Banner
கூடங்குளம் அணுஉலை மிரட்டல்: 3 பேர் கைது +++ 44 குழந்தைகள் பலி: மருத்துவ அதிகாரி இடமாற்றம் +++ தூக்குத்தண்ட‌னையை நிறுத்தி வைத்த சர்தாரி +++ உலக செஸ் போட்டிகள்: 5 ஆவது சுற்று டிரா

ரகசிய கண்காணிப்பு கேமரா விற்பனை - 2015இல் ரூ.2,200 கோடி தொடும்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, பிப். 22- சி.சி.டி.வி எனப்படும் ரகசிய கண்காணிப்பு கேமரா விற்பனை சந்தை 2015ஆம் ஆண்டில் ரூ.2,200 கோடி யை தொடும் என்று தொ ழில் துறை அமைப்பான அசோசேம் தெரிவித்துள் ளது.

உலகம் முழுவதும் வணிக வளாகங்களில் கொள்ளை மற்றும் வன்முறை, தீவிரவாத செயல்களும் நடப்பது அதிகரித்து வருகிறது. இதனால், வணிக வளா கங்களில் தீவிர கண் காணிப்பு என்பது அடிப் படை தேவையாகி விட் டது. இதன் காரணமாக, உலகம் முழுவதும் கண் காணிப்பு கேமராக்கள் விற்பனையும் அதிகரித்து வருகிறது.

இந்திய சி.சி.டி.வி, வீடியோ கண்கணிப்பு சந்தை என்ற பெயரில் அசோசேம் அமைப்பு சார்பில் ஆய்வு நடந்தது. அதில் கூறியதாவது:

உள்நாட்டு ரகசிய கண்காணிப்பு கேமரா சந்தை, இப்போது ரூ. 1 ஆயிரம் கோடியாக உள் ளது. நாட்டின் மின்னணு பாதுகாப்பு கருவிகள் சந்தை மதிப்பான ரூ.2,400 கோடியில் இது 40 சதவிகித பங்கு வகிக் கிறது. விரைவான பொரு ளாதார வளர்ச்சி மற்றும் தொழில் துறை முன்னேற் றத்துக்கு ஏற்ப பாது காப்பு அச்சுறுத்தல்களும் அதிகரித்து வருகின்றன. தீவிரவாத தாக்குதல்கள், கொள்ளை, திருட்டு ஆகியவற்றின் காரண மாக சி.சி.டி.வி கேமரா தேவை அதிகரித்து வரு கிறது. அரசு துறைகள் மட்டுமின்றி தனியார் நிறுவனங்களும் அவற்றை பொருத்த அதிகளவில் முதலீடு செய்து வரு கின்றன.

பொது இடங்கள், அலுவலகங்கள் என எல்லா இடங்களிலும் ரகசிய கண்காணிப்பு கேமராவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. எனவே, அந்த கருவிகள் தயாரிப்பு சந்தையின் வளர்ச்சி ஆண்டுக்கு 30 சதவிகிதமாக உள்ளது. அதன்படி, 2015ஆம் ஆண் டில் சி.சி.டி.வி சந்தை ரூ.2,200கோடியை தொடும். சர்வதேச அள வில் இப்போது ரூ.80 ஆயிரம் கோடியாக உள்ள சந்தை மதிப்பு, 2015இல் ரூ.1.5லட்சம் கோடியாகும்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்

என்ன சொல்றீங்க?

திருவிழாக்களில் ஒரு வாரத்தில் 16 பேர் இறந்தனர்