முன்பு அடுத்து Page:

குஜராத்தில் ரூ.8,100 கோடி வங்கி கடன் மோசடி

புதுடில்லி, மார்ச் 24  ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம் வங்கியில் ரூ.8,100 கோடி மோசடி செய்த வழக்கில் விசாரணைக்கு தேவையான தகவல்களைப் பெற 21 நாடுகளுக்கு கடிதங்களை அனுப்ப  அம லாக்கத் துறைக்கு டில்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. குஜராத் மாநிலம், வதோதராவில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லிங் பயோடெக் மருந்து தயாரிப்பு நிறுவனம், ஆந்திர வங்கி தலைமையிலான....... மேலும்

24 மார்ச் 2019 17:21:05

கிரிமினல் வழக்கில் 35 பா.ஜ.க. வேட்பாளர்கள்

கிரிமினல் வழக்கில் 35 பா.ஜ.க. வேட்பாளர்கள்

புதுடில்லி, மார்ச் 24- நாடாளு மன்றத் தேர்தலுக்கு போட்டியிட பா.ஜ.க. வெளியிட்டுள்ள முதல் பட்டியலில் உள்ள, 184 பேரில், 35 பேர் மீது, கிரிமி னல் வழக்குகள் உள்ளன. நாடாளுமன்றத் துக்கு, ஏப்., 11 முதல், மே, 19 வரை, ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக, 184 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டி யலை, பா.ஜ.க வெளியிட்டுள்ளது. தற்போது, நாடாளுமன்ற....... மேலும்

24 மார்ச் 2019 16:20:04

குஜராத் தலித்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை!

குஜராத் தலித்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை!

ஜிக்னேஷ் மேவானி கண்டனம் காந்தி நகர், மார்ச் 24 -குஜ ராத்தில் தலித் மக்கள் பாது காப்பாக இல்லை என அம் மாநில சட்டப்பேரவை உறுப் பினர் ஜிக்னேஷ் மேவானி கூறியுள்ளார். ஹோலி பண்டிகை அன்று தலித் சிறுவன்அடையாளம் தெரியாத கும்பலால் கடுமை யாகத் தாக்கப்பட்ட சம்பவம் குஜராத்தில் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது. கடுமையாக தாக்கப்பட்ட தலித் சிறுவன் பக்கவாதம் வந்தது போல் இருக்கிறார். அவரால் பேசவும் முடியவில்லை. காவல் துறை யில்....... மேலும்

24 மார்ச் 2019 14:41:02

எண்ணெய்க் கிணறுகளை தனியாருக்கு விற்க மோடி அரசு திட்டம்

புதுடில்லி, மார்ச் 24 மும்பை மற்றும் வசாய் கிழக் குப் பகுதிகளில் உள்ள பெரிய எண்ணெய்க் கிணறுகளை தனியார் மற்றும் வெளிநாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு விற்பதற்கு மோடி அரசு திட்டம் வகுத்திருப்பது தெரிய வந்துள்ளது. எண்ணெய் நிறுவனங்களின் வருமானத்தை அதிகரிப்பதற் கான ஆய்வு என்ற பெயரில், பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2018 அக்டோபரில் குழு ஒன்றை அமைத்திருந்தார். அந்த குழுவினர்தான், எண் ணெய் நிறுவனங்களை தனி யாருக்கு விற்குமாறு ஆலோ....... மேலும்

24 மார்ச் 2019 14:41:02

இலங்கை போர்க் குற்றங்களை விசாரிக்க வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்க வேண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப…

கொழும்பு, மார்ச் 23  இலங்கை போர்க் குற்றங்களை விசாரிக்க வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்று அந்நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. முன்னதாக, இலங்கையில் இறுதிப் போரின்போது நிகழ்ந்த போர்க் குற்றங்கள் குறித்து நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணையை மேற்கொள்ள அந்நாட்டு அரசுக்கு அய்.நா. மனித உரிமைகள் ஆணையம் இரு ஆண்டுகள் காலக்கெடு அளித்தது. இதற்கு அடுத்த நாளிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இக்கோரிக்கையை முன்வைத்துள்ளது. இலங்கையில் கடந்த....... மேலும்

23 மார்ச் 2019 16:40:04

பாஜகவின் 5 ஆண்டு ஆட்சி தோல்வி: அசோக் கெலாட்

புதுடில்லி, மார்ச் 23  பாஜக தலைமையிலான தேசிய ஜன நாயகக் கூட்டணியின் 5 ஆண்டுகால ஆட்சி தோல்வி அடைந் துள்ளது என்று ராஜஸ்தான் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் அவர் வியாழக்கிழமை மேலும் கூறியதாவது: இன்றைக்கு வெளிவரும் புள்ளி விவரங்கள் அனைத்தும் அரசுக்கு எதிராக இருப்பது அதிருப்தியை தருகிறது. கருப்புப் பணத்தில் ஒரு ரூபாய் கூட மீட்டுக் கொண்டு வரப்படவில்லை. இது இந்த அரசின்....... மேலும்

23 மார்ச் 2019 15:40:03

விவசாயப் புரட்சி நடந்தால் மட்டுமே 10 சதவிகித வளர்ச்சி சாத்தியம்!

நிதி ஆயோக் சிஇஓ கருத்து! புதுடில்லி, மார்ச் 23 வேளாண் துறையில் மிகப்பெரிய மாற் றம் நிகழாமல், நாடு10 சத விகித வளர்ச்சியை அடைய முடியாது என நிதி ஆயோக் சிஇஓ அமிதாப் கந்த் கருத்து தெரிவித்துள்ளார். மத்திய அரசின் திட்டக்குழு வாகச்செயல்படும் நிதிஆயோக் அமைப்பின்தலைமை செயல திகாரி அமிதாப் கந்த், வேளாண் கருத்தரங்கம்ஒன்றில்பங்கேற்று உரையாற்றியுள்ளார். அதில் தான் இவ்வாறு அவர் கூறியுள் ளார். நாட்டின் 50....... மேலும்

23 மார்ச் 2019 15:09:03

மக்களவைத் தேர்தல்: மோடிக்கும் - மக்களுக்கும் இடையே நடக்கும் போட்டி

ராஜ்தாக்கரே மும்பை, மார்ச் 23 மக்களவைத் தேர்தல், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நாட்டு மக்களுக்கும் இடையே நடக்கும் போட்டி என்று மகாராட்டிரா நவ நிர்மாண் சேனா (எம்.என்.எஸ்.) தலைவர் ராஜ்தாக்கரே கூறினார். ராஜ் தாக்கரே கட்சி கூட்டம் ஒன்றில் பேசியதாவது: மத்திய அரசு பணத்துக்காக ரிசர்வ் வங்கியிடம் பிச்சை எடுத்து வரும் நிலையில், பாகிஸ்தானுடன் போரிடும் நிலையில் இந்தியா இருக்கிறதா?  நாட்டு மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு அரசிடம் இருந்து பதில் இல்லை. எனவேதான்....... மேலும்

23 மார்ச் 2019 15:09:03

இது மட்டும் ஊழல் இல்லையா?

இது மட்டும் ஊழல் இல்லையா?

பிஜேபியின் விளம்பரத்துக்கு மக்கள் பணமா? திட்ட நிதியில் பெரும் பகுதியை மோடி தனது விளம்பரத்திற்கே பயன்படுத்தி இருப்பது வெட்கக்கேடான விஷயமாகும். மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து பல்வேறு திட்டங்களை அறிவித்திருக்கிறார். பல திட்டங்கள் செயல்பாட்டிற்கு வராமல் வெற்று அறிவிப்போடு நின்று தோல்வியை சந்தித்திருக்கின்றன. அந்த வரிசையில் இந்தத்திட்டமும் தற்போது இணைந்திருக் கிறது. ஆனால் எல்லா திட்டமும் வெற்றி பெற்றது போலவே தனது விளம்பரத்தின் மூலம் நிறுவ முயன்று வருகிறார். கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி....... மேலும்

23 மார்ச் 2019 13:24:01

உ.பி.யில் 2 ஆண்டுகளில் கலவரங்களே நிகழவில்லை என பா.ஜ.க. கூறுவது கேலியாக உள்ளது: மாயாவதி

சென்னை, மார்ச் 22  உத்தரப் பிரதேசத்தில், கடந்த 2 ஆண்டுகளில் கலவரங்களே நிகழவில்லை என்று பாஜக கூறி வருவது கேலியாக உள்ளது என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் பாஜக அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் ஆனதை யொட்டி, மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அண்மையில் செய்தியா ளர்களைச் சந்தித்தார். அப்போது, பாஜக ஆட்சியின்கீழ், கடந்த 2 ஆண்டுகளில் ஒரு கலவரம்கூட நிகழ வில்லை. மாநிலத்தில்....... மேலும்

22 மார்ச் 2019 15:48:03

பசுவை "மாதா" என்று கூறுவார்கள் ஒரு நாளாவது பசுக்களை பராமரித்தது உண்டா?

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பசு குண்டர்களை விளாசிய தொழிலதிபர் ராகுல் பஜாஜ்

மும்பை, ஜன.11- பசுப் பாதுகாப்பு என்று கூப்பாடு போடுபவர்கள், என்றாவது பசுக் களுக்கு பணி விடைகளைச் செய்திருக்கிறார்களா? என்று தொழிலதிபர்ராகுல் பஜாஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டின் மூத்த தொழிலதிபராக விளங்குபவர் ராகுல் பஜாஜ்.காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கமானவர். காந்தியக் கொள்கைகளிலும் நம்பிக்கை கொண்டவர். அவர், மும்பையில் தனது பாட்டியின் சுயசரிதை நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டு உரையாற்றி யுள்ளார். அப்போதுதான் பசுப் பாதுகாப்பு என்று கூறித் திரிவோரை கடுமையாக விமர்சித்துள்ளார்.என் தாத்தா ஜம்னலால் பஜான், குடிலில்தான் வசித்தார். மாடுகளை எல்லாம் அவரே குளிப் பாட்டுவார்.

இதனை பெரிய விஷயமாக அவர் காட்டிக் கொண்டதில்லை. ஆனால், இன்று நம்நாட்டில் மாடுகளுக்காக மனிதர்களைத் தாக்கி கொலை செய்கிறோம்; அந்த அரசியல்வாதிகளின் பெயரை நான் குறிப்பிட விரும்பவில்லை என்று ராகுல் பஜாஜ் கூறியுள்ளார்.

மேலும், பசுவை மாதா என்று கூறுபவர்கள், ஒருநாளாவது பசுவைப் பராமரிக்கும் பணியைச் செய்திருக்கிறார்களா? என்று கேட்டுள்ள அவர், பசுவுக்காக போராடுகிறோம் என்று கூறு பவர்கள்,  நிச்சயமாக அவர்களின் மூதாதையர் மேற்கொண்ட பசு பராமரிப்பில் 5 சதவிகிதத்தைக் கூடசெய்திருக்க மாட்டார்கள் என்றும்குறிப்பிட்டுள்ளார். தொழிலதிபர் ராகுல் பஜாஜின் பேச்சு, பசு குண்டர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

'பொங்கல் விழா'வைக் கொண்டாடி மகிழ்ந்த  மகளிர் கல்லூரி மாணவிகள்!

சென்னை, ஜன.11 சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர்.-ஜானகி மகளிர் கல்லூரி வளாகத்தில் நேற்று (10.1.2019) நடைபெற்ற பொங்கல் விழாவில் மாணவிகள் பாரம்பரிய முறையில் மகிழ்ச்சியுடன் பொங் கல் விழாவைக் கொண்டாடினர். மகிழ்ச்சி நிறைந்த இவ்விழாவில் மாணவிகள் நிகழ்த்திய கோலாட்டம், கும்மியாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம் போன்ற நாட்டுப்புற நடனங்கள் பார்வையாளர்களை ஈர்த்தன. தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக வேகமாக மாறிவரும் இவ்வுலகில், நம்முடைய மதிப்பு மிகுந்த மரபையும், விழுமியங் களையும் நாம் மறக்காமல் இருப்பது முக்கியம்.

அந்த வகையில் நம்முடைய பண்பாட்டின் வளத்தினையும், பெருமையையும் நம்முடைய இளைய சமுதாயம் உணர்ந்து, அதனை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதற்கு இவ்வாறான விழாக்கள் பெரிதும் உதவும். இந்த நோக்கத்தை முன்னிறுத்தி நம்முடைய கலாச்சாரத்திற்குப் பெருமை சேர்க்கும் பல்வேறு விழாக்களை தொடர்ந்து நடத்தி வருவதில் எங்கள் கல்லூரி பெருமை கொள்கிறது என்று டாக்டர் எம்.ஜி.ஆர்.-ஜானகி மகளிர் கல்லூரியின் செயலாளர் லதா ராஜேந்திரன் தெரிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner