Banner
கூடங்குளம் அணுஉலை மிரட்டல்: 3 பேர் கைது +++ 44 குழந்தைகள் பலி: மருத்துவ அதிகாரி இடமாற்றம் +++ தூக்குத்தண்ட‌னையை நிறுத்தி வைத்த சர்தாரி +++ உலக செஸ் போட்டிகள்: 5 ஆவது சுற்று டிரா

ரயில்வே துறையை நவீனப்படுத்த ரூ.14 லட்சம் கோடியில் திட்டம்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, பிப். 3-புதிய தலை முறைக்கு ஏற்ப அடுத்த 10 ஆண்டு களில் ரயில்வே துறையை, அதி நவீன மயமாக்க ரூ.14 லட்சம் கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்று ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி கூறினார்.

இது பற்றி டெல்லியில் நேற்று அவர் அளித்த பேட்டி:

ரயில்வேயில் இப்போதுள்ள வசதி கள் காலம் கடந்தவை. புதிய தலை முறைக்கு ஏற்ப ரயில்வேயை அதி நவீனமயமாக்க ரூ.14லட்சம் கோடி செலவிலான திட்டம் தயாரிக்கப் பட்டுள்ளது. தானியங்கி சிக்னல், தண்டவாளங்களை பலப்படுத்துவது, நவீன ரயில்வே இன்ஜின்களை வாங் குவது போன்றவை இந்த திட்டத்தில் அடங்கும். இப்போதைய ரயில்வேயில், எல்லா மட்டத்திலும் மனிதர்களின் குறுக்கீடு இருக்கிறது. மனிதர்களின் தலையீடு இருக்கும் வரையில், தவறு கள் நடந்து கொண்டுதான் இருக்கும்.

இந்த நவீனமய திட் டத்தை மத்திய திட்டக் கமிஷன் ஆதரிக்கும் என்றும், திட்டத்துக்கு தேவையான நிதியுதவியை செய்யும் என்றும் எதிர் பார்க்கிறேன். இது தொடர் பாக திட்டக் கமிஷனுடன் தொடர்ந்து பேசி வருகி றேன். பிரதமரையும் விரை வில் சந்தித்து ஆலோசிப்பேன். இத் திட்ட செலவின் ஒரு பகுதியை தனியார் கூட்டு முயற்சி யுடன் ரயில்வே துறையே சமாளிக்கும்.

திட்டக் கமிஷனின் எண்ணத்துக்கு ஏற்ப இருந்தால்தான், இதுபோன்ற திட்டங்களுக்கு நிதியுதவி கிடைக்கும். ஏனெனில், திட்டக் கமிஷன் எல்லா வற்றையும் கழுகுப் பார்வையுடன் பார்க்கிறது. ரயில்வே துறைக்கு என தேசிய கொள்கையை வகுக்க வேண் டும். இது தொடர்பாக அனைத்து கட்சிகளுடனும் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். ரயில்வே நவீனமயமாக் கப்பட்டால், நாட்டின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் முக்கிய பங்காற் றும். இவ்வாறு திரிவேதி கூறினார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்

என்ன சொல்றீங்க?

திருவிழாக்களில் ஒரு வாரத்தில் 16 பேர் இறந்தனர்