முன்பு அடுத்து Page:

புதுவைத் தமிழ் சங்கப் பொன்விழா தமிழ் மாநாடு - 2019

புதுவைத் தமிழ் சங்கப் பொன்விழா தமிழ் மாநாடு - 2019

புதுவைத் தமிழ் சங்கப் பொன் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழர் தலைவர் அவர்களுக்கு தமிழ் சங்கத் தலைவர் முனைவர் வி.முத்து நினைவு பரிசு வழங்கினார். (புதுச்சேரி & 16.2.2019) புதுவைத் தமிழ் சங்கப் பொன் விழாவில் "தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?" என்ற நூலினை தமிழ்ச் சங்கத் தலைவர் முத்து வெளியிட வழக்குரைஞர் சி.பி. திருநாவுக்கரசு பெற்றுக் கொண்டார். மேடையில் சுமார் 70க்கு மேற்பட்டோர் நூல்களை பெற்றுக் கொண்டனர்.  மேலும்,....... மேலும்

17 பிப்ரவரி 2019 14:52:02

அரசுக்கும் வீரர்களுக்கும் முழு ஆதரவாக இருப்போம்- ராகுல் காந்தி உறுதி

புதுடில்லி, பிப்.17 புல்வாமா தாக்குதல் குறித்துப் பேசிய  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, எந்த சக்தியாலும் தேசத்தைப் பிரிக்க முடியாது எனவும் அரசுக்கும் வீரர்களுக்கும் முழு ஆதரவாக இருப்போம் என்றும் தெரிவித்துள்ளார். டில்லியில் செய்தியாளர் களிடம் பேசிய ராகுல் காந்தி, ‘’இந்திய அரசுக்கும் ராணுவ வீரர் களுக்கும் நானும் எனது காங்கிரசு கட்சியும் உறுதுணையாக இருப் போம். அடுத்த இரண்டு நாட் களுக்கு மற்ற எந்தப் பேச்சுவார்த் தையும் இல்லை. இது வருத்தத்துக்கான,....... மேலும்

17 பிப்ரவரி 2019 14:50:02

தொலைக்காட்சி, வானொலி, இணையதளத்தில் அரசு விளம்பரங்கள் அய்ந்தாண்டுகளில் ரூ.2,374 கோடி செலவு: மத்திய …

புதுடில்லி, பிப்.17 தொலைக் காட்சி, வானொலி, இணைய தளத்தில் அரசு விளம்பரங்களை வெளியிடுவதற்காக கடந்த அய்ந்து ஆண்டுகளில் ரூ.2,374 கோடி ரூபாய் செலவிடப்பட் டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், விளம்பரப் பலகை களுக்காக ரூ.670 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறியும் உரிமைச் சட்டத்தின்கீழ்  கேட்கப் பட்ட கேள்விகளுக்கு பதிலளித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: தொலைக்காட்சி, வானொலி, இணையதளம் போன்ற மின் னணு....... மேலும்

17 பிப்ரவரி 2019 14:48:02

ஆதார்-பான் இணைப்புக்கு மார்ச் 31 கடைசி தேதி

ஆதார்-பான் இணைப்புக்கு மார்ச் 31 கடைசி தேதி

புதுடில்லி, பிப்.17 வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் தங்களது பான் எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டியது கட்டாயம் என்று வலியுறுத்தியுள்ள மத்திய நேரடி வரிகள் ஆணையம் (சிபிடிடி), வரும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் ளாக அதை நிறைவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. ஆதார்- - பான் இணைப்பை மேற்கொள்ளாமலேயே 2018- - 2019 காலகட்டத்துக்கான வரு மான வரிக் கணக்கை தாக்கல் செய்ய இரு நபர்களுக்கு தில்லி....... மேலும்

17 பிப்ரவரி 2019 14:20:02

பாகிஸ்தான் பொருள்களுக்கான இறக்குமதி வரி 200 சதவிகிதமாக உயர்வு

புதுடில்லி, பிப்.17  புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் எதி ரொலியாக, பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு இறக் குமதி செய்யப்படும் அனைத்துப் பொருள்களுக்கும் இறக்குமதி வரியை 200 சதவீதமாக இந்திய அரசு உயர்த்தியுள்ளது. இந்திய அரசின் இந்த முடிவால், பாகிஸ்தானுக்கு ரூ.3,482.3 கோடி அளவுக்கு வர்த் தகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து....... மேலும்

17 பிப்ரவரி 2019 14:19:02

கன்னடர்களுக்கு தனியார் நிறுவன வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு கருநாடக அமைச்சரவை முடிவு

பெங்களூரு, பிப்.16 தனியார் நிறுவன வேலை வாய்ப்புகளில் கன்னடர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க கருநாடக அமைச் சரவை முடிவு செய்துள்ளது. கருநாடக அமைச்சரவை கூட்டம் முதல்- அமைச்சர் குமாரசாமி தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நடை பெற்றது. இதில் அமைச்சர்கள், அதி காரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து பஞ்சாயத்து ராஜ் மற்றும் கிராம வளர்ச்சித் துறை அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா நிருபர்களிடம் கூறியதாவது:- சரோஜினி மகிசி அறிக்கையின்படி....... மேலும்

16 பிப்ரவரி 2019 16:14:04

நிறுவனம் திவாலாகி விட்டதாக கூறிய அனில் அம்பானிக்கு ரபேலுக்கு மட்டும் முதலீடு செய்ய பணம் இருக்கிறதா?…

புதுடில்லி, பிப். 16 -இந்தி யாவின் பிரபல தொழிலதி பரும், பிரதமர் மோடியின் நண்பருமான அனில் அம் பானியின் ‘ஆர்காம்’ என்னும் ‘ரிலையன்ஸ் கம்யூனிகே ஷன்ஸ்’ நிறுவனமானது, தொலைத் தொடர்பு சேவையில் ‘எரிக்சன்’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது. இந்த வகையில், எரிக்சன் நிறுவனத்திற்கு, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ரூ. 1,600 கோடி பணம் தர வேண்டி யுள்ளது. இதில், முதற்கட்ட மாக ரூ. 550 கோடியை, 2018 டிசம்பருக்குள் தருமாறு உச்ச நீதிமன்றம்....... மேலும்

16 பிப்ரவரி 2019 16:14:04

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர சந்திரபாபுநாயுடு மு…

அமராவதி, பிப்.16 மின் னணு வாக்கு இயந்திரங்களில் முறைகேடு நடைபெற வாய்ப் புள்ளதால், இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். அமராவதியிலிருந்து நேற்று முன்தினம் டெலிகான்பரன்ஸ் மூலம் ஆந்திர மாநில கட்சி நிர்வாகிகளுடன் சந்திரபாபு நாயுடு உரையாற்றினார். அவர் பேசியதாவது: பல்வேறு கட்சிகளின் கருத் தின்படி, மின்னணு வாக்கு இயந்திரங்களில் இம்முறை முறைகேடு நடக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே, இதுதொடர்பாக உச்ச நீதி....... மேலும்

16 பிப்ரவரி 2019 16:10:04

குருமூர்த்தியை ரிசர்வ் வங்கி இயக்குநராக நியமித்த ரகசியம் என்ன?

குருமூர்த்தியை ரிசர்வ் வங்கி இயக்குநராக நியமித்த ரகசியம் என்ன?

விளாசுகிறார் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் கவுடா புதுடில்லி, பிப்.16 மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ரிசர்வ் வங்கி நிர்வாக இயக்குநர் பதவிக்கு குருமூர்த்தியை நியமித்தது தொடர்பாக பொய்யான தகவல் கூறுகிறார் என்று குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் கவுடா இது தொடர்பாக அருண் ஜெட்லி தனது பதவிக்கே களங்கம் ஏற்படுத்திவிட்டதாகக் கூறினார். துக்ளக் இதழ் ஆசிரியரும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தீவிர செயல் பாட்டாளரும், பாஜகவின் அரசியல் ஆலோசகராகவும்....... மேலும்

16 பிப்ரவரி 2019 15:47:03

கல்வித் துறைக்கென்று வசூலிக்கப்பட்ட வரி ரூ.1 லட்சம் கோடியை மாணவர்களுக்கு செலவிடாமல் ஏமாற்றிய மோடி அர…

புதுடில்லி, பிப்.16 2018&20-19ஆம் நிதியாண்டுக்கான மத்தியஅரசின் வரவு - செலவுகள் குறித்த, தணிக்கை அறிக்கையை, மத்திய தலைமைக் கணக்கு தணிக்கை அதிகாரி தற்போது வெளியிட்டுள்ளார். இந்நிலையில், அதில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் இருப்பது தெரியவந்துள்ளது.மோடி அரசு, தனது நிர்வாக செலவுகளுக்காக, ரூ. 99 ஆயிரத்து 610 கோடியை ஊதாரித்தனமாக செலவிட்டுள்ளது ஒருபுறம் என்றால், மற்றொரு புறம் 18 வகையான திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை....... மேலும்

16 பிப்ரவரி 2019 15:08:03

ராமர் கோயில், பெயர்களை மாற்றுதல் மட்டுமே பா.ஜ.க. ஆட்சியில் முக்கியத்துவம் மெகபூபா கண்டனம்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சிறீநகர், பிப். 12- அயோத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கும், பழைமையான நகரங்களின் பெயர்களை மாற்றுவதற்கும் மட்டுமே மத்தியில் ஆளும் பாஜக அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது என்று மக் கள் ஜனநாயகக் கட்சியின் தலை வர் மெகபூபா முப்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் பாகிஸ்தா னில் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிக்கு குருநானக்கின் பெய ரைச் சூட்டிய அந்நாட்டு பிரத மர் இம்ரான் கானுக்கு அவர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஞாயிற் றுக்கிழமை சுட்டுரையில் (டுவிட்டர்) அவர் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:

இப்போது காலம் வேகமாக மாறி வருகிறது. நமது நாட்டில் மத்திய அரசு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கும், பழமையான நகரங்களின் பெயர்களை மாற்றுவதற்கு மட் டுமே முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதே நேரத்தில் பாகிஸ்தானில் பாதுகாக்கப் பட்ட வனப் பகுதிக்கு சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக் பெயரைச் சூட்ட அந்நாட்டு பிர தமர் இம்ரான் கான் முடிவெடுத் துள்ளார். குருநானக் பெயரில் பல்கலைக்கழகம் உருவாக்கப் படும் என்றும் அவர் கூறியுள் ளார். அவருக்கு எனது பாராட் டுகளைத் தெரிவித்துக் கொள்கி றேன் என்று கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூன் 20-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப் பட்டது. அதற்கு முன்பு பாஜக ஆதரவுடன் மெகபூபா முப்தி அந்த மாநில முதல்வராக இருந்தார்.

காஷ்மீரில் பயங்கரவாதிக ளுக்கு எதிராக உறுதியான நட வடிக்கை மேற்கொள்ள மெக பூபா ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று குற்றம்சாட்டி மெகபூபா அரசுக்கு அளித்து வந்த ஆத ரவை பாஜக வாபஸ் பெற்றது.

ஒரு சில மாதங்களில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து, ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவைக்கும் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner