முன்பு அடுத்து Page:

இந்து வெறியர்களால் கொல்லப்பட்ட கோவிந்த் பன்சாரே 4ஆம் ஆண்டு நினைவு நாளில்

இந்து வெறியர்களால் கொல்லப்பட்ட கோவிந்த் பன்சாரே 4ஆம் ஆண்டு நினைவு நாளில்

மும்பை நோக்கி விவசாயிகள் போராட்டப் பயணம் 50ஆயிரம் பேருக்கும் மேல் பங்கேற்கிறார்கள் மும்பை, பிப். 21- மராட்டிய மாநிலம் மும்பை நகரில் இந்துத்துவவாதி களால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட கோவிந்த் பன்சாரே நான்காம் ஆண்டு நினைவு நாளில் (பிப்ரவரி 20) விவசாயிகளின் போராட்ட பயணம் நாசிக் கிலிருந்து தொடங்கியது. மராட்டிய மாநிலத்தில் விவசாயிகள் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக போராடிவந்துள்ளனர். தற்பொழுது அம்மாநிலத்தில்  விவசாயிகள் ஒன்றி ணைந்து மும்பை நகரை நோக்கி....... மேலும்

21 பிப்ரவரி 2019 15:07:03

இந்தியாவில் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 377 ஆக அதிகரிப்பு

புதுடில்லி,பிப்.21 இந்தியா வின் பல்வேறு மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதன் காரண மாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், உயிரிழப்பும் ஏற் பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியா முழுவதும் பரவி வரும் பன்றிக் காய்ச்சலுக்கு இந்த ஆண்டில் பலியானோர் எண் ணிக்கை 377 ஆக அதிகரித் துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, மத்திய சுகாதார துறை நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பன்றிக்காய்ச் சலுக்கு....... மேலும்

21 பிப்ரவரி 2019 14:56:02

2 வயது குழந்தைக்கு எச்அய்வி பாதிப்பு அறிக்கை தாக்கல் செய்ய சுகாதாரத்துறை உத்தரவு

கோவை, பிப்.21 திருச்சி மணப்பாறையை சேர்ந்த தம்பதியினர் திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இவர்களது 2 வயது மகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்படவே கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தைக்கு ரத்தம் ஏற்றி சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் குழந்தையை மீண்டும் மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனையில் குழந்தைக்கு எச்.அய்.வி. பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. கோவை அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு தவறுதலாக ஏற்றப்பட்ட ரத்தத்தால் தான் குழந்தைக்கு எச்அய்.வி. பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பெற்றோர் குற்றம் சாட்டினர். இந்த....... மேலும்

21 பிப்ரவரி 2019 14:48:02

மோடியின் தோல்வி உறுதி! வலைத்தளங்கள் உறுதி செய்கின்றன!

புதுடெல்லி, பிப்.21 -கடந்த   2014   நாடாளுமன்றத் தேர்தலின்போது,  தனியார்  செய்தி ஊடகங் களைத்  தாண்டி,  ட்விட்டர், முகநூல்   உள் ளிட்ட   சமூக   ஊடகங்களையும் மிகப் பெரிய ஆயுதமாக பா.ஜ.க.  பயன்படுத்தியது. ஆனால்,  பா.ஜ.க.  கையிலெடுத்த இந்த  ஆயுதங்களே,  2019  நாடாளுமன்றத்  தேர்தலில்,  பா.ஜ.க.-வுக்கே எதிராக   திரும்பிக்   கொண்டிருக்கின்றன. குறிப்பாக, 2014-இல் மோடியைத் தாங்கிப்  பிடித்த,  ட்விட்டர்  வாசிகள், தற்போது  மோடி  என்றாலே,  கடுமையாக விமர்சிக்கின்றனர். கறுப்புப் பணஒழிப்பு,  தீவிரவாத  ஒழிப்பு,  2 ....... மேலும்

21 பிப்ரவரி 2019 14:45:02

மேகாலயாவின் அய்க்கிய ஜனநாயக கட்சி பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து விலகல்

ஷில்லாங், பிப்.21 மேகாலயா மாநிலத்தில் ஆளும் தேசிய மக்கள் கட்சி தலைமையிலான மேகாலயா ஜனநாயக கூட்டணி யில் உள்ள முக்கிய கட்சியான அய்க்கிய ஜனநாயக கட்சி சர்ச்சைக்குரிய குடியுரிமை சட்டத்திருத்தம் காரணமாக பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து விலகியது. வடகிழக்கு மாநிலங்களில் அசாம் கணபரிஷத் கட்சிக்கு அடுத்த பெரிய மாநில கட்சி இது. கூட்டணியிலிருந்து வெளியேறியதாக அறிவித்த அக்கட்சியின் துணைத்தலைவர் அல்லன்ட்ரி காரிடம், மேகா லயா அரசுக்கு உங்கள் ஆதரவு தொடருமா?....... மேலும்

21 பிப்ரவரி 2019 14:45:02

ரிசர்வ் வங்கியை மிரட்டிப் பறித்த மோடி அரசு இடைக்கால ஈவுத் தொகையாக ரூ.28 ஆயிரம் கோடி தரும் ரிசர்…

புதுடில்லி, பிப்.20 -பாஜக ஆட்சி யில் கொண்டுவரப்பட்ட பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி போன்ற தவறுகளால், நாட்டில் நிதிப் பற்றாக்குறை மற்றும் நடப்புக் கணக்கு பற்றாக்குறை கடுமை யாக அதிகரித்துள்ளது. கடந்த 2018 -- 2019 பட்ஜெட்டில் கணித்திருந்த 3.3 சதவிகித நிதிப் பற்றாக் குறை யைக் காட்டிலும், 0.1 சதவிகிதம் பற்றாக்குறை அதிகரித்தது. இந்நிலையில், நிதிப் பற்றாக் குறையை 3.4 சதவிகிதத்திற்கும் அதிகமானால், தாங்கள் அம்பலப்பட்டுப் போவோம் என்பதால், ரிசர்வ்....... மேலும்

20 பிப்ரவரி 2019 17:20:05

குடிபோதையில் காரை ஓட்டி 2 பேரை கொன்ற கருநாடக பாஜக சட்டமன்ற உறுப்பினர்

குடிபோதையில்  காரை ஓட்டி 2 பேரை கொன்ற கருநாடக பாஜக சட்டமன்ற உறுப்பினர்

பெங்களூரு, பிப்.20 கருநாடக மாநிலம் சிக்மகளூர் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் சி.டி. ரவி எனப்படும் சிக்கமகரவல்லி திம்மே கவுடா ரவி, அம்மாநில பாஜக பொதுச்செயலாளராகவும் இருக்கிறார். இவர், தனது 4 நண்பர்களுடன் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்குச் சென்றுவிட்டு, காரில் திரும்பி வந்துள்ளார்.அப்போது, குன்னிகல் நகரின் ஹசன் சாலையில், கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இதில் அந்த 2....... மேலும்

20 பிப்ரவரி 2019 17:06:05

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

புதுடில்லி, பிப்.20 மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதிய தாரர் களுக்கும் 3 சதவீதம் அக விலைப்படி உயர்த்தப்பட்டுள் ளது. இதன்மூலம், 1.1 கோடி பேர் பயன்பெறுவார்கள். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்ச ரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது: மத்திய அரசு ஊழியர்களுக் கும், ஓய்வூதியதாரர்களுக்கும் 9 சதவீத அகவிலைப்படி வழங் கப்படுகிறது. கூடுதலாக 3 சதவீதம்....... மேலும்

20 பிப்ரவரி 2019 17:04:05

புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி சுட்டுக்கொலை

சிறீநகர், பிப்.19  ஜம்மு காஷ் மீரில் பாதுகாப்பு படையினர் நடத் திய தேடுதல் வேட்டையில் புல் வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல் பட்ட தீவிரவாதி கம்ரான் உட்பட மூன்று பேர் சுட்டுக் கொல் லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஒரு ராணுவ அதிகாரி உட்பட 5 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். ஜம்மு காஷ் மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்கு தலில் 40 சிஆர்பிஎப்....... மேலும்

19 பிப்ரவரி 2019 16:16:04

அரசியல் பேச்சுகளால் மட்டுமே காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது பிரதமர் மோடி செயலில் காட்ட வே…

மும்பை, பிப்.19 அரசியல் பேச்சுகளால் மட்டுமே காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துவிடாது; புல்வாமா தாக்குதலுக்கு பழிதீர்ப்போம் என்ற உறுதியை, பிரதமர் மோடி செயலில் காட்ட வேண்டும் என்று சிவசேனை கட்சி வலியுறுத்தியுள்ளது. மத்தியிலும், மகாராட்டிரத்திலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் சிவசேனை, அண்மைக் காலமாக பல்வேறு விவகாரங்களில் பிரதமர் மோடியை விமர்சித்து வருகிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ஆம் தேதி தற்கொலைப் படை பயங்கரவாதி....... மேலும்

19 பிப்ரவரி 2019 16:14:04

கேரளாவில் பேருந்துகள் ஓடவில்லை - கடைகள் அடைப்பு

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருவனந்தபுரம், செப். 10- பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது.

கேரள மாநிலத்தில் இன்று நடந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு காங் கிரசு, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன. தொழிற்சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தது.

இதன் காரணமாக மாநிலத்தில் பெரும்பாலான அரசு பேருந்துகள் ஓட வில்லை. வாடகைக்கார்கள், ஆட்டோக் களும் இயக்கப்படவில்லை.

திருவனந்தபுரம், கொல்லம், எர்ணா குளம், திருச்சூர், கோழிக்கோடு, மலப் புரம் பகுதிகளில் பெரும்பாலான கடை கள் மூடிக்கிடந்தன. வணிக நிறுவனங் களும் செயல்படவில்லை.

திருவனந்தபுரம் தம்பானூர் பேருந்து நிலையத்தில் ஒரு சில தனியார் பேருந் துகள் மட்டும் பயணிகளை ஏற்றிச்சென் றது. பா.ஜனதா ஆதரவு தொழிற்சங்கத் தினரின் ஆட்டோக்கள் இயக்கப்பட்டது. ஆனால் பஸ் நிலையங்கள், தெருக்களில் மக்கள் நடமாட்டம் அதிகம் காணப் படவில்லை.

கேரளாவில் உள்ள கல்லூரிகளில் இன்று பல்கலைக்கழக தேர்வுகள் நடக்க இருந்தது. முழு அடைப்பு கார ணமாக தேர்வுகள் ஒத்தி வைக்கப் பட்டுள்ளது. கண்ணூர், கோழிக்கோடு பல்கலைக்கழகங்கள், கொச்சின் அறிவியல் தொழில் நுட்ப பல்கலைக் கழகம் ஆகியவற்றில் இன்று நடக்க இருந்த தேர்வு மட்டும் ஒத்திவைக் கப்பட்டது. மகாத்மா காந்தி மற்றும் கேரள பல்கலைக்கழகம் வருகிற 15ஆம் தேதி வரையிலான தேர்வுகளை தள்ளி வைத்துள்ளது.

கேரளாவில் வெள்ளம் பாதித்த பகு திகளுக்கு நிவாரண பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு போராட்டக் காரர்கள் பாதுகாப்பு அளித்து அனுப்பி வைத்தனர். இது போல மருத்துவமனை வாகனங்கள், விமான நிலையங்களுக்குச் செல்லும் வெளிநாட்டு பயணிகள் வாக னங்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

முழு அடைப்புப் போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner