முன்பு அடுத்து Page:

மத்தியப்பிரதேசத்தில் ஹர்திக், ஜிக்னேஷ், கன்னய்யாகுமார் பரப்புரை

குஜராத்தைப்போல் பாஜகவுக்கு எதிராக பலரையும் அணிதிரட்டி களமிறங்கும் காங்கிரஸ் போபால், நவ.15 மத்தியப்பிரதேச மாநிலத்தில்   நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் எப்போதுமில்லாத அளவுக்கு பாஜகவுக்கு எதிராக களமி றங்கி தொடர்ச்சியாக தீவிரப் பரப்புரை செய்யப்போவதாக காங்கிரஸ் தரப்பு கூறுகிறது. ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற் றும் சத்தீஸ்கர் மாநிலங்களின் சட்டப் பேரவை ஆயுட்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதமும், மிசோரம் மாநில சட்டப்பேரவை ஆயுட்காலம் டிசம்பர் 15ஆம் தேதியும் நிறைவடைகிறது. முதல் கட்டமாக....... மேலும்

15 நவம்பர் 2018 15:23:03

ஜாதி, மத, பாலின வேறுபாடுகளால் இந்தியாவின் வளர்ச்சியில் பின்னடைவு! ஆய்வில் தகவல்

அகமதாபாத், நவ. 15 -குஜராத் மாநிலம் வதோத ராவைச் சேர்ந்த சகஜ் எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனம், 2030-இல் சமத்துவ அளவீ டுகள் என்ற தலைப்பில் வேறு சில அமைப்பு களுடன் இணைந்து ஆய்வொன்றை நடத்தி யுள்ளது. இதில், ஜாதி, மதம் மற்றும் பாலின வேறுபாடுகள் இந்தியாவின் வளர்ச்சியை பின்னோக்கிக் கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளது.ஒருபக்கம் இந்தியா பொரு ளாதார வளர்ச்சியில் வலுப்பெறுகிறது; மறுபக்....... மேலும்

15 நவம்பர் 2018 15:23:03

தபோல்கர் கொலை வழக்கு சி.பி.அய்., நடவடிக்கை

புனே, நவ.15  சமூக ஆர்வலர் தபோல்கர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டோர் மீது, சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, நீதிமன் றத்தில், சி.பி.அய்., தெரிவித்துள்ளது. மகாராட்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ.க., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தின், புனேயைச் சேர்ந்த, சமூக ஆர்வலர், ....... மேலும்

15 நவம்பர் 2018 15:23:03

வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது ஜி.எஸ்.எல்.வி. மார்க்3- டி2 ராக்கெட்

வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது ஜி.எஸ்.எல்.வி. மார்க்3- டி2 ராக்கெட்

சிறீஅரிகோட்டா, நவ.15 ஜிசாட்-29 தகவல் தொடர்பு செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3-டி2 ராக்கெட் சிறீஅரிகோட்டா சதீஷ் தவண் விண்வெளி ஆராய்ச்சி மய்யத் தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து புதன்கிழமை வெற் றிகரமாக விண்ணில் செலுத் தப்பட்டது. கஜா புயல் காரணமாக புதன்கிழமை இரவு முதல் பலத்த காற்று, மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மய்யம்....... மேலும்

15 நவம்பர் 2018 15:07:03

குஜராத் கலவரம்: மோடியை எதிர்த்து வழக்கு

புதுடில்லி, நவ.15 குஜராத் தில் 2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிக்கப்பட்டது. இதில் கரசேவகர்கள் பலர் இறந்தனர். இதை கண்டித்து மாநிலம் முழுவதும் கலவரம் வெடித் தது. அப்போது ஏராளமானோர் கொல்லப்பட்டனர். அப்போது குஜராத் முதல் அமைச்சராக நரேந்திர மோடி இருந்தார். அவர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது....... மேலும்

15 நவம்பர் 2018 15:07:03

ரபேல் ஒப்பந்ததாரரை தெரியாது என்பதா? இதுதான் நாட்டுப் பாதுகாப்பு மீதான லட்சணமா?

ரபேல் ஒப்பந்ததாரரை தெரியாது என்பதா?  இதுதான் நாட்டுப் பாதுகாப்பு மீதான லட்சணமா?

உச்சநீதிமன்ற நீதிபதி கண்டனம் புதுடில்லி, நவ.15- ஒப்பந்த தாரர் யார்? என்பதைக் கூட பார்க்காமல் விமானக் கொள் முதல் செய்வதுதான், நாட்டின் பாதுகாப்பு மீது காட்டப்படும் அக்கறையா? என்று மத்திய பாஜக அரசை, உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் சாடி யுள்ளார். ரபேல் விமான ஒப்பந்தத் தில் ஊழல் குற்றச்சாட்டு எழுந் துள்ள நிலையில், இதுதொடர் பாக, உச்சநீதிமன்ற மேற் பார்வையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வழக்குரைஞர்கள் பிரசாந்த் பூஷன், எம்.எல். ஷர்மா....... மேலும்

15 நவம்பர் 2018 15:07:03

சபரிமலை: மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு ஏற்பு ஜன.22இல் திறந்த நீதிமன்றத்தில் விசாரணை

சபரிமலை: மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு ஏற்பு ஜன.22இல் திறந்த நீதிமன்றத்தில் விசாரணை

அனைத்து வயது பெண்களும் செல்ல தடை இல்லை டில்லி, நவ.14 சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது. ஜனவரி 22இல் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு மீண்டும் விசா ரணை நடத்துகிறது. அதுவரை அனைத்து வயது பெண்களும் கோயிலுக்கு செல்வ தற்கு தடை கிடையாது என்று உச்ச ....... மேலும்

14 நவம்பர் 2018 17:59:05

ரபேல் ஊழல் வழக்கு: மத்திய அரசு பதிலில் மூன்று முக்கிய கேள்விகளுக்கு விளக்கமில்லை: பிரசாந்த் பூஷன் கு…

ரபேல் ஊழல் வழக்கு: மத்திய அரசு பதிலில் மூன்று முக்கிய கேள்விகளுக்கு விளக்கமில்லை: பிரசாந்த் பூஷன் குற்றச்சாட்டு

புதுடில்லி, நவ. 14- -ரபேல் ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு அளித் துள்ள விளக்கங்கள், குளறுபடிகளுடன் இருப்பதாக வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, 3 கேள்விகளுக்கு மத்திய அரசின்அறிக்கையில் பதிலே இல்லை என்றும் கூறியுள்ளார். பிரான்சு நாட்டின் டஸ்ஸால்ட் நிறுவனம் உடனான ரபேல் விமானக் கொள்முதலில் ஊழல் நடந்துள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவரும் நிலையில், இந்த....... மேலும்

14 நவம்பர் 2018 17:59:05

மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு குறைந்தது

புதுடில்லி, நவ. 14 -நாடு முழுவதுமே ஒரே மாதிரியான சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) கொண்டுவந்த மத்திய பாஜகஅரசு, இதனால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு சரிக்கட்டப் படும்; உரிய இழப்பீடு வழங் கப்படும் என்று வாக்குறுதி அளித்தது. ஆனால், இந்த இழப்பீடு தற்போது கடுமை யாக குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது. ஆகஸ்ட் - செப் டம்பர் காலத்தில் மாநிலங்க ளுக்கு மத்திய....... மேலும்

14 நவம்பர் 2018 16:38:04

பீகார் : பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறும் லோக் சமதா கட்சி

பாட்னா, நவ.14 பீகார் மாநிலத்தில் பாஜக கூட்டணியிலிருக்கும் ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான உபேந்திர குஷ்வாகா, திடீரென லோக் தந்திரிக் ஜனதாதளம் கட்சித் தலைவரான சரத் யாதவை சந்தித் துள்ளார். பீகாரில், 2019 மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட் டுப் பேச்சுவார்த்தைகளை பாஜக நடத்தி வரும் நிலையில், அதன் முக்கிய கூட்டணிக் கட்சி, எதிர்முகாம் தலைமையைச் சந்தித்து பேச்சு நடத்தியிருப்பது, பீகார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.2019....... மேலும்

14 நவம்பர் 2018 16:38:04

கூட்டணி ஆட்சியை கவிழ்க்க மத்திய அரசு முயற்சி முதல் அமைச்சர் குமாரசாமி குற்றச்சாட்டு

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெங்களூரு, செப். 11- கர்நாட கத்தில் காங்கிரசு, ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சியில் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்து வருபவர் டி.கே.சிவக்குமார். அவரது வீடு மற்றும் அவருடைய ஆதர வாளர்களில் வீடுகளில் கடந்த ஆண்டு (2017) வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

டில்லியில் உள்ள டி.கே.சிவக்குமார், அவரது ஆதரவா ளர்களுக்கு சொந்தமான அடுக் குமாடி குடியிருப்புகளில் வரு மான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.8 கோடி சிக்கியது.

இதுதொடர்பாக அமலாக் கத்துறையினர் அமைச்சர் டி. கே.சிவக்குமார்மீது வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து பெங்களூரு வில் நேற்று முதல் அமைச்சர் குமாரசாமியிடம் செய்தியா ளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்து அவர் கூறி யதாவது:-

கர்நாடக அரசியல் நிலவரம் பற்றி மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். கூட்டணி ஆட்சியை கவிழ்க்க தினமும் சதிநடப்பது பற்றி எனக்கு நன்கு தெரியும். இது எங்கு சென்று முடிகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண் டும்.

எதிர்க்கட்சிகளை ஒழிக்க மத்திய அரசு வருமானவரித் துறை, அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்தி வருகி றது. இதன்மூலம் அவர்கள் என்ன லாபம் அடைய போகி றார்கள் என்பது தெரியவில்லை. காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கூட்டணி ஆட்சியை கவிழ்க்க ஆரம்பத்தில் இருந்தே சிலர் முயன்று வருகிறார்கள். அதில், அவர்கள் வெற்றி பெற போவ தில்லை.

இந்தஆட்சியை கவிழ்க்க கூட்டணி கட்சிகளின் தலைவர் களுக்கு வருமானவரித்துறை, அமலாக்கத்துறை மூலமாக மத்திய அரசு நெருக்கடி கொடுக் கிறது. கர்நாடக பா.ஜனதா தலைவர்களும் ஆட்சியை கவிழ்க்க முயற்சித்து வருகிறார் கள்.

அமைச்சர் டி.கே.சிவக்குமார் வீட்டில் மீண்டும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்த முடிவு செய்தி ருப்பதாக தகவல் வந்துள்ளது. தற்போது அமலாக்கத்துறையினர் டி.கே.சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்ய முன் வந்திருப்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner