முன்பு அடுத்து Page:

காங்கிரசில் இணைந்தார் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்

காங்கிரசில் இணைந்தார் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்

புதுடில்லி, ஏப். 25  வடமேற்கு டில்லி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் உதித் ராஜ், அக் கட்சியில் இருந்து விலகி காங் கிரசில் இணைந்தார். வடமேற்கு டில்லி (தனி) மக்களவைத் தொகுதி பாஜக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருபவர் உதித் ராஜ். தற்போதைய மக்களவைத் தேர் தலில், பாஜக சார்பில் அவ ருக்கு மீண்டும் வாய்ப்பு வழங் கப்படவில்லை. கடந்த 5 ஆண் டுகளாக வடமேற்கு டில்லி தொகுதியில்....... மேலும்

25 ஏப்ரல் 2019 17:24:05

கேரளத்தில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 77.68 சதவிகித வாக்குப்பதிவு

திருவனந்தபுரம், ஏப். 25- கேரளத் தில் செவ்வாய்க்கிழமை நடை பெற்ற மக்களவைத் தேர்தலில், 77.68 சதவீத வாக்குகள் பதிவா கியுள்ளன. இது கடந்த 30 ஆண்டுகளில் நடைபெற்ற தேர் தல்களில் அதிகபட்சமாகும். இதற்கு முன்பாக, கடந்த 1989-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 79.3 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது. மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வரு கிறது. கேரளத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி முன்னணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய ஜனநாயக....... மேலும்

25 ஏப்ரல் 2019 17:24:05

வாக்கு ஒப்புகைச் சீட்டு சரிபார்ப்பு விவகாரம் உச்சநீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சீராய்வு மனு தாக்கல…

புதுடில்லி, ஏப்.25, மக்களவைத் தேர் தலில் ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 5 வாக்குச் சாவடிகளில், வாக்கு ஒப்புகைச் சீட்டுகள் சரிபார்க்கப்பட வேண்டும் என்று கடந்த 8-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை சீராய்வு செய்யக் கோரி எதிர்க்கட்சித் தலைவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு தலைமையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரு....... மேலும்

25 ஏப்ரல் 2019 16:11:04

கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் ஏழைகள், பழங்குடியினருக்கு பாஜக அநீதி

கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் ஏழைகள், பழங்குடியினருக்கு பாஜக அநீதி

காங்கிரஸ் தலைவர் ராகுல் குற்றச்சாட்டு துங்கர்பூர், ஏப். 25- கடந்த 5 ஆண்டுகால பாஜ ஆட்சியில் ஏழைகள், பழங்குடியினத்தவர் உள்ளிட்ட நலிந்த பிரிவினருக்கு பாஜக அநீதி இழைத்துள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். ராஜஸ்தானில் வரும் 29ஆம் தேதி மற்றும் மே 6ஆம் தேதி என 2 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு காங்கி ரஸ் தலைவர்....... மேலும்

25 ஏப்ரல் 2019 16:07:04

'பாஜகவிற்கு வாக்களியுங்கள்!'

வாக்குப்பதிவு கருவிக்கு அருகில் நின்று கட்டளை இட்ட அதிகாரி பெங்களூரு, ஏப். 25- மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட தேர்தல் பெங்களூரு நகரில் நேற்று (ஏப். 23) முன்தினம் நடந்தது.  காலை 7 மணிக்கு இங்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மத்திய பெங்களூரு தொகுதியில் உள்ள பென்சன் டவுன் வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவு மும்முரமாக நடைபெற்றுக் கொண் டிருந்தது. அந்தப் பகுதியின் வாக்காளரான சையத் ஜாகிர்....... மேலும்

25 ஏப்ரல் 2019 16:07:04

தொடர்ந்து தேர்தல் விதிமுறைகளை மதிக்கத் தவறும் மோடியும் பாஜக வேட்பாளர்களும்

அகமதாபாத், ஏப். 25 நாடாளுமன்ற தேர்தல் பல கட்டங்களாக தொடர்ந்து நடந்து வருகிறது, குஜராத் மற்றும் கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது, குஜராத் மாநிலம் அகமதாபாத் ரானிப் பகுதியில் உள்ள நிஷான் மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் மோடி தமது வாக்கை பதிவு செய்தார். அப்போது, வெளியில் காத்திருந்த பாஜக வினர், மோடி, மோடி என உற் சாக முழக்கமிட்டனர். வாக்குச் சாவடியை விட்டு வெளியில் வந்த....... மேலும்

25 ஏப்ரல் 2019 16:07:04

குறைந்தபட்ச வருவாய் உறுதி திட்டம்: எதிர்பார்த்ததை விட வரவேற்பை பெற்றுள்ளது அரசியல் ஆய்வாளர்கள் கரு…

 குறைந்தபட்ச வருவாய் உறுதி திட்டம்:  எதிர்பார்த்ததை விட வரவேற்பை பெற்றுள்ளது அரசியல் ஆய்வாளர்கள் கருத்து

புதுடில்லி, ஏப் 25 குறைந்த பட்ச வருவாய் உறுதித் திட்டம் எதிர்பார்த்ததைவிட அதிக வரவேற்பை பெற்றுள்ளதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அரசியல் வல்லுநர்கள் கூறும்போது, 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் குறைந்தபட்ச வருவாய் உறுதித் திட்டம் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தேர்தல் வாக்குறுதியாக உள்ளது. ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் தொகையை 20 சதவீத பரம ஏழைகளின் கணக்கில் வரவு வைப்பதே இந்த திட்டத்தின் முக்கிய குறிக்கோள். இந்த திட்டத்தை செயல்படுத்த காங்கிரஸ்....... மேலும்

25 ஏப்ரல் 2019 16:00:04

சிரிக்காதீர்கள், இதுதான் "ஹிந்துத்துவா - வி(அ)ஞ்ஞானம்!''

சிரிக்காதீர்கள், இதுதான்

"பசுவை தடவுவதால் எனது ரத்த அழுத்தம் குணமானது!'' "பசு மூத்திரம் குடித்ததால் எனது மார்பகப் புற்றுநோய் குணமானது!''  -சாமியாரணி பிரக்யாசிங் மேலும்

25 ஏப்ரல் 2019 15:44:03

விவசாயத்துக்கு தனி நிதிநிலை அறிக்கை: ராகுல்

லக்கிம்பூர் கேரி, ஏப்.25 உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி, உன்னா ஆகிய இடங் களில் நேற்று காங்கிரஸ் தலை வர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சார கூட்டங்களில் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:- காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், விவசாயத்துக்கு தனி நிதிநிலை தாக்கல் செய்யப் படும். ஒரு பொது நிதி நிலை அறிக்கையும், ஒரு விவசாய நிதி நிலை அறிக்கையும்....... மேலும்

25 ஏப்ரல் 2019 15:44:03

மோடி பிரதமராக இல்லை; விளம்பரம் தேடிக் கொள்ளும் நபராக இருக்கிறார்: பிரியங்கா

உ.பி., ஏப்.25   பிரதமர் நரேந்திர மோடி விளம்பரப் பிரியர் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா விமர்சித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தின்புந் தேல்கண்ட் பகுதியில் புதன் கிழமை பிரச்சாரம் மேற் கொண்ட அவர் பிரதமர் மோடியை கடுமையாக விமர் சித்தார். அப்போது,"மோடிபிரதம ராக இல்லை. தனக்கு விளம் பரம் தேடிக் கொள்ளும் நப ராகவே இருக்கிறார். புந்தேல் கண்ட் பகுதியில் வரலாறு காணாத வறட்சி நிலவும் நேரத் தில், பிரதமர் பயணிக்கும் சாலைகளைலாரிகளில்தண் ணீர்....... மேலும்

25 ஏப்ரல் 2019 15:44:03

மோடி அரசை கண்டித்து உண்ணாநிலை போராட்டம்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நிறைவு செய்தார் சந்திரபாபு நாயுடு

புதுடில்லி, பிப். 12- ஆந்திர மாநிலத்துக்கு சிறப்புத் தகுதி  வழங்கப்படும் என முன்னர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாத மோடி தலைமையிலான அரசை கண்டித்து டில்லியில் சந்திர பாபு நாயுடு நேற்று உண்ணா நிலை போராட்டம் மேற்கொண்டார். டில்லியில் உள்ள ஆந்திர பவனில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த உண்ணாநிலைப் போராட்டத் துக்கு பல்வேறு கட்சி தலை வர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.

ராகுல்

காங்கிரசுக் கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், "ஆந் திர மக்களுக்கும், மாநிலத்துக் கும் ஆதரவாக நான் இருப் பேன். ஆந்திர மக்களிடமிருந்து பணத்தைத் திருடி, பிரதமர் மோடி, அனில் அம்பானிக்கு கொடுத்திருக்கிறார் எனக் கூறினார்.

கேஜ்ரிவால்

முதல்வர் கேஜ்ரிவால் பேசு கையில் பிரதமர் மோடி, பாஜகவுக்கு மட்டும் பிரதமர் அல்ல. ஒட்டுமொத்த நாட்டுக் கும் அவர் தான் பிரதமர். ஆனால் அந்த எண்ணம் துளியும் இல் லாமல் அவர் மாநில அரசுகள் மீது காழ்புணர்ச்சியுடன் செயல் படுகிறார்.

மேற்குவங்கம், டில்லி, ஆந்திரா என எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநில அரசுக ளுக்கு தொந்தரவு கொடுப்ப தையும், அந்த மாநிலங்களை புறக்கணிப்பதையும் வாடிக்கை யாக வைத்துள்ளார். இந்தியா வுக்கு பிரதமர் போல அவர் செயல்படவில்லை. மாறாக பாகிஸ்தான் பிரதமர் போன்று செயல்படுகிறார் எனக் கூறி னார்.

முன்னாள் பிரதமர் மன் மோகன் சிங், முன்னாள் பிரத மர் தேவேகவுடா, ஜம்மு-காஷ் மீர் தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் நாடாளு மன்ற உறுப்பினர் மஜீத் மேமன், திரிணாமுல் காங்கி ரஸ் நாடா ளுமன்ற உறுப்பினர் டெரெக் ஓ ப்ரெயென், சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா உள்ளிட்டோர் கோரிக்கை வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், கடந்த 12 மணி நேரமாக கடைபிடித்து வந்த தனது உண்ணாநிலை இரவு 8 மணியளவில் சந்திர பாபு நாயுடு நிறைவு செய்தார். முன்னாள் பிரதமர் தேவேக வுடா அவருக்கு பழச்சாறு அளித்து போராட்டத்தை முடித்து வைத்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner