
மும்பை, பிப். 21-ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, சென்ட்ரல் பாங்க் மற்றும் பாங்க் ஆப் மகாராஷ் டிரா ஆகியவை வீடு, கல்வி கடன் வட்டியை 0.25 சதவிகிதம் முதல் 1 சதவிகிதம் வரை குறைத்துள்ளன. எனினும் இது பழைய வாடிக் கையாளர்களுக்கு பொருந்தாது.
கடன் வட்டி உயர்வு காரண மாக பெரும்பாலான வங்கிகள் நடப்பு நிதியாண்டில் வீட்டுக் கடன் இலக்கை எட்ட முடியாத நிலையில் உள்ளன. இந்நிலையில், இலக்கை எட்டுவதற்காக புதிதாக வழங்கப்படும் வீட்டுக் கடன் வட்டியை 0.25 முதல் 0.5 சதவிகிதம் வரை குறைத்துள்ளன.
இதன்படி, சென்ட்ரல் பாங்க், 10 முதல் 25 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்தக்கூடிய ரூ.30 லட்சம் வரையிலான வீட்டுக் கடன் வட்டி 11 லிருந்து 10.75 சத விகிதமாகவும் ரூ.30லட்சம் முதல் ரூ.75லட்சம் வரையிலான கடன் வட்டி 11.75லிருந்து 11.25 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதுதவிர பிராசசிங் கட்டணத்தையும் ரத்து செய்துள்ளது. இந்த சலுகை மார்ச் 31 வரை அமலில் இருக்கும்.
இதுபோல் பாங்க் ஆப் மகா ராஷ்டிரா ரூ.5லட்சம் வரையிலான வீட்டுக் கடன் வட்டியை 10.7 லிருந்து 10.6 சதவிகிதமாக குறைத் துள்ளது. இதுதவிர ரூ.25லட்சம் வரையிலான கடனுக்கு பிராசசிங் கட்டணத்தை ரத்து செய்துள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, கல்விக் கடன் வட்டியை 0.25 முதல் 1 சதவிகிதம் வரை குறைத்துள்ளது. அதாவது ரூ.4லட்சம் வரையிலான கடன் வட்டியை 12லிருந்து 11.75 சதவிகிதமாகவும், ரூ.4லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரையிலான கடன் வட்டியை 13.5 லிருந்து 12.5 சதவிகிதமாகவும், ரூ.7.5லட்சத் துக்கு மேற்பட்ட கடன் வட்டியை 12.5லிருந்து 12.25 சதவிகிதமாகவும் குறைத்துள்ளது. இதுதவிர பெண் களுக்கு வட்டியில் 0.5 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
| < முன்பு | அடுத்து > |
|---|