முன்பு அடுத்து Page:

புதுவைத் தமிழ் சங்கப் பொன்விழா தமிழ் மாநாடு - 2019

புதுவைத் தமிழ் சங்கப் பொன்விழா தமிழ் மாநாடு - 2019

புதுவைத் தமிழ் சங்கப் பொன் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழர் தலைவர் அவர்களுக்கு தமிழ் சங்கத் தலைவர் முனைவர் வி.முத்து நினைவு பரிசு வழங்கினார். (புதுச்சேரி & 16.2.2019) புதுவைத் தமிழ் சங்கப் பொன் விழாவில் "தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?" என்ற நூலினை தமிழ்ச் சங்கத் தலைவர் முத்து வெளியிட வழக்குரைஞர் சி.பி. திருநாவுக்கரசு பெற்றுக் கொண்டார். மேடையில் சுமார் 70க்கு மேற்பட்டோர் நூல்களை பெற்றுக் கொண்டனர்.  மேலும்,....... மேலும்

17 பிப்ரவரி 2019 14:52:02

அரசுக்கும் வீரர்களுக்கும் முழு ஆதரவாக இருப்போம்- ராகுல் காந்தி உறுதி

புதுடில்லி, பிப்.17 புல்வாமா தாக்குதல் குறித்துப் பேசிய  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, எந்த சக்தியாலும் தேசத்தைப் பிரிக்க முடியாது எனவும் அரசுக்கும் வீரர்களுக்கும் முழு ஆதரவாக இருப்போம் என்றும் தெரிவித்துள்ளார். டில்லியில் செய்தியாளர் களிடம் பேசிய ராகுல் காந்தி, ‘’இந்திய அரசுக்கும் ராணுவ வீரர் களுக்கும் நானும் எனது காங்கிரசு கட்சியும் உறுதுணையாக இருப் போம். அடுத்த இரண்டு நாட் களுக்கு மற்ற எந்தப் பேச்சுவார்த் தையும் இல்லை. இது வருத்தத்துக்கான,....... மேலும்

17 பிப்ரவரி 2019 14:50:02

தொலைக்காட்சி, வானொலி, இணையதளத்தில் அரசு விளம்பரங்கள் அய்ந்தாண்டுகளில் ரூ.2,374 கோடி செலவு: மத்திய …

புதுடில்லி, பிப்.17 தொலைக் காட்சி, வானொலி, இணைய தளத்தில் அரசு விளம்பரங்களை வெளியிடுவதற்காக கடந்த அய்ந்து ஆண்டுகளில் ரூ.2,374 கோடி ரூபாய் செலவிடப்பட் டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், விளம்பரப் பலகை களுக்காக ரூ.670 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறியும் உரிமைச் சட்டத்தின்கீழ்  கேட்கப் பட்ட கேள்விகளுக்கு பதிலளித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: தொலைக்காட்சி, வானொலி, இணையதளம் போன்ற மின் னணு....... மேலும்

17 பிப்ரவரி 2019 14:48:02

ஆதார்-பான் இணைப்புக்கு மார்ச் 31 கடைசி தேதி

ஆதார்-பான் இணைப்புக்கு மார்ச் 31 கடைசி தேதி

புதுடில்லி, பிப்.17 வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் தங்களது பான் எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டியது கட்டாயம் என்று வலியுறுத்தியுள்ள மத்திய நேரடி வரிகள் ஆணையம் (சிபிடிடி), வரும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் ளாக அதை நிறைவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. ஆதார்- - பான் இணைப்பை மேற்கொள்ளாமலேயே 2018- - 2019 காலகட்டத்துக்கான வரு மான வரிக் கணக்கை தாக்கல் செய்ய இரு நபர்களுக்கு தில்லி....... மேலும்

17 பிப்ரவரி 2019 14:20:02

பாகிஸ்தான் பொருள்களுக்கான இறக்குமதி வரி 200 சதவிகிதமாக உயர்வு

புதுடில்லி, பிப்.17  புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் எதி ரொலியாக, பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு இறக் குமதி செய்யப்படும் அனைத்துப் பொருள்களுக்கும் இறக்குமதி வரியை 200 சதவீதமாக இந்திய அரசு உயர்த்தியுள்ளது. இந்திய அரசின் இந்த முடிவால், பாகிஸ்தானுக்கு ரூ.3,482.3 கோடி அளவுக்கு வர்த் தகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து....... மேலும்

17 பிப்ரவரி 2019 14:19:02

கன்னடர்களுக்கு தனியார் நிறுவன வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு கருநாடக அமைச்சரவை முடிவு

பெங்களூரு, பிப்.16 தனியார் நிறுவன வேலை வாய்ப்புகளில் கன்னடர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க கருநாடக அமைச் சரவை முடிவு செய்துள்ளது. கருநாடக அமைச்சரவை கூட்டம் முதல்- அமைச்சர் குமாரசாமி தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நடை பெற்றது. இதில் அமைச்சர்கள், அதி காரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து பஞ்சாயத்து ராஜ் மற்றும் கிராம வளர்ச்சித் துறை அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா நிருபர்களிடம் கூறியதாவது:- சரோஜினி மகிசி அறிக்கையின்படி....... மேலும்

16 பிப்ரவரி 2019 16:14:04

நிறுவனம் திவாலாகி விட்டதாக கூறிய அனில் அம்பானிக்கு ரபேலுக்கு மட்டும் முதலீடு செய்ய பணம் இருக்கிறதா?…

புதுடில்லி, பிப். 16 -இந்தி யாவின் பிரபல தொழிலதி பரும், பிரதமர் மோடியின் நண்பருமான அனில் அம் பானியின் ‘ஆர்காம்’ என்னும் ‘ரிலையன்ஸ் கம்யூனிகே ஷன்ஸ்’ நிறுவனமானது, தொலைத் தொடர்பு சேவையில் ‘எரிக்சன்’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது. இந்த வகையில், எரிக்சன் நிறுவனத்திற்கு, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ரூ. 1,600 கோடி பணம் தர வேண்டி யுள்ளது. இதில், முதற்கட்ட மாக ரூ. 550 கோடியை, 2018 டிசம்பருக்குள் தருமாறு உச்ச நீதிமன்றம்....... மேலும்

16 பிப்ரவரி 2019 16:14:04

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர சந்திரபாபுநாயுடு மு…

அமராவதி, பிப்.16 மின் னணு வாக்கு இயந்திரங்களில் முறைகேடு நடைபெற வாய்ப் புள்ளதால், இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். அமராவதியிலிருந்து நேற்று முன்தினம் டெலிகான்பரன்ஸ் மூலம் ஆந்திர மாநில கட்சி நிர்வாகிகளுடன் சந்திரபாபு நாயுடு உரையாற்றினார். அவர் பேசியதாவது: பல்வேறு கட்சிகளின் கருத் தின்படி, மின்னணு வாக்கு இயந்திரங்களில் இம்முறை முறைகேடு நடக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே, இதுதொடர்பாக உச்ச நீதி....... மேலும்

16 பிப்ரவரி 2019 16:10:04

குருமூர்த்தியை ரிசர்வ் வங்கி இயக்குநராக நியமித்த ரகசியம் என்ன?

குருமூர்த்தியை ரிசர்வ் வங்கி இயக்குநராக நியமித்த ரகசியம் என்ன?

விளாசுகிறார் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் கவுடா புதுடில்லி, பிப்.16 மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ரிசர்வ் வங்கி நிர்வாக இயக்குநர் பதவிக்கு குருமூர்த்தியை நியமித்தது தொடர்பாக பொய்யான தகவல் கூறுகிறார் என்று குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் கவுடா இது தொடர்பாக அருண் ஜெட்லி தனது பதவிக்கே களங்கம் ஏற்படுத்திவிட்டதாகக் கூறினார். துக்ளக் இதழ் ஆசிரியரும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தீவிர செயல் பாட்டாளரும், பாஜகவின் அரசியல் ஆலோசகராகவும்....... மேலும்

16 பிப்ரவரி 2019 15:47:03

கல்வித் துறைக்கென்று வசூலிக்கப்பட்ட வரி ரூ.1 லட்சம் கோடியை மாணவர்களுக்கு செலவிடாமல் ஏமாற்றிய மோடி அர…

புதுடில்லி, பிப்.16 2018&20-19ஆம் நிதியாண்டுக்கான மத்தியஅரசின் வரவு - செலவுகள் குறித்த, தணிக்கை அறிக்கையை, மத்திய தலைமைக் கணக்கு தணிக்கை அதிகாரி தற்போது வெளியிட்டுள்ளார். இந்நிலையில், அதில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் இருப்பது தெரியவந்துள்ளது.மோடி அரசு, தனது நிர்வாக செலவுகளுக்காக, ரூ. 99 ஆயிரத்து 610 கோடியை ஊதாரித்தனமாக செலவிட்டுள்ளது ஒருபுறம் என்றால், மற்றொரு புறம் 18 வகையான திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை....... மேலும்

16 பிப்ரவரி 2019 15:08:03

மாநிலங்களுக்கு தரவேண்டிய நிதியை மத்திய அரசு முறையாக அளிக்கவில்லை

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்த தம்பிதுரை

புதுடில்லி, பிப். 12- மத்தியில் ஆளும் பாஜ அரசை, மக்களவை துணை தலைவர் தம்பிதுரை கடுமையாக விமர்சித்ததை எதிர்த்து பாஜ எம்.பி.க்களும், கருநாடகா குதிரை  பேரம் விவகாரம் தொடர்பாக மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் முழக் கங்களில் ஈடுபட்டதால் நாடாளுமன்றம் நேற்று நாள் முழுவதும்  முடங்கியது. மக்களவையில் நேற்று நடந்த நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின்போது மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை பேசியதாவது:

மத்திய அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை, தேர்தல் அறிக்கை போல் இருக் கிறது. தற்போது விவசாயிகளுக்கு அறிவிக் கப்பட்ட ரூ.6,000 உதவித் தொகையை மத்திய அரசு ஏன் 2018ஆம் ஆண்டு  அறி விக்கவில்லை? மாநில அரசின் உரிமை களை பறிப்பதில் பாஜ அரசு தீவிரமாக உள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை யால் சிறு, குறு தொழிலாளர்களின்  வாழ் வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி வசூலில் தங்கள் பங்கைப் பெறுவதற்கு, மாநில அரசுகள் பிச்சையெ டுக்கும் நிலை உள்ளது. மாநிலங்களுக்கு தர வேண்டிய நிதியை முறையாக மத்திய அரசு அளிக்கவில்லை. இதுதான் கூட்டாட்சி தத்துவமா? பாஜ அரசின் அனைத்து திட்டங்களும்  தோல்வி யடைந்து விட்டன. கொடுத்த வாக்குறுதி எதனையும் பாஜ நிறைவேற்றவில்லை. இவ்வாறு தம்பிதுரை கடுமையாக விமர் சித்தார்.

இதனால் கொந்தளித்த  பாஜக உறுப்பி னர்கள் தம்பிதுரை பேச்சை நிறுத்த வேண் டும் என்று முழக்கமிட்டவாறு அமளியில் ஈடுபட்டனர். இதேபோல், கருநாடக மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதா  தளம் சட்டமன்ற உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுப்பதற்காக பாஜ குதிரை பேரம் நடத்தி வருவதாக அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மஜத கட்சி சட்டமன்ற உறுப்பினரை கட்சி  மாற வைக்க கரு நாடக பாஜ தலைவர் பி.எஸ்.எடியூரப்பா பேரம் பேசிய ஆடியோ விவகாரம் மக்கள வையில் எழுப்பப்பட்டது. ஆபரேஷன் தாமரை திட்டத்தை பாஜ கைவிட வேண்டும் என்று முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவருமான தேவகவுடா  வலியுறுத் தினார். அப்போது பேசிய, மத்திய புள்ளி யியல் மற்றும் திட்ட செயல்பாட்டுத்துறை அமைச்சர் சதானந்த கவுடா, இங்கு கூறப் பட்ட அனைத்தும் பொய்.  உண்மைக்கு புறம்பானவை என்று கூறினார். இதனி டையே ஆபரேஷன் தாமரை, ஜனநாயக படுகொலை என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி  மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் உறுப்பினர்கள் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இருக்கையை முற்றுகையிட முயன்றனர்.

அவர்கள் அமைதியாக இருக்கும்படி  சபாநாயகர் பலமுறை கூறியும் கலைந்து செல்லாததால், அவை 50 நிமிடம் ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியதும், காங்கிரஸ் உறுப்பினர் வீரப்ப மொய்லி  இடைக்கால நிதிநிலை அறிக்கை குறித்த தனது உரையை முடித்தவுடன், தெலுங்கு தேசம் உறுப்பினர் கள் நீதி வேண்டும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என  எழுதப்பட்ட வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந் தியபடி முழக்கமிட்டனர். இதனைத் தொடர்ந்து அவை 30 நிமிடம் ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியதும் காங்கிரஸ் உறுப்பினர் கே.சி.வேணுகோபால், கருநாடாக குதிரை பேரத்தில்  பிரதமர் மோடிக்கும் பாஜக தலைவர் அமித்ஷாவிற்கும் தொடர்பு இருப்பதாக குற்றஞ்சாட்டினார். இதற்கு பாஜ உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித் ததை அடுத்து அவை  நாள் முழுவதும் ஒத்தி வைக்கபட்டது.

மாநிலங்களவையில்

இதேபோன்று, மாநிலங்களவையிலும் கருநாடகா குதிரை பேரம், ஆந்திரா மாநி லத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி காங் கிரஸ்,  தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர் கள் கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, வெளியுறவுத் அமைச்சர் சுஷ்மா சுவராஜ், வெளிநாடுவாழ் இந்தியர் களுக்கான  திருமணப்பதிவு சட்டம் 2019 மசோதாவை தாக்கல் செய்தார். பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஜூயல் ஓரம், பழங்குடியினர் அரசியலமைப்பு 3ஆவது திருத்த  சட்ட மசோதாவை தாக்கல் செய் தார். அதன் பின்னரும் அமளி நீடித்ததால், அவையை நாள் முழு வதும் ஒத்திவைத்து அவைத் தலைவர் வெங்கையா நாயுடு  உத்தரவிட்டார்.

லோக்பால் அமைக்கப்பட்டிருந்தால் பிரதமர்தான் முதல் குற்றவாளி

மக்களவையில் நேற்று நடந்த இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேசிய காங் கிரஸ் உறுப்பினர் வீரப்ப மொய்லி,  லோக்பால் ஏன் அமைக்கப்படவில்லை என்பது இப்போது தெளி வாக தெரிகிறது. லோக்பால் அமைக்கப்பட்டிருந்தால், பிரதமர்தான் முதல் குற்றவாளியாக  இருந்திருப்பார். ஊழல் தோட்டா தாக்கும்போது, பிரதமரின் 56 இன்ச் மார்பு அதை தாங்க முடியாது என்றார். இதற் கிடையே மக்களவையில் நேற்று  எதிர்க்கட்சிகளின் கடும் அம ளிக்கிடையே இடைக்கால நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner