முன்பு அடுத்து Page:

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கக்கோரும் வழக்கு 27ஆம் தேதிக்கு ஒத்திவைப்ப…

  புதுடில்லி, நவ. 16- தமிழக சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர் செல்வம், கே.பாண்டியராஜன், என்.நடராஜ் உள்ளிட்ட 7 எம். எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தகுதி நீக்கம் செய்யப் பட்ட எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் ஆகி யோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இதைப்போல ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல். ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க. கொறடா சக்கர பாணியும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த....... மேலும்

16 நவம்பர் 2018 14:33:02

பாதுகாப்புத்துறையை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு ஊழியர்கள் தொடர் போராட்டம் அறிவிப்பு!

புதுடில்லி, நவ. 16 -மத்திய அரசுக்கு எதிராக, மத்தியப் பாதுகாப்புத்துறை ஊழியர்கள், ஜனவரி மாதம் போராட்டம் அறிவித்துள்ளனர். பாதுகாப்புத் துறையை தனியார் மயமாக்குவதற்குக் கண்டனம் தெரிவித்து, ஜனவரி 23 முதல் 25 வரை மூன்று நாட்களுக்கு இப்போராட்டம் நடைபெறும் என்று ராணுவப் பாதுகாப்புத் துறை ஊழியர்கள் சங்க நிர்வாகி சிறீகுமார் தெரிவித்துள்ளார். எதைத் தனியார் மயம், உலகமயம் ஆக்க வேண்டும்; எதை ஆக்கக் கூடாது என, பிரதமர் மோடிக்கு தெரியாது என்றெல்லாம்....... மேலும்

16 நவம்பர் 2018 14:02:02

நகரங்களின் பெயர்களை மாற்றுவதால் வறுமை, வேலையின்மைக்கு தீர்வு ஏற்படுமா?

பா.ஜ.க.வுக்கு சரத்பவார் கேள்வி மும்பை, நவ.16 நகரங்களின் பெயர்களை பாஜ ஆளும் மாநில அரசுகள் மாற்றி வருவதற்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கண்டனம்  தெரிவித்துள்ளார். நகரங்களின் பெயர்களை மாற்றுவதால் வறுமை மற்றும் வேலையின்மை போன்ற முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்பட்டு விடுமா?  என்று பவார் கேள்வி எழுப்பினார். நாட்டின் முதலா வது கல்வி அமைச்சர் மவுலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாள் விழா  மும்பையில் நடந் தது........ மேலும்

16 நவம்பர் 2018 14:02:02

மோடியால் திறந்து வைக்கப்பட்ட படேல் சிலை முன்பு வேலைகேட்டுமுற்றுகையிட்ட ஆறு கிராம விவசாயிகள்

நர்மதா, நவ.16 ஒற்றுமைச் சிலை என்று மோடியால் வர்ணிக்கப்பட்ட சர்தார் படேல் சிலையை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.குஜராத் மாநிலம் நர்மதாமாவட்டத்தில் உலகின் மிக உயரமான சிலை என்ற அறிவிப்புடன், சர்தார் வல்லபாய் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். நர்மதை ஆற்றின் குறுக்கே, சர்தார் சரோவர் அணைக்கட்டை ஒட்டியே, சிலையின் கட்டுமானங்கள் அமைந்துள்ளன. முன்னதாக, இந்த அணை கட்டுமானப் பணிக்காக, 6 கிராம மக்களிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டது. அப்போது, அவர்களுக்கு....... மேலும்

16 நவம்பர் 2018 13:17:01

பலே, கேரள அரசு உறுதி!

பலே, கேரள அரசு உறுதி!

சபரிமலை : உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவது அனைவரது கடமை அனைத்துக்கட்சி கூட்டத்தில் கேரள முதல்வர் வேண்டுகோள் திருவனந்தபுரம், நவ.16- சபரிமலை செல்ல வயது வேறுபாடு இல்லாமல் அனைத்து பெண்களுக்கும்அனுமதியளித்துஉச்சநீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பை அமல் படுத்தும் கடமை அனைவருக்கும் உள்ளது எனவும், இதுகுறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். அரசால் இதற்குமேல் என்ன செய்ய முடியும் என ஆலோசிப்பதாகவும், தீர்ப்பை அமல் படுத்தாமல்....... மேலும்

16 நவம்பர் 2018 13:17:01

மத்தியப்பிரதேசத்தில் ஹர்திக், ஜிக்னேஷ், கன்னய்யாகுமார் பரப்புரை

குஜராத்தைப்போல் பாஜகவுக்கு எதிராக பலரையும் அணிதிரட்டி களமிறங்கும் காங்கிரஸ் போபால், நவ.15 மத்தியப்பிரதேச மாநிலத்தில்   நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் எப்போதுமில்லாத அளவுக்கு பாஜகவுக்கு எதிராக களமி றங்கி தொடர்ச்சியாக தீவிரப் பரப்புரை செய்யப்போவதாக காங்கிரஸ் தரப்பு கூறுகிறது. ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற் றும் சத்தீஸ்கர் மாநிலங்களின் சட்டப் பேரவை ஆயுட்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதமும், மிசோரம் மாநில சட்டப்பேரவை ஆயுட்காலம் டிசம்பர் 15ஆம் தேதியும் நிறைவடைகிறது. முதல் கட்டமாக....... மேலும்

15 நவம்பர் 2018 15:23:03

ஜாதி, மத, பாலின வேறுபாடுகளால் இந்தியாவின் வளர்ச்சியில் பின்னடைவு! ஆய்வில் தகவல்

அகமதாபாத், நவ. 15 -குஜராத் மாநிலம் வதோத ராவைச் சேர்ந்த சகஜ் எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனம், 2030-இல் சமத்துவ அளவீ டுகள் என்ற தலைப்பில் வேறு சில அமைப்பு களுடன் இணைந்து ஆய்வொன்றை நடத்தி யுள்ளது. இதில், ஜாதி, மதம் மற்றும் பாலின வேறுபாடுகள் இந்தியாவின் வளர்ச்சியை பின்னோக்கிக் கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளது.ஒருபக்கம் இந்தியா பொரு ளாதார வளர்ச்சியில் வலுப்பெறுகிறது; மறுபக்....... மேலும்

15 நவம்பர் 2018 15:23:03

தபோல்கர் கொலை வழக்கு சி.பி.அய்., நடவடிக்கை

புனே, நவ.15  சமூக ஆர்வலர் தபோல்கர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டோர் மீது, சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, நீதிமன் றத்தில், சி.பி.அய்., தெரிவித்துள்ளது. மகாராட்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ.க., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தின், புனேயைச் சேர்ந்த, சமூக ஆர்வலர், ....... மேலும்

15 நவம்பர் 2018 15:23:03

வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது ஜி.எஸ்.எல்.வி. மார்க்3- டி2 ராக்கெட்

வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது ஜி.எஸ்.எல்.வி. மார்க்3- டி2 ராக்கெட்

சிறீஅரிகோட்டா, நவ.15 ஜிசாட்-29 தகவல் தொடர்பு செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3-டி2 ராக்கெட் சிறீஅரிகோட்டா சதீஷ் தவண் விண்வெளி ஆராய்ச்சி மய்யத் தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து புதன்கிழமை வெற் றிகரமாக விண்ணில் செலுத் தப்பட்டது. கஜா புயல் காரணமாக புதன்கிழமை இரவு முதல் பலத்த காற்று, மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மய்யம்....... மேலும்

15 நவம்பர் 2018 15:07:03

குஜராத் கலவரம்: மோடியை எதிர்த்து வழக்கு

புதுடில்லி, நவ.15 குஜராத் தில் 2002-ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிக்கப்பட்டது. இதில் கரசேவகர்கள் பலர் இறந்தனர். இதை கண்டித்து மாநிலம் முழுவதும் கலவரம் வெடித் தது. அப்போது ஏராளமானோர் கொல்லப்பட்டனர். அப்போது குஜராத் முதல் அமைச்சராக நரேந்திர மோடி இருந்தார். அவர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது....... மேலும்

15 நவம்பர் 2018 15:07:03

இந்து மதம் சிங்கமாம்; மற்ற மதங்கள் நாய்களாம் ஆர்.எஸ்.எஸ். தலைவரின் பேச்சுக்கு நாடெங்கும் கண்டனம்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, செப்.10- அமெரிக்காவின் சிகாகோ நகரில் இரண்டாவது உலக இந்து மாநாடு நடைபெற்றது. செப்டம்பர் 7 அன்று இந்த மாநாட்டில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசுகையில், இந்துக்களுக்கு அடக்குமுறை எண்ணம் இல்லை. எங்களின் செல்வாக்குக்கு வெற்றியோ அல்லது குடியேற்றமோ காரணம் அல்ல. இந்து சமூகம் ஒரு குழுவாக இணைந்து செயல்படும்போதுதான் அது செழிப்படைய முடியும். சிங்கம் தனியாக இருந்தால் காட்டு நாய்கள் சேர்ந்து அதை அழித்துவிடும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது என்று கூறினார். அவரது இந்தப்பேச்சுக்குப் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஏஅய்எம்அய்எம் கட்சித் தலைவர் ஒவைசி கூறுகையில், நாய்கள் என்று கூறுவதன் மூலம் மற்ற மக்களைஆர்எஸ்எஸ் தாழ்த்தப் பார்க்கிறது. தங்களை வேங்கைகள் என்றும் கருதிக்கொள்கிறார்கள் என்றார்.

டாக்டர் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர், எதிர்க்கட்சிகளைத்தான் நாய்கள் என மோகன் பகவத் கூறியுள்ளார் என்று குற்றம்சாட்டினார். மோகன் பகவத்தின் இந்த மனநிலையைக் கண்டிக்கிறேன். கட்சிகள் ஆட்சிக்கு வரும்; போகும்.

ஆனால், அவரது இந்த மனநிலை, எதிர்க்கட்சிகள் தங்களை எதிர்த்துப் போராட முடியாது என்பதைக் காட்டுகிறது என்று கூறியுள்ளார். எந்த மதத்தையும் இவ்வாறு குறிப்பிடுவது தவறு என்று காங்கிரசு மூத்த தலைவர் சச்சின் சவாந்த் கூறியுள்ளார்.

தேசியவாத காங்கிரசு கட்சியின் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் கூறுகையில், இந்துக்களுக்கு எதிரானது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சித்தாந்தம். ஜாதி அரசியல் எப்படி செய்ய வேண்டும் என்பது மட்டுமே அவர்களுக்குத் தெரியும் என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner