
அய்தராபாத், மே.18- பல கோடி ரூபாய் சொத்துக் குவிப்பு புகாரில் சிக்கியுள்ள ஜெகன்மோகன் ரெட்டி யின் நிறுவனங்களின் சொத்துக் களைப் பறிமுதல் செய்ய சி.பி.அய். நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆந்திராவில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மருத்துவர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி முதல் அமைச்சர் பதவி வகித்தபோது, அதைப் பயன்படுத்தி அவரது மகன் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி வருமானத்துக்கு மீறி பல கோடி ரூபாய் சொத்துக்களை குவித் துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக சி.பி.அய். விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கிடையே ஜெகன்மோகன் ரெட்டிக்கு சொந்தமான டெலிவிஷன் சானல், பத்திரிகை மற்றும் ஒரு நிறுவனத்தின் வங்கிக்கணக்குகளை சி.பி.அய். கடந்த 10 நாட்களுக்கு முன்பு முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த ஜெகன்மோகன் ரெட்டி, ``எனது ஊடகங்களைக் குறிவைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை பட்டப்பகலில் நடந்த ஜனநாயகப் படுகொலை. அரசியல் ரீதியாக என்னை சந்திக்க முடியாமல் தோற் றுப்போனவர்கள், எனக்கு எதிராக சதித்திட்டம் தீட்டி உள்ளனர்'' என்றார்.
இந்த நிலையில், இதுவரை நடத் தியுள்ள விசாரணையின் அடிப்படை யில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு சொந்தமான டெலிவிஷன் சானல், பத்திரிகை மற்றும் ஒரு நிறுவனத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்ய சி.பி.அய். நடவடிக்கை எடுத்து வரு கிறது.
இது தொடர்பாக அனுமதி கோரி அரசுக்கு சி.பி.அய். கடிதம் எழுதி உள் ளது. அரசு அனுமதி கிடைத்தவுடன் இந்த 3 நிறுவனங்களின் சொத்துக் களும் பறிமுதல் செய்யப்படும் என சி.பி.அய். வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த நடவடிக்கை, ஜெகன் மோகன் ரெட்டிக்கு பெருத்த பின்ன டைவை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.