புதுடில்லி, பிப். 4- லோக் அயுக்தா நீதிபதி நியமனத்தை எதிர்த்து, குஜராத் அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.
குஜராத்தில் லோக் அயுக்தா நீதிபதியாக ஓய்வு பெற்ற நீதிபதி மேத்தாவை, முதல்வர் நரேந்திர மோடியுடன் ஆலோசிக்காமல் கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி ஆளுநர் கமலா பெனி வாவை நேரடியாக நியமித் தார். இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் குஜ ராத் அரசு வழக்கு தொடர்ந் தது. இதை முதலில் விசா ரித்த டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள், மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதையடுத்து, 3ஆவது நீதிபதிக்கு வழக்கு பரிந் துரை செய்யப்பட்டது.
இதை விசாரித்த நீதி பதி சகாய், கடந்த மாதம் 18ஆம் தேதி அளித்த தீர்ப்பில், ஆளுநர் செய்த நியமனம் செல்லும் என்று அறிவித்தார்.
மேலும், முதல்வர் நரேந்திர மோடி விஷமத் தனமாக நடந்து கொண் டதாக கடுமையாக விமர் சித்தார்.
இதையடுத்து, இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் 19ஆம் தேதி குஜ ராத் அரசு மேல்முறை யீடு செய்தது. அதில், ஆளு நர் செய்த நியமனத்தை ரத்து செய்யும் படியும், குஜராத் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக் கும்படியும் கோரப்பட் டது. மேலும், மாநில அரசுடன் ஆலோசிக்கா மல் லோக் அயுக்தா நீதி பதியை ஆளுநர் நியமித் தது செல்லாது என்றும், இது அரசியலமைப்பு சட்டம் பற்றி கேள்வி எழுப்பி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசார ணைக்கு ஏற்பது தொடர் பாக நேற்று விசாரணை நடந்தது. நீதிபதிகள் சவு கான், கேஹர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், இதை விசாரணைக்கு ஏற்றது. அப்போது, இந்த மனுவை விரிவாக விசாரிக்க இருப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
| < முன்பு | அடுத்து > |
|---|