முன்பு அடுத்து Page:

புதுவைத் தமிழ் சங்கப் பொன்விழா தமிழ் மாநாடு - 2019

புதுவைத் தமிழ் சங்கப் பொன்விழா தமிழ் மாநாடு - 2019

புதுவைத் தமிழ் சங்கப் பொன் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழர் தலைவர் அவர்களுக்கு தமிழ் சங்கத் தலைவர் முனைவர் வி.முத்து நினைவு பரிசு வழங்கினார். (புதுச்சேரி & 16.2.2019) புதுவைத் தமிழ் சங்கப் பொன் விழாவில் "தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?" என்ற நூலினை தமிழ்ச் சங்கத் தலைவர் முத்து வெளியிட வழக்குரைஞர் சி.பி. திருநாவுக்கரசு பெற்றுக் கொண்டார். மேடையில் சுமார் 70க்கு மேற்பட்டோர் நூல்களை பெற்றுக் கொண்டனர்.  மேலும்,....... மேலும்

17 பிப்ரவரி 2019 14:52:02

அரசுக்கும் வீரர்களுக்கும் முழு ஆதரவாக இருப்போம்- ராகுல் காந்தி உறுதி

புதுடில்லி, பிப்.17 புல்வாமா தாக்குதல் குறித்துப் பேசிய  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, எந்த சக்தியாலும் தேசத்தைப் பிரிக்க முடியாது எனவும் அரசுக்கும் வீரர்களுக்கும் முழு ஆதரவாக இருப்போம் என்றும் தெரிவித்துள்ளார். டில்லியில் செய்தியாளர் களிடம் பேசிய ராகுல் காந்தி, ‘’இந்திய அரசுக்கும் ராணுவ வீரர் களுக்கும் நானும் எனது காங்கிரசு கட்சியும் உறுதுணையாக இருப் போம். அடுத்த இரண்டு நாட் களுக்கு மற்ற எந்தப் பேச்சுவார்த் தையும் இல்லை. இது வருத்தத்துக்கான,....... மேலும்

17 பிப்ரவரி 2019 14:50:02

தொலைக்காட்சி, வானொலி, இணையதளத்தில் அரசு விளம்பரங்கள் அய்ந்தாண்டுகளில் ரூ.2,374 கோடி செலவு: மத்திய …

புதுடில்லி, பிப்.17 தொலைக் காட்சி, வானொலி, இணைய தளத்தில் அரசு விளம்பரங்களை வெளியிடுவதற்காக கடந்த அய்ந்து ஆண்டுகளில் ரூ.2,374 கோடி ரூபாய் செலவிடப்பட் டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், விளம்பரப் பலகை களுக்காக ரூ.670 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறியும் உரிமைச் சட்டத்தின்கீழ்  கேட்கப் பட்ட கேள்விகளுக்கு பதிலளித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: தொலைக்காட்சி, வானொலி, இணையதளம் போன்ற மின் னணு....... மேலும்

17 பிப்ரவரி 2019 14:48:02

ஆதார்-பான் இணைப்புக்கு மார்ச் 31 கடைசி தேதி

ஆதார்-பான் இணைப்புக்கு மார்ச் 31 கடைசி தேதி

புதுடில்லி, பிப்.17 வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் தங்களது பான் எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டியது கட்டாயம் என்று வலியுறுத்தியுள்ள மத்திய நேரடி வரிகள் ஆணையம் (சிபிடிடி), வரும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் ளாக அதை நிறைவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. ஆதார்- - பான் இணைப்பை மேற்கொள்ளாமலேயே 2018- - 2019 காலகட்டத்துக்கான வரு மான வரிக் கணக்கை தாக்கல் செய்ய இரு நபர்களுக்கு தில்லி....... மேலும்

17 பிப்ரவரி 2019 14:20:02

பாகிஸ்தான் பொருள்களுக்கான இறக்குமதி வரி 200 சதவிகிதமாக உயர்வு

புதுடில்லி, பிப்.17  புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் எதி ரொலியாக, பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு இறக் குமதி செய்யப்படும் அனைத்துப் பொருள்களுக்கும் இறக்குமதி வரியை 200 சதவீதமாக இந்திய அரசு உயர்த்தியுள்ளது. இந்திய அரசின் இந்த முடிவால், பாகிஸ்தானுக்கு ரூ.3,482.3 கோடி அளவுக்கு வர்த் தகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து....... மேலும்

17 பிப்ரவரி 2019 14:19:02

கன்னடர்களுக்கு தனியார் நிறுவன வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு கருநாடக அமைச்சரவை முடிவு

பெங்களூரு, பிப்.16 தனியார் நிறுவன வேலை வாய்ப்புகளில் கன்னடர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க கருநாடக அமைச் சரவை முடிவு செய்துள்ளது. கருநாடக அமைச்சரவை கூட்டம் முதல்- அமைச்சர் குமாரசாமி தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நடை பெற்றது. இதில் அமைச்சர்கள், அதி காரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து பஞ்சாயத்து ராஜ் மற்றும் கிராம வளர்ச்சித் துறை அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா நிருபர்களிடம் கூறியதாவது:- சரோஜினி மகிசி அறிக்கையின்படி....... மேலும்

16 பிப்ரவரி 2019 16:14:04

நிறுவனம் திவாலாகி விட்டதாக கூறிய அனில் அம்பானிக்கு ரபேலுக்கு மட்டும் முதலீடு செய்ய பணம் இருக்கிறதா?…

புதுடில்லி, பிப். 16 -இந்தி யாவின் பிரபல தொழிலதி பரும், பிரதமர் மோடியின் நண்பருமான அனில் அம் பானியின் ‘ஆர்காம்’ என்னும் ‘ரிலையன்ஸ் கம்யூனிகே ஷன்ஸ்’ நிறுவனமானது, தொலைத் தொடர்பு சேவையில் ‘எரிக்சன்’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது. இந்த வகையில், எரிக்சன் நிறுவனத்திற்கு, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ரூ. 1,600 கோடி பணம் தர வேண்டி யுள்ளது. இதில், முதற்கட்ட மாக ரூ. 550 கோடியை, 2018 டிசம்பருக்குள் தருமாறு உச்ச நீதிமன்றம்....... மேலும்

16 பிப்ரவரி 2019 16:14:04

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர சந்திரபாபுநாயுடு மு…

அமராவதி, பிப்.16 மின் னணு வாக்கு இயந்திரங்களில் முறைகேடு நடைபெற வாய்ப் புள்ளதால், இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். அமராவதியிலிருந்து நேற்று முன்தினம் டெலிகான்பரன்ஸ் மூலம் ஆந்திர மாநில கட்சி நிர்வாகிகளுடன் சந்திரபாபு நாயுடு உரையாற்றினார். அவர் பேசியதாவது: பல்வேறு கட்சிகளின் கருத் தின்படி, மின்னணு வாக்கு இயந்திரங்களில் இம்முறை முறைகேடு நடக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே, இதுதொடர்பாக உச்ச நீதி....... மேலும்

16 பிப்ரவரி 2019 16:10:04

குருமூர்த்தியை ரிசர்வ் வங்கி இயக்குநராக நியமித்த ரகசியம் என்ன?

குருமூர்த்தியை ரிசர்வ் வங்கி இயக்குநராக நியமித்த ரகசியம் என்ன?

விளாசுகிறார் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் கவுடா புதுடில்லி, பிப்.16 மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ரிசர்வ் வங்கி நிர்வாக இயக்குநர் பதவிக்கு குருமூர்த்தியை நியமித்தது தொடர்பாக பொய்யான தகவல் கூறுகிறார் என்று குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் கவுடா இது தொடர்பாக அருண் ஜெட்லி தனது பதவிக்கே களங்கம் ஏற்படுத்திவிட்டதாகக் கூறினார். துக்ளக் இதழ் ஆசிரியரும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தீவிர செயல் பாட்டாளரும், பாஜகவின் அரசியல் ஆலோசகராகவும்....... மேலும்

16 பிப்ரவரி 2019 15:47:03

கல்வித் துறைக்கென்று வசூலிக்கப்பட்ட வரி ரூ.1 லட்சம் கோடியை மாணவர்களுக்கு செலவிடாமல் ஏமாற்றிய மோடி அர…

புதுடில்லி, பிப்.16 2018&20-19ஆம் நிதியாண்டுக்கான மத்தியஅரசின் வரவு - செலவுகள் குறித்த, தணிக்கை அறிக்கையை, மத்திய தலைமைக் கணக்கு தணிக்கை அதிகாரி தற்போது வெளியிட்டுள்ளார். இந்நிலையில், அதில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் இருப்பது தெரியவந்துள்ளது.மோடி அரசு, தனது நிர்வாக செலவுகளுக்காக, ரூ. 99 ஆயிரத்து 610 கோடியை ஊதாரித்தனமாக செலவிட்டுள்ளது ஒருபுறம் என்றால், மற்றொரு புறம் 18 வகையான திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை....... மேலும்

16 பிப்ரவரி 2019 15:08:03

10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க முடிவெடுத்தது எப்படி?

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தகவல் அறியும் சட்டத்தின்கீழ் விவரம் அளிக்க மத்திய அரசு மறுப்பு

புதுடில்லி, பிப்.12 பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதற்கு முடிவெடுத்தது தொடர்பான விவ ரங்களை அளிக்க மத்திய அரசு மறுத்து விட்டது. இதுதொடர்பாக, வெங்கடேஷ் நாயக் என்ற தன்னார்வ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையிடம் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தார்.

ஆனால், அவரது மனுவுக்கு அரசு தரப்பில் இருந்து பதிலளிக்கப்படவில்லை. இதுகுறித்து அந்த அமைச்சகம் அளித்த பதிலில், அமைச்சர்கள், செயலர்கள் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்கும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவரங்களை வெளியிடுவதில் இருந்து தகவல் உரிமைச் சட்டத்தின் 8 (1)ஆவது பிரிவில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கு எப்படி முடிவெடுக்கப்பட்டது என்பது தொடர்பான விவரங்களை வெளியிட முடியாது.

அதே நேரத்தில், கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள் எடுத்த முடிவுகள் தொடர்பான விவரங்களை வெளியிடலாம் என்று அந்த அமைச்சகம் பதிலளித்துள்ளது. இதுகுறித்து வெங்கடேஷ் நாயக், ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: 10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக விவாதிப் பதற்கு நடைபெற்ற மத்திய அமைச்சரவையின் குறிப்புகளின் நகல்களை அளிக்குமாறு கேட்டிருந்தேன். அதற்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் மறுத்து விட்டது.

மேலும், அனைத்து துறைகளின் குறிப்புகள், நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்கள் ஆகியவற்றை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், அவற்றை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு மத்திய தகவல் ஆணையம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அதன்படி, அந்த விவரங்கள், இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வில்லை. கல்வி, அரசு வேலைவாய்ப்புகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறையை மத்திய அரசு கடந்த 1-ஆம் தேதியே அமல்படுத்திவிட்டது.

ஆனால், அந்த இடஒதுக்கீடு இன்னமும் அமல்படுத்தப்படாததுபோல் எனக்கு பதிலளிக்கப் பட்டுள்ளது. இதுதொடர்பாக, மேல்முறையீடு செய்ய இருக்கிறேன் என்றார் அவர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner