முன்பு அடுத்து Page:

வினாத்தாளில் வகுப்புவாத கேள்விகளா?

டில்லி அரசு விசாரணைக்கு உத்தரவு டில்லி, டிச. 12- குரு கோவிந்த் சிங் இந்திரப்பிரஸ்தா பல் கலைக்கழகத்தின் சட்டக்கல் லூரி மாணவர்களுக்கான தேர் வில் மூன்றாம் பருவத்துக்கான வினாத்தாளில் ஒரு கேள்வி இடம் பெற்றுள்ளது. ஒரு முசு லீம் மற்ற இந்துக்கள் முன்னி லையில் பசுவைக் கொன்றால் அது குற்றமாகுமா? என்று கேள்வி வினாத்தாளில் இடம் பெற்றுள்ளது. சட்டக்கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கான மூன்றாம் பருவத் தேர்வு குற்றவியல்....... மேலும்

12 டிசம்பர் 2018 15:40:03

5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் தலைவர்கள் கருத்து

5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் தலைவர்கள் கருத்து

சந்திரபாபு நாயுடு ஆந்திர பிரதேச முதல்வர் சந்திர பாபு நாயுடு பேசுகையில், பா.ஜனதா 5 ஆண்டுகளாக மக்களுக்காக எதையும் செய்ய வில்லை என்பதை மக்கள் உறுதியளித்துள்ளனர். எனவே மாற்றத்தை நோக்கியுள்ளனர்.  பா.ஜனதாவிற்கு எதிரான போராட்டத்தில் மக்கள் எங்களுடன் உள்ளனர். பா.ஜனதா விற்கு எதிரான வலுவான கூட்டணியை அமைக்க அய்ந்து மாநில தேர்தல் முடிவுகள் வழிவகை செய்யும், என்று கூறியுள்ளார். மம்தா மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி: தற்போதைய....... மேலும்

12 டிசம்பர் 2018 15:24:03

மேகதாது அணை: மத்தியஅரசுக்கு கடும் எதிர்ப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் அமளியால் மக்களவை - மாநிலங்களவை ஒத்திவைப்பு டில்லி, டிச.12 நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று (11.12.2018) தொடங்கியது. முதல் நாளான நேற்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் மறைவுற்ற தற்போதைய உறுப்பினர்கள், மேனாள் உறுப்பினர் களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த கூட்டத் தொடரில் ரிசர்வ் வங்கி விவகாரம், அயோத்தி ராமர் கோவில் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை....... மேலும்

12 டிசம்பர் 2018 15:24:03

பா.ஜ.க. அரசின் பல்வேறு முடிவுகளால்

பா.ஜ.க. அரசின் பல்வேறு முடிவுகளால்

தாங்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பதை மக்கள் உணர்த்தி விட்டனர் - ராகுல் புதுடில்லி, டிச.12  மத்திய பாஜக ஆட்சியில், தாங்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பதை பிரதமர் மோடிக்கு மக்கள் உணர்த்திவிட்டனர்; மாற்றத்துக்கு மக்கள் தயாராகிவிட்டனர். அடுத்த மக்களவைத் தேர்தலிலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சிறப்பாக செயல்பட்டமைக்காக காங்கிரஸ் கட்சியினருக்கு....... மேலும்

12 டிசம்பர் 2018 15:24:03

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியமைக்க பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு- மாயாவதி அறிவிப்பு

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியமைக்க பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு- மாயாவதி அறிவிப்பு

இந்தூர், டிச. 12- மத்திய பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 இடங் களில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக உள்ளது. பாஜக 109 இடங்களிலும், சமாஜ்வாடி கட்சி 1 இடத்தி லும், பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளன. சுயேட்சைகள் 4 தொகுதிகளில் வென்றுள்ளனர். மத்திய பிரதேசத்தில் ஆட் சியமைக்க 116 உறுப்பினர்களின் ஆதரவு....... மேலும்

12 டிசம்பர் 2018 15:23:03

3 பொதுத்துறை வங்கிகளை இணைக்க எதிர்ப்பு: 21ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம்

கொல்கத்தா, டிச. 12- அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் பொதுச்செய லாளர் சவுமியா தத்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப் பட்டு உள்ளதாவது:- பொதுத்துறை வங்கிகளான பேங்க் ஆப் பரோடா, விஜயா பேங்க் மற்றும் தேனா பேங்க் ஆகியவற்றை இணைக்கும் திட்டத்தை கைவிடவேண்டும். மண்டல கிராம வங்கிகளை ஒன்றாக இணைக்கக்கூடாது. இவ்வாறு இணைத்தால் அந்த வங்கிகளின் நூற்றுக்கணக்கான....... மேலும்

12 டிசம்பர் 2018 15:23:03

புதுச்சேரி மாநில முதல்வரின் தாயார் இறுதி நிகழ்வில் கழகத்தின் சார்பில் மரியாதை

புதுச்சேரி, டிச. 11 புதுச்சேரி மாநில முதலமைச்சர் மாண்பு மிகு வே.நாராயணசாமி அவர் களின் தாயார் ஈஸ்வரி அம்மாள் அவர்கள் 23.11.2018 அன்று வயது முதிர்வின் காரணமாக இயற்கை எய்தினார். அவர்களின் மறைவு கேட்டு புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர் சிவ.வீரமணி அவர்கள் தலைமை யில், புதுச்சேரி மண்டல கழக தலைவர் இர.இராசு, செய லாளர் கி.அறிவழகன், அரி யாங்குப்பம் கொம்யூன் கழக தலைவர் இரா.ஆதிநாராயணன் ஆகியோர் முன்னிலையில் ஈஸ்வரி....... மேலும்

11 டிசம்பர் 2018 16:54:04

கேரளம்: கண்ணூரில் சர்வதேச விமான நிலையம் திறப்பு

   கேரளம்: கண்ணூரில் சர்வதேச விமான நிலையம் திறப்பு

கண்ணூர், டிச.11 கேரள மாநிலம், கண்ணூரில் புதிதாக கட்டமைக்கப்பட்ட சர்வதேச விமான நிலையம் ஞாயிற்றுக் கிழமை திறக்கப்பட்டது. கேரளத்தின் 4-ஆவது சர்வதேச விமான நிலையம் இதுவாகும். இதன் மூலம் 4 சர்வதேச விமான நிலையங்கள் கொண்ட ஒரே மாநிலம் என்ற பெருமையை கேரளம் அடைந்துள்ளது. ஏற்கெனவே திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு ஆகிய இடங்களில் சர்வ தேச விமான நிலையங்கள் உள்ள நிலை யில், கண்ணூரில் புதிதாக கட்ட மைக்கப்பட்ட விமான நிலையத்தை,....... மேலும்

11 டிசம்பர் 2018 16:54:04

பா.ஜ.க.வுக்கு எதிராக மெகா கூட்டணி சோனியா, ராகுல் தலைமையில் திமுக உள்ளிட்ட 21 கட்சிகள் ஆலோசனை

பா.ஜ.க.வுக்கு எதிராக மெகா கூட்டணி  சோனியா, ராகுல் தலைமையில் திமுக உள்ளிட்ட 21 கட்சிகள் ஆலோசனை

புதுடில்லி, டிச.11 அடுத்தாண்டு மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைப்பது தொடர்பாக சோனியா, ராகுல் தலைமையில் காங்கிரஸ், திமுக, தெலுங்கு தேசம், திரிணாமுல், ஆம் ஆத்மி உள்ளிட்ட 21 எதிர்க்கட்சிகள் டில்லியில் நேற்று ஆலோசனை நடத்தின. இதில், சிபிஅய், ஆர்பிஅய் ஆகிய அமைப்புகளை சீர்குலைக்கும் பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்த கட்சி தலைவர்கள், இன்று தொடங்க உள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ஒன்றிணைந்து செயல்படுவதாக அறிவித்துள்ளனர். அடுத் தாண்டு....... மேலும்

11 டிசம்பர் 2018 16:54:04

சமூக சீர்திருத்தங்களை அமல்படுத்தவிடாமல்

சமூக சீர்திருத்தங்களை அமல்படுத்தவிடாமல்

இருளை பரப்பும் முயற்சியில் பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். போராட்டங்கள் பிருந்தா கரத் குற்றச்சாட்டு புதுடில்லி, டிச.11- கேரள மாநிலத்தில் இருள் பரப்பும் சக்திகளை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வழிநடத்திச் செல்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் தெரிவித்தார். அரசியல் காரணங்களுக்கா கவே சபரி மலை விவகாரத்தில் ஆர்எஸ் எஸ், பாஜக ஆகியவை போராட்டம் நடத்தி வருவதாகவும் அவர் கூறினார். கேரளத்தில் சமூக சீர்திருத்தங்களை....... மேலும்

11 டிசம்பர் 2018 16:21:04

ஆர்.எஸ்.எஸ். ஏபிவிபியின் அச்சுறுத்தல்!

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புனே திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் மாணவரின் படத்தையே திரையிட அனுமதி மறுக்கும் அவலம்

புனே, செப்.11 மத்திய அரசின் நிறுவனமாகிய திரைப் படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் மாண வரும், அந்நிறுவன மாணவர் சங்கத்தின் மேனாள் தலைவரு மாகிய அரிசங்கர் நாச்சிமுத்து, ‘ஹோரா’   23 நிமிட நேரம் ஓடக் கூடிய ஆவண குறும் படத்தை இயக்கியுள்ளார்.

அரிசங்கர் நாச்சிமுத்து இயக்கிய ஆவணப்படத்துக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். மாண வர் அமைப்பாகிய அகிலபார திய வித்யார்த்தி பரிசத் அச் சுறுத்தத் தொடங்கிவிட்டது.

அதனையடுத்து, புனே திரைப்படம் மற்றும் தொலைக் காட்சி பயிற்சி நிறுவனக் கல்லூரியில் ஹோரா ஆவண குறும்படத்தை திரையிடுவ தற்கு வழங் கப்பட்ட அனுமதி விலக்கிக் கொள்ளப் பட்டுள் ளது. அதற்கு காரணமாக கூறப் பட்டுள்ளது என்னவெனில், ‘பாதுகாப்பு காரணம்’ என்பது தான்.

சமூக பொருளாதாரப் பிரச்சினை களை முன்னிறுத்தி தயாரிக்கப்பட்டுள்ள ஆவண, குறும்படத்தில், கபீர் காலா மஞ்ச் (கேகேஎம்) எனும்  அமைப்பின் சார்பில் தாழ்த்தப் பட்ட மற்றும் உழைக் கும் வகுப்பினரின் போராட்டத்தை முன்னெடுக்கும்வகையில் உணர்ச்சிப் பூர்வமாக நடத்தப் படுகின்ற பறையிசை கலை நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது.

ஹோரா ஆவண குறும் படம் திரை யிடும் வகையில்  முன்னதாக புனே திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி  பயிற்சி நிறுவனத்தின் பேராசிரி யர்கள் பார்த்து ஆய்வு செய்து பின்னரே திரையிடலாம் என்று ஒப்புதல் அளித்தார்கள்.

இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ்-. மாணவர் அமைப்பாகிய ஏபிவிபியின் அழுத்தத்தால், படம் திரையிட வழங் கப்பட்ட அனுமதி விலக்கிக் கொள்ளப் பட்டுள்ளது.

இதுகுறித்து நாச்சிமுத்து கூறிய தாவது:

“திரையிடப்படுவதற்கு முதல் நாள் வரை எவ்வித பிரச்சினையும் எழ வில்லை. திரையிட்டால் பிரச்சினை எழும் என்று காவல்துறையின் அலுவ லர்கள் கூறியதாலேயே  நிகழ்ச்சிக்கு பயிற்சி நிறுவன நிர்வாகம் அனுமதியை விலக் கிக்கொண்டது’’ என்றார்.

திரைப்படம் மற்றும் தொலைக் காட்சி பயிற்சி நிறு வன மாணவர் சங்கம் சார்பில் இதுகுறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில், ஆர். எஸ்.எஸ். ஏபிவிபியின் அச்சுறுத் தலைத் தொடர்ந்தே, படம் திரையிடுவதற்கான அனுமதியை நிர்வாகம் விலக்கிக் கொண்டுள் ளது. கருத்துச்சுதந்திரத்தை முடக்குவதையே வரலாறாகக் கொண்டுள்ளது ஏபிவிபி. எங்கள் நிறுவனத்துக்குள் எங்க ளின் படம் எப்படி இருக்க வேண்டும் என்பதை ஏபிவிபி அமைப்பு கூறுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு கலைப்பயிற்சிக்கூடத்தில்கூட சுதந்திர மாக இயங்க முடியதா? அறிக் கையில் கண்ட னம் வெளியிடப்பட்டுள்ளது. கேகேஎம் அமைப்பு தடை செய்யப்பட்ட அமைப்பு அல்ல. அவ்வமைப் பின் பாடல் காட்சிகளில் அம்பேத்கர் கொள் கைகளை விவரிக்கின்ற பாடல் காட் சிகளே படத்தில் இடம் பெற்றுள்ளன.

அண்ணல் அம்பேத்கர் கொள்கை களையே ஏபிவிபி அமைப்பினர் மாவோயிஸ்ட்டு களின் கருத்து என்று கூறு கிறார்கள்.

தமிழக மாணவரான நாச்சி முத்து கூறுகையில், “புனே திரைப்படம் மற்றும் தொலைக் காட்சி பயிற்சி நிறு வனத்துக் குள் எந்த மாணவரின் படத் தையும் திரையிடுவதற்கு, நிறு வனத்துக்கு வெளியே உள்ள எந்த ஓர் அமைப்பின் பெயரா லும் மாவோயிஸ்ட்டுகள் என்று கூறிக்கொண்டு அனும தியை மறுக்கும் சூழல் உரு வாகியுள்ளது. இதன்மூலம், கல்லூரி நிர்வாகம் மாணவர்க ளுக்கு கற்பிக்க விரும்புவதெல் லாம் சிந்தனையற்ற பொழுது போக்கை மட்டும்தானா? இன்று எங்களுடைய படங் களைத் திரையிட விரும்பாமல் இருக்கலாம். நாளையே நாங் கள் தேர்வு எழுதுவதை யும் அனுமதிக்காத சூழல் ஏற்பட லாம். அதன்பிறகு சிந்திக்கவே கூடாது என் றும் கூறலாம்’’ என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner