முன்பு அடுத்து Page:

கன்னடர்களுக்கு தனியார் நிறுவன வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு கருநாடக அமைச்சரவை முடிவு

பெங்களூரு, பிப்.16 தனியார் நிறுவன வேலை வாய்ப்புகளில் கன்னடர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க கருநாடக அமைச் சரவை முடிவு செய்துள்ளது. கருநாடக அமைச்சரவை கூட்டம் முதல்- அமைச்சர் குமாரசாமி தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நடை பெற்றது. இதில் அமைச்சர்கள், அதி காரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து பஞ்சாயத்து ராஜ் மற்றும் கிராம வளர்ச்சித் துறை அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா நிருபர்களிடம் கூறியதாவது:- சரோஜினி மகிசி அறிக்கையின்படி....... மேலும்

16 பிப்ரவரி 2019 16:14:04

நிறுவனம் திவாலாகி விட்டதாக கூறிய அனில் அம்பானிக்கு ரபேலுக்கு மட்டும் முதலீடு செய்ய பணம் இருக்கிறதா?…

புதுடில்லி, பிப். 16 -இந்தி யாவின் பிரபல தொழிலதி பரும், பிரதமர் மோடியின் நண்பருமான அனில் அம் பானியின் ‘ஆர்காம்’ என்னும் ‘ரிலையன்ஸ் கம்யூனிகே ஷன்ஸ்’ நிறுவனமானது, தொலைத் தொடர்பு சேவையில் ‘எரிக்சன்’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது. இந்த வகையில், எரிக்சன் நிறுவனத்திற்கு, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ரூ. 1,600 கோடி பணம் தர வேண்டி யுள்ளது. இதில், முதற்கட்ட மாக ரூ. 550 கோடியை, 2018 டிசம்பருக்குள் தருமாறு உச்ச நீதிமன்றம்....... மேலும்

16 பிப்ரவரி 2019 16:14:04

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர சந்திரபாபுநாயுடு மு…

அமராவதி, பிப்.16 மின் னணு வாக்கு இயந்திரங்களில் முறைகேடு நடைபெற வாய்ப் புள்ளதால், இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். அமராவதியிலிருந்து நேற்று முன்தினம் டெலிகான்பரன்ஸ் மூலம் ஆந்திர மாநில கட்சி நிர்வாகிகளுடன் சந்திரபாபு நாயுடு உரையாற்றினார். அவர் பேசியதாவது: பல்வேறு கட்சிகளின் கருத் தின்படி, மின்னணு வாக்கு இயந்திரங்களில் இம்முறை முறைகேடு நடக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே, இதுதொடர்பாக உச்ச நீதி....... மேலும்

16 பிப்ரவரி 2019 16:10:04

குருமூர்த்தியை ரிசர்வ் வங்கி இயக்குநராக நியமித்த ரகசியம் என்ன?

குருமூர்த்தியை ரிசர்வ் வங்கி இயக்குநராக நியமித்த ரகசியம் என்ன?

விளாசுகிறார் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் கவுடா புதுடில்லி, பிப்.16 மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ரிசர்வ் வங்கி நிர்வாக இயக்குநர் பதவிக்கு குருமூர்த்தியை நியமித்தது தொடர்பாக பொய்யான தகவல் கூறுகிறார் என்று குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் கவுடா இது தொடர்பாக அருண் ஜெட்லி தனது பதவிக்கே களங்கம் ஏற்படுத்திவிட்டதாகக் கூறினார். துக்ளக் இதழ் ஆசிரியரும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தீவிர செயல் பாட்டாளரும், பாஜகவின் அரசியல் ஆலோசகராகவும்....... மேலும்

16 பிப்ரவரி 2019 15:47:03

கல்வித் துறைக்கென்று வசூலிக்கப்பட்ட வரி ரூ.1 லட்சம் கோடியை மாணவர்களுக்கு செலவிடாமல் ஏமாற்றிய மோடி அர…

புதுடில்லி, பிப்.16 2018&20-19ஆம் நிதியாண்டுக்கான மத்தியஅரசின் வரவு - செலவுகள் குறித்த, தணிக்கை அறிக்கையை, மத்திய தலைமைக் கணக்கு தணிக்கை அதிகாரி தற்போது வெளியிட்டுள்ளார். இந்நிலையில், அதில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் இருப்பது தெரியவந்துள்ளது.மோடி அரசு, தனது நிர்வாக செலவுகளுக்காக, ரூ. 99 ஆயிரத்து 610 கோடியை ஊதாரித்தனமாக செலவிட்டுள்ளது ஒருபுறம் என்றால், மற்றொரு புறம் 18 வகையான திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை....... மேலும்

16 பிப்ரவரி 2019 15:08:03

தலைநகர் டில்லியின் நிர்வாகத்தில் யாருக்கு அதிகாரம் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!

தலைநகர் டில்லியின் நிர்வாகத்தில் யாருக்கு அதிகாரம் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!

புதுடில்லி, பிப்.16 'தலை நகர் டில்லியின் நிர்வாகத்தில், யாருக்கு அதிகாரம் உள்ளது' என்பது தொடர்பான வழக்கில், அதிகாரிகள் நியமனம், பணி யிட மாற்றம் போன்றவற்றில், உச்ச நீதிமன்றத்தின் இரு நீதி பதிகள் மாறுபட்ட தீர்ப்பு அளித்துள்ளனர். டில்லியில் கடந்த, 2014இல், ஆம் ஆத்மி கட்சி அரசு அமைந் ததில் இருந்து, பல விஷயங் களில், அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. ஏற்கனவே இருந்த ஆளுநர், நஜீப்....... மேலும்

16 பிப்ரவரி 2019 13:50:01

ஜார்க்கண்டில் அதானியின் மின்னுற்பத்தி நிலையத்திற்காக விளை நிலம் பறிப்பு

ஆதிவாசி மக்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ராஞ்சி, பிப். 15 -அதானியின் தனியார் மின்னுற்பத்தி நிலையத்திற்கு, விவசாய நிலங்கள் ஆர்ஜிதம் செய்யப் படுவதை எதிர்த்து, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஆதிவாசி கிராம மக்கள், அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். பாஜக ஆட்சி நடக்கும் ஜார்க்கண்ட் மாநிலத்தில், பிரதமர் மோடியின் நண்பரான அதானி மின்னுற்பத்தி நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளார். அதாவது, ஜார்க்கண்ட் டில் மின்சாரத்தை உற்பத்தி செய்து, அதனைபக்கத்தில் உள்ள வங்கதேச நாட்டிற்கு....... மேலும்

15 பிப்ரவரி 2019 16:18:04

காஷ்மீரில் தற்கொலைத் தாக்குதல்: 43 வீரர்கள் பலி!

காஷ்மீரில் தற்கொலைத் தாக்குதல்: 43 வீரர்கள் பலி!

புதுடில்லி, பிப்.15 ஜம்மு-காசுமீர் மாநிலத்தில் மத்திய ரிசர்வ் காவல் படையினர் (சிஆர்பிஎஃப்) சென்று கொண்டிருந்த பேருந்து மீது, சக்திவாய்ந்த வெடிபொருள் நிரப்பிய காரை பயங்கரவாதி மோதி வெடிக்க செய்ததில் 43 வீரர்கள் பலியாகினர். வியாழக்கிழமை நிகழ்த்தப்பட்ட இந்தத் தற்கொலைத் தாக்குதலுக்கு ஜெய்சுஏ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப் பேற்றுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டில் உரியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு நடத் தப்பட்டுள்ள மிக மோசமான பயங்கரவாத தாக்குதல் இதுதான் என்று பாதுகாப்புத் துறை....... மேலும்

15 பிப்ரவரி 2019 16:17:04

ஆந்திர விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 உதவித் தொகை

அய்தராபாத், பிப்.14 ஆந்திர விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 உதவித் தொகை அளிக்கும் திட்டத்தை அந்த மாநில அரசு புதன்கிழமை தொடங்கியுள்ளது. மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து, ஆந்திர சட்டப் பேரவைக் கும் தேர்தல் நடத்தப்படவுள்ளது. இத்தேர்தல்களுக்கான தேதி விரை வில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இத்திட்டத்தை ஆந்திரத்தை ஆளும் தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான அரசு தொடங்கி வைத் துள்ளது. இந்தத் திட்டத்துக்கு அன்னதத்தா சுகிபவா என்று பெயரிடப்பட்டுள் ளது. இத்திட்டத்தின்கீழ், குத்தகை....... மேலும்

14 பிப்ரவரி 2019 16:32:04

புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடியைக் கண்டித்து ஆளுநர் மாளிகை வாயிலில் முதல்வர் நாராயணசாமி தலைமையி…

புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடியைக் கண்டித்து  ஆளுநர் மாளிகை வாயிலில்  முதல்வர் நாராயணசாமி தலைமையில் போராட்டம்

புதுவை, பிப்.14 புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடியைக் கண்டித்து, ஆளுநர் மாளிகை வாயி லில் முதல்வர்கள் வே.நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள்,  சட்ட மன்ற உறுப்பினர்கள் புதன்கிழமை தர்ணாவில் ஈடுபட்டனர். கட்டாய தலைக்கவச சட்டத்தை அமல்படுத்த ஆளுநர் கிரண் பேடி,  காவல்துறைத் தலைவர் சுந்தரி நந்தாவிடம் உத்தரவிட்டார். தனது கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறையில் ஆளுநர் கிரண் பேடி தலையிட்டதாலும், தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனங் களை ஓட்டியதாக,....... மேலும்

14 பிப்ரவரி 2019 16:16:04

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு மத்திய பாஜக அரசைக் கண்டித்து

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

செப். 10 முழு அடைப்புக்கு காங்கிரசு அழைப்பு

சென்னை, செப். 7-- பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு உருளை விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் லிட்ட ருக்கு ரூ. 50 ஆக விற்பனை செய்யப்படும் எனபாஜக வாக் குறுதி அளித்தது. ஆனால் தற் போது விலை உயர்வுக்கு வேறு காரணங்களைக் கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர். கார்ப்பரேட் நிறுவனங்க ளுக்கு ஆதரவாக செயல்பட்டு மத்திய அரசு, மக்கள் விரோ தப்போக்கையே கடைப்பிடித்து வருகின்றது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போது, இந்தியாவில் குறைக்காமல், அதன் பயனை மக்களுக்குத் தராமல் வரியை உயர்த்தியது.இதன் மூலம் மத்திய அரசு ஏற்கெனவே பல லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது. இப்போது, பெட்ரோலியப் பொருள்களின் விலை உச்சத் தில் உள்ளது. சர்வதேச காரணி களால் விலை உயர்ந்து விட்ட தாக மத்திய அரசு கூறி மக்கள் மீது பெரும் சுமையை ஏற்றி வருகிறது. இந்த கடும் விலை உயர்வால் சாமானிய மக்கள், நடுத்தரப் பிரிவினர், விவசாயிகள், சிறு வணிகர்கள், போக் குவரத்து தொழிலை சார்ந்து இருப்பவர்கள் என நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிப்பை ஜிஎஸ்டி வரி வரம்பில் கொண்டு வர வேண்டும் என்று எதிர்க்கட்சி கள் வலியுறுத்துகின்றன. ஆனால் இதற்கு பாஜக அரசு செவி மடுக்கவில்லை.

இந்த நிலையில், சென்னை யில் வியாழனன்று பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு நேற் றைய விலையை விட 21 காசு கள் உயர்ந்து ரூ.82.62 காசுகளா கவும், டீசல் விலை லிட்டர் ஒன்றிற்கு 22 காசுகள் உயர்ந்து ரூ.75.61 காசுகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு மக்கள் தலை யில் இடியை இறக்கி, அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. டீசல் மீதான கலால் வரி 2014-ஆம் ஆண்டில் ஒரு லிட்டருக்கு ரூ.3 .46 ஆகஇருந்தது. இப்போது, ரூ.15.33 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. பாஜக ஆட்சியில் மத் திய கலால் வரி 12 முறை அதி கரிக்கப்பட்டுள்ளது. இவை தான் தற்போதைய பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு முக் கியக் காரணம் என கூறப்படு கிறது.

ஆனால், சர்வதேச அளவில் நிலவும்சில பிரச்சினைகளின் காரணமாகவே எரிபொருள்க ளின் விலை உயர்ந்திருப்பதாக வும், விலை உயர்வு தற்காலி கமான ஒன்றுதான் என்று கூறி மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமாளிக்கிறார்.

பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றுகூறிய மத்திய பாஜக அரசை கண்டித் தும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித் தும் செப்டம்பர் 10 ஆம் தேதி யன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்கிரசு கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner