முன்பு அடுத்து Page:

கொல்லம்-காக்கிநாடாவுக்கு சுவிதா சிறப்பு ரயில்

கொல்லம்-காக்கிநாடாவுக்கு சுவிதா சிறப்பு ரயில்

சென்னை, நவ.11  பயணிகள் வசதிக்காக, கொல்லம்-காக்கி நாடாவுக்கு சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. கொல்லம்-காக்கிநாடா: கொல்லத்தில் இருந்து நவம்பர் 17, 21, 25 ஆகிய தேதிகளில் சுவிதா சிறப்பு ரயில் (82718) காலை 10 மணிக்கு புறப்பட்டு, மறு நாள் பிற்பகல் 2.50 மணிக்கு காக்கிநாடா டவுனை சென்ற டையும். கொல்லம் -அய்தராபாத்:  கொல்லத்தில் இருந்து நவம்பர் 15-ஆம் தேதி அதி காலை 3....... மேலும்

13 நவம்பர் 2018 10:09:10

ஏன் இந்த இரட்டை வேடம்?

ஏன் இந்த இரட்டை வேடம்?

ராஜீவ் காந்தி கொலை வழக்கு:  7 பேர் விடுதலை தொடர்பான தமிழக அரசின் கடிதத்தை மத்திய அரசே நிராகரித்தது தகவல் அறியும் சட்டம் மூலம் அம்பலம் புதுடில்லி,நவ.12 -முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர்விடுதலை தொடர்பாக 2016 ஆம் ஆண்டில்தமிழக அரசு எழுதிய கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் உள்துறை அமைச்சகமே நிராகரித்துள்ளது  என்பது தகவல் அறியும் சட்டத்தின் (ஆர்டிஅய்) மூலம் அம்பலமாகியுள்ளது. முன்னாள் பிரதமர்....... மேலும்

12 நவம்பர் 2018 16:55:04

நவ.22 டில்லியில் எதிர்க்கட்சிகள் கூட்டம்

புதுடில்லி, நவ.12 -மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரளும் வகையில் நவம்பர் 22 ஆம் தேதி டில்லியில் ஆலோசனைக் கூட்டம் நடை பெறுகிறது. அண்மையில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்துப் பேசினார். காங்கிரசு தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரசு தலைவர் சரத்பவார்,....... மேலும்

12 நவம்பர் 2018 16:55:04

டில்லியில் மீண்டும் கடுமையான பிரிவில் காற்று மாசு!

டில்லியில் மீண்டும் கடுமையான பிரிவில் காற்று மாசு!

புதுடில்லி, நவ.12  டில்லியில் காற்று மாசு சனிக்கிழமை காலையில் சற்று குறைந்த நிலையில், மாலையில் மீண்டும் கடுமையான பிரிவை எட்டியது. இதையடுத்து, கட்டுமான நடவடிக்கைகள், நிலக்கரியை பயன்படுத்தி இயங்கும் தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை திங்கள்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டில்லியில் தீபாவளிக்கு பின்னர் கடுமையான காற்று மாசு ஏற்பட்டது. ஆனால், சனிக்கிழமை காலையில் காற்றின் தரத்தில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது. உள்ளூர் மாசுபடுத்திகள் குறிப் பிடத்தக்க அளவில் குறைந்ததன் காரணமாக காற்று....... மேலும்

12 நவம்பர் 2018 16:48:04

உயர்நீதிமன்றங்களில் 9 சதவீதம் மட்டுமே பெண் நீதிபதிகள்

புதுடில்லி, நவ.12- நாடு முழுவதிலும் உள்ள உயர்நீதிமன்றங்களில் வெறும் 9 சதவீதம் மட்டுமே பெண் நீதிபதிகள் உள்ளனர். இந்திய நீதித்துறையின் பொற்காலம் என போற்றும் வகையில் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நாட்டின் முக்கிய 4 உயர்நீதி மன்றங்களுக்கு பெண் நீதிபதிகள் தலைமை நீதிபதிகளாக இருந்தனர். நீதிபதிகள் மஞ்சுளா செலூர் மும்பை உயர்நீதிமன்றத் திற்கும், ஜி.ரோகினி டில்லி உயர்நீதிமன்றத்திற்கும், நிஹிதா நிர்மலா மத்ரே கோல்கட்டா உயர்நீதிமன்றத்திற்கும், இந்திரா பானர்ஜி சென்னை உயர்நீதிமன்றத்திற்கும்....... மேலும்

12 நவம்பர் 2018 16:48:04

கருவூல சாவிகளை பணக்காரர்களிடம் கொடுத்துவிட்டார் மோடி

ராகுல்காந்தி தாக்கு சராமா, நவ.11 சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 12 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப் படுகிறது. இதில் முதல்கட்ட தேர்தலுக் கான பிரச்சாரம் இன்று மாலை யுடன் முடிவடைகிறது. இத னால் தலைவர்கள் உச்சகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், சராமா பகுதியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பா ளர்களை ஆதரித்து கட்சியின் தலைவர் ராகுல் காந்தி....... மேலும்

12 நவம்பர் 2018 13:10:01

சபரிமலை போராட்டங்களை ஒருபோதும் ஏற்க முடியாது

சபரிமலை போராட்டங்களை ஒருபோதும் ஏற்க முடியாது

கேரள உயர்நீதிமன்றம் கருத்து திருவனந்தபுரம், நவ.11 சபரி மலை அய்யப்பன் கோவிலில் காலம் காலமாக 10 வயதுக்கு மேற்பட்ட 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இந்த நிலையில் உச்சநீதிமன் றத்தின் உத்தரவு தற்போது அனைத்து வயது பெண்களும் சபரிமலை சென்று சாமி தரிசனம் செய்யும் உரிமையை வழங்கி உள்ளது. ஆனாலும் சபரிமலை கோவில் நடை திறக்கும்போ தெல்லாம் அங்கு அய்யப்ப பக்தர்கள் திரண்டு....... மேலும்

12 நவம்பர் 2018 11:57:11

5 மாநில சட்டசபை தேர்தல் - ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்பு

புதுடில்லி, நவ.11 ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங் கானா, சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கு வருகிற 12-ஆம் தேதி முதல் டிசம்பர் 7ஆம் தேதிக்குள் தேர்தல் நடக்கிறது. அனைத்து மாநிலங்களிலும் டிசம்பர் 11-ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இந்த தேர்தல் முன்னோட்டமாக அமையும் என்று கருதப்படுவதால் கருத்து கணிப்புகளை பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டு எடுத்து வருகின்றன. இந்த வார தொடக்கத்தில்....... மேலும்

12 நவம்பர் 2018 11:57:11

ரபேல் ஊழலைக் காட்டிலும் மோடியின் பயிர்க் காப்பீடு திட்டம்தான் நாட்டின் மிகப்பெரிய ஊழல்!

பத்திரிகையாளர் சாய்நாத் அதிர்ச்சித் தகவல் மும்பை, நவ.11 -விவசாயிகளுக்காக மோடி அரசுசெயல்படுத்தி வரும் பயிர்க் காப்பீட்டுத் திட்டம்தான், ரபேல் போர் விமானக் கொள்முதலைக் காட்டிலும் மிகப்பெரிய ஊழல் என்று மூத்த பத்திரி கையாளரான பி. சாய்நாத் அதிர்ச்சித் தக வலை வெளியிட்டுள்ளார். மும்பையில் நடைபெற்ற விவசாயிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்ப தாவது:மத்தியில் ஆளும் பாஜக அரசின் கொள்கைகள் அனைத்தும் விவசாயிக ளுக்கு எதிரானது. குறிப்பாக பிரதமர் பீமா பசல்....... மேலும்

12 நவம்பர் 2018 11:57:11

தீபாவளியின் பெயரால் காட்டுவிலங்காண்டித்தனம்

தீபாவளியின் பெயரால் காட்டுவிலங்காண்டித்தனம்

சிம்லா, நவ.11 தீபாவளியை முன்னிட்டு ஒவ்வொரு பகுதி யிலும் ஒவ்வொரு விதமாக வழிபாடுகள் நடத்தப்படுகின் றன. அவ்வகையில், இமாச்சல பிரதேசத்தில் உள்ள தாமி என்ற கிராமத்தில், தீபாவளி யையொட்டி வினோதமான ஒரு வழிபாடு நடத்தப்படு கிறது. தலைநகர் சிம்லாவில் இருந்து 26 கிமீ தொலைவில் இந்த கிராமத்தில், மக்களின் காவல் தெய்வமான காளி தேவியின் உக்கிரத்தை தணிக் கும் வகையில், பாரம்பரியமாக இந்த பூஜை நடத்தப்படுகிறது. அதாவது, கிராமத்தின் இரண்டு வம்சாவளியைச்....... மேலும்

12 நவம்பர் 2018 11:57:11

பொருளாதார நெருக்கடி: சூடான் அரசாங்கத்தை கலைத்தார் அதிபர் பசிர்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கார்டோவும், செப். 11- தெற்கு சூடானில் அரசுப் படைக்கும் கிளர்ச்சிப் படைக ளுக்கும் இடையே கடந்த 5 ஆண்டு களுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. கிளர்ச்சிப் படைகளிடம் உள்ள கிராமங்களை கைப்பற்றுவதற்காக அரசுப் படைகள் மற்றும் ஆதரவு படைகள் தாக்குதலை நடத்தி வருகின்றன.

உள்நாட்டு போர் காரணமாக சூடா னில் உற்பத்தி குறைந்து பணவீக்கம் கட்டுப்பாடற்று அதிகரித்துள்ளது. சூடான் பவுண்டுகள் மதிப்பிழந்ததால் வங்கி அமைப்புகளுக்கு மாற்றாக அங்கு அமெரிக்க டாலருக்கான கருப்பு சந்தை உருவானது. இதனால் அந்நாட் டின் பொருளாதாரம் அதலபாதாளத்துக்கு சென்றுள்ளது.

இதனால் நிலைமை இன்னும் மோச மாகி கோதுமை போன்ற அத்தியாவசிய உணவுப்பொருட்களை கூட இறக்குமதி செய்ய முடியாமல் அரசாங்கம் தடுமாறி யது. மானியங்களை அரசு தடை செய் ததால் ஜனவரி மாதம் முதல் ரொட் டிகளின் விலை இரண்டு மடங்கானது. இதன் காரணமாக மக்கள் அமைதி இழந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட தொடங்கினர்.

மேலும், ஏறக்குறைய நாட்டில் உள்ள சரிபாதி ஜனத்தொகை போது மான உணவின்றி தவித்து வருவதாக அய்க்கிய நாடுகள் சபை ஏற்கெனவே தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அதிபர் ஓமர் அல் பசிர் தலைமையில் நேற்று அவசர அவசரமாக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நாட்டில் நிலவும் நெருக்கடியான நிலை குறித்து விவாதிக் கப்பட்டது. கூட்டத்திற்கு பின்னர் சூடான் அரசாங்கம் கலைக்கப்படுவதாக அதிபர் பசிர் அறிவிப்பு வெளியிட்டார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner