இலங்கை அதிபர் பதவிக்கு முன்கூட்டியே தேர்தல் இல்லை

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கொழும்பு, செப்.10 இலங்கை அதிபர் பதவிக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தும் திட்டமில்லை என்று அதிபர் மைத்ரிபால சிறீசேனா தெரிவித்தார்.

இலங்கை அதிபர் பதவிக்கு 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம், 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கு இடைப் பட்ட காலத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இந்நிலையில், அதிபர் பதவிக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்துவது குறித்து சிறீசேனா ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகி வந்தன.

இதுகுறித்து நிவித்கலாவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், “திட்டமிடப்பட்டதற்கு ஒரு நாள் கூட முன்னதாக, அதிபர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட மாட்டாது’ என்றார். அதிபர் பதவிக்கு 2015ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ராஜபக்சேவை தோற்கடித்து சிறீசேனா வெற்றி பெற்றார்.

இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியான அய்க்கிய தேசிய கட்சியுடன் சேர்ந்து அரசமைத்தார். நிகழாண்டு தொடக்கத்தில் அய்க்கிய தேசிய கட்சியின் தலைவரும், பிரதமருமான விக்ரமசிங்கேவை பதவி விலகும்படி சிறீசேனா கேட்டுக் கொண்டார்.

அத்துடன், நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட விக்ரமசிங்கேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் ஆதரித்தார். எனினும், அந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை விக்ரமசிங்க தோற்கடித்தார்.