பாசிசத்திற்கு வேறு விளக்கம் தேவையா?

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

' உச்சநீதிமன்றமே எங்களுடையதுதான் ராமர் கோவிலை கட்டுவோம்! '

பாஜக அமைச்சரின் ஆணவப்பேச்சு

கான்பூர்,செப்.10 உச்சநீதிமன்றமே எங்களுடையது என்பதால் அயோத்தியில் ராமர் கோவிலை உறுதியாகக்கட்டுவோம்என்று பாஜக ஆளுகின்ற உத்தரப்பிர தேசத்தைச் சேர்ந்த அமைச்சர் ஆணவமாக பேசியுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் பாரதீய ஜனதா அரசின் கூட்டுறவுத்துறை அமைச்சரான முக்த் பிஹாரி வர்மா, பஹாரெய்ச் நகரில் செய் தியாளர்களிடம் கூறுகையில்,

அயோத்தியில் நிலவி வரும் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்து,விரைவில்அங்குராமர் கோவிலைக் கட்டுவோம். உச்சநீதிமன்றமே எங்களுடை யது என்பதால், அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்து அயோத்தியில் ராமர் கோவிலை உறுதியாகக் கட்டுவோம். வளர்ச்சியை முன்னிறுத்தி பாஜக ஆட்சிக்கு வந்திருந்தா லும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விஷயத்தில் பாஜக உறுதியாக உள்ளது என் றார். அமைச்சரின்இந்தசர்ச்சைக் குரியபேச்சுக்குசமூக ஊடகங் களில் பலரும் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர். இதற்குப் பணிந்து பின்னர் அமைச்சர் பிஹாரி வர்மா கூறு கையில்,

நான் கூறியதன் அர்த்தம் தவறாக புரிந்து கொள்ளப் பட்டுள்ளது. இந்த நாட்டின் குடிமக்களான நாங்கள் நீதி மன்றத்தின்மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்ற அர்த் தத்தில் கூறினேன். மற்றபடி நீதிமன்றம் எங்களுடைய அர சாங்கத்துக்குச் ஆதரவானது என்ற அர்த்தத்தில் கூறவில்லை என்று கூறி சமாளித்துள்ளார்.

மத்திய பாஜக அமைச்சர்கள் சிலரும், மாநில அமைச்சர்களும் இதுபோன்று ஆணவமாக பேசு வது தொடர்கதையாகி வருகி றது.