முன்பு அடுத்து Page:

உச்சநீதிமன்ற தீர்ப்புகளை கடைப்பிடிக்காததே ஜாதி மதக் கலவரங்களுக்கு காரணம்

உச்சநீதிமன்ற தீர்ப்புகளை கடைப்பிடிக்காததே ஜாதி மதக் கலவரங்களுக்கு காரணம்

நீதிபதிகள் மதநம்பிக்கைகளைத் தூக்கிப் பிடிக்கக் கூடாது நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை உயர்த்தி பிடிக்க வேண்டும் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் அழுத்தமான கருத்து புதுடில்லி, டிச.14 நீதிபதிகள் தங்களின் மத நம்பிக்கைகளைத் தூக்கிப் பிடிக்கக் கூடாது என்றும், நீதிமன்ற தீர்ப்புகளை அரசுகள் செயல்படுத்தாததே - ஜாதி மதக் கலவரங்களுக்குக் காரணம் என்றும் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் அழுத்தத்துடன் குறிப் பிட்டு, இந்து நாளிதழுக்கு அவர்....... மேலும்

14 டிசம்பர் 2018 16:25:04

கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருதை வழங்கினார் வெங்கைய நாயுடு

கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருதை வழங்கினார் வெங்கைய நாயுடு

புதுடில்லி, டிச.14 லோக்மால்ட் செய்தி நிறுவனம் சார்பில், ‘நாடாளுமன்ற விருதுகள்’ 2ஆவது ஆண்டாக இந்த ஆண்டும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் மாநிலங்கள் அவையின் 2018-ஆம் ஆண்டின் சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பி னராக கனிமொழி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில்   டில்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருதை வழங்கினார். நாடாளுமன்றத்தில் கனிமொழி கடந்த 10 ஆண்டுகளாக மகத்தான வகையில் பங்காற்றிய தற்காகவும், ஜனநாயகத்தின் மதிப்பீடுகள்,....... மேலும்

14 டிசம்பர் 2018 16:07:04

ரிசர்வ் வங்கியை தங்கள் சொத்தாக மத்தியில் ஆளும் பா.ஜ.க. கருதுகிறது : ப.சிதம்பரம்

ரிசர்வ் வங்கியை தங்கள் சொத்தாக  மத்தியில் ஆளும் பா.ஜ.க. கருதுகிறது :  ப.சிதம்பரம்

புதுடில்லி, டிச.14 இந்திய ரிசர்வ் வங்கியை (ஆர்பிஅய்) தங்களுடைய சொத்தாக மத்தி யில் ஆளும் பாஜக அரசு கருது கிறது என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். டில்லியில் வியாழக்கிழமை ஊடக நிறுவனம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பேசியதாவது: ரூபாய் நோட்டு  திரும்பப் பெற்ற நடவடிக்கைக்கு ஆதர வாக கருத்துத் தெரிவித்த கார ணத்தால் ஆர்பிஅய் ஆளுநர் பதவிக்கு சக்திகாந்த தாசை மத்திய....... மேலும்

14 டிசம்பர் 2018 16:07:04

மோடிக்கு மக்கள் கொடுத்த அடி போதாது பண மதிப்பு நீக்க மரணங்களுக்கு அவர்மீது கொலை வழக்கு தொடர வேண்டும்

பா.ஜ.க.வின் ஆரம்ப கால தலைவரும் முன்னாள் முதல்வருமான சங்கர்சிங் வகேலா காந்திநகர், டிச.14- மக்களவைத் தேர்தலில் பாஜக அடைந்த தோல்வியானது, ‘பிரதமர் மோடிக்கு மக்கள் கொடுத்த பதிலடி’ என்று, பாஜகவின் ஆரம்பகால தலைவர்களில் ஒருவரும், குஜராத் முன்னாள்முதல்வருமான சங்கர் சிங் வகேலா தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: அய்ந்து மாநிலங்களிலும் மோடி தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது, மக்கள் மத்தியில் பேசும்போது,‘வசுந்தரா ராஜே, சிவராஜ் சிங் சவுகான் போன்ற உள்ளூர் தலைவர்களுக்காக வாக்களிக்க....... மேலும்

14 டிசம்பர் 2018 16:07:04

குஜராத் கலவர வழக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, டிச.14  ‘குஜராத் கலவரம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது குறித்து, குழுவின் மற்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டதா...’ என, பதில் அளிக்க குழுவின் தலைவருக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்கு, 2002 - 2006இல், கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அடுத்து கலவரம் நடந்தது. இதுபற்றி, விசாரிக்கக் கோரி, மறைந்த, மூத்த பத்திரிகையாளர், பி.ஜி. வர்கீஸ், இந்தி....... மேலும்

14 டிசம்பர் 2018 15:53:03

காப்பீட்டு தகவல்களை குறுந்தகவல் மூலம் அறிய வசதி

புதுடில்லி, டிச. 14- ஜனவரி 1-ஆம் தேதி முதல் காப்பீட்டு பிரீமி யம் தொகையை செலுத்தியது தொடர்பான தகவல்களை பாலிசிதாரர்களுக்கு குறுந்தக வல் (எஸ்எம்எஸ்) மூலம் காப் பீட்டு நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும் என இந்திய காப்பீடு ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி ஆணையம் (இர்டாய்) வெளியிட்டுள்ள புதிய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலிசிதாரர்களின் பாது காப்பு ....... மேலும்

14 டிசம்பர் 2018 15:52:03

மேகதாது அணை பிரச்சினை

நாடாளுமன்ற இரு அவைகளும் மீண்டும் முடக்கம் புதுடில்லி, டிச. 14 காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத் தில் அணை கட்டும் கருநாடக அரசின் முயற்சிக்கு தமிழகத் தில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்த பிரச்சினையை தமிழக எம்.பி.க்கள் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் எழுப்பி அமளியில் ஈடுபட்ட னர். இதனால் சபை அலுவல் கள் முடங்கின. இது 2ஆவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. மாநிலங்களவை காலை....... மேலும்

14 டிசம்பர் 2018 15:52:03

இந்திய மக்களின் வரிப்பணத்தில் ரூ.2,012 கோடி செலவில் வெளிநாடுகளை சுற்றி வந்த மோடி

டில்லி, டிச.14 கடந்த 2014ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைக்கான பொதுத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட் டணியின் சார்பில் பிரதமராக தேர்வு செய்யப்பட்டவர் மோடி. கடந்த நான்கரை ஆண்டுகளாக அவர் பல நாடுகளை சுற்றி வந்துள்ளார். இந்திய மக்களின் வரிப் பணத்தில் ரூ.2,012 கோடி அவரு டைய பயணத்துக்காக செலவிடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அதில்  நவீன வசதிகளுடன் கூடிய விமான  பயண செலவாக ரூ.1,583 கோடி ஆகியுள்ளது........ மேலும்

14 டிசம்பர் 2018 15:19:03

நாடு முழுவதும் உள்ள முதியோர் இல்லங்கள் விவரங்கள் தகவல் சேகரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

நாடு முழுவதும் உள்ள முதியோர் இல்லங்கள் விவரங்கள் தகவல் சேகரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, டிச.14 நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் எத் தனை முதியோர் இல்லங்கள் உள்ளன என்ற விவரத்தை சேக ரிக்கும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதியோர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் கவலை அளிப்பதாக உள்ளதாகவும், அவர்கள் கவுரவத்துடன் வாழ்வதை உறுதி செய்ய வேண்டும் என் பதை வலியுறுத்தியும் முன்னாள் மத்திய அமைச்சர் அஸ்வனி குமார்....... மேலும்

14 டிசம்பர் 2018 15:19:03

நாடாளுமன்றச் செய்திகள்

நாடாளுமன்றச் செய்திகள்

நான்கரை ஆண்டுகளில் விளம்பரங்களுக்கு மத்திய அரசு ரூ.5,200 கோடி செலவு  அமைச்சர் தகவல் புதுடில்லி, டிச.14 கடந்த நான்கரை ஆண்டுகளில் விளம்பரங்களுக்காக மத்திய அரசு ரூ.5,200 கோடி செலவு செய்துள்ளதாக நாடாளு மன்றத்தில் மத்திய தகவல், ஒளிபரப்புத் துறை இணையமைச்சர் ராஜ்யவர்த்தன் ரத்தோர் கூறியுள்ளார். இதுதொடர்பான கேள்வியொன்றுக்கு மக்க ளவையில் அவர் வியாழக்கிழமை எழுத்துப்....... மேலும்

14 டிசம்பர் 2018 15:19:03

ஆரம்பக் கல்வி முதல் கல்லூரி வரை இலவசக் கல்வி-சித்தராமையா அறிவிப்பு

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


பெங்களூரு, மார்ச் 5 கருநாடக மாநிலம் பெங்க ளூருவில் விசன் - 2025 என்ற நூலை கருநாடக மாநில அரசு வெளியிட்டது. இதில் கலந்து கொண்டு முதல்வர் சித் தராமையா சிறப்புரையாற் றினார்.

அப்போது பேசிய அவர், எதிர்கால திட்டங்களை வகுக்காமல் மாநிலத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல முடியாது. அதற்காகவே தொலைநோக்குப் பார்வை -2025 என்ற புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி, விரைவான வளர்ச்சி மற்றும் நிலையான வளர்ச்சி என்ற நோக்கத்தில் காங்கிரசு அரசு செயல்பட்டு வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, மக்களுக்கு அளித்த 165 வாக்குறுதிகளில் 155 நிறைவேற்றப்பட்டுள்ளன.

அன்ன பாக்யா திட்டத்தின் கீழ் ஏழை குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கப்படுகிறது. இதன்மூலம் 4 கோடி பேர் பயன்பெறுகின்றனர். நாங்கள் ஏற்கெனவே ஆரம்பித்துள்ள பொது சுகாதார காப்பீட்டுத் திட்டம் மூலம், 1.43 லட்சம் குடும்பங்கள் பயன்பெற்றுள்ளனர். பெண் குழந்தைகளுக்கு தொடக்கப்பள்ளி முதல் கல்லூரி வரை இலவசக் கல்வி வழங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. அவர்கள் இனி ஒரு பைசா கூட கல்விக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

கருநாடகாவில் அமைக்கப்பட்டுள்ள 2 ஆயிரம் மெகாவாட் சூரியசக்தி மின்னுற்பத்தித் திட்டம், ஏராளமான பலன்களை அளிக்கப் போகிறது என்று முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

காவலர் வேலைக்கு
மார்ச் 11இல் எழுத்து தேர்வு

சென்னை, மார்ச் 5  இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர, வரும், 11ஆம் தேதி, 232 மய்யங்களில், எழுத்து தேர்வு நடக்க உள்ளது.

தமிழக காவல் துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு, இரண்டாம் நிலை காவலர்கள், 6,140 பேரை தேர்வு செய்ய, தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரியம், 2017 டிசம்பரில் அறிவிப்பு வெளியிட்டது. ஆண்கள், பெண்கள் மற்றும் திருநங்கை என, 3.26 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

அவர்களுக்கு, மார்ச், 11ஆம் தேதி, 32 மாவட்ட தலைநகரங் களில், 232 மய்யங்களில் எழுத்து தேர்வு நடக்க இருப்பதாக, அந்த வாரியம், அறிவித்து உள்ளது.  மேலும், எழுத்து தேர்வில் பங்கேற்க,  என்ற, இணையதளத்தில், விண்ணப்பத்தாரர்கள், தங்களுக்கு தரப்பட்டுள்ள, ரகசிய குறியீட்டு எண்ணை பயன்படுத்தி, ‘ஹால் டிக்கெட்’ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ‘ஹால் டிக்கெட்’ பதிவிறக்கம் செய்ய முடியாத வர் கள், 044 - 40016200 என்ற, உதவி மய்ய தொலைபேசிக்கும், 9789035725 என்ற, மொபைல் போன் மற்றும், This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner