முன்பு அடுத்து Page:

1951-52 முதல் 2014 வரை நடந்துள்ள

1951-52 முதல் 2014 வரை நடந்துள்ள

16 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 64 ஆயிரம் வேட்பாளர்கள் வைப்புத் தொகை இழப்பு புதுடில்லி, மார்ச் 26- கடந்த, 1951ஆம் ஆண்டிலிருந்து, மக்க ளவைத் தேர்தல்களில் போட்டியிட்டவர்களில், 64 ஆயிரம் வேட் பாளர்கள், வைப்புத் தொகையை இழந்துஉள்ளனர். * கடந்த, 1951-52ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், வேட்பாளர்களின், வைப்புத் ....... மேலும்

26 மார்ச் 2019 16:43:04

நாடு முழுவதும் 5 கோடி ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் 72,000 நிதியுதவி

நாடு முழுவதும் 5 கோடி ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் 72,000 நிதியுதவி

ராகுல் காந்தி வாக்குறுதி புதுடில்லி, மார்ச் 26- ஏழைகளுக்கு மாதந்தோறும் ரூ.6,000 என்ற வகையில் ஆண்டுக்கு ரூ.72,000 அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று காங் கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அதிரடியாக அறிவித்துள்ளார். தேர்தல் அறிக்கைக்கு ஒப் புதல் வழங்குவது தொடர்பான முடிவெடுக்க, கட்சியின் உயர் மட்ட அதிகாரம் கொண்ட செயற்குழு கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமை வகித்தார். முன்னாள் பிரதமர் மன்மோகன்....... மேலும்

26 மார்ச் 2019 16:13:04

விவிபிஏடி கருவி பயன்பாட்டை அதிகரிக்க கோரும் மனு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, மார்ச் 26 மக்களைவைத் தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் வாக்கு ஒப்புகைச் சீட்டு (விவிபிஏடி) கருவிகளை அதிகளவில் இணைக்க முடியுமா என்பது குறித்து தேர்தல் ஆணையம் வரும் மார்ச் 28-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்  (இவிஎம்) மூலம் நடைபெறும் தேர்தலின் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்த விவிபிஏடி கருவிகளை அதிக அளவில் பொருத்த உத்தரவிடவேண்டும் எனக் கோரி அரசியல் கட்சி தலைவர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர்........ மேலும்

26 மார்ச் 2019 15:08:03

“பெருங்குடல் புற்றுநோயால் ஆண்டுதோறும் 6.9 லட்சம் பேர் இறப்பு”

சென்னை, மார்ச் 25  பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக பன்னாட்டு மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆண்டுதோறும்  உலகம் முழுவதும் 6.94 லட்சம் பேர் அந்நோயால் இறப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். பெருங்குடல் புற்றுநோய் தொடர்பான 3ஆவது பன்னாட்டுக் கருத்தரங்கம் சென்னையில் கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது. அப்பல்லோ மருத்துவமனை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 24) வரை நடைபெறுகிறது. இக் கருத்தரங்கத்தில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த....... மேலும்

25 மார்ச் 2019 15:56:03

நீங்கள் மனச்சிதைவு நோயாளிகள் மோடி, பாஜக மீது அகிலேஷ் யாதவ் காட்டம்

நீங்கள் மனச்சிதைவு நோயாளிகள்  மோடி, பாஜக மீது அகிலேஷ் யாதவ் காட்டம்

பாட்னா, மார்ச் 25 பெரிய பெரிய ஜனநாயகத் தலைவர்கள் பெயர்களையெல்லாம் உதிர்க்கும் பாஜகவும் அதன் தலைமையும் அந்தத் தலைவர்கள் வெறுத்து ஒதுக்கிய கொள்கை யுடைவர்களை வழிபடுகின்றனர், ஏன் இந்த இரட்டை நிலை, மனச்சிதைவு நோய் என்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கடுமையாகச் சாடியுள்ளார். ராம் மனோகர் லோகியாவின் 109ஆவது நினைவு நாளையொட்டி பிரதமர் மோடி தன் சமூகவலைத்தளப் பக்கத்தில், டாக்டர் லோகி யாவைப் பின்பற்றுபவர்கள் என்று கூறிக்கொள் ளும் மகா....... மேலும்

25 மார்ச் 2019 15:55:03

சுடுகாட்டில் தியானம் செய்தோ, கிளி ஜோசியத்தை நம்பியோ நான் அரசியல் செய்யவில்லை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

சுடுகாட்டில் தியானம் செய்தோ, கிளி ஜோசியத்தை நம்பியோ நான் அரசியல் செய்யவில்லை  ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

சென்னை, மார்ச் 25  தமிழ கத்தில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 9  தொகுதிகளும் புதுச்சேரி தொகுதி யும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத் தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் 23.3.2019 அன்று வெளியிடப்பட்டது. தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தேனி தொகுதியிலும், எஸ். திருநாவுக்கரசர் திருச்சி தொகுதியிலும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து  ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியதாவது:- நான் சுடுகாட்டில் தியானம் செய்தோ, கிளி ஜோசியத்தை நம்பியோ....... மேலும்

25 மார்ச் 2019 15:43:03

காங்கிரஸ் நிறைந்த பாரதம் உருவாக்கும் நேரம் வந்து விட்டது: கூறுகிறார் பா.ஜ.க. எம்.பி. சத்ருகன் சின்கா

புதுடில்லி, மார்ச் 25 பீகார் மாநிலம் பாட்னா சாகிப் தொகுதி பாரதீய ஜனதா எம்.பி.யாக உள்ள நடிகர் சத்ருகன் சின்காவுக்கு இம் முறை வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதையடுத்து,  அவர் பிரதமர் மோடியை தாக்கி டிவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டார். அவர் கூறியிருப்பதாவது: காங்கிரசின் குடும்ப அரசியல் பற்றி மோடி குரல் எழுப்புகிறார். இது விரக்தியின் வெளிப்பாடு. முதலில், உங்கள் சொந்த கட்சியினரையும், கூட்டணி கட்சியினரையும் பாருங்கள். எல்லா கட்சியிலுமே குடும்ப அரசியல்....... மேலும்

25 மார்ச் 2019 15:07:03

குஜராத்தில் ரூ.8,100 கோடி வங்கி கடன் மோசடி

புதுடில்லி, மார்ச் 24  ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனம் வங்கியில் ரூ.8,100 கோடி மோசடி செய்த வழக்கில் விசாரணைக்கு தேவையான தகவல்களைப் பெற 21 நாடுகளுக்கு கடிதங்களை அனுப்ப  அம லாக்கத் துறைக்கு டில்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. குஜராத் மாநிலம், வதோதராவில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லிங் பயோடெக் மருந்து தயாரிப்பு நிறுவனம், ஆந்திர வங்கி தலைமையிலான....... மேலும்

24 மார்ச் 2019 17:21:05

கிரிமினல் வழக்கில் 35 பா.ஜ.க. வேட்பாளர்கள்

கிரிமினல் வழக்கில் 35 பா.ஜ.க. வேட்பாளர்கள்

புதுடில்லி, மார்ச் 24- நாடாளு மன்றத் தேர்தலுக்கு போட்டியிட பா.ஜ.க. வெளியிட்டுள்ள முதல் பட்டியலில் உள்ள, 184 பேரில், 35 பேர் மீது, கிரிமி னல் வழக்குகள் உள்ளன. நாடாளுமன்றத் துக்கு, ஏப்., 11 முதல், மே, 19 வரை, ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக, 184 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டி யலை, பா.ஜ.க வெளியிட்டுள்ளது. தற்போது, நாடாளுமன்ற....... மேலும்

24 மார்ச் 2019 16:20:04

குஜராத் தலித்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை!

குஜராத் தலித்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை!

ஜிக்னேஷ் மேவானி கண்டனம் காந்தி நகர், மார்ச் 24 -குஜ ராத்தில் தலித் மக்கள் பாது காப்பாக இல்லை என அம் மாநில சட்டப்பேரவை உறுப் பினர் ஜிக்னேஷ் மேவானி கூறியுள்ளார். ஹோலி பண்டிகை அன்று தலித் சிறுவன்அடையாளம் தெரியாத கும்பலால் கடுமை யாகத் தாக்கப்பட்ட சம்பவம் குஜராத்தில் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது. கடுமையாக தாக்கப்பட்ட தலித் சிறுவன் பக்கவாதம் வந்தது போல் இருக்கிறார். அவரால் பேசவும் முடியவில்லை. காவல் துறை யில்....... மேலும்

24 மார்ச் 2019 14:41:02

கேரளத்தில் ஆர்.எஸ்.எஸ். - பாஜக கும்பல்களின் அட்டூழியம் - அராஜகம்!

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆளுநரிடம் கேரள முதல்வர் விரிவான அறிக்கை

திருவனந்தபுரம், ஜன.12 உச்சநீதிமன்றத் தின் அரசியல் சாசனஅமர்வு பிறப்பித்த உத்தரவின்படி இளம்பெண்கள் சபரிமலை அய்யப்பன் சன்னிதானத்தில் தரிசனம் செய்யும் வாய்ப்பு பெற்றனர்.

அதன் தொடர்ச்சியாக கேரளா முழு வதும் ஆர்.எஸ்.எஸ்., -பாஜக காவிக்கும்பல் அமைப்புகளின் தலைமையில் நடந்த அட் டூழியங்கள் குறித்த விரிவான அறிக்கையை கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆளுநர் பி.சதாசிவத்திடம் 10.1.2019 அன்று இரவு ஒப்படைத்தார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்தது முதல் மாநிலத்தில் திட்டமிட்ட தொடர்வன் முறைகள் நடந்தன. அதுகுறித்தும், சபரி மலையில் புனிதப்பயண காலங்களில் நடை திறந்தபோது நிலைக்கல், பம்பை, சன்னிதானம் ஆகிய இடங்களில் சங்பரி வார் அமைப்புகள் நடத்திய அட்டூழியங்கள் குறித்தும், பக்தர்களான பெண்களுக்கு எதிராக நடந்த அராஜகங்கள் குறித்தும் விளக்கமான விவரங்கள் இந்த அறிக் கையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக் கின்றன. நிலைக்கல்லிலும் பம்பையிலும் ஊடகத்தினர் எதிர்கொண்ட தாக்குதல் களும், காவல்துறையினருக்கு எதிராக நடந்த அவதூறுப் பிரச்சாரங்களும் அராஜ கங்களும் அறிக்கையில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளன.

மாநிலத்தில் நடந்த முழு அடைப்பின் பெயரால் நடந்த தாக்குதல்களில் காவல் துறையினருக்கும் பொது மக்களுக்கும் கொடுங்காயங்கள் ஏற்பட்டன. கேரள மாநில அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான பேருந்துகள், அரசு அலுவ லகங்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள், கட்சித் தலைவர்கள் மற்றும்மக்கள் பிரதிநிதிகளின் வீடுகள், வணிக நிறுவனங்கள் தகர்க்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக காவல்துறையால் 1137 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அடையாளம் காணப்பட்ட 10ஆயிரத்து 24 நபர்களில் 9ஆயிரத்து 193 நபர்கள் சங்பரிவார் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். மற்ற அமைப்புகளைச் சேர்ந்தோர் 831 பேர் புரட்டாசி மாத பூஜை, சித்திரை ஆட்ட சிறப்பு பூஜை, மண்டல-மகரவிளக்குஆகிய காலங்களில் சபரிமலையில் தரிசனத்திற்கு வந்த முப்பதுக்கும் மேற்பட்ட பெண் களைத் தடுத்தது உள்ளிட்ட நடவடிக் கைகளில் மேற்படி காவிக் கும்பல்கள் ஈடுபட்டனர். அப்படித் தடுக்கப்பட்டவர் களில் 5 பேர் பிரபல பெண் பத்திரிகையா ளர்களாவர். இவ்வாறு தடுத்தது உச்சநீதி மன்ற உத்தரவு மீறலாகும். 28.09.2018இல் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்தபிறகு தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு சீராய்வு மனுக் களை ஜனவரி 22இல் உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

அதற்கிடையே தீர்ப்புக்கு எவ்விதத் தடையும் விதிக்கவில்லை என உச்சநீதி மன்றம் தெளிவுபடுத்தியிருந்தது. அதன் அடிப்படையிலேயே வயது வேறுபாடு இல்லாமல் பெண்கள் சபரிமலையில் தரிசித்தனர். இதையொட்டி பல்வேறு கால கட்டங்களில் சபரிமலையிலும் மற்ற இடங்களிலும் நடந்த அட்டூழியங்கள் தொடர்பாக 2012 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வன்முறை சம்பவங் களை பதிவு செய்ய வந்த 17 ஊடகத் தினருக்கு படுகாயம் ஏற்பட்டது. இது தொடர்பாக 7 காவல்நிலையங்களில் 15 நபர்களை காவல்துறையினர் கைது செய் தனர். வகுப்புவாத அணி திரட்டலுக்கான சதித்திட்டங்களும் இதில் உள்ளதாக அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. வன்முறைகளின் புகைப்படங்களும், மத மோதலைத் தூண்டும் வகையில் சமூக ஊடகங்களில் வெளியான பதிவுகளின் விவரங்கள் அடங்கிய குறுந்தகடுகளும் ஆளுநரிடம் வழங்கப்பட்டன. இரண்டு பெண்கள் சபரிமலையில் நுழைந்ததற்கு எதிராக மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட வன்முறை வெறியாட்டங்கள் குறித்த விவ ரங்களும் அறிக்கையில் இடம்பெற்றுள் ளன. 03.01.2019 முழு அடைப்பின்போது மட்டும் ரூ.2.32 கோடி இழப்பு ஏற்பட்ட தாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner