முன்பு அடுத்து Page:

காங்கிரசில் இணைந்தார் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்

காங்கிரசில் இணைந்தார் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்

புதுடில்லி, ஏப். 25  வடமேற்கு டில்லி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் உதித் ராஜ், அக் கட்சியில் இருந்து விலகி காங் கிரசில் இணைந்தார். வடமேற்கு டில்லி (தனி) மக்களவைத் தொகுதி பாஜக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருபவர் உதித் ராஜ். தற்போதைய மக்களவைத் தேர் தலில், பாஜக சார்பில் அவ ருக்கு மீண்டும் வாய்ப்பு வழங் கப்படவில்லை. கடந்த 5 ஆண் டுகளாக வடமேற்கு டில்லி தொகுதியில்....... மேலும்

25 ஏப்ரல் 2019 17:24:05

கேரளத்தில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 77.68 சதவிகித வாக்குப்பதிவு

திருவனந்தபுரம், ஏப். 25- கேரளத் தில் செவ்வாய்க்கிழமை நடை பெற்ற மக்களவைத் தேர்தலில், 77.68 சதவீத வாக்குகள் பதிவா கியுள்ளன. இது கடந்த 30 ஆண்டுகளில் நடைபெற்ற தேர் தல்களில் அதிகபட்சமாகும். இதற்கு முன்பாக, கடந்த 1989-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 79.3 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது. மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வரு கிறது. கேரளத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி முன்னணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய ஜனநாயக....... மேலும்

25 ஏப்ரல் 2019 17:24:05

வாக்கு ஒப்புகைச் சீட்டு சரிபார்ப்பு விவகாரம் உச்சநீதிமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சீராய்வு மனு தாக்கல…

புதுடில்லி, ஏப்.25, மக்களவைத் தேர் தலில் ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 5 வாக்குச் சாவடிகளில், வாக்கு ஒப்புகைச் சீட்டுகள் சரிபார்க்கப்பட வேண்டும் என்று கடந்த 8-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை சீராய்வு செய்யக் கோரி எதிர்க்கட்சித் தலைவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு தலைமையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரு....... மேலும்

25 ஏப்ரல் 2019 16:11:04

கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் ஏழைகள், பழங்குடியினருக்கு பாஜக அநீதி

கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் ஏழைகள், பழங்குடியினருக்கு பாஜக அநீதி

காங்கிரஸ் தலைவர் ராகுல் குற்றச்சாட்டு துங்கர்பூர், ஏப். 25- கடந்த 5 ஆண்டுகால பாஜ ஆட்சியில் ஏழைகள், பழங்குடியினத்தவர் உள்ளிட்ட நலிந்த பிரிவினருக்கு பாஜக அநீதி இழைத்துள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். ராஜஸ்தானில் வரும் 29ஆம் தேதி மற்றும் மே 6ஆம் தேதி என 2 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு காங்கி ரஸ் தலைவர்....... மேலும்

25 ஏப்ரல் 2019 16:07:04

'பாஜகவிற்கு வாக்களியுங்கள்!'

வாக்குப்பதிவு கருவிக்கு அருகில் நின்று கட்டளை இட்ட அதிகாரி பெங்களூரு, ஏப். 25- மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட தேர்தல் பெங்களூரு நகரில் நேற்று (ஏப். 23) முன்தினம் நடந்தது.  காலை 7 மணிக்கு இங்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மத்திய பெங்களூரு தொகுதியில் உள்ள பென்சன் டவுன் வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவு மும்முரமாக நடைபெற்றுக் கொண் டிருந்தது. அந்தப் பகுதியின் வாக்காளரான சையத் ஜாகிர்....... மேலும்

25 ஏப்ரல் 2019 16:07:04

தொடர்ந்து தேர்தல் விதிமுறைகளை மதிக்கத் தவறும் மோடியும் பாஜக வேட்பாளர்களும்

அகமதாபாத், ஏப். 25 நாடாளுமன்ற தேர்தல் பல கட்டங்களாக தொடர்ந்து நடந்து வருகிறது, குஜராத் மற்றும் கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது, குஜராத் மாநிலம் அகமதாபாத் ரானிப் பகுதியில் உள்ள நிஷான் மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் மோடி தமது வாக்கை பதிவு செய்தார். அப்போது, வெளியில் காத்திருந்த பாஜக வினர், மோடி, மோடி என உற் சாக முழக்கமிட்டனர். வாக்குச் சாவடியை விட்டு வெளியில் வந்த....... மேலும்

25 ஏப்ரல் 2019 16:07:04

குறைந்தபட்ச வருவாய் உறுதி திட்டம்: எதிர்பார்த்ததை விட வரவேற்பை பெற்றுள்ளது அரசியல் ஆய்வாளர்கள் கரு…

 குறைந்தபட்ச வருவாய் உறுதி திட்டம்:  எதிர்பார்த்ததை விட வரவேற்பை பெற்றுள்ளது அரசியல் ஆய்வாளர்கள் கருத்து

புதுடில்லி, ஏப் 25 குறைந்த பட்ச வருவாய் உறுதித் திட்டம் எதிர்பார்த்ததைவிட அதிக வரவேற்பை பெற்றுள்ளதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அரசியல் வல்லுநர்கள் கூறும்போது, 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் குறைந்தபட்ச வருவாய் உறுதித் திட்டம் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தேர்தல் வாக்குறுதியாக உள்ளது. ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் தொகையை 20 சதவீத பரம ஏழைகளின் கணக்கில் வரவு வைப்பதே இந்த திட்டத்தின் முக்கிய குறிக்கோள். இந்த திட்டத்தை செயல்படுத்த காங்கிரஸ்....... மேலும்

25 ஏப்ரல் 2019 16:00:04

சிரிக்காதீர்கள், இதுதான் "ஹிந்துத்துவா - வி(அ)ஞ்ஞானம்!''

சிரிக்காதீர்கள், இதுதான்

"பசுவை தடவுவதால் எனது ரத்த அழுத்தம் குணமானது!'' "பசு மூத்திரம் குடித்ததால் எனது மார்பகப் புற்றுநோய் குணமானது!''  -சாமியாரணி பிரக்யாசிங் மேலும்

25 ஏப்ரல் 2019 15:44:03

விவசாயத்துக்கு தனி நிதிநிலை அறிக்கை: ராகுல்

லக்கிம்பூர் கேரி, ஏப்.25 உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி, உன்னா ஆகிய இடங் களில் நேற்று காங்கிரஸ் தலை வர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சார கூட்டங்களில் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:- காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், விவசாயத்துக்கு தனி நிதிநிலை தாக்கல் செய்யப் படும். ஒரு பொது நிதி நிலை அறிக்கையும், ஒரு விவசாய நிதி நிலை அறிக்கையும்....... மேலும்

25 ஏப்ரல் 2019 15:44:03

மோடி பிரதமராக இல்லை; விளம்பரம் தேடிக் கொள்ளும் நபராக இருக்கிறார்: பிரியங்கா

உ.பி., ஏப்.25   பிரதமர் நரேந்திர மோடி விளம்பரப் பிரியர் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா விமர்சித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தின்புந் தேல்கண்ட் பகுதியில் புதன் கிழமை பிரச்சாரம் மேற் கொண்ட அவர் பிரதமர் மோடியை கடுமையாக விமர் சித்தார். அப்போது,"மோடிபிரதம ராக இல்லை. தனக்கு விளம் பரம் தேடிக் கொள்ளும் நப ராகவே இருக்கிறார். புந்தேல் கண்ட் பகுதியில் வரலாறு காணாத வறட்சி நிலவும் நேரத் தில், பிரதமர் பயணிக்கும் சாலைகளைலாரிகளில்தண் ணீர்....... மேலும்

25 ஏப்ரல் 2019 15:44:03

முல்லைப் பெரியாறில் புதிய அணை: தமிழக அரசு ஒப்புதல் இல்லாமல் கட்டமாட்டோம்!

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உச்ச நீதிமன்றத்தில் கேரளா உறுதி

திருவனந்தபுரம், பிப்.12  தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட மாட்டோம் என கேரள அரசு உத்தரவாதம் அளித்ததை அடுத்து தமிழகம் தொடர்ந்த அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது.

முல்லைப் பெரியாறில் கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கான முயற்சி களை தற்போது மேற்கொண்டு வருகிறது. ஏற்கெனவே இது சம்பந்தமாக கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த ரசூல் ராய் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், முல்லைப் பெரியாறு அணை யில் போதிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லை அணையின் நீர்மட்டத்தை குறைக்க வேண்டும், நில அதிர்வு உள்ளிட்ட காலங்களில் முல்லைப் பெரியாறு அணையில் பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படும் சூழ்நிலை உள்ளதால் புதிய அணை கட்ட உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

இதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் சிறப்பு குழு ஒன்றை அமைத்து முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்தது. அப்பொழுது முல்லைப் பெரியாறு அணை போதிய பாதுகாப்புடன் இருப்பதாக தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்தது.

கேரள அரசு முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் உச்சநீதிமன்றம் தெளிவாக குறிப்பிட் டுள்ளது முல்லைப் பெரியாறு அணை புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் உள்ளதால் புதிய அணை தேவை இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தது.

ஆனால் தற்போது உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி கேரள அரசு புதிய அணை கட்ட முயற்சிகளை தொடர்ந்து மேற் கொண்டு வருகிறது, இதற்கான முழுமை யான இறுதி அறிக்கையை தயார் செய்ய மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

இதனையடுத்து, உச்ச நீதிமன்றத்தில தமிழக அரசு கேரள அரசுக்கு எதிராகவும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு எதிராகவும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தது. அதில், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்பட்டதாக கூறி கேரள அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டி ருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கில் கேரள அரசு சார்பில் வைக்கப்பட்ட வாதத்தில், “தற்போது எடுக்கப்படும் முயற்சி அணையை கட்டுவதற்கான ஒப்புதல் இல் லை, ஆய்வறிக்கை தயாரிக்க தரவுகளை திரட்டும் பணியே மேற்கொள்ளப் பட்டுள் ளது, புதிய அணை கட்டும் பணி மேற் கொள்ளவில்லை, ஆய்வறிக்கை தயாரிக் கவே தரவுகளை திரட்டி வருகிறோம்.” என தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட  நீதிபதிகள் அமர்வு, “இந்த வழக்கில் அணை கட்டும்பணி நடக்கவில்லை, மேலும் அப்பகுதியில் தயாரிப்பதற்கான தரவு களையே திரட்டி வருகின்றனர், எனவே இது உச்சநீதிமன்ற உத்தரவை மீறிய செயல் இல்லையே, எனவே இதில் நீதிமன்ற அவமதிப்பு எங்கே நடந்துள் ளது?” என  கேள்வி எழுப்பினர்.

ஆகவே மத்திய அரசு கேரளாவிற்கு ஆய்வறிக்கை தயாரிக்க கொடுத்த அனு மதியை தடை விதிக்க முடியாது என தெரிவித்தனர்.

அப்போது தமிழக அரசு சார்பில், “ஆய்வறிக்கை தயாரிப்பதன் நோக்கம் புதிய அணை கட்டுவதே, மேலும் இந்த விவகாரத்தில் தரவுகளை திரட்டி ஆய் வறிக்கை தயாரிப்பதே நீதிமன்ற அவ மதிப்பு தான்” என தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட கேரள அரசு தரப்பு, தமிழக அரசின் ஒப்புதல் இல் லாமல் முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட மாட்டோம் என உத்தரவாதம் அளிப்பதாக தெரிவித்தனர்.

மேலும் இது தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் தயார் என தெரிவிக்கப்பட்டது. இந்த உத்தரவாதத்தை பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம், தமிழகம் தொடர்ந்த அவமதிப்பு வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner