முன்பு அடுத்து Page:

சிபிஅய் செயல்பாடுகளுக்கான பொது ஒப்புதல்

ஆந்திர அரசு திரும்பப் பெற்றது அமராவதி, நவ. 17- ஆந்திர மாநிலத்தில் சிபிஅய் அமைப்பு தனது அதிகாரத்தை செயல் படுத்துவதற்காக வழங்கியி ருந்த பொது ஒப்புதலை அந்த மாநில அரசு திரும்பப் பெற்று உள்ளது. எனவே, இனி ஆந்திரத்தில் சிபிஅய் வழக்கு விசாரணையை மேற்கொள்வதாக இருந்தால் மாநில அரசிடம் உரிய முன் அனுமதி பெற்றாக வேண்டும். இதுதொடர்பாக உள்துறை முதன்மைச் செயலர் ஏ.ஆர். அனுராதா கடந்த 8-ஆம் தேதி பிறப்பித்த ரகசிய அரசு உத்த....... மேலும்

17 நவம்பர் 2018 15:25:03

ரபேல் போர் விமான ஒப்பந்தத்துக்கு பிரான்சு அரசு உத்தரவாதம் தரவில்லை

  ராகுல் காந்தி குற்றச்சாட்டு புதுடில்லி, நவ.17 ‘‘ரபேல் போர் விமான ஒப்பந்தத்துக்கு பிரான்ஸ் அரசு உத்தரவாதம் அளிக்கவில்லை’’ என்று காங் கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். பிரான்சு நாட்டிடம் இருந்து 36 ரபேல் ரக போர் விமானங் களை கொள்முதல் செய்ய கடந்த 2016ஆம் ஆண்டு மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இதில், ஊழல் நடைபெற்றுள்ள தாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இதை மத்திய பாஜ அரசு மறுத்து வருகிறது. இந்நிலையில்,....... மேலும்

17 நவம்பர் 2018 15:02:03

அயோத்தியில் விஎச்பி, சிவசேனாவினர் வருகை அதிகரிப்பால் முசுலிம்கள் அச்சம்

அயோத்தி, நவ.17 ராமர் கோயில் -பாபர் மசூதி மீதான மேல்முறையீட்டு வழக்கை உச்ச நீதிமன்றம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துக்கு ஒத்தி வைத்துள்ளது. இதனால் ஏற்பட்ட அதிருப்தியால் இந்துத்துவா அமைப்புகள் ராமர் கோயில் கட்டு வதில் தீவிரம் காட்டி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக அயோத்தியில் வெளியாட்கள் அதிக அளவில் குவியத் தொடங்கி உள்ளனர். இதேபோன்ற நடவடிக்கை தான், கடந்த டிசம்பர் 6, 1992-இல் பாபர் மசூதி இடிப்பிற்கு....... மேலும்

17 நவம்பர் 2018 15:02:03

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கக்கோரும் வழக்கு 27ஆம் தேதிக்கு ஒத்திவைப்ப…

  புதுடில்லி, நவ. 16- தமிழக சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர் செல்வம், கே.பாண்டியராஜன், என்.நடராஜ் உள்ளிட்ட 7 எம். எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தகுதி நீக்கம் செய்யப் பட்ட எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் ஆகி யோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இதைப்போல ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல். ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க. கொறடா சக்கர பாணியும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த....... மேலும்

16 நவம்பர் 2018 14:33:02

பாதுகாப்புத்துறையை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு ஊழியர்கள் தொடர் போராட்டம் அறிவிப்பு!

புதுடில்லி, நவ. 16 -மத்திய அரசுக்கு எதிராக, மத்தியப் பாதுகாப்புத்துறை ஊழியர்கள், ஜனவரி மாதம் போராட்டம் அறிவித்துள்ளனர். பாதுகாப்புத் துறையை தனியார் மயமாக்குவதற்குக் கண்டனம் தெரிவித்து, ஜனவரி 23 முதல் 25 வரை மூன்று நாட்களுக்கு இப்போராட்டம் நடைபெறும் என்று ராணுவப் பாதுகாப்புத் துறை ஊழியர்கள் சங்க நிர்வாகி சிறீகுமார் தெரிவித்துள்ளார். எதைத் தனியார் மயம், உலகமயம் ஆக்க வேண்டும்; எதை ஆக்கக் கூடாது என, பிரதமர் மோடிக்கு தெரியாது என்றெல்லாம்....... மேலும்

16 நவம்பர் 2018 14:02:02

நகரங்களின் பெயர்களை மாற்றுவதால் வறுமை, வேலையின்மைக்கு தீர்வு ஏற்படுமா?

பா.ஜ.க.வுக்கு சரத்பவார் கேள்வி மும்பை, நவ.16 நகரங்களின் பெயர்களை பாஜ ஆளும் மாநில அரசுகள் மாற்றி வருவதற்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கண்டனம்  தெரிவித்துள்ளார். நகரங்களின் பெயர்களை மாற்றுவதால் வறுமை மற்றும் வேலையின்மை போன்ற முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்பட்டு விடுமா?  என்று பவார் கேள்வி எழுப்பினார். நாட்டின் முதலா வது கல்வி அமைச்சர் மவுலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாள் விழா  மும்பையில் நடந் தது........ மேலும்

16 நவம்பர் 2018 14:02:02

மோடியால் திறந்து வைக்கப்பட்ட படேல் சிலை முன்பு வேலைகேட்டுமுற்றுகையிட்ட ஆறு கிராம விவசாயிகள்

நர்மதா, நவ.16 ஒற்றுமைச் சிலை என்று மோடியால் வர்ணிக்கப்பட்ட சர்தார் படேல் சிலையை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.குஜராத் மாநிலம் நர்மதாமாவட்டத்தில் உலகின் மிக உயரமான சிலை என்ற அறிவிப்புடன், சர்தார் வல்லபாய் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். நர்மதை ஆற்றின் குறுக்கே, சர்தார் சரோவர் அணைக்கட்டை ஒட்டியே, சிலையின் கட்டுமானங்கள் அமைந்துள்ளன. முன்னதாக, இந்த அணை கட்டுமானப் பணிக்காக, 6 கிராம மக்களிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டது. அப்போது, அவர்களுக்கு....... மேலும்

16 நவம்பர் 2018 13:17:01

பலே, கேரள அரசு உறுதி!

பலே, கேரள அரசு உறுதி!

சபரிமலை : உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவது அனைவரது கடமை அனைத்துக்கட்சி கூட்டத்தில் கேரள முதல்வர் வேண்டுகோள் திருவனந்தபுரம், நவ.16- சபரிமலை செல்ல வயது வேறுபாடு இல்லாமல் அனைத்து பெண்களுக்கும்அனுமதியளித்துஉச்சநீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பை அமல் படுத்தும் கடமை அனைவருக்கும் உள்ளது எனவும், இதுகுறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். அரசால் இதற்குமேல் என்ன செய்ய முடியும் என ஆலோசிப்பதாகவும், தீர்ப்பை அமல் படுத்தாமல்....... மேலும்

16 நவம்பர் 2018 13:17:01

மத்தியப்பிரதேசத்தில் ஹர்திக், ஜிக்னேஷ், கன்னய்யாகுமார் பரப்புரை

குஜராத்தைப்போல் பாஜகவுக்கு எதிராக பலரையும் அணிதிரட்டி களமிறங்கும் காங்கிரஸ் போபால், நவ.15 மத்தியப்பிரதேச மாநிலத்தில்   நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் எப்போதுமில்லாத அளவுக்கு பாஜகவுக்கு எதிராக களமி றங்கி தொடர்ச்சியாக தீவிரப் பரப்புரை செய்யப்போவதாக காங்கிரஸ் தரப்பு கூறுகிறது. ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற் றும் சத்தீஸ்கர் மாநிலங்களின் சட்டப் பேரவை ஆயுட்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதமும், மிசோரம் மாநில சட்டப்பேரவை ஆயுட்காலம் டிசம்பர் 15ஆம் தேதியும் நிறைவடைகிறது. முதல் கட்டமாக....... மேலும்

15 நவம்பர் 2018 15:23:03

ஜாதி, மத, பாலின வேறுபாடுகளால் இந்தியாவின் வளர்ச்சியில் பின்னடைவு! ஆய்வில் தகவல்

அகமதாபாத், நவ. 15 -குஜராத் மாநிலம் வதோத ராவைச் சேர்ந்த சகஜ் எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனம், 2030-இல் சமத்துவ அளவீ டுகள் என்ற தலைப்பில் வேறு சில அமைப்பு களுடன் இணைந்து ஆய்வொன்றை நடத்தி யுள்ளது. இதில், ஜாதி, மதம் மற்றும் பாலின வேறுபாடுகள் இந்தியாவின் வளர்ச்சியை பின்னோக்கிக் கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளது.ஒருபக்கம் இந்தியா பொரு ளாதார வளர்ச்சியில் வலுப்பெறுகிறது; மறுபக்....... மேலும்

15 நவம்பர் 2018 15:23:03

மூண்டு விட்டது ஆரியர் - திராவிடர் போர்! ஆரியர் திராவிடர் விவாதத்திற்கு நாம் மீண்டும் திரும்பவேண்டுமா?

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


பசுப்பாதுகாப்பு மசோதா விவகாரத்தில் சி.பி.அய். செயலாளர் டி ராஜா எம்.பி. ஆவேசம்!

புதுடில்லி, பிப்.3 சக மனிதர் களைக் கொல்ல பசுவை ஆயுத மாகப் பயன்படுத்துகின்றனர், பசுப்பாதுகாப்பு மசோதாவைக் கொண்டுவந்தால் ஆரியர் திரா விடர் விவாதத்தைக் கையிலெ டுக்க மத்திய அரசு நினைக்கிறதா? என்று மாநிலங்களவையில் இந் திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப் பினர் டி.ராஜா கடுமையாகச் சாடினார்.

மாநிலங்களவையில் பசுப் பாதுகாப்பு மசோதா, 2017 குறித்து பேசிய டி.ராஜா, சுப் பிரமணியன் சுவாமி கருத்தை எதிர்ப்பதா கவும், மசோதாவை கடுமையாக எதிர்ப் பதாகவும் தெரிவித் தார்: சக மனிதர் களைக் கொல்லுவ தற்கான வெறுப்பு ஆயுதமாக பசு பயன்படுத்தப்படு கிறது. சுப்பிர மணியன் சுவாமி இது பற்றி சிந்திக்க வேண்டும். சுவாமியை மத்திய அரசு ஆதரிக்கிறதா எதிர்க்கிறதா என்பதில் தங்கள் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.

தலித்துகள், முஸ்லிம்கள் அடித்துக் கொல்லப்படுகின்றனர். மாநிலங்களவையில் நாம் இந்த கும்பல் படுகொலைகள் பற்றி விவாதித்துள்ளோம்.

இந்த மசோதா, பசுக் கண் காணிப்புத்துவத்தை நியாயப் படுத்துகிறது. இதுகுறித்த விவா தங்களுக்கு சுப்பிரமணியன் சுவாமி திரும்பிச் செல்ல வேண் டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவர் மகாத்மா காந்தி பெயரைப் பயன்படுத்தியது எனக்கு அதிர்ச் சியளித்தது. ஏன் சுவாமி எருமை களைப் பற்றி பேசவில்லை?

சுப்பிரமணியன் சுவாமி சொல்வதை மத்திய அரசு கேட்டு நடந்து கொண்டால் ஆரியர்கள் ஆரியர் அல்லாதோர் என்ற விவா தத்துக்கு நாம் திரும்ப வேண்டி வரும் என்று எச்சரிக்கிறேன். பசுவின் பெயரால் மக்களைப் பிரித்தாள்கிறீர்கள். நாடு ஏற்கெ னவே இதனால் துன் பங்களை அனுப வித்து விட்டது.

மக்கள் என்ன சாப்பிட வேண்டும் சாப்பிடக் கூடாது என்று அரசு ஆணையிட முடி யாது. இந்த மசோதா நிறைவேற் றப்பட்டால், நாடு சவாலான காலங்க ளுக்குள் செலுத்தப் படும். இந்திய தாயின் பெயரில் கேட்டுக் கொள்கிறேன். இந்த மசோதாவை தயவுகூர்ந்து மறுத்து விடுங்கள்.

முன்னதாக சுப்பிரமணியன் சுவாமி பேசும்போது, "பிரிட்டீஷார் கள்தான் பசுவைக் கொல்லுவதை ஒரு மோஸ்தராக உருவாக்கினார் கள். நவீன அறிவியல் கூறுகிறது பசுவினால் பல பயன்கள் உண்டு என்று. நவீன அலோபதி மருந் துகளைத் தயாரிக்க யூரியா பயன்படுத்தப் படுகிறது. பசுவின் சிறுநீரை மருந்தில் பயன்படுத்த அமெரிக்கா அனுமதி வழங்கி யுள்ளது. நம் முன்னோர்களான ரிஷிகளும் பசுக்களின் முக்கியத் துவத்தை வலியுறுத்தியுள்ளனர். இந்தக் காரணங்களுக்காக பசுக் களை பாதுகாப்பது அவசியம்.

ஒவ்வொரு கிராமத்திலும் பசுப்பாதுகாப்பிடங்களை நாம் உருவாக்க வேண்டும். ஏனெனில் பசு இறைச்சிக்கு அதிகப்படியான ஏற்றுமதி விலை கிடைக்கிறது. எனவே கடும் தண்டனைகள் தேவைப்படுகிறது. மரண தண் டனை வேண்டும் என்றார் சுப்பிரமணியன் சுவாமி.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner