புதுவைத் தமிழ் சங்கப் பொன் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழர் தலைவர் அவர்களுக்கு தமிழ் சங்கத் தலைவர் முனைவர் வி.முத்து நினைவு பரிசு வழங்கினார். (புதுச்சேரி & 16.2.2019) புதுவைத் தமிழ் சங்கப் பொன் விழாவில் "தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?" என்ற நூலினை தமிழ்ச் சங்கத் தலைவர் முத்து வெளியிட வழக்குரைஞர் சி.பி. திருநாவுக்கரசு பெற்றுக் கொண்டார். மேடையில் சுமார் 70க்கு மேற்பட்டோர் நூல்களை பெற்றுக் கொண்டனர். மேலும்,....... மேலும்
17 பிப்ரவரி 2019 14:52:02
புதுடில்லி, பிப்.17 புல்வாமா தாக்குதல் குறித்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, எந்த சக்தியாலும் தேசத்தைப் பிரிக்க முடியாது எனவும் அரசுக்கும் வீரர்களுக்கும் முழு ஆதரவாக இருப்போம் என்றும் தெரிவித்துள்ளார். டில்லியில் செய்தியாளர் களிடம் பேசிய ராகுல் காந்தி, ‘’இந்திய அரசுக்கும் ராணுவ வீரர் களுக்கும் நானும் எனது காங்கிரசு கட்சியும் உறுதுணையாக இருப் போம். அடுத்த இரண்டு நாட் களுக்கு மற்ற எந்தப் பேச்சுவார்த் தையும் இல்லை. இது வருத்தத்துக்கான,....... மேலும்
17 பிப்ரவரி 2019 14:50:02
புதுடில்லி, பிப்.17 தொலைக் காட்சி, வானொலி, இணைய தளத்தில் அரசு விளம்பரங்களை வெளியிடுவதற்காக கடந்த அய்ந்து ஆண்டுகளில் ரூ.2,374 கோடி ரூபாய் செலவிடப்பட் டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், விளம்பரப் பலகை களுக்காக ரூ.670 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப் பட்ட கேள்விகளுக்கு பதிலளித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: தொலைக்காட்சி, வானொலி, இணையதளம் போன்ற மின் னணு....... மேலும்
17 பிப்ரவரி 2019 14:48:02
புதுடில்லி, பிப்.17 வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் தங்களது பான் எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டியது கட்டாயம் என்று வலியுறுத்தியுள்ள மத்திய நேரடி வரிகள் ஆணையம் (சிபிடிடி), வரும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் ளாக அதை நிறைவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. ஆதார்- - பான் இணைப்பை மேற்கொள்ளாமலேயே 2018- - 2019 காலகட்டத்துக்கான வரு மான வரிக் கணக்கை தாக்கல் செய்ய இரு நபர்களுக்கு தில்லி....... மேலும்
17 பிப்ரவரி 2019 14:20:02
புதுடில்லி, பிப்.17 புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல் எதி ரொலியாக, பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு இறக் குமதி செய்யப்படும் அனைத்துப் பொருள்களுக்கும் இறக்குமதி வரியை 200 சதவீதமாக இந்திய அரசு உயர்த்தியுள்ளது. இந்திய அரசின் இந்த முடிவால், பாகிஸ்தானுக்கு ரூ.3,482.3 கோடி அளவுக்கு வர்த் தகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து....... மேலும்
17 பிப்ரவரி 2019 14:19:02
பெங்களூரு, பிப்.16 தனியார் நிறுவன வேலை வாய்ப்புகளில் கன்னடர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க கருநாடக அமைச் சரவை முடிவு செய்துள்ளது. கருநாடக அமைச்சரவை கூட்டம் முதல்- அமைச்சர் குமாரசாமி தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நடை பெற்றது. இதில் அமைச்சர்கள், அதி காரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து பஞ்சாயத்து ராஜ் மற்றும் கிராம வளர்ச்சித் துறை அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா நிருபர்களிடம் கூறியதாவது:- சரோஜினி மகிசி அறிக்கையின்படி....... மேலும்
16 பிப்ரவரி 2019 16:14:04
புதுடில்லி, பிப். 16 -இந்தி யாவின் பிரபல தொழிலதி பரும், பிரதமர் மோடியின் நண்பருமான அனில் அம் பானியின் ‘ஆர்காம்’ என்னும் ‘ரிலையன்ஸ் கம்யூனிகே ஷன்ஸ்’ நிறுவனமானது, தொலைத் தொடர்பு சேவையில் ‘எரிக்சன்’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது. இந்த வகையில், எரிக்சன் நிறுவனத்திற்கு, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ரூ. 1,600 கோடி பணம் தர வேண்டி யுள்ளது. இதில், முதற்கட்ட மாக ரூ. 550 கோடியை, 2018 டிசம்பருக்குள் தருமாறு உச்ச நீதிமன்றம்....... மேலும்
16 பிப்ரவரி 2019 16:14:04
அமராவதி, பிப்.16 மின் னணு வாக்கு இயந்திரங்களில் முறைகேடு நடைபெற வாய்ப் புள்ளதால், இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். அமராவதியிலிருந்து நேற்று முன்தினம் டெலிகான்பரன்ஸ் மூலம் ஆந்திர மாநில கட்சி நிர்வாகிகளுடன் சந்திரபாபு நாயுடு உரையாற்றினார். அவர் பேசியதாவது: பல்வேறு கட்சிகளின் கருத் தின்படி, மின்னணு வாக்கு இயந்திரங்களில் இம்முறை முறைகேடு நடக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. எனவே, இதுதொடர்பாக உச்ச நீதி....... மேலும்
16 பிப்ரவரி 2019 16:10:04
விளாசுகிறார் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் கவுடா புதுடில்லி, பிப்.16 மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ரிசர்வ் வங்கி நிர்வாக இயக்குநர் பதவிக்கு குருமூர்த்தியை நியமித்தது தொடர்பாக பொய்யான தகவல் கூறுகிறார் என்று குறிப்பிட்டுள்ள காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் கவுடா இது தொடர்பாக அருண் ஜெட்லி தனது பதவிக்கே களங்கம் ஏற்படுத்திவிட்டதாகக் கூறினார். துக்ளக் இதழ் ஆசிரியரும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தீவிர செயல் பாட்டாளரும், பாஜகவின் அரசியல் ஆலோசகராகவும்....... மேலும்
16 பிப்ரவரி 2019 15:47:03
புதுடில்லி, பிப்.16 2018&20-19ஆம் நிதியாண்டுக்கான மத்தியஅரசின் வரவு - செலவுகள் குறித்த, தணிக்கை அறிக்கையை, மத்திய தலைமைக் கணக்கு தணிக்கை அதிகாரி தற்போது வெளியிட்டுள்ளார். இந்நிலையில், அதில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் இருப்பது தெரியவந்துள்ளது.மோடி அரசு, தனது நிர்வாக செலவுகளுக்காக, ரூ. 99 ஆயிரத்து 610 கோடியை ஊதாரித்தனமாக செலவிட்டுள்ளது ஒருபுறம் என்றால், மற்றொரு புறம் 18 வகையான திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை....... மேலும்
16 பிப்ரவரி 2019 15:08:03
பெங்களூரு, பிப்.12 கரு நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) ஆட்சி நடக்கிறது. முதலமைச்சராக குமாரசாமி உள்ளார். பா.ஜனதாவுக்கு 104 சட்டமன்ற உறுப்பினர்கள் உள் ளனர். அத்துடன் 2 சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் உள்ளது. இன்னும் 7 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் பா.ஜனதா ஆட்சி அமைத்துவிடும்.
இதற்காக கூட்டணி ஆட்சி யில் அமைச்சர் பதவி கிடைக் காமல் அதிருப்தியில் இருந்து வரும் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களை இழுக்க பா.ஜனதா தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்காக ஆபரேஷன் தாமரை திட்டத்தை பா.ஜனதா கையில் எடுத்துள்ளது. இந்த நிலையில் கருநாடக சட்டசபையில் கடந்த 8-ஆம் தேதி முதல்- அமைச்சர் குமார சாமி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னதாக அவர் ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் நாகன கவுடாவை இழுக்க அவரது மகன் ஷரண் கவுடா விடம் கருநாடக பா.ஜனதா தலைவர் எடியூ ரப்பா பேரம் பேசிய உரை யாடல் ஆடியோவை வெளி யிட்டு பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருந்தார்.
ஆனால் அந்த உரையாட லில் இருப்பது தனது குரல் இல்லை என்று மறுத்த எடியூ ரப்பா, முதலமைச்சர் குமார சாமி தனது தோல்விகளை மறைக்க போலி ஆடியோவை வெளியிட்டு நாடகமாடுகிறார் எனவும் சாடியிருந்தார்.
அத்துடன், தன் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் எடியூரப்பா அறிவித்திருந்தார். மேலும் பா.ஜனதாவினரும், குமாரசாமி வெளியிட்ட பேர ஆடியோ போலியானது எனவும் கூறி வந்தனர்.
இந்த ஆடியோ விவகாரம் குறித்து விசாரணை நடத்தப் படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் ஆடி யோவை குரல் பரிசோதனைக் காக அனுப்பவும் உள்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த சம்பவம் கருநாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பேரம் பேசியதாக குமாரசாமி வெளியிட்ட ஆடியோ பதிவில் இருப்பது தனது குரல்தான் என்று எடியூரப்பா திடீரென்று ஒப்புக்கொண்டுள்ளார். இது குறித்து எடியூரப்பா உப்பள்ளி யில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
நான் தங்கியிருந்த இடத் திற்கு என்னிடம் பேச குமார சாமி, குருமித்கல் தொகுதி ஜனதா தளம் (எஸ்) கட்சி சட் டமன்ற உறுப்பினரின் (நாகன கவுடா) மகனை நள்ளிரவு 12.30 மணிக்கு அனுப்பினார். அவர் என்னிடம் வந்து பேசி யது உண்மைதான். அதில் இருப்பது எனது குரல் தான்.
குமாரசாமி தரம் தாழ்ந்த, மிரட்டல் போக்கு கொண்ட அரசியலை செய்கிறார். அதில் சில உண்மைகளை மூடி மறைத்துவிட்டனர். நாங்கள் உண்மையாகவே என்ன பேசி னோம் என்பது பற்றிய விவ ரங்கள் வரும் நாட்களில் வெளியே வரும்.
அவைத் தலைவருக்கு பணம் கொடுத்திருக்கிறோம் என்று நான் சொல்லவில்லை. அதை நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலக தயாராக இருக்கிறேன். இது தொடர்பாக எந்த விதமான விசாரணைக்கும் நான் தயார் என்று கூறினார்.
< முன்பு | அடுத்து > |
---|