முன்பு அடுத்து Page:

மகாராஷ்டிரம்: 3 மாதங்களில் 639 விவசாயிகள் தற்கொலை

மகாராஷ்டிரம்: 3 மாதங்களில்  639 விவசாயிகள் தற்கொலை

        புதுடில்லி, ஜூலை 16 மகாராஷ்டிரத்தில் மூன்று மாதங்களில் மட்டும் கடன் சுமையால் 639 விவசாயிகள் தற்கொலை செய்து கொண் டனர் என்று அந்த மாநில வருவாய்த் துறை அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார். அவர்களில் 174 பேரின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்பட்டிருப் பதாகவும் அவர் கூறியுள்ளார். வறட்சி மற்றும் பயிர்க் கடன் சுமை காரணமாக விவ சாயிகள் தங்களது உயிரை மாய்த்துக் கொள்வது தொடர் கதையாக உள்ளது. நாட்டின் அனைத்து....... மேலும்

16 ஜூலை 2018 17:12:05

தேர்தல் வெற்றிக்காக மாந்திரீக பூஜை நடத்திய பாஜக!

   தேர்தல் வெற்றிக்காக  மாந்திரீக பூஜை நடத்திய பாஜக!

ராய்ப்பூர், ஜூலை 16 -சத்தீஸ்கர் மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்காக, பாஜக தலைமை மாந்திரீக பூஜை நடத் தியிருப்பது தெரிய வந்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் 2018 நவம்பர் மாதம் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு ஏற்கெனவே பாஜக-தான் ஆட்சியில் உள் ளது. ராமன் சிங் என்பவர் முதல்வராக இருக்கிறார். இந் நிலையில் வரப்போகும் தேர் தலிலும் வெற்றிபெற்று ஆட் சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக, மாந்திரீக பூஜை நடத்தியுள்ளனர். சட்டப்....... மேலும்

16 ஜூலை 2018 17:12:05

ராஜஸ்தானில் அரங்கேறிய தீண்டாமை கொடுமை தலித் சிறுமி தொட்ட மதிய உணவை நாய்க்கு கொட்டிய கொடூரம்!

   ராஜஸ்தானில் அரங்கேறிய தீண்டாமை கொடுமை  தலித் சிறுமி தொட்ட மதிய உணவை நாய்க்கு கொட்டிய கொடூரம்!

ஜெய்ப்பூர், ஜூலை 16 -பள்ளியில் சமைத்த மதிய உணவை   தொட்டு விட்டதாக கூறி அதனை நாய்க்குக் கொட்டிய அராஜகம் நடந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் கிராமத்திலேயே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இங்குள்ள அரசுப் பெண்கள் ஆரம்பப்பள்ளியில் மாணவர் களுக்கு வழங்குவதற்காக மதிய உணவாக ரொட்டி தயா ரிக்கப்பட்டுள்ளது. கமலா வைஷ்ணவ் என்ற பெண் உதவியாளர் இந்த உணவை சமைத்துள்ளார். இந்நிலையில், உணவை வாங்கும்போது ரொட்டி இருந்த பாத்திரத்தை தலித் மாணவி ஒருவர்....... மேலும்

16 ஜூலை 2018 17:06:05

சுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ.300 கோடி பணம்!

சுவிஸ் வங்கியில் உரிமை கோரப்படாமல் இருக்கும் இந்தியர்களின் ரூ.300 கோடி பணம்!

சுவிட்சர்லாந்து, ஜூலை 16- சுவிட்சர் லாந்து நாட்டு வங்கியில் இந்தியர்கள் டெபாசிட் செய்திருக்கும் ரூ.300 கோடி பணம் பல ஆண் டுகளாக உரிமை கோரப்படா மல் இருக்கும் தகவல் தெரிய வந்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டு வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்கள் உள்ளிட்ட அனைத்து நாட்டவர்களின் தகவல்களும் கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அந் நாட்டு அரசால் வெளியிடப் பட்டது. இதை பயன்படுத்தி, சுவிட்சர்லாந்து வங்கியில் இருக்கும் பணத்தை உண்மை யான....... மேலும்

16 ஜூலை 2018 14:40:02

மத்திய அரசு மீது மீண்டும் நம்பிக்கையில்லாத் தீர்மானம்

மத்திய அரசு மீது மீண்டும் நம்பிக்கையில்லாத் தீர்மானம்

தெலுங்கு தேசம் கட்சி முடிவு அய்தராபாத், ஜூலை 16 நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் மத்திய அரசுக்கு எதிராக மீண்டும் நம்பிக்கையில்லாத் தீர் மானம் கொண்டு வர தெலுங்கு தேசம் முடிவு செய்துள்ளதால் பாஜக அதிர்ச்சி அடைந்துள்ளது. ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு தகுதி கேட்டு, மத்திய அமைச்சரவையில் இருந்தும், பாஜக கூட்டணியில் இருந்தும் தெலுங்கு தேசம் கட்சி விலகியது. மேலும் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தது. தொடர்....... மேலும்

16 ஜூலை 2018 14:20:02

மதக்கலவரத்துக்கு வித்திடும் சாமியார்!

மதக்கலவரத்துக்கு வித்திடும் சாமியார்!

அய்தராபாத்துக்குள் நுழைய ஆறு மாதத்துக்கு  தடை : காவல்துறை அறிவிப்பு அய்தராபாத், ஜூலை 16 அய்தராபாத் நகரில்   சிறீ பீடம் சுவாமி பரிபூர்னானந்தா   காவல் துறையினரால் கடந்த இரண்டு நாள்களாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். அய் தராபாத் நகருக்குள் நுழைய அவருக்கு ஆறு மாதத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. காவல்துறை ஆணையர் அஞ்ஜனி குமார் தெலங்கானா மாநில சமூக விரோத மற்றும் இடையூறு தடுப்புச்சட்டம் 1980 இன்படி, அய்தராபாத் காவல்துறை ஆணையர் அஞ்ஜனி குமார் இந்த ஆணையை....... மேலும்

16 ஜூலை 2018 14:20:02

நீதித்துறையில் சீர்திருத்தங்கள் தேவையில்லை, புரட்சிதான் தேவை

நீதித்துறையில் சீர்திருத்தங்கள் தேவையில்லை, புரட்சிதான் தேவை

உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகோய் புதுடில்லி, ஜூலை 16 சாமானிய மக்களுக்கும் பயன்படும் வகையில் நீதித் துறை செயல்பட வேண்டும் என்றால், இத்துறையில் சீர் திருத்தங்கள் தேவையில்லை; புரட்சிதான் தேவை என்று உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதி ரஞ்சன் கோகோய் தெரிவித் துள்ளார். இப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வரும் அக் டோபர் 2-இல் ஓய்வு பெற இருக்கிறார். அதன் பிறகு ரஞ்சன் கோகோய் அப்பொ றுப்பை....... மேலும்

16 ஜூலை 2018 14:20:02

அமித்ஷா சொன்னது உண்மையா?

தமிழகத்தில் 9.7.2018 அன்று தன் கட்சி உறுப்பினர்களிடையே பேசிய பாஜக தலைவர் அமித்ஷா, தமிழகத்திற்கு ரூ.5,10,000 கோடி அள்ளிக் கொடுத்ததாக, உண்மைக்கு மாறான தகவலை சொல்லி சென்றிருக்கிறார். 13 ஆவது அய்ந்தாண்டு திட்ட காலத்தில் ஒதுக்கப்பட்ட நிதி தமிழகத்திற்கு போதுமானதல்ல என்பது உண்மை. ஆனால், அடுத்த அய்ந்தாண்டு காலத்திற்கு வெறும் 10 ஆயிரம் கோடி ரூபாயை கூடுதலாகக் கொடுத்து விட்டு, அது ஒரு இமாலய சாதனை என்பது போல பேசியிருக்கிறார். 15 ஆவது....... மேலும்

16 ஜூலை 2018 14:20:02

வளர்ச்சி வளர்ச்சி என்று கூறி மத்தியில் ஆட்சிக்கு வந்தவர்களின் லட்சணம் பாரீர்!

4 ஆண்டு கால ஆட்சியில் 2,920 கலவரங்கள்; 389 பேர் பலி - 8890 பேர் படுகாயம் புதுடில்லி, ஜூலை 16 -பாஜ.க.வின் கடந்த 4 ஆண்டு ஆட்சியில் நடந்த வகுப்புக் கலவரங்களில் 389 பேர் பலியானதாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விபரத்தில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைத்தது. இப்போது, 4 ஆண்டுகள் முடிந்துள்ளது. இது பற்றி மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்....... மேலும்

16 ஜூலை 2018 13:59:01

முகப்பவுடரைப் பயன்படுத்தியதால் புற்றுநோய் 22 பெண்களுக்கு ரூ.32,200 கோடி இழப்பீடு நிறுவனத்துக்கு உத…

முகப்பவுடரைப் பயன்படுத்தியதால் புற்றுநோய்  22 பெண்களுக்கு ரூ.32,200 கோடி இழப்பீடு  நிறுவனத்துக்கு உத்தரவு

    புதுடில்லி, ஜூலை 15 பிரபல நிறுவனத்தின் முகப் பவுடரைப் பயன்படுத்தியதால், தங்களுக்கு கருப்பை புற்று நோய் வந்துள்ள தாகக் கூறி, அந்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்திருந்த 22 பெண்களுக்கு 470 கோடி டாலர் (சுமார் ரூ.32,200 கோடி) இழப்பீடு வழங்க, அமெரிக் காவின் மிஸரி மாகாணம், செயின்ட் லூயிஸ் நகரிலுள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஜான்ஸன் அண்டு ஜான்ஸன் நிறுவனம், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் குழந்தை களுக்கான....... மேலும்

15 ஜூலை 2018 15:32:03

வேலையின்மை, குறைவான ஊதியம் ஏன்? பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, டிச. 5 நாட்டில் வேலையின்மை பிரச்சினை ஏன் தொடர்கிறது? தொழிலாளர்களுக்கு குறைவான ஊதியம் ஏன் வழங்கப்படுகிறது? ஆகிய கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்று காங்கிரசு துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலை யொட்டி, பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி தினமும் ஒரு கேள்வியை எழுப்பி வரு கிறார். அந்த வரிசையில், ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில் திங்கள்கிழமை கூறியிருப்பதாவது: நாட்டில் வேலையின்மை பிரச்னை முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று பாஜக வாக்குறுதி அளித் திருந்தது. அந்த வாக்குறுதியை பிரதமர் மோடி இன்னும் நிறைவேற்றாதது ஏன்? குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.18,000 வழங்க வேண்டும் என்று ஏழாவது ஊதி யக் குழு பரிந்துரை செய்துள்ளது. இருந்த போதிலும், நிரந்தரத் தொழிலாளர்கள் மாதம் ரூ.10 ஆயிரமும், ஒப்பந்தத் தொழிலாளர்கள் மாதம் 5,500 ரூபாயும் பெறுவது ஏன்? என்று ராகுல் காந்தி அந்த சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஒக்கி புயல் காரணமாக, கடலில் தத்தளித்த மீனவர்களை, துணிச்சலுடன் காப்பாற்றிய லட்சத் தீவுகளைச் சேர்ந்த மக்களுக்கு தலை வணங்குவதாகவும் மற்றொரு பதிவில் ராகுல் காந்தி குறிப்பிட் டுள்ளார். மேலும், புயலால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர் வலி யுறுத்தியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner