்டியலிட்டார். எங்கள் கோரிக்கை எதையும் அவர் அறிவிக்கவில்லை. பாஜக ஆளும் மாநிலங்கள், எதிர்க் கட்சிகள் ஆளும் மாநிலங்கள் என பாரபட்சம் காட்டுவது வருத்தமளிக்கிறது.

உச்ச நீதிமன்ற உத்தரவின் படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் மத்திய அரசு நீதிமன்ற அவ மதிப்பு வழக்கைச் சந்திக்க நேரிடும். புதுச்சேரி பயணத்தின் போது, மாநில அரசுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை பிரதமர் மோடி செய்யத் தவறிவிட்டார் என்றார் முதல்வர் வே.நாராயணசாமி.

மின்வாரிய ஊழியர்களுக்கு இம்மாத இறுதியில் நிலுவைத் தொகை


சென்னை, மார்ச் 4- தமிழக மின் வாரிய ஊழியர்களுக்கு 11ஆ-வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலை யில், அவர்களுக்கான நிலுவைத் தொகைகள் இம்மாத இறுதி யில் அவரவர் வங்கிக் கணக் கில் நேரடியாகச் செலுத்தப்பட வுள்ளது. இது தொடர்பாக மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
தமிழக மின்வாரியத்தில் சுமார் 80,000 ஊழியர்கள் பணிபுரி கின்றனர். பலகட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு மின்வாரியத் தின் அனைத்து ஊழியர்களுக்கும் 2.57 காரணி ஊதிய உயர்வு வழங்க கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி அமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

புதிய ஊதிய ஒப்பந்தத்தின்படி, களப்பணி உதவியாளருக்கு குறைந்தபட்ச பணப்பலன் ரூ.3,175 ஆகவும், அதிகபட்ச பணப்பலன் ரூ.7,775 ஆகவும் இருக்கும். அலுவலர்களுக்கு குறைந்தபட்ச பணப்பலன் ரூ.5,800 ஆகவும், அதிகபட்ச பணப் பலன் ரூ.27,375 ஆகவும் இருக்கும். இதற்கான அரசாணை வெள்ளிக்கிழமை இரவு தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதிய ஊதிய உயர்வின்படி அவர்களுக்கான நிலுவைத் தொகை அனைத்தும் மார்ச் மாத சம்பளத்துடன் அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். இதன்மூலம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு ஆண்டுக்கு ரூ.1,317 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.

காவிரி மேலாண்மை வாரியம்

பிரதமரின் நடவடிக்கை தமிழர்களின் உணர்வுகளை அவமதிப்பதாகும்: முத்தரசன்

சென்னை, மார்ச் 4 காவிரி விவகா ரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தமிழக மக்களின் உணர்வுக ளைக் காயப்படுத்துகிறார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத் தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக சனிக் கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் மத்திய அரசு அமைக்க வேண் டும் என்று உச்சநீதிமன்றம் உத் தரவிட்டுள்ளது. தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், பிரதமரோ, வேண்டு மானால் நீர்வளத்துறை அமைச்சரை சந்தியுங்கள் எனக்கூறி அலட்சியப்படுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பிரத மரின் நடவடிக்கை தமிழக மக்களின் உணர்வுகளைப் புறக்கணித்து காயப்படுத்தி, அவமதிப்பதாகும். இவ்வாறு இரா.முத்தரசன் குறிப்பிட்டுள்ளார்.

இடமாற்றத்துக்கு எதிர்ப்பு: சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம்


சென்னை, மார்ச் 4- கல்லூரி இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, 6-ஆவது நாளாக சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை பாரிமுனையில் உள்ள அம்பேத்கர் சட்டக்கல் லூரியை வேறு இடத்துக்கு மாற்றக்கூடாது என்பதை வலியுறுத்தி கடந்த 26ஆம் தேதி முதல் கல்லூரி வளாகத் தில் சட்டக்கல்லூரி மாணவ,-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 1ஆம் தேதி சட்டக் கல்லூரி மாணவர்கள் கல்லூரி சுவரில் ஏறி கீழே குதிக்கப்போ வதாக கூறி பரபரப்பு ஏற்படுத் தினர். நேற்று வாயில் கருப்பு துணி கட்டியும், முகத்தில் படம் வரைந்தும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

சட்டத்துறை அமைச்சரோ, செயலாளரோ நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தாதவரை, தங்களது போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று சட்டக்கல்லூரி மாணவர்கள் உறுதியாக உள்ளனர்.

இந்தநிலையில் 6ஆ-வது நாளாக நேற்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள் தங்களது உள் ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner