முன்பு அடுத்து Page:

போலி செய்தி பரவுவதை தடுக்க நடவடிக்கை: ராகுல் ஆலோசனை

போலி செய்தி பரவுவதை தடுக்க நடவடிக்கை: ராகுல் ஆலோசனை

புதுடில்லி, நவ. 13- சுட்டுரை (டுவிட்டர்) தலைமை செயல் அதிகாரி ஜாக் டோர்ஸியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை நேரில் சந்தித்தார். அப்போது, போலி செய்திகள் பரவுவதை தடுப்ப தற்கான நடவடிக்கைகள் குறித்து ஜாக் டோர்ஸி ராகுலிடம் விளக்கமளித்தார். இது தொடர்பாக ராகுல் காந்தி தனது சுட்டுரையில் கூறியிருப்பதாவது, "உலகம் முழு வதும் விவாத நிலைகளில் மிக வும் மேலாதிக்கம் கொண்டதாக....... மேலும்

13 நவம்பர் 2018 16:38:04

தெலங்கானா பேரவைத் தேர்தல் மகா கூட்டணி வெற்றி பெறும்

காங்கிரஸ் சென்னை, நவ.13 தெலங்கானா மாநிலத்தில் டிசம்பரில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்த லில் காங்கிரஸ் தலைமையிலான மகா கூட்டணி வெற்றிபெறும் என்று அக்கட்சி கூறியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் ராஜீவ் சுக்லா செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: தனி தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்ட பிறகு தனது தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை காங்கிரஸுடன் இணைந்து,....... மேலும்

13 நவம்பர் 2018 16:08:04

மோடி ஆட்சியில் நாடா? காடா இது?

ரத யாத்திரையை தடுப்பவர்களின் தலைகள் நசுக்கப்படுமாம்! பாஜ மகளிரணி தலைவர் சொல்லுகிறார் மால்டா, நவ.13 பாஜ.வின் ரத யாத்திரையை தடுப்பவர்களின் தலைகள்,சக்கரங்களின்கீழ் வைத்துநசுக்கப்படும் என்று பாஜ மகளிரணி தலைவர் ஒருவர் கூறியுள்ளார். இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மேற்குவங்க மாநிலத்தில் 42 மக்களவை தொகுதிகளிலும் ரத யாத்திரை நடத்த பாஜ முடிவு செய்துள்ளது. இதன்மூலம் மக் களின் கவனத்தை கவர்ந்து....... மேலும்

13 நவம்பர் 2018 15:39:03

சபரிமலைக்கு எந்த மதத்தினரும் செல்லலாம் உயர்நீதிமன்றத்தில் கேரள அரசு தகவல்

திருவனந்தபுரம், நவ.13 பா.ஜனதாவை சேர்ந்த பிரமுகர் டி.ஜி.மோகன்தாஸ் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் சபரிமலை அய்யப்பன் கோவிலில் இந்துக்கள் அல்லா தவர்களையும், சிலையை வழி படாதவர்களையும் அனுமதிப் பதை தடுக்கவேண்டும் என்று கோரி இருந்தார். மேலும் இது உச்சநீதிமன் றத்தில் தீர்ப்புக்கும், 1965-ம் ஆண்டின் கேரள அரசின் பொது இடங்கள் வழிபாட்டு நுழைவு அங்கீகார சட்டத்துக் கும் எதிரானது என்றும் குறிப்பிட்டு இருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து....... மேலும்

13 நவம்பர் 2018 15:14:03

கடந்த ஓராண்டில் 25 நகரங்களின் பெயரை மாற்ற மத்திய அரசு அனுமதி

  புதுடில்லி, நவ. 13- நாடு முழுவதும் கடந்த ஓராண்டில் 25 நகரங்கள், கிராமங்களின் பெயர்களை மாற்ற மத்திய அரசு அனுமதி தந்துள்ளது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சக மூத்த அதிகாரி கூறியதாவது: கடந்த ஓராண் டில் நாடு முழுவதும் 25 நகரங் கள், கிராமங்களின் பெயர்களை மாற்ற உள்துறை அமைச்சகம் அனுமதி தந்துள்ளது. இதில், கடைசியாக அலகா பாத் பெயரை ‘பிரயாக்ராஜ்’ என்றும் பைசாபாத் பெயரை ‘அயோத்தியா’ என்றும் மாற்....... மேலும்

13 நவம்பர் 2018 15:14:03

வேட்பாளர்களின் குற்றப்பின்னணி தகவல்கள் ஊடகங்களில் வெளியிட வேண்டும்

தேர்தல் ஆணையம் அறிவிப்பு புதுடில்லி, நவ. 13-  மத்திய பிரதேசம், ராஜஸ் தான், சத்தீஷ்கார், மிசோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர் தல் நடக்கிறது. இந்த தேர்தல்களில் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு களை தேர்தல் ஆணையம் தீவிரமாக அமல்படுத்தி உள்ளது. இது தொடர்பான ஒரு அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 10-ந் தேதி வெளியிட்டு இருப்பது இப்போது தெரியவந்திருக்கிறது. அதில் கூறி இருப்ப தாவது:- *....... மேலும்

13 நவம்பர் 2018 15:14:03

ஊழல் இல்லாத கட்சியாம் பா.ஜ.க.

பா.ஜனதா முன்னாள் அமைச்சர் ஜனார்த்தனரெட்டி லஞ்ச வழக்கில் கைது பெங்களூர், நவ.13 பெங்களூருவை சேர்ந்த நிதி நிறுவன அதிபர் சையத் அக மது பரீத். அதிகவட்டி தருவ தாக கூறி பொதுமக்களிடம் பணத்தை பெற்று, அதனை திரும்ப கொடுக்காமல் ரூ.600 கோடி வரை மோசடி செய்ததாக இவர் மீது குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் நிதி நிறுவன அதிபர் சயைத் அகமது பரீத்....... மேலும்

13 நவம்பர் 2018 13:46:01

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வழக்கு தலைமை செயலருக்கு உச்சநீதிமன்றம், 'தாக்கீத'

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வழக்கு தலைமை செயலருக்கு உச்சநீதிமன்றம், 'தாக்கீத'

புதுடில்லி, நவ.11  ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது நடந்த பணப்பட்டுவாடா தொடர்பான வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக் கம் அளிக்கும்படி, தமிழக தலைமை செயலருக்கு உச்சநீதி மன்றம், தாக்கீது அனுப்ப உத்தரவிட்டுள்ளது. கடந்த, 2016, டிசம்பரில், அ.தி.மு.க., பொதுச் செயலரும், தமிழக முதல்வருமான ஜெய லலிதா மரணம் அடைந்தார். இதையடுத்து, காலியான, ஆர். கே.நகர் சட்டசபை தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதற்கிடையில், கட்சியில்....... மேலும்

13 நவம்பர் 2018 11:17:11

இந்திய பொருளாதார தளர்ச்சி மந்த நிலையிலே மூடிஸ் அமைப்பு தகவல்

புதுடில்லி, நவ. 11 இந்திய பொருளாதார வளர்ச்சி மந்தமான நிலையில் இருப்பதாக சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் கூறியுள்ளது. 2019-ஆம் ஆண்டில் 7.3 சதவிகிதம் மட்டுமே பொருளாதார வளர்ச்சி இருக்கும் என்றும் அது தெரிவித்துள்ளது. நீண்டகாலமாக பணப்புழக்கத்தில் காணப்பட்ட மந்த நிலையால் தனியார் கடன் நிறுவனங்களின் கடன் வழங்கும் விகிதம் குறைந் துள்ளது. சர்வதேச அளவில்....... மேலும்

13 நவம்பர் 2018 11:16:11

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்காக பாஜக மன்னிப்பு கோர வேண்டும்

மாயாவதி, அகிலேஷ் வலியுறுத்தல் புதுடில்லி, நவ.11 மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வி யடைந்துவிட்டது; இதற்காக, நாட்டு மக்களிடம் பாஜக மன்னிப்பு கோர வேண்டும் என்று பகுஜன் சமாஜ் தலை வர் மாயாவதி, சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் வலியுறுத்தி யுள்ளனர். மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டு, 2....... மேலும்

13 நவம்பர் 2018 11:16:11

பா.ஜ ஆட்சியை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகள் தீவிரம் மல்லிகார்ஜூன கார்கே

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, செப். 10- ராகுல் தலைமையை எதிர்க்கட்சிகள் ஏற்றுக் கொள்வது இன்றோ அல்லது நாளையோ  தானா கவே நடக்கும் என மக்களவை காங்கிரசு தலைவர் மல்லிகார் ஜூன கார்கே நம்பிக்கை தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் அடுத் தாண்டு நடைபெற உள்ளது. மத்தியில் பா.ஜ ஆட்சியை வீழத்த எதிர்க்கட்சிகளை ஒற்றி ணைக்கும் முயற்சிகள் தீவிர மாக நடந்து வருகின்றன. எதிர்க் கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதும் இப்போது முடிவு செய்யப்படவில்லை. அது தேர் தலுக்குப் பிறகு முடிவு செய்யப் படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், காங்கிரசு மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அளித்த பேட்டி: பா.ஜ ஆட்சியை அகற்ற நாட்டு மக் கள், ராகுல் காந்தியை எதிர் பார்த்துள்ளனர். அவரது பணியை எல்லோரும் புகழ்கின்றனர். அவர் எங்கு சென்றாலும் மக்கள் கூட்டம் இருக்கிறது. இதுவே அவரை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பதை காட்டுகிறது. இதுபோல், மக்கள் ஏற்றுக் கொள்ளும் ஒரு தலைவர் புதுச்சேரியில் இருந்து காஷ்மீர் வரைக்கும், மேற்கு வங்கத்திலிருந்து குஜராத் வரைக்கும் யார் இருக்கிறார்? ராகுலை தவிர வேறு யாரும் இல்லை.

எனவே, எதிர்க்கட்சிகள் அவரது தலைமையை ஏற்பது இன்றோ அல்லது நாளையோ தானாகவே நடக்கும். அடுத் தாண்டு தேர்தல், பா.ஜ ஆட் சியை அகற்றும் கொள்கை போராட்டமாக இருக்க வேண் டும் என்பதில் ராகுல் உறுதி யாக உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner