முன்பு அடுத்து Page:

தமிழகம், புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை, டிச.9 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 10ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை வறண்ட காலநிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் சனிக்கிழமை கூறியது: கிழக்கத்தியக் காற்றின் வேகம் மற்றும் திசை மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை மழை அல்லது இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய....... மேலும்

09 டிசம்பர் 2018 17:01:05

பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட விவகாரம்: ஜேத்மலானியின் வழக்கு முடித்துவைப்பாம்!

பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட விவகாரம்: ஜேத்மலானியின் வழக்கு முடித்துவைப்பாம்!

புதுடில்லி, டிச. 9- பிரபல வழக் குரைஞர் ராம் ஜேத்மலானி பாஜகவிலிருந்து நீக்கப்பட்டது தொடர்பாக நிலுவையில் இருந்த வழக்கை டில்லி நீதி மன்றம் வெள்ளிக் கிழமை முடித்து வைத்தது. பாஜக தொடங்கப்பட்ட போது, அதன் துணை தலைவ ராக இருந்தவரான ராம் ஜேத் மலானி, கட்சி விரோத நடவடிக் கைகளில் ஈடுபட்டதாகக் கூறி கடந்த 2013-ஆம் ஆண்டு கட்சியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டார். பாஜகவின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜேத்மலானி டில்லியிலுள்ள....... மேலும்

09 டிசம்பர் 2018 15:55:03

225 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டுள்ளனர்: இந்திய ராணுவம் தகவல்

புதுடில்லி, டிச. 9- அதிக எண்ணிக் கையில் பயங்கரவாதிகள், நமது பாது காப்புப்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். இதுநாள் வரையிலும், 225க்கும் அதிக எண்ணிக்கையில் பயங்கரவாதிகள் நமது வீரர்களால் கொல்லப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகளின் நட மாட்டம் குறித்து, காஷ்மீர் பகுதி மக்களே நமது வீரர்களுக்கு தகவல் கொடுத்து வருகின்றனர். இது நமக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது. இதனால்தான் பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த முடிகிறது. ஜம்மு-காஷ்மீரில் பயங்கர வாதிகளை பாகிஸ்தான் தொடர்ந்து ஊடுருவ செய்து வருகிறது. ஆனால்....... மேலும்

09 டிசம்பர் 2018 15:55:03

முக்கிய பதவி வகித்தவர்கள் மவுனத்தை கலைத்து மத்திய அரசை விமர்சிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது

முக்கிய பதவி வகித்தவர்கள் மவுனத்தை கலைத்து மத்திய அரசை விமர்சிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது

ப.சிதம்பரம் கருத்து புதுடில்லி, டிச.9 முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:- முதலில், முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், பணமதிப்பு நீக்கம், பெரு மளவு அதிர்ச்சி அளித்த முடிவு என்று தனது மவு னத்தை கலைத்து கூறினார். பிறகு, சமீபத்தில் ஓய்வு பெற்ற தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத், பண மதிப்பு நீக்கம், தேர்தல்களில் கருப்பு பண புழக்கத்தை தடுக்க வில்லை....... மேலும்

09 டிசம்பர் 2018 15:55:03

ஒரு கிலோ வெங்காயம் 51 பைசாவுக்கு விற்பனை

ஒரு கிலோ வெங்காயம் 51 பைசாவுக்கு விற்பனை

வேதனையில் பணத்தை முதல்வருக்கு அனுப்பிய விவசாயி நாசிக், டிச.9 மகாராஷ்டிரா வில் வெங்காயம் ஒரு கிலோ வெறும் 51 பைசா வுக்கு விற்ப னையானது. இதனால் வேதனை அடைந்த விவசாயி விற்ற பணத்தை முதல்வருக்கு அனுப்பி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப் படுகிறது. நாட்டின் மொத்த வெங்காய தேவையில் 50 சதவீதம் நாசிக் மாவட்டத்தில் இருந்து மட்டுமே கிடைக் கிறது. இந்நிலையில், வெங் காயம்,....... மேலும்

09 டிசம்பர் 2018 15:55:03

மேகதாது அணைக்கு கருநாடக அதிகாரிகளே எதிர்ப்பு

மேகதாது அணைக்கு கருநாடக அதிகாரிகளே எதிர்ப்பு

6 கிராமங்கள் நீரில் மூழ்கும் என எச்சரிக்கை பெங்களூரு, டிச.9 மேக தாதுவில் தடுப்பணை கட்டுவ தால் 6 கிராமங்கள், 5 ஆயிரம் ஹெக்டேர்  நிலம் மற்றும் யானைகள் சரணாலயம் அழி யும் நிலை ஏற்படும் என கரு நாடக அரசை மாநில உயரதி காரிகள் எச்சரித்துள்ளனர். கருநாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட வரைவுக்கு மத்திய நீர்வளத் துறை அனுமதி அளித்தது. மேலும், திட்ட அறிக்கையை அனுப்பும்படி கருநாடக அர....... மேலும்

09 டிசம்பர் 2018 15:55:03

பாலாறு தடுப்பணை வழக்கு: ஆவணங்களை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, டிச. 8- பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் விவகாரத்தில் தமிழகம், ஆந் திரா ஆகிய இரு மாநிலங்களும் அதுகுறித்த வழக்கு ஆவணங் களை பதிவாளர் அலுவலகத் தில் தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டு உள்ளது. பாலாற்றில் ஏற்கெனவே ஆந்திர அரசு பல இடங்களில் தடுப்பணைகளை கட்டியதால் வெள்ளக் காலங்களில் மட் டுமே ....... மேலும்

08 டிசம்பர் 2018 16:04:04

புலந்த்சாஹர் கொலையாளிக்கு யோகி அரசு பாதுகாப்பு தருகிறது: யெச்சூரி குற்றச்சாட்டு

புதுடில்லி, டிச. 8- உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த் சாஹரில் காவல் துறை அதிகாரியைச் சுட்டுக் கொன்ற கொலையாளிக்கு, யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசாங்கம் பாதுகாப்பு அளித்துக் கொண்டிருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி குற்றம் சாட்டியுள்ளார். பாபர் மசூதி இடிப்பின் 26-ஆவது ஆண்டு தினத்தை யொட்டி (டிச. 6), இடதுசாரிக் கட்சிகள் சார்பில், டில்லி நாடாளுமன்ற வீதியில் திங்க ளன்று நிகழ்ச்சி ஒன்று நடை பெற்றது. அப்போது....... மேலும்

08 டிசம்பர் 2018 16:04:04

இந்தியாவில் காற்று மாசுவினால் மக்கள் உயிரிழப்பு அதிகரிப்பு

இந்தியாவில் காற்று மாசுவினால் மக்கள் உயிரிழப்பு அதிகரிப்பு

புதுடில்லி, டிச. 8- காற்று மாசு வினால் கடுமையாக பாதிக்கப் பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. இங்கு தொடர்ந்து காற்று மாசு அதிக ரித்தபடி இருக்கிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இது சம்பந்தமாக ஒரு ஆய்வு அறிக்கையை வெளி யிட்டுள்ளது. அதில் கூறியிருப் பதாவது:- இந்தியாவில் மரணம் அடைபவர்களில் 8-இல் ஒருவர் காற்று மாசுவினால் பாதிக் கப்பட்டு உயிர் இழக்கிறார்கள். இது, புகை பிடிப்பதால்....... மேலும்

08 டிசம்பர் 2018 16:04:04

10ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்

நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அழைப்பு புதுடில்லி, டிச. 8- நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது பற்றி ஆலோசிக்க, அனைத்து கட்சி கூட்டத்துக்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. நாடா ளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வழக்கமாக நவம்பர் மாதம் தொடங்கும். இந்த ஆண்டு மத்திய பிர தேசம், தெலங்கானா உள்பட 5 மாநில தேர்தலை முன்னிட்டு, கூட்டத்தொடர் தள்ளி வைக்கப் பட்டது. இந்நிலையில், குளிர் கால கூட்டத்தொடர் வரும் 11ஆம்....... மேலும்

08 டிசம்பர் 2018 15:42:03

நாடாளுமன்றத்தில் பெரியாரின் குரல்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாடாளுமன்றத்தில் பெரியாரின் குரல்

பெரியார் சிலை உடைப்பு உள்ளிட்ட பிரச்சினைகளால் நாடாளுமன்றம் முடங்கியது

புதுடில்லி, மார்ச் 8 பெரியார் சிலை உடைப்பு உள்ளிட்ட பிரச்சினைகளால் நாடாளுமன்றம் முடங்கியது. பெரியார் படம் ஒட்டப்பட்ட அட்டையை கையில் ஏந்தி மக்களவையின் மய்ய மண்டபத்துக்கு வந்து அ.தி.மு.க., ஆம் ஆத்மி கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனர்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 29 ஆம் தேதி தொடங்கி கடந்த மாதம் 9 ஆம் தேதி வரை நடந்தது. இதையடுத்து 2 ஆவது கட்ட அமர்வு 5 ஆம் தேதி தொடங்கியது. காங்கிரசு, அ.தி.மு.க., தி.மு.க. உள்பட பல்வேறு கட்சி எம்.பி.க்களின் அமளியில் இரு அவைகளும் கடந்த 2 நாள்களாக நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் 3 ஆவது நாளாக நேற்று மக்களவை கூடியது. காங்கிரசு, திரிணாமுல் காங்கிரசு கட்சி எம்.பி.க்கள் வழக்கம் போல் எழுந்து வங்கி மோசடிக்கு பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்திஅமளியில்ஈடுபட்டனர்.இதே போல் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவேண்டும் என தெலுங்குதேசம் கட்சியினரும், தெலங்கானாவில் இடஒதுக் கீட்டை அதிகரிக்கவேண்டும் என்று தெலங்கானாராஷ்டிரசமிதியினரும்வலி யுறுத்தினர். காவிரி மேலாண்மை வாரி யம் அமைக்க கடந்த 2 நாள்களாக வலி யுறுத்தி வந்த அ.தி.மு.க. எம்.பி.க்கள் வேலூர் மாவட்டத்தில் பெரியார் சிலை உடைப்புக்கு கண்டனம் தெரிவித்தனர்.

பெரியார் படம் ஒட்டப்பட்ட அட் டையை கையில் ஏந்தி மக்களவையின் மய்ய மண்டபத்துக்கு வந்து அ.தி.மு.க., ஆம் ஆத்மி கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனர். தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா மொழிகளுக்கு வழங்கப்பட்டது போல் மராத்தி மொழிக்கும் பாரம்பரிய அந்தஸ்து வழங்க கோரி சிவசேனா கட்சியினரும் அமளி செய்தனர். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக ராஜ்நாத் சிங் உறுதி அளித்தார். எனினும் பல்வேறு கட்சியினரும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவையை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.

மாநிலங்களவையிலும் இதே பிரச்சினை எதிரொலித்தது. வங்கி மோசடி தொடர்பாக காங்கிரசு, திரிணாமுல் காங்கிரசு கட்சி யினர் முழக்கமிட்டனர். தெலுங்கு தேசம், தெலங்கானா ராஷ்டிர சமிதி எம்.பி.க்களும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அமளி யில் ஈடுபட்டனர்.

பெரியார் சிலை உடைப்பு விவகாரத்தை கையில் எடுத்து அ.தி.மு.க., தி.மு.க. எம்.பி.க்கள் முழக்கமிட்டனர். இதேபோல் தமிழகத்தில் பெரியார் சிலை உடைப்பு, திரிபுராவில் லெனின் சிலை அகற்றம் ஆகியவற்றை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சிகள் அமளி செய்தனர்.

அப்போது குறுக்கிட்ட மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு, சிலை உடைப்பு சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்தார். இது முட்டாள்தனமான நடவடிக்கை என்று கருத்து தெரிவித்தார். எனினும்கட்சிகளின்அமளியால்மாநிலங் களவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப் பட்டது. இதையடுத்து இரு அவைகளும் நேற்றும் முடங்கியது.

முன்னதாக காலையில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் பெரியார் படத்தை கையில் ஏந்தி முழக்கமிட்டவாறே நாடாளுமன்றத்துக்கு வந்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner