முன்பு அடுத்து Page:

பத்திரிகையாளர் கொலையைக் கண்டித்து முழு அடைப்புப் போராட்டம்

பத்திரிகையாளர் கொலையைக் கண்டித்து முழு அடைப்புப் போராட்டம்

சிறீநகர், ஜூன் 23- காஷ்மீர் மாநிலத்தில் ரைசிங் காஷ்மீர் ஆங்கில நாளிதழ், உருது நாளிதழ் புலாந்த் காஷ்மீர், காஷ்மீரி மொழி நாளிதழ் சங்கர்மால் மற்றும் உருது வார இதழ் காஷ்மீர் பார்ச்சம் ஆகிய ஏடுகளை நிறுவி நடத்தி வந்தவர் டாக்டர் சையத் சுஜாத் புகாரி (வயது 50) சிறீநகரில் கடந்த 14.6.2018 அன்று மாலை ரைசிங் காஷ் மீர் பத்திரிகையின் நிறுவனர் சுஜாத் புகாரி அவர் அலுவல கத்தில் பணியாற்றிக் கொண்....... மேலும்

23 ஜூன் 2018 15:02:03

33 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடிவு எடுக்க வேண்டும்:

பெண்களுக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடிவு எடுக்க வேண்டும்: மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் டில்லி,ஜூன் 23: நாடாளுமன்றத்தில் அமளி செய்வதை மக்கள் பார்க்கிறார்கள் என்பதை எம்பிக்கள் உணர வேண்டும் என்று மக்களவை தலைவர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார். புதுடில்லியில் விஷன் இந்தியா சார்பில் நடந்த கருத்தரங்கில் மக்களவை மக்களவை தலைவர் சுமித்ரா மகாஜன் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் கூறியதாவது: அனைத்து எம்பிக்களுக்கும்....... மேலும்

23 ஜூன் 2018 15:02:03

சட்டவிரோதப் பரிவர்த்தனை ஜிஎஸ்டிக்குப் பின் உயர்ந்துவிட்டதாக குற்றச்சாட்டு

புதுடில்லி, ஜூன் 23-- ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல்படுத் தப்பட்ட பிறகு, சட்ட விரோத மான பரிவர்த்தனைகளின் எண் ணிக்கை 5 மடங்கு அதிகரித்து விட்டதாகத் தெரியவந்துள்ளது. நாட்டில் நடைபெறும் சட்ட விரோத பணப் பரிவர்த்தனை, வரி ஏய்ப்பு உள்ளிட்ட நட வடிக்கைகளை தடுக் கவே பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி ஆகியவற்றை கொண்டு வந்த தாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார். ஆனால், பண மதிப்பு நீக்கம்,....... மேலும்

23 ஜூன் 2018 15:02:03

காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பு

காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பு

காவிரி ஒழுங்காற்றுக் குழுத் தலைவர், உறுப்பினர்கள் நியமனம் அறிவிப்பை வெளியிட்டது மத்திய அரசு புதுடில்லி, ஜூன் 23 உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி காவிரிநீர் மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றின் தலைவர், உறுப்பினர் களை மத்திய அரசு நியமித்து வெள்ளிக் கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து மத்திய நீர் வளத் துறை இணைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ள தாவது: மேலாண்மை ஆணையம்: காவிரி நீர் மேலாண்மை ஆணை யத்தின் தலைவராக....... மேலும்

23 ஜூன் 2018 13:40:01

என்னை வருத்தப்பட வைத்தது நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளே!

என்னை வருத்தப்பட வைத்தது நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளே!

கூறுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்பிரமணியன் புதுடில்லி, ஜூன் 23 -தனது பதவி விலகலுக்கு தனிப்பட்டயாரும் காரணமல்ல; நாட்டின் பொருளாதார கொள்கைகளே தன்னை வருத்தப்படச் செய்து விட்டது என்று தலைமைப் பொருளாதார ஆலோ சகராக இருந்த அரவிந்த் சுப்பிரமணியன் கூறியுள்ளார். சொந்தக் காரணங்களுக் காகவே பதவியிலிருந்து விலகியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் தலைமைப் பொரு ளாதார ஆலோசகராக இருந்த அரவிந்த் சுப்பிரமணியன், ஜூன் 20-ஆம் தேதி அவருடைய பணியிலிருந்து விலகினார்........ மேலும்

23 ஜூன் 2018 13:40:01

பா.ஜ.க. ஆட்சியில் தொடரும் மதவெறி

பா.ஜ.க. ஆட்சியில் தொடரும் மதவெறி

இசுலாமியரை ஏன் திருமணம் முடித்தாய்? என்று கூறி பாஸ்போர்ட்டை முடக்கிய அதிகாரி டில்லி, ஜூன் 23-  நொய்டாவைச் சேர்ந்த ரன்வீர் சேத் என்ற பெண் 2017-ஆம் ஆண்டு முகமது சிக்கித் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவரது திருமணத்திற்கு இருவீட்டாரும் மனமுவந்து சம்மதம் தெரிவித்து கொண்டனர். இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது, இரு வருமே பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பணிபுரிகின்றனர். இந்த நிலையில் அடிக்கடி வெளிநாடு செல்லவேண்டி இருப்பதால் ரன்வீர்....... மேலும்

23 ஜூன் 2018 13:30:01

ராணுவ அதிகாரி காணாமல் போன வழக்கின் விசாரணை சிபிஅய்க்கு மாற்றம்

சென்னை, ஜூன் 22 இந்திய ராணுவத்தின் உளவுப் பிரிவு அதிகாரி காணாமல் போன வழக்கை சிபிஅய் விசார ணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. இதுதொடர்பாக, காணா மல்போன உளவுப் பிரிவு அதிகாரியின் மனைவி யமுனா ஞானபிரகாசம் உயர் நீதிமன்றத் தில் தாக்கல் செய்த மனு விவரம்: டில்லியில் இந்திய ராணு வத்தின் உளவுப் பிரிவு அதிகாரி யாக எனது கணவர் ஞான பிரகாசம் பணியாற்றினார். நாங்கள் கடந்த....... மேலும்

22 ஜூன் 2018 15:25:03

விஜய் மல்லையாவுக்கு எதிராக மேலும் ஒரு கைது ஆணை

மும்பை, ஜூன் 22 இந்திய அரசுக்கு சொந்தமான வங்கிகள் மற்றும் பல்வேறு தனியார் வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்துள்ள பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக அவருக்கு கைது ஆணைகளும், ஜாமினில் வெளிவர முடியாத கைது ஆணைகளும் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. இந்த கடன் மோசடி தொடர்பாக சி.பி.அய். வழக்குப்....... மேலும்

22 ஜூன் 2018 15:25:03

பா.ஜ.க. ஆட்சியின் லட்சணம் பாரீர்!

பா.ஜ.க. ஆட்சியின் லட்சணம் பாரீர்!

பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போது பா.ஜ.க. தலைவர் அமித்ஷா இயக்குநராக உள்ள வங்கியில் ரூ.745.59 கோடி டெபாசிட் 18.2.2017 அன்று அமிஷத் ஊழல் குறித்து விடுதலை'யில் வெளியான செய்தி புதுடில்லி, ஜூன் 22 கடந்த 2016- ஆம் ஆண்டு நவம்பரில் கொண்டுவரப்பட்ட பணமதிப்பு நீக்கத்தின் போது, பாஜக தலைவர் அமித் ஷா இயக்குநராக இருக்கும் கூட்டுறவு வங்கியில், செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகள் 5 நாட்களில் ரூ. 745.59 கோடி டெபாசிட் செய்யப்பட்ட தாகத்....... மேலும்

22 ஜூன் 2018 15:05:03

பாஜகவின் அதிகார வெறியினால் ஜம்மு - காஷ்மீர் மாநிலமே பலிகடா ஆகியுள்ளது : சிவசேனா விமர்சனம்

பாஜகவின் அதிகார வெறியினால் ஜம்மு - காஷ்மீர் மாநிலமே பலிகடா ஆகியுள்ளது : சிவசேனா விமர்சனம்

மும்பை, ஜூன் 22 நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் தினந்தோறும் தலையெடுத்துக் கொண்டுள்ள நிலை யில், வாரம் ஒருமுறை எந்த முக்கிய காரணமுமின்றி பிரதமர் மோடி அயல் நாடுகளுக்கு சென்றுவிடுகிறார். அதா வது பிரச்சினைகளுக்கு பதிலளிப்பதில் இருந்து தப்பிக்கவே அவரது வெளி நாட்டுப்பயணம் என்று சிவசேனா தனது நாளிதழான 'சாம்னா'வில் கடுமை யாக சாடியுள்ளது. அதே நேரத்தில் காஷ்மீரில் அதிகாரத்தைப் பிடிக்கும் பேராசையில் அந்த மாநிலத்தையே பலிகொடுத்துள்ளது என்றும் கடுமை யாக....... மேலும்

22 ஜூன் 2018 14:38:02

சட்டத்தின் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் மத்திய-மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி வேண்டுகோள்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


புதுச்சேரி,மார்ச்5 மத்திய-மாநில அரசுகள் சட்டத்தின் ஆட்சியை அமல்படுத்தும் வகையில் செயல்பட வேண் டும் என்று சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பேசினார். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் "சட்டஅமலாக்க அலுவலர்கள் மற்றும் நீதி நடவடிக்கைகளில் அரசாங்கத்தின் பங்களிப்பு" என்ற தலைப்பில் இரண்டு நாள் தேசிய கருத்தரங்கு 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. 3 ஆம் தேதி மாலை நடைபெற்ற இதன் இறுதிநாள் நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது: நமது நாட்டின் சட்டத்தை பின்பற்ற வழிகாட்டியாகவும், முன்னோ டியாகவும் இந்த 2 நாள் மாநாடு நடந்துள்ளது. இம்மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்துக் களை மத்திய, மாநில அரசுகள் மற்றும் அனைத்து நீதிமன்றங் களும் பின்பற்றவேண்டும். இந்த முயற்சியை மேற் கொண்ட புதுச்சேரி பல்கலைக் கழகத்திற்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி முதல்வர் நாரா யணசாமி தலைமை தாங்கி பேசியதாவது: புதுச்சேரி யூனியன் பிரதேசம் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிப் பதில் சிறப்பாக செயல்பட்டு வரு கிறது. இதற்காக காவல் துறை தலைவர் டிஜிபி சுனில் குமார் கவுதமை பாராட்டு கிறேன். புதுச்சேரியில் தொடர்ந்து சட்டம்-ஒழுங்கை நிலை நாட்ட தேவையான அனைத்து நடவடிக்கைகளும் அரசால் மேற்கொள்ளப்படும். புதுச்சேரி பல்வேறு துறைகளின் நாட்டில் முன்னோடியாக உள்ளது. புதுச் சேரியில் உள்ள மத்திய பல் கலைக்கழகமும் சிறந்து விளங்கி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் காவல் துறை டி.ஜி.பி, சுனில்குமார் கவுதம், இந்திய அரசு சட்ட ஆணைய உறுப்பினர் நீதிபதி ரவிஆர்.திரிபாதி, புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத்சிங், பதிவாளர் பேராசிரி யர் தரணிக்கரசு, சட்டக்கலை முனைவர் சுபலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner