முன்பு அடுத்து Page:

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

சென்னை, பிப்.18 பெட்ரோல் நேற் றைய விலையில் இருந்து விலை 16 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 14 காசுகள் அதி கரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எண்ணெய் நிறுவனங்கள் மூலம் எரிபொருள் விலையை தினந்தோறும் மாற்றியமைக்கும் நடைமுறை கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் 17 முதல் கொண்டு வரப்பட்டது. அதைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் அதன் விலை முன்னெப்போதும் இல்லாத....... மேலும்

18 பிப்ரவரி 2019 16:51:04

விமானப்படை வரலாற்றில் முதல் முறையாக பொறியாளராக பெண் அதிகாரி நியமனம்

விமானப்படை வரலாற்றில் முதல் முறையாக  பொறியாளராக பெண் அதிகாரி நியமனம்

பெங்களூரு, பிப்.18 இந்திய விமானப்படை வர லாற்றில் முதல் முறையாக, கினா ஜெய்ஸ்வால் என்ற பெண், விமான பொறியாள ராக நியமிக்கப்பட்டுள்ளார். சமீப காலமாக, பெண் களுக்கு அனைத்து துறைகளி லும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு வரை, இந்திய விமானப்படையில் விமான பொறி யாளர் பணிக்கு, ஆண்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த பணிக்கு, முதல் முறையாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக, ராணுவ அமைச் சகம்....... மேலும்

18 பிப்ரவரி 2019 16:39:04

புதுச்சேரி துணைநிலைஆளுநரை மத்திய அரசு உடனடியாக திரும்பபெற வேண்டும் - திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டால…

புதுச்சேரி துணைநிலைஆளுநரை  மத்திய அரசு உடனடியாக திரும்பபெற வேண்டும்  - திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் பேட்டி

புதுச்சேரி, பிப். 18- புதுச்சேரியில் முதலமைச்சரின் செயல்பாடு களுக்கு இடையூறாக இருக்கும் துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டம் நடத்தி வரும், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அவர்களை, நேற்று (17.2.-2019) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலை வரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். பின்னர், செய்தியாளர்களி டத்தில் பேசிய விவரம் பின் வருமாறு: கடந்த 13ஆம் தேதியில் இருந்து இன்றுவரை....... மேலும்

18 பிப்ரவரி 2019 16:11:04

ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கு உச்சநீதிமன்றம் தடை!

புதுடில்லி,பிப். 18 தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய பேரணியில் காவல்துறையினா நடத்திய துப்பாக்கிச் சூட்டின் போது 13 பேர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடாந்து ஸ்டொலைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக ஆலை தரப்பில் தேசிய பசுமை தீப்பாயத்தில் முறையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆலையை ஆய்வு செய்ய குழு....... மேலும்

18 பிப்ரவரி 2019 15:56:03

புதுவைத் தமிழ் சங்கப் பொன்விழா தமிழ் மாநாடு - 2019

புதுவைத் தமிழ் சங்கப் பொன்விழா தமிழ் மாநாடு - 2019

புதுவைத் தமிழ் சங்கப் பொன் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழர் தலைவர் அவர்களுக்கு தமிழ் சங்கத் தலைவர் முனைவர் வி.முத்து நினைவு பரிசு வழங்கினார். (புதுச்சேரி & 16.2.2019) புதுவைத் தமிழ் சங்கப் பொன் விழாவில் "தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?" என்ற நூலினை தமிழ்ச் சங்கத் தலைவர் முத்து வெளியிட வழக்குரைஞர் சி.பி. திருநாவுக்கரசு பெற்றுக் கொண்டார். மேடையில் சுமார் 70க்கு மேற்பட்டோர் நூல்களை பெற்றுக் கொண்டனர்.  மேலும்,....... மேலும்

17 பிப்ரவரி 2019 14:52:02

அரசுக்கும் வீரர்களுக்கும் முழு ஆதரவாக இருப்போம்- ராகுல் காந்தி உறுதி

புதுடில்லி, பிப்.17 புல்வாமா தாக்குதல் குறித்துப் பேசிய  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, எந்த சக்தியாலும் தேசத்தைப் பிரிக்க முடியாது எனவும் அரசுக்கும் வீரர்களுக்கும் முழு ஆதரவாக இருப்போம் என்றும் தெரிவித்துள்ளார். டில்லியில் செய்தியாளர் களிடம் பேசிய ராகுல் காந்தி, ‘’இந்திய அரசுக்கும் ராணுவ வீரர் களுக்கும் நானும் எனது காங்கிரசு கட்சியும் உறுதுணையாக இருப் போம். அடுத்த இரண்டு நாட் களுக்கு மற்ற எந்தப் பேச்சுவார்த் தையும் இல்லை. இது வருத்தத்துக்கான,....... மேலும்

17 பிப்ரவரி 2019 14:50:02

தொலைக்காட்சி, வானொலி, இணையதளத்தில் அரசு விளம்பரங்கள் அய்ந்தாண்டுகளில் ரூ.2,374 கோடி செலவு: மத்திய …

புதுடில்லி, பிப்.17 தொலைக் காட்சி, வானொலி, இணைய தளத்தில் அரசு விளம்பரங்களை வெளியிடுவதற்காக கடந்த அய்ந்து ஆண்டுகளில் ரூ.2,374 கோடி ரூபாய் செலவிடப்பட் டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், விளம்பரப் பலகை களுக்காக ரூ.670 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறியும் உரிமைச் சட்டத்தின்கீழ்  கேட்கப் பட்ட கேள்விகளுக்கு பதிலளித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: தொலைக்காட்சி, வானொலி, இணையதளம் போன்ற மின் னணு....... மேலும்

17 பிப்ரவரி 2019 14:48:02

ஆதார்-பான் இணைப்புக்கு மார்ச் 31 கடைசி தேதி

ஆதார்-பான் இணைப்புக்கு மார்ச் 31 கடைசி தேதி

புதுடில்லி, பிப்.17 வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் தங்களது பான் எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டியது கட்டாயம் என்று வலியுறுத்தியுள்ள மத்திய நேரடி வரிகள் ஆணையம் (சிபிடிடி), வரும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் ளாக அதை நிறைவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. ஆதார்- - பான் இணைப்பை மேற்கொள்ளாமலேயே 2018- - 2019 காலகட்டத்துக்கான வரு மான வரிக் கணக்கை தாக்கல் செய்ய இரு நபர்களுக்கு தில்லி....... மேலும்

17 பிப்ரவரி 2019 14:20:02

பாகிஸ்தான் பொருள்களுக்கான இறக்குமதி வரி 200 சதவிகிதமாக உயர்வு

புதுடில்லி, பிப்.17  புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் எதி ரொலியாக, பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு இறக் குமதி செய்யப்படும் அனைத்துப் பொருள்களுக்கும் இறக்குமதி வரியை 200 சதவீதமாக இந்திய அரசு உயர்த்தியுள்ளது. இந்திய அரசின் இந்த முடிவால், பாகிஸ்தானுக்கு ரூ.3,482.3 கோடி அளவுக்கு வர்த் தகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து....... மேலும்

17 பிப்ரவரி 2019 14:19:02

கன்னடர்களுக்கு தனியார் நிறுவன வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு கருநாடக அமைச்சரவை முடிவு

பெங்களூரு, பிப்.16 தனியார் நிறுவன வேலை வாய்ப்புகளில் கன்னடர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க கருநாடக அமைச் சரவை முடிவு செய்துள்ளது. கருநாடக அமைச்சரவை கூட்டம் முதல்- அமைச்சர் குமாரசாமி தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நடை பெற்றது. இதில் அமைச்சர்கள், அதி காரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து பஞ்சாயத்து ராஜ் மற்றும் கிராம வளர்ச்சித் துறை அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா நிருபர்களிடம் கூறியதாவது:- சரோஜினி மகிசி அறிக்கையின்படி....... மேலும்

16 பிப்ரவரி 2019 16:14:04

வழிபாட்டுதலத்தில் குண்டுவைத்த குற்றவாளியை மாலை அணிவித்து வரவேற்ற பாஜக!

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பாரூச், செப். 7 -ஆஜ்மீர் தர்ஹாவில் குண்டுவெடிப்பு நடத்தி 3 பேரை படுகொலை செய்த குற்றவாளியை- மாலை, மரியாதை, வாணவேடிக்கைகளுடன் பாஜகவினர் வரவேற்றது, அருவருப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2007-ஆம் ஆண்டு ஆஜ்மீர் தர்கா-வில், சங்-பரி வாரத்தைச் சேர்ந்த இந்துத்துவ பயங்கரவாதிகள் குண்டு வைத்தனர். இந்தகுண்டுவெடித்து 3 பேர் பலியானதுடன், 15 பேர் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த ராஜஸ்தான் உயர் நீதிமன்றம், கடந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாவேஷ் படேல், தேவேந்திர குப்தா ஆகிய 2 பேருக்கும்ஆயுள் தண்டனை வழங்கியது.ஓராண்டு கடந்த நிலையில்,தற்போது இவர்கள் இருவரும் பிணையில் வெளியே விடப்பட்டுள்ளனர். இவர்களில் பாவேஷ் படேல் குஜராத் மாநிலம் பாரூச் நகரைச் சேர்ந்தவர் என்ற நிலையில், அவருக்கு பாஜக, விசுவ இந்து பரிசத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆயிரக் கணக்கில் திரண்டு வரவேற்பு அளித்துள்ளனர்.பாவேஷ் படேல், பாரூச் ரயில் நிலையத்தில் வந்திறங்கியதும் அவரை தோளில் தூக்கிச் சுமந் தும், மாலை, மரியாதைகள் செய்தும் வாண வேடிக்கை, நடன நிகழ்ச்சிகளுடன் ஊர்வ லமாக அழைத்துச் சென்றுள்ளனர். காவிக் கொடியை கையில் ஏந்தியபடி வெறிக் கூச்சலிட்டுள்ளனர். இன்னொரு மதத்தைச் சேர்ந்தவர்களின் வழிபாட்டுத் தலத்தில் குண்டு வைத்து, 3 பேரின் உயிரைப்பறித்த, ஒரு கொலைக் குற்றவாளிக்கு பாஜக-வினர் அளித்த இந்த வர வேற்பு பாரூச் நகர மக்களை அருவருப்புக்கு உள்ளாக்கி யுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner