Banner
கூடங்குளம் அணுஉலை மிரட்டல்: 3 பேர் கைது +++ 44 குழந்தைகள் பலி: மருத்துவ அதிகாரி இடமாற்றம் +++ தூக்குத்தண்ட‌னையை நிறுத்தி வைத்த சர்தாரி +++ உலக செஸ் போட்டிகள்: 5 ஆவது சுற்று டிரா

பொருளாதார வளர்ச்சி 7.5 சதவிகிதமாக இருக்கும்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, பிப். 4-நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 முதல் 7.5 சதவிகிதத்துக் குள் இருக்கும் என பிரதமர் மன் மோகன்சிங் நம்பிக்கை தெரிவித் துள்ளார்.

கடந்த ஆண்டு பிப்ர வரியில் தாக்கல் செய்யப் பட்ட நடப்பு 2011-12 நிதியாண்டுக்கான மத்திய பட் ஜெட்டில், 9 சதவிகித பொருளாதார வளர்ச்சி எட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பணவீக்கத்தைக் கட்டுப் படுத்துவதற்காக தொ டர்ந்து 13 முறை கடன் வட்டி உயர்த்தப்பட்டதால் பொருளாதார வளர்ச்சி தடைபட்டது.

அய்ரோப்பிய நிதிநெருக்கடியும் பொருளாதார வளர்ச்சி சரிவதற்கு காரணமாக அமைந்தன. இதையடுத்து, திட்டமிட்டபடி 9 சதவிகித வளர்ச்சியை எட்ட முடியாது என ரிசர்வ் வங்கி கூறியது.

இதுகுறித்து பிரதமர் மன்மோகன்சிங் கூறுகையில், 2008 பன்னாட்டு நிதிநெருக்கடியிலிருந்து விரைவாக மீண்ட நமது பொருளாதாரம், 2010 - 2011 நிதியாண்டில் 8.4 சதவிகித வளர்ச்சி அடைந்தது. இது உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது சிறப்பான வளர்ச்சி ஆகும். எனினும், பணவீக்கம் காரணமாக வட்டியை உயர்த்தியது நடப்பு நிதியாண்டில் எதிர்பார்த்த 9 சதவிகித வளர்ச்சியை எட்ட முடியாது. எனினும், வளர்ச்சி 7 முதல் 7.5 சதவிகிதத்துக்குள் இருக்கும் என்றார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்

என்ன சொல்றீங்க?

திருவிழாக்களில் ஒரு வாரத்தில் 16 பேர் இறந்தனர்