முன்பு அடுத்து Page:

நாடு முழுவதும் ஒரே அவசர உதவி எண் 112 20 மாநிலங்களில் அமல்

புதுடில்லி, ஏப்.20 நாடு முழுவதும் அவசர உதவிக்கு ஒரே எண்ணை(112) அழைக்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு, கேரளம் உள்பட 20 மாநிலங்கள் மற்றும் 5 யூனியன் பிரதேசங்கள் இணைந் துள்ளதாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். காவல் துறை(100), ஆம்புலன்ஸ்(108), தீயணைப்புத் துறை(101) என்று ஒவ்வொரு அவசர உதவிக்கும் ஒரு எண்ணை பயன்படுத் துவதற்கு பதிலாக,....... மேலும்

20 ஏப்ரல் 2019 15:23:03

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய சாத்வி பிரக்யாசிங் தேர்தலில் போட்டியிட தடைகோரி வழக்கு

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய சாத்வி பிரக்யாசிங் தேர்தலில் போட்டியிட தடைகோரி வழக்கு

மும்பை, ஏப்.20, கடந்த 2008ஆம் ஆண்டில் மகாராட்டிர மாநிலம், மாலேகானில் நடந்த குண்டு வெடிப்பில் 6 பேர் பலியாகினர். மேலும் 100க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந் தனர். குண்டு வெடிப்பு வழக்கில் சாத்வி பிரக்யா சிங் தாக்குர் கைது செய்யப்பட்டார். மும்பையில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத் தில் சுமார் 7 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த இவ்வழக் கில் குற்றம்சாட்டப்பட்ட சியாம் சாகு,....... மேலும்

20 ஏப்ரல் 2019 15:23:03

மனைவியை விபச்சாரி என்று அழைத்த கணவரை கொன்றது கொலைக் குற்றம் ஆகாது - உச்சநீதிமன்றம்

மனைவியை விபச்சாரி என்று அழைத்த கணவரை கொன்றது கொலைக் குற்றம் ஆகாது - உச்சநீதிமன்றம்

மனைவியை விபச்சாரி என்று அழைத்த கணவரை கொன்றது கொலைக் குற்றம் ஆகாது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம் மனைவியின் தண்டனையை 10 ஆண்டு களாக குறைத்து உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பான கொலை சம்பவம் ஒன்று நடந்தது. கணவரை அவரது மனைவியும், கள்ளக்காத லனும் சேர்ந்து கொலை செய்தனர். பின்னர் அவரது உடலை காரில் எடுத்து சென்று காட் டுக்குள் வைத்து எரித்தனர். 40 நாட்களுக்கு பிறகு அந்த கொலை....... மேலும்

20 ஏப்ரல் 2019 12:26:12

தமிழகத்தில் ஒரு புதிய ரயில்பாதை திட்டத்தைக் கூட முடிக்காத மோடி அரசு

தமிழகத்தில் ஒரு புதிய ரயில்பாதை திட்டத்தைக் கூட முடிக்காத மோடி அரசு

தமிழகத்தில் 8 புதிய ரயில்பாதைத்திட்டங்கள் காங்கிரஸ் தலைமையிலான முந்தைய அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசால் திட்டமிடப்பட்டு நிதி நிலை அறிக்கையில் சேர்க்கப்பட்டன. ஒரு திட்டம் மட்டும் 2016-17இல் மோடி அரசால் சேர்க்கப்பட்டது. இந்த எட்டு திட்டங்களுக்கும் அய்ந்தாண்டுகளையும் சேர்த்து மோடி அரசு செய்த செலவு வெறும் ரூ.211.48 கோடிதான். மொத்த தேவை எவ்வளவு தெரியுமா? ரூ.11,400 கோடியாகும். இன்னும் ரூ.11,188 கோடி செலவு செய்தால் தான் 8 திட்டங்களும் நிறைவேறும்........ மேலும்

20 ஏப்ரல் 2019 12:26:12

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளை சிறையில் தள்ள மாட்டோம்: ராகுல் உறுதி

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளை சிறையில் தள்ள மாட்டோம்: ராகுல் உறுதி

பதான், ஏப்.19- & ‘‘காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், வங்கி கடன் செலுத்த முடியாத விவசாயிகள் சிறை யில் தள்ளப்பட மாட்டார்கள்,’’ என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார். உத்தரப் பிர தேச மாநிலம், ஆன்லா மக்களவை தொகுதிக்கு உட்பட்ட டேடாகஞ்ச் பகுதியில் நேற்று நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலை வர் ராகுல் காந்தி பங்கேற்று பேசிய தாவது: கோடிக்கணக்கில் கடன் வாங்கி கட்டாத தொழிலதிபர்களை பிடித்து சிறையில்....... மேலும்

19 ஏப்ரல் 2019 16:44:04

மோடி ஹெலிகாப்டரில் சோதனை நடத்திய அய்.ஏ.எஸ். அதிகாரி பணியிடை நீக்கமாம்!

பெங்களூரு,ஏப்.19 & பிரதமர் நரேந்திர மோடியின் ஹெலிகாப்டரில் சோதனை நடத்திய கருநாடகாவை சேர்ந்த அய்ஏஎஸ் அதிகாரி  இடைக் கால பணிநீக்கம் செய்யப்பட்டார். மக்களவை தேர்தலில் போட்டி யிடும் பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து,  பிரதமர் மோடி நாடு முழுவதும் சூறாவளி  பிரச்சாரம் செய்து வருகிறார். இதற்காக அவர் விமானம், ஹெலி காப்டர்களை பயன்படுத்துகிறார். ஒடிசா  மாநிலத்தில் நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் செய்ய சென்றபோது, அவர் பயணம் செய்த ....... மேலும்

19 ஏப்ரல் 2019 16:44:04

கருநாடகாவில் 75 சதவீதம் சிறீநகரில் 15 சதவீதம் வாக்குப்பதிவு

பெங்களூரு, ஏப். 19- கருநாடக மாநிலத்தில் முதல்  கட்டமாக உடுப்பி-சிக்கமகளூரு, ஹாசன், தென்கனரா, சித்ரதுர்கா, தும கூரு, பெங்களூரு ஊரகம், பெங் களூரு மத்திய, பெங்களூரு தெற்கு, பெங்களூரு வடக்கு,  சிக்கபள்ளாபுரா, கோலார், மைசூரு, சாம்ராஜ்நகர், மண் டியா ஆகிய 14  தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது.  சிறுசிறு பிரச்சினைகள் தவிர்த்து வாக்குப்பதிவு அமை தியாக....... மேலும்

19 ஏப்ரல் 2019 16:42:04

95 மக்களவை தொகுதிகளுக்கு நடந்த 2ஆம் கட்ட தேர்தலில் 66 சதவீதம் வாக்குப்பதிவு

புதுடில்லி, ஏப். 19- நாட்டின் 17ஆவது மக்களவை தேர்தலின் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு விறு விறுப்பாக நேற்று நடந்தது. தமிழகம், புதுச்சேரி உட்பட 11 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 95 தொகுதிகளில் நடந்த தேர்தலில் 66 சதவீத வாக்குகள் பதிவாகின.  நாடு முழுவதும் 543 தொகு திகளுக்கான மக்களவை தேர் தல் 7 கட்டமாக நடக்கிறது. 91 தொகுதிகளுக்கான முதல் கட் டத் தேர்தல் கடந்த 11ஆம்....... மேலும்

19 ஏப்ரல் 2019 16:42:04

மோடிக்கு முழுப்பெரும்பான்மை கிடைக்காது பொருளாதார நிபுணர் ராகேஷ் ஜுன் ஜுன்வாலா

மும்பை ஏப் 19 பிரபல முதலீட்டாளரான ராகேஷ் ஜுன் ஜுன்வாலா நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு முழு பெரும்பான்மை கிடைக்காது என கூறி உள்ளார். இந்திய பங்குவர்த்தக சந்தையில் மிகவும் புகழ்பெற்ற முதலீட்டாளரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா பொருளாதாரம் மற்றும் அரசியல் உலகிலும் புகழ் பெற்றவராவார். இவருடைய கணிப்புக்களுக்கு அனைத்து துறையிலும் ஒரு தனி எதிர்பார்ப்பு உள்ளது. அவர் ஏற்கனவே இந்த தேர்தலில் மும்முனை தாக்குதல் இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தது போலவே....... மேலும்

19 ஏப்ரல் 2019 15:31:03

மன நோயாளிகளின் மரண தண்டனையை ரத்து செய்யலாம்

மன நோயாளிகளின் மரண தண்டனையை ரத்து செய்யலாம்

உச்சநீதிமன்றம் தீர்ப்பு சென்னை, ஏப்.19 மரண தண்டனை விதிக்கப்பட்ட பிறகு மன நோயால் பாதிக்கப் படும் கைதிகளுக்கு, அந்த தண்டனையை ரத்து செய்ய லாம் என்று உச்சநீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பளித்துள்ளது. கொலைக் குற்றச்சாட்டுக் குள்ளானவர்கள் மன நலம் பாதிக்கப்பட்டவர்களாக இருந் தால், அவர்களுக்கு மரண தண்டனையிலிருந்து விலக்கு அளிக்க தற்போது இந்திய குற்றவியல் சட்டத்தில் இடம் உண்டு. எனினும், மன நலத்துடன் இருக்கும்போது இழைத்த குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள், பிறகு சிறையில் இருக்கும்போது....... மேலும்

19 ஏப்ரல் 2019 14:57:02

ரஃபேல்: பாதுகாப்புத்துறைச் செயலாளர் எழுப்பிய கவலையை பாரிக்கர் குறைவாக மதிப்பிட்டு அலட்சியப்படுத்திவிட்டார்!

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, பிப்.12 -"ரஃபேல் போர் விமான பேரத்தில் பிரதமர் மோடியின் அலுவலகம் நேரடியாகத் தலையிட்டது தொடர்பாக பாதுகாப்புத் துறைச் செயலாளர் "கவலைகள் தெரிவித்து எழுதிய குறிப்பை அன்றைய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் குறைவாக மதிப்பிட்டு அலட்சியப்படுத்தி விட்டார். அதுகுறித்து அந்தக் குறிப்பின் 5ஆவது பத்தியில் அவர் தெரிவித்திருந்த (பேச்சு வார்த்தை நடைபெற்று வரும் இந்த நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்தாமல் இதில் சாதகமான நிலை ஏற்படாது என்று சந்தேகம் இருந்தால் உரிய நேரத்தில் பிரதமர் அலுவலகமே பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம் என்று கூறியிருந்த) கருத்தை "அளவுக்கு மீறிய எதிர்ச் செயல்பாடு என்று அவர் ஒதுக்கி விட்டார் என்ற உண்மையும் தற்போது வெளிப் படுத்தப்பட்டுள்ளது. "தி இந்து ஆங்கிலநாளேடு வெள்ளியன்று இந்தப் பிரச் சினையில் பிரதமர் மோடி நேரடியாகத் தலையிட்டார் என்ற தகவலை வெளியிட்டதால் பெரும் பரபரப்பு ஏற் பட்டது. இந்நிலையில், பிர தமர் அலுவலகத்தின் தலையீட் டின் மூலம் உருவாகியுள்ள பிரச்சினைகள் குறித்து "தி இந்து ஆங்கிலநாளேடு புதிய தகவல்களுடன் சிறப்புச் செய்தி ஒன்றை 9.2.2019 இதழில் வெளியிட்டுள்ளது அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:-

வெள்ளிக்கிழமை வெளியான "தி இந்து ஆங்கில நாளேட்டில் வெளியான சிறப்புச் செய்தியில் "ரஃபேல் போர் விமான பேரத்தில் பிரதமர்  அலுவலகம் தலையிட்டதற்கான புதிய ஆதாரம் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத் திய அரசு, அது குறித்து அன் றைய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் அந்தக் கோப்பில் என்ன எழு தினார் என்பதை வெளியிட்டு தங்கள் நிலையைக் காத்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. அதில் மனோகர் பாரிக்கர் பாதுகாப்புத்துறை, செயலாளர் தெரிவித்த கவலைகளை குறை வாக மதிப்பிட்டு அலட்சியப்படுத்தி விட்டார் என்பது தெரியவந்துள்ளது.

அளவுக்கு மீறிய  எதிர் செயல்பாடு

பாதுகாப்புத்துறைச் செயலாளர் மோகன்குமார் எழுதிய குறிப்புக்குக் கீழே அதே கோப்பில், அன்றையபாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், "பிரதமர் அலுவலகமும், பிரஞ்சு அதிபரின் அலுவலகமும் பிரச்சினைகள் நடை பெற்று வருவதை மேற்பார்வை செய்து வருவதாகத்தோன்றுகிறது. இது உச்ச மாநாட்டின் வெளிப்பாடுகளில் ஒன்றாகும். 5ஆவது பத்தியில் குறிப்பிடப் பட்டிருப்பது "அளவுக்கு மீறிய எதிர்ச் செயல்பாடாக உள்ளது. இந்தப் பிரச்சினையை பாது காப்புத் துறைச் செயலாளர் பிரதமரின் முதன்மைச் செயலா ளருடன் கலந்தாலோசனை செய்து தீர்வு கண்டிருக்கலாம் என்று குறிப்பு எழுதியுள்ளார். கோப்பில் அதிகாரிகள் குறிப் பிட்டுள்ள அனைத்து  உண்மை களையும், அது குறித்து "தி இந்து செய்தி வெளியிட்டிருந்ததையும் உண்மை என்று பாரிக்கர் எழுதியுள்ள குறிப்பு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

இதனை "அளவுக்கு மீறிய  செயல்பாடு என்று விமர்சித்த போதிலும், இது குறித்து  நேரடியாக பிரதமர் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு தீர்வு காணுமாறு குறிப்பிட்டு, பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொறுப்பை அமைச்சகத்தின் உயர் பொறுப்பில் உள்ள அதி காரியிடம் அமைச்சர் ஒப்படைத்துள்ளார்.

இது குறித்து நாடாளுமன் றத்தில் குறிப்பிட்ட பாதுகாப் புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் "பிரதமர் அலுவ லகத் தலையீடு பற்றி எழுப்பப்பட்டுள்ள கேள்விகள் "செத்தக் குதிரையை சாட்டையால் அடிக்கும் செயலாகும் என்று கூறியுள்ளார். இவ்வாறு "தி இந்து ஆங்கில நாளேட்டின் சிறப்புச் செய்தி யில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner